“இது தளிரோட சைன் தானே..? அதுல மாற்றமில்லையே”
“ஆம்” என்று இறுகிய முகத்துடன் உதய் சொல்ல
அங்கே வந்து சேர்ந்தனர் அஜய், சந்தியா மற்றும் லேகா.
“மேம் இவங்க தான் அக்காவோட ப்ரெண்ட்ஸ்”
என்றதும் அவர்களிடம் சரத், தீனா, அசோக்
பற்றிய விசாரணையை அலர் தொடங்க அவர்களும் அவள் கேள்விக்கு உண்மையான பதில் கொடுத்து
வந்தனர்.
“அப்போ உங்களுக்கு அவன் திட்டம் தெரிஞ்சிருந்தா
தளிரை தனியா அனுப்பி இருக்கமாட்டீங்களா அஜய்..?” என்று கேட்க
பதிலளிக்க முடியாமல் அமர்ந்திருந்தான். லேகா தான் அவன் காதல் கதையை அலரிடம்
விவரித்து கொண்டிருந்தாள்.
“கேர்ள்ஸ் அவங்களை கண்டுபிடிக்கிறது கஷ்டம் ஆனா
மூணு பேரோட க்ளோஸா இருந்த நீங்க அவங்களோட நடவடிக்கை மாற்றம் எதையுமே கவனிக்கலையா..?”
என்றதில் அப்போதெல்லாம் லேகாவை தவிர வேறு யாருமே அவன் பார்வை
வட்டத்தில் பெரிதாக இருந்ததில்லை என்பதால் மெளனமாக தலை குனிந்திருந்தான்.
“ஓகே அன்னைக்கு பாஸ்போர்ட் எடுக்க போனபோது என்ன
நடந்ததுன்னு எனக்கு கொஞ்சம் டீட்டெயிலா சொல்ல முடியுமா..?”
சந்தியா தான் தளிரோடு தாமதமாக வந்ததை சொல்லவும் மற்றவர்கள்
அன்று நிகழ்ந்ததை விவரித்தனர்.
“சரத் பேப்பர்ஸ் இன்க்லூட் பண்ணினதை நீங்க
யாருமே பார்க்கலையா..?” என்று கேட்க லேகா அஜய்யை முறைத்தாள்.
“இல்ல மேம்... அதுவந்து அன்னைக்கு..” என்று
அஜய் சுரத்தே இல்லாத குரலில் சொல்ல,
“ஓஒ காதல் சுற்றுபுறத்தை மறக்கடிச்சுடுச்சா..?”
என்றாள் எள்ளலாக..,
“ஸாரி மேம்..!”
“நீங்க ஸாரி கேட்க வேண்டியது தளிர்கிட்ட..!”
“கேட்டுட்டு தான் மேம் வந்தேன்” என்று அஜய்
சுரத்தே இல்லாத குரலில் சொல்ல,
“ஓகே டைம் ஆகிடுச்சு நீங்க லன்ச் முடிச்சுட்டு
வாங்க நான் அடுத்து என்னன்னு சொல்றேன்” என்று சொல்லவும் அடுத்த ஒன்றரை மணி
நேரத்தில் மீண்டும் அலர் முன்னர் அமர்ந்திருந்தனர்.
“இப்போ இதை நான் டிவோர்ஸ் கேஸா ஃபைல் பண்ண
போறது கிடையாது”
“கிடையாதா, வேற எப்படி
மேம்”
“I am going to file a writ petition to annul this
marriage..”
“....”
“இந்த திருமணமே செல்லுபடியாகாது என்று வழக்காட
போறேன்.. அதாவது அவர்கள் சம்பிரதாயபடியோ சட்டப்படியோ கணவன் மனைவியே கிடையாது என்று
நிருப்பிச்சு இந்த திருமணத்தை ரத்து செய்து தளிரை விடுவிக்க போறேன்..”
