வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 47



ஸாரி லேகா தப்பு எல்லாம் என்னோடது தான்... நம்ம ஃப்ரெண்ட்ஸ் எப்பவும் போல பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வந்துடுவாங்கன்னு நினைச்ச நான்தான் முட்டாள். தளிருக்கு நடந்த அசம்பாவிதம் எல்லாத்துக்கும் காரணம் நான் நீயில்ல..! ரொம்ப நாள் கழிச்சு என்கிட்ட நீ பேசின சந்தோஷத்துல உன்னோட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைச்சேன்.. 

எங்க அன்னைக்கு நீ எதாவது ஒருநேரம் தளிர் பற்றி யோசிச்சு கோவிலுக்கு போகணும்னு சொல்லிடுவியோனு பயந்து தான் நான்  உனக்கு பிடிச்சதை வாங்கி கொடுத்து பிடிச்ச ஹீரோ படத்துக்கு கூட்டிட்டு போய்னு உன்னை டைவர்ட் பண்ணிட்டே இருந்தேன்..” 

இவ்வளவு தானா நீ..?’ என்பது போல பார்த்த மனைவியின் பார்வையை எதிர்கொள்ள முடியாதவன் தலை நிமிர்த்தவே இல்லை.

எனக்கு சத்தியமா அவங்களோட ப்ளான் தெரியாது லேகா... உன்னை சமாதானபடுத்த ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்கவும் உடனே ஒத்துகிட்டாங்க...” என்றதில் லேகாவின் முகத்தில் இன்னும் அனல் கூடியது.

என்னை சமாதனபடுத்த தளிரோட வாழ்க்கை பலியா..? இதை சொல்ல உனக்கு வெட்கமா இல்ல..? எப்படிடா அவ வாழ்க்கையை அழிச்சு உன் காதலை காப்பாற்ற முடிஞ்சது..? சொல்லு இதுக்கு பேர் தான் காதலா..? ப்ச் நானும் தளிர் மாதிரி இருந்திருக்கணும் தெரியாம தப்பு பண்ணிட்டேன், உனக்கு எப்படியோ ஆனா உன்னை போல ஒரு சுயநலவாதியை லைஃப் பார்ட்னரா சூஸ் பண்ணின என்னை நினைச்சு எனக்கு அசிங்கமா இருக்கு..”

லேகா ப்ளீஸ் கோபபடாத நான் எதுவும் தெரிஞ்சு செய்யலை... நம்ம ஃப்ரெண்ட்ஸ் தானேன்னு தளிரை பத்திரமா பார்த்துப்பாங்கன்னு நம்பிக்கையா...”

பொய்! சுத்த பொய்! மேலும் மேலும் பேசி உன்னோட தரத்தை நீயே தாழ்த்திக்காத அஜய்”

எங்கே உன் மனசை தொட்டு சொல்லு நிஜமாவே அன்னைக்கு நீ தளிரை பற்றி யோசிச்சியா..?” என்று கேட்க அவனிடம் மௌனம். பின்னே அன்று அவன் சிந்தை முழுக்க அவர்கள் இருவர் மட்டும் தானே..!

பதில் இல்லைல” என்று கசப்போடு பார்த்தவள்,

அன்னைக்கு சீதா ஆன்டி அந்த ராஸ்கல்ஸ் மட்டுமில்ல நீயும் எங்களோட வர கண்டிப்பா அவங்க பெண்ணை பத்திரமா திருப்பி கூட்டிட்டு வருவன்னு நம்பிதான் அனுப்பினாங்க.. அந்த பொறுக்கிங்க ஆன்டி நம்பிக்கைக்கு துரோகம் பண்ணிட்டாங்கன்னா நீ பண்ணினதுக்கு பேர் என்ன..? என்றதில் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான்.

ஒரு அம்மா உன்மேல வச்சிருந்த நம்பிக்கையை விட உனக்கு உன் காதல் முக்கியமா போச்சா அஜய்..?” என்று கேட்க சீதாவின் நிலையை எண்ணி பார்த்தவனின் மனம் கசங்கி போக விழிகளில் நீர் கசிந்தது.

இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன்  அன்னைக்கு உன் காதலுக்காக உன் நட்பையும் ஃப்ரெண்டையும் பலி கொடுத்தவன் நாளைக்கு உன்னோட சுயநலத்துக்காக என்னை பலி கொடுக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்..?” என்று உஷ்ணத்தோடு கேட்டவளின் கேள்விகள் அவனை கூறுபோட்டு கொண்டிருந்தது.

ப்ளீஸ் லேகா போதும் அப்போ இதையெல்லாம் யோசிக்கிற பக்குவம் எனக்கு இல்ல நீ சொன்னமாதிரி கொஞ்சம் சுயநலமா தான் செயல்பட்டிருக்கேன் ஆனா என்னை முட்டாளாக்கி தளிரை இந்த நிலையில் கொண்டு நிறுத்தின அய்யோக்கியனை இனி நான் சும்மா விடபோறதில்லை லேகா ப்ளீஸ் ட்ரஸ்ட் மீ..!” என்று அவள் கையை பிடிக்குமுன் வேகமாக தள்ளி நின்றவள்,

இனி ஒருநிமிஷம் இங்க இருக்க முடியாது எந்த  ஃப்ளைட் அவைளபிலா இருக்கு பாரு எனக்கு உடனே கிளம்பனும்” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் வேகமாக அலமாரியில் இருந்து பெட்டியை எடுத்து தன் உடைகளை மட்டும் அடுக்கி கொண்டிருந்தாள்.

வலியோடு அவளை பார்த்திருந்த அஜய்க்கு தேனிலவிற்கு கிளம்பும் போது ஆசையாசையாக இருவர்  உடைகளையும் சேர்த்து அடுக்கியவள் இப்போது தன் உடைகளை கூட சீண்டாமல் இருப்பதிலேயே தன் நிலை புரிந்துபோக தன் நண்பனுக்கு அழைத்து டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்து தன் உடைகளை அடுக்க தொடங்கினான்.

அடுத்த மூன்றாம் நாள் தான் அவர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்பட அந்த மூன்று நாட்களுமே அஜய்க்கு நரகமாய் கழிந்தது.

ஒருபுறம் சரத், தீனா, அசோக் என்று யாரையும் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை, மறுபுறம் தன்னை மன்னிக்க தயாராக இல்லாத மனைவியின் யாரோ போன்ற பார்வையையும் ஒரே அறையில் இருந்த போதும் அவனோடு படுக்கையை பங்கிட முடியாது கீழே போர்வை விரித்து படுத்தவளின் கலங்கிய தோற்றமும் அவனை வெகுவாக அடித்து வீழ்த்தியிருந்தது.

லேகா தளிருக்கு அழைக்க அவளோ புது எண் எதையுமே எடுக்கவில்லை. உடனே சந்தியாவை தொடர்பு கொண்டவள் அவள் தென்றலின் எண்ணை கொடுக்கவும் அவளிடம் பேசி முடித்தவளிடம் அசைவில்லை.... தோழியின் இன்றைய நிலையை அறிந்த பின்னர் கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடிட கைபேசியையே பார்த்துகொண்டிருந்தவளின் நெஞ்சை முட்டும் பாரம் அவளை இயல்பாக இயங்கவிடவில்லை.

லேகா நான் சரத்கிட்ட பேசி மன்னிப்பு கேட்க வைத்து நின்று போன தளிர் கல்யாணத்தை நடத்தறேன், நீ உன்னை கஷ்டபடுத்திக்காத” என்றபோதும் அவளிடம் எடுபடவில்லை அஜய்யின் நிழல்கூட தன்மீது விழக்கூடாது என்பதில் லேகா கொண்டிருந்த உறுதியில் அவன் தகர்ந்து போனான்.

அதிலும் ஃப்ளைட்டில் இருவருக்கும் வெவ்வேறு இருப்பிடம் கட்டாயம் என்று சொல்லிவிட்ட மனைவி மனதளவில் தன்னை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டதை உணர்த்தியத்தில் துரோகிகள் மீது அதிகரித்த பன்மடங்கு ஆத்திரத்தோடு அஜய் இந்தியாவிற்கு பயணபட்டான்.