“எப்படி மேம்..? அது
முடியுமா..?” என்றவர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“ஏன் முடியாம..? section 362, 365 படி ஒருவரை ஏமாற்றி, அடைத்து வைக்கும் நோக்கத்துடன்
ரகசியமாக கடத்தி செல்வது, 366 படி விருப்பத்திற்கு மாறாக
கடத்தி கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயன்றது, section 493 யின் படி சட்டப்படி நடக்காத திருமணத்தை சட்டப்படி
நடந்ததாக நம்ப வைத்து அந்த பெண்ணை தன்னோடு வாழ கட்டாயப்படுத்துவது, section
499 படி ஒரு பெண்ணின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், மன உளைச்சலுக்கு ஆளாக்குதல், வீடு புகுந்து மிரட்டினதுன்னு
இன்னும் பல செக்ஷன்ல கேஸஸ் அவன்மேல் போட முடியும்”
“அதுமட்டுமில்ல தன்னை புத்திசாலின்னு நினைச்சு
சரத் உருவாக்கின ஆதாரங்களே இப்போ அவனுக்கு எதிரா இருக்கு.. இது போதும் இந்த
திருமணத்தை உடைக்க” என்றவள் சரத் பேசிய க்ளிப்பிங்கை அவர்களுக்கு போட்டு காண்பித்தாள்.
அடுத்து திருமண சான்றிதழை அவர்களிடம் காண்பித்தவள், எப்பவுமே
நாம் பதிவு செய்யும் போது அது எங்க நடந்ததுன்னு மண்டபம் அல்லது கோவில் ரசீது
கொடுப்போம்” என்றவள் தளிரின் திருமண சான்றிதழில் இருந்த கோவிலின் பெயரை
சுட்டிக்காட்ட அஜய், லேகா, சந்தியா
முகத்தில் அதிர்ச்சி.
“மேம் இது எப்படி பாசிபிள் ..? அவன் தாலி கட்டினது தீனாவோட அத்தை ஊருல இருக்க கோவில் ஆனா சென்னையில்
இருக்க பிரசித்தி பெற்ற கோவில்ல கல்யாணம் நடந்ததா பதிவு பண்ணியிருக்கான்”
“ஆமா இதுதான் அவனுக்கு எதிரான என்னோட முதல்
வாதமே..! அதுக்கு அவனே ஆதாரமும் கொடுத்துட்டான்”
“ஆதாரமா..?”
“சரத்தா..?”
“எப்படி மேம்”
“எந்த வீடியோ க்ளிப்பிங்ஸ் கொண்டு தளிரை அவன்
தவறா சித்தரிச்சானோ அந்த வீடியோ க்ளிப்பிங்க்ஸ் தான் அவனுக்கு எதிரா பேச போகுது..”
என்று அலர் புன்னகையோடு சொல்ல,
“புரியல மேம்” என்றாள் சந்தியா.
“இதை பாருங்க” என்று சென்னையில் திருமணம்
நடந்ததாக சொல்லப்பட்ட கோவில் சன்னிதானத்தை இணையதளத்தில் காண்பித்தவள் அவர்கள்
கோவிலுக்கு சென்ற காணொளியையும் தளிருக்கு சரத் தாலி கட்டும் புகைப்படத்தையும்
காண்பித்து, “திருமணம் நடந்ததா சொல்லப்படும் கோவிலும்,
பதிவு திருமணத்தில் கொடுக்கப்பட்ட கோவிலும்
வேறு வேறு என்பதை நிருபிக்க அவனே முதல் ஆதாரம் கொடுத்துட்டான்... ப்ரூஃவ் பண்ண வேற
தேவையா என்ன..?” என்று கேட்க,
“ஆமாம் மேம்! இதோ நாங்க அதே ட்ரெஸ்ல கோவிலுக்கு
போறப்போ வழியில எடுத்த ஃபோட்டோஸ், வீடியோஸ்” என்று அஜய் அவன்
கொண்டு வந்ததையும் அலரிடம் கொடுக்க சரத்துக்கு எதிரான ஆதாரம் இன்னும் உறுதியானது.
“மேம் அடுத்த ஆதாரம் என்ன..?” என்று ஆர்வத்தோடு சரவணன் கேட்க,
“இரண்டாவது ஆதாரம் அவன் கொடுத்த வாக்குமூலம்”
“வாக்குமூலமா..? யார்கிட்ட
மேம் கொடுத்தான்..?”