                       *********************   

அன்று காலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அலர்விழியின் அலுவலகம்.

ஸார் எந்த முகாந்திரமும் இல்லாத இந்த கேஸ் நிச்சயமா மேம் எடுக்கமாட்டாங்க நீங்க காத்திருக்காம வேற வக்கீல் பாருங்க” என்று வேதவியாசினி சொல்ல இரண்டு நாட்களாக இதே பதில் கிடைக்கவும், “எதுக்கும் மேடமை நேர்ல பார்த்து பேசிட்டு போயிடுறேன் ம்மா..”

ஸார் அவங்க பிஸி.. சொன்னா புரிஞ்சுக்கோங்க கிளம்புங்க” என்றதில் அவர் கிளம்ப உதயாதித்தன் ராகவன், சரவணன், தென்றலோடு உள்ளே நுழைந்தான்.

சொல்லுங்க” என்றதும் முன்னே வந்த சரவணன்,

நான் சரவணன்... அகனெழிலன் ஸாரோட ஜூனியர், மேம் இன்னைக்கு  அப்பாயின்ட்மென்ட்  கொடுத்திருந்தாங்க”

வைட் பண்ணுங்க, மேம் இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடுவாங்க” என்றவள் அலருக்கு அழைத்து, “மாமி மாமாவோட ஜூனியர் வந்திருக்காங்க” என்றவள் பேசிமுடித்ததும் அவர்களை அழைத்து அடிப்படை விபரம் மற்றும் வழக்கு குறித்த தகவல்களை பெற்று உடனே அலருக்கு அனுப்பிவைத்தாள்.

அன்று முக்கிய ஹியரிங்கிற்காக சென்றிருந்த அலர் அரை மணிநேரம் கழித்து வந்தவள் மேலும் இருபது நிமிடங்கள் கழித்தே அவர்களை அழைத்திருந்தாள்.

உதய் மற்றவர்களுடன் அலரின் அறைக்குள் நுழைய அங்கே அலர்விழி உதய் சரத்தை மிதித்து கொண்டிருந்த வீடியோவை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

ஏற்கனவே தளிர் குறித்த சர்ச்சைகளை கவனித்து வந்த அலர்விழி அவள் வழக்கை எடுத்து நடத்துவது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்திருந்தாள்... அவர்களை அமர சொன்னவள் எடுத்ததுமே “இளந்தளிர் வரலையா..?” என்றாள்.

இல்ல மேம் அக்காக்கு உடம்பு சரியில்ல அதுதான் அடுத்தமுறை கூட்டிட்டு வரோம்”

அப்படியா..?” என்று அலர் கூர்மையாக தென்றலை பார்க்க,

ஆமா மேம்” என்று பதட்டத்தோடு சொன்னாள்,

ப்ரீஸீ இங்க உண்மையை மட்டும் தான் பேசணும்.. அவங்களுக்கு  தெரியட்டும் ஒன்னும் தப்பில்லை” என்ற உதய்,

மேம் ஐ ஆம் உதயாதித்தன்! எனக்கும் தளிருக்கும் தான் திருமணம் நடக்க இருந்தது... இப்போ தளிருக்கும் எனக்கும் சின்ன மனஸ்தாபம் அதனால என்னோட வரமாட்டேன்னு சொல்லிட்டா... அதுதான் முதல்ல நாங்க  வந்திருக்கோம் அடுத்தமுறை தளிரை கூட்டிட்டு வரேன்” என்றவன் நடந்ததை சுருக்கமாக சொல்லிமுடித்தான்.

சரி இதுல நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க..?”

மேம் அவன் செய்த தப்பை நிருபிச்சு தளிர்க்கு அவன்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கணும்”

அதுமட்டும் போதாது மேம்..! என் அக்காக்கு செய்த கொடுமைக்கு அவன் தண்டனை அனுபவிக்கனும்... மன்னிப்பு கேட்கணும்” என்று தென்றல் ஆவேசமாக சொல்ல,

ஸோ தளிருக்கு தெரியாமல் தாலி கட்டினது, ரிஜிஸ்டர் பண்ணினது உண்மை ஆனா வீடியோ ஃபோட்டோஸ் எல்லாமே தளிருக்கு எதிரா இருக்கு அப்படிதானே..?”