“உங்க எல்லோரிடமும் தான்..!” என்றதில் அவர்கள்
புரியாமல் பார்க்க,
“திருமண மண்டபத்துல அத்தனை பேர் எதிர்ல
கொடுத்திருக்கானே யாரும் கவனிக்கலையா..?”
“என்னது மேம்..?” என்று
அஜய் ஆர்பரிக்க,
“மேம் டூ மந்த்ஸ் என்று அவன் சொன்ன தேதிக்கும் மேரேஜ்
ரெஜிஸ்ட்ரேஷன் தேதிக்கும் இருக்கும் வித்யாசம் தானே..?” என்ற
உதய் திருமண சான்றிதழை ஆராய்ந்த போதே கண்டுபிடித்து விட்டான்..
“எஸ் தளிர் வேலூர்க்கு வந்த ஒன்றரை
வருடத்திற்கு பிறகு தான் திருமணம் பதிவு செய்யபட்டிருக்கு ஆனா இரண்டு மாசம்
மட்டுமே வாழ்ந்து தளிர் காணாமல் போயிட்டதாகவும் ஆறு வருடம் கழித்து இப்போதான்
பார்த்ததாகவும் அவனே சொல்லியிருக்கான்..”
“காணாமல் போனவள் எப்படி பதிவு திருமணத்தை செய்ய
மட்டும் அவள் காணாமல் போனதாக சொல்லப்பட்ட நாளில் இருந்து ஒன்றரை வருடம் கழித்து
வந்தா..? இங்கேயே அவன் சொன்ன பொய் நிருபணம் ஆகிடுதா..?”
என்று கேட்க ராகவனும் சந்தியாவும் உற்சாகத்தில் சத்தமாக
கைதட்டிவிட்டனர்.
அஜய் மகிழ்ச்சியோடு லேகாவை பார்க்க, அவளோ
சந்தியாவை கட்டிக்கொண்டாள்.
“இதையெல்லாம் ஆதாரபூர்வமாகவும், தக்க சாட்சிகளோடும் நிருபிச்சாலே போதும்.. அதுக்கு முதல்ல தளிர் திருமணம்
பதிவு செய்யபட்டதற்கு ஒன்றரை வருடங்களாக வேலூரில் இருந்தாள் என்பதை ஆதாரபூர்வமா
நிருபிக்க வேண்டும்..”
“மேம் அக்கா வேலூரில் தானே செகேன்ட் இயர்
கண்டினியூ பண்ணினா நாம காலேஜ் ஃபீஸ் ரிசீப்ட்ஸ், ஐடி
கார்ட்னு சப்மிட் பண்ணலாம்தானே..?”
“எஸ், ப்ளஸ் அவளுக்கு
ட்ரீட்மென்ட் கொடுத்த சைக்கியார்ட்டிஸ்ட் ரிபோர்ட்ஸ் தேவை”
“இருக்கு மேம்... அப்போ கண்டிப்பா அக்காக்கு
நடந்தது கல்யாணமே இல்லன்னு நிருபிக்க முடியுமா..?”
“நிச்சயமா முடியும்..! அதோட சேர்த்து அவனால
அவள் அனுபவிச்ச மன உளைச்சலுக்கும் சேர்த்து தண்டனை வாங்கி கொடுக்க முடியும்...
தீனா அசோக் எங்கன்னு தெரியுமா..?”
“இல்ல மேம் அவங்களை ரீச் பண்ணவே முடியலை ஆனா
நான் எப்படியாவது கூட்டிட்டு வரேன்” என்று அஜய் முன்னே வர,
“ஓகே! முக்கியமான விஷயம் கேஸ் முடியற வரை
ஹியரிங்க்கு எப்போ கூப்பிட்டாலும் வர வேண்டி இருக்கும் அதேபோல தீனாவோட அத்தை பெண்,
பையன் முக்கியமான சாட்சி அவங்களை ரீச் பண்ண முடியுதா பாருங்க” என்று
அலர் சொல்லிக்கொண்டிருந்த வேளை இன்னும் மதிய உணவை எடுத்துக்கொள்ளாத மகளை தேடி
நாதன் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
“சரிங்க மேம்” என்று அனைவரும் கிளம்ப,
“மிஸ்டர் உதய் நாளைக்கு தளிரையும் அவங்க
அம்மாவையும் கூட்டிட்டு வாங்க கேஸ் ஃபைல் பண்ணிடலாம்” என்று அலர் சொல்ல
அங்கே சரத் உதய் உயிரை எடுப்பதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியிருந்தான்.