ஆமா மேம்! அவன் தீனா அஷோக்கையும் கைக்குள்ள போட்டுக்கிட்டு எல்லாமே செய்திருக்கான்”

யார் அவங்க..?”

இவங்களும் என் அக்காவோட சின்ன வயசுல இருந்து படிச்ச ஃப்ரெண்ட்ஸ்”

ஐ ஸீ! உன் அக்காக்கு மொத்தம் எத்தனை ஃப்ரெண்ட்ஸ்”

ஆறு பேர் மேம்”

சரத், தீனா, அசோக் தளிரை எமாற்றினவங்க.. அப்போ மற்ற மூணு பேர் எங்க..?” என்று அலர் கேட்டுக்கொண்டிருந்த நேரம் அவர்கள் ஆரணி நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

அவர்களை பற்றி சுருக்கமாக சொன்ன தென்றல், “அவங்க அக்காவை பார்த்துட்டு இங்க வரோம்னு சொல்லியிருக்காங்க மேம், சீக்கிரம் வந்துடுவாங்க”

ஓஒ ஓகே!  சரத் எப்போ உங்க வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போனான்”

கல்யாணம் நின்றதில் இருந்து  மூணாவது நாள் நைட் வந்தான் மேம்”

அப்படியா..?” என்றவள் உதய் மிதிப்பதை சுட்டிகாட்டி,

இத்தனை மிதி மிதிச்ச பிறகும் இவ்ளோ சீக்கிரம் சரத் தளிர் வீட்டிற்கு வந்திருந்தானா..? நம்ப முடியலையே..!”

ஏன் மேம்..?”

எப்படியும் நாலஞ்சு தையல் போட வேண்டி இருந்திருக்குமே எப்படி அவனால நடக்க முடிஞ்சது டாக்டர்ஸ் எப்படி அவனை உடனே டிஸ்சார்ஜ் பண்ணினாங்க..?”

தெரியலை மேம் ஆனா அவன் கொஞ்சம் காலை இழுத்து வச்சு தாங்கி தாங்கி தான் நடந்தான், டாக்டர்ஸ் சொன்னதை மீறி வந்ததா தான் சொன்னான்” என்று தென்றல் சொல்லிக்கொண்டிருந்த அதேவேளை உதய் சரத்தின் உயிர்நாடியில் அடித்த அடியில் அவன் தந்தையாகும் வாய்ப்பை இழந்ததோடு இனி செயல்படவே முடியாது என்ற செய்தி மருத்துவர்கள் மூலம் அவனுக்கு சொல்லப்பட்டது.

ம்ம்! இவ்வளவு அடிச்சு அட்மிட் பண்ணின பிறகும் அவன் உங்க மேல எதுவும் கேஸ் ஃபைல் பண்ணலையா..?” என்றாள் உதயாதித்தனிடம்.

இல்ல மேம் அப்படி எதுவும் பண்ணலை”

தென் யூ ஹாவ் டூ பி மோர் கேர்ஃபுல்! என்று எச்சரித்தவள், “எனக்கு சரத் மண்டபத்துல ஏதோ பேசினான்னு சொன்னீங்களே அந்த வீடியோ க்ளிப்பிங் கிடைக்குமா..?” என்றதும் உதய் தன் பென்ட்ரைவ்வை அவளிடம் கொடுக்க கணினியில் பொருத்தி பார்வையிட்டவள்,

நான் கேட்கிறது வீடியோ இல்ல சரத் பேசினது எனக்கு வேணும்.., ஏதோ இரண்டு மாசம் சேர்ந்து வாழ்ந்ததா அவன் சொன்னான்னு சொன்னீங்களே! அவன் எக்ஸாக்ட்டா என்னென்ன வார்த்தைகள் பேசினானோ அந்த ஃபுட்டேஜ் வேணும் வித் ஆடியோ..”

மேம் வித் ஆடியோவா அது எப்படி முடியும்..? மேரேஜ் வீடியோ கவரேஜ்ல அதுக்கு வாய்ப்பு இல்லங்களே” என்று ராகவன் சொல்ல,

ஏன் இல்லாம..? அதுதான் ஒவ்வொருத்தர் கையிலயும் செல்ஃபோன் இருக்கே..! மிஸ்டர் உதய் அடிச்சதை சோஷியல்மீடியால எடுத்து போட்டிருக்கும் போது நிச்சயமா அவன் பேசியதையும் யாராவது எடுத்திருப்பாங்க உங்களுக்கு தெரியாம இருந்திருக்கலாம்... கல்யாணத்துக்கு வந்தவர்களை கேட்டா கொடுத்திட போறாங்க” என்றவள் பார்வை கணினியில் ஓடிக்கொண்டிருந்த உதய்யின் திருமணவீடியோவில் நிலைத்திருந்தது.

இங்க பாருங்க” என்று மடிக்கணினியை அவர்கள் புறம் திரும்பியவள்,

சரத் பேசும் போது இவங்க எல்லாரும் வீடியோ எடுத்திருக்காங்க..” என்று சில நபர்களை சுட்டிக்காட்டி நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சவங்களா இருக்கலாம்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே உதய் அதில் ஒருநபரை புகைப்படம் எடுத்துகொண்டவன்..,

எக்ஸ்கியூஸ் மீ மேம்! ஒரு டென் மினிட்ஸ்ல நான் அந்த ஃபுட்டேஜோட வரேன்” என்று வெளியேறி செல்வத்திற்கு அதை அனுப்பியிருந்தான்.

அவர்களிடம் பணிபுரியும் அந்நபரின் கைபேசி எண்ணை அடுத்த சில நிமிடங்களில் பெற்றவன் அவர் எடுத்திருந்த வீடியோவோடு அறைக்குள் நுழைந்தான்.

அலர் அதை ஓடவிட அதில் சரத் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் துல்லியமாக இடம் பெற்றிருந்தது.

ஸோ சரத்தை கல்யாணம் செய்து இரண்டு மாசம் சேர்ந்து வாழ்ந்த பிறகு தளிர் காணாமல் போனது தான் சரத்தோட ஸ்டேட்மென்ட்..!  ஆம் ஐ ரைட்”

மேம் ஆனா அது உண்மையில்ல அவ அன்னைக்கே தாலியை கழட்டி வீசிட்டா அதுக்கப்புறம் கல்யாணத்துல தான் அந்த நாய்யை பார்த்தா..” என்று தென்றல் படபடக்க,

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்! அவன் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் வார்த்தையை விட சாட்சியும் ஆதாரமும் தான் முக்கியம் தென்றல்.., அப்போ இந்த அலிபி (தான் குற்றமற்றவர் என்பதை நிருபிக்கும் விதமான ஆதரங்களை உருவாக்குதல்) சரத்தை இன்னொசென்ட்னு ப்ரூஃவ் பண்ண போதுமானது என்றால் அவன் மேல இருக்க குற்றத்தை நிருபிக்க இதைவிட ஸ்ட்ராங்கான ப்ரூஃவ் நமக்கு தேவை.

மேம் அக்காவோட ஃப்ரெண்ட்ஸ் நிச்சயம் அவளுக்காக பேசுவாங்க”

பேசலாம் ஆனா அது மட்டுமே சரத் உருவாக்கி இருக்கும் ஆதாரங்களை உடைக்க போதுமானது இல்லை, அதேபோல direct and circumstantial evidence ரொம்ப அவசியம்..” என்றவள் அது குறித்து சில நிமிடங்களில் விளக்கி முடித்து,

நெக்ஸ்ட் எனக்கு அந்த மேரேஜ் சர்டிஃபிகேட் பார்க்கணும் கிடைக்குமா..?” என்று அலர் கேட்கும் முன்னமே சிவனேஷிடம் இருந்து பெற்றிருந்த அதன் நகலை எடுத்து கொடுத்தான் உதய்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17