**************
அலர்விழியை பார்த்துவிட்டு மற்றவர்கள் வெளியேறியிருக்க
உதயாதித்தன் தன் சந்தேகங்களை அலரிடம் கேட்டு தெளிவு படுத்திகொண்டிருந்தான்.
“உயிருக்கு அச்சுறுத்தல்னு சொல்லி உங்களுக்கு
பாதுகாப்பு கேட்க முடியுமே தவிர சரத்தை ரிமான்ட் பண்ண முடியாது”
“அவன் வெளியில் இருக்கும் வரைக்கும் தளிருக்கு
பாதுகாப்பு இல்ல மேம்...”
“எனக்கும் புரியுது..! ஆனால் இது கிரிமினல்
கேஸ் கிடையாது, சரத்தோட குற்றம் ஆதாரபூர்வமா
நிருபிக்கப்படும் வரையிலும் அவனை எதுவும் செய்யமுடியாது..”
“ஒருவேளை அவன் வீட்டுக்கு வந்து மிரட்டினதை
பற்றி தளிர் கம்ப்ளைன்ட் கொடுத்தா அப்பவும் போலீஸ் கூப்பிட்டு விசாரிச்சு
அனுப்பதான் வாய்ப்பு அதிகம் உதய் இல்லை தளிர் அவன் மேல பொய்யா குற்றம் சொல்றான்னு
சொல்லி அங்கயும்...” என்றதிலேயே உதய் ‘புரிந்தது’ என்பதாக தலையசைக்கவும் வேறு
எந்தெந்த காரணங்களின் அடிப்படையில் அவன் உடனே கைது செய்யப்படக்கூடும் என்பதை
விளக்கி இருந்தாள்.
லேகாவிற்கு தலைசுற்றல் இருப்பதாக சொல்லவும் மற்றவர்கள் அருகே
இருந்த காபி ஷாப்பில் உதய்க்காக காத்திருக்க வந்தவன், “கிளம்பலாமா
ப்ரீஸீ...?” என்றான்.
“ஸார் உங்களோட கொஞ்சம் தனியா பேசணும், ப்ளீஸ் ஒரு டென் மினிட்ஸ்” என்று அஜய் சொல்லவும் அமர்ந்தான்.
“ஸாரி ஸார் என்னால தான் தளிருக்கு இந்த
நிலைமை.. மத்தவங்களை விட நான்தான் அவங்ககூட அதிகநேரம் இருந்தவன் அப்படி இருந்தும்
என்னால அவங்களை கண்டுபிடிக்க முடியலை.... சின்ன வயசுல இருந்தே எங்க போனாலும்
அங்கிள் எங்களோட வருவார் அவருக்கு பிறகு ஆன்டி ஒவ்வொரு முறையும் பத்திரம் சொல்லி
அனுப்பி வைப்பாங்க...” என்றதில் உதய் கேள்வியாக அவனை பார்க்கவும்,
“என்னோட தப்பை நியாயபடுத்தலை ஸார் ஆனா அந்த
செமெஸ்டர் அப்போ லேகா பேசாததுல என்னால சுத்தமா படிக்கவே முடியலை.. ஹெல்ப்
பண்ணுங்கன்னு சொன்னதை அவங்க இப்படி யூஸ் பண்ணிப்பாங்கன்னு நான் நினைச்சு பார்க்கவே
இல்ல ஸார்.. நான் கூட போயிருந்தா அவங்க ப்ளானை நடத்த விடமாட்டேன்னு என்னையும்
முட்டாளாக்கி முதுகுல குத்திட்டாங்க.. நம்பிக்கை துரோகிங்க அவங்களை நான் சும்மா
விடமாட்டேன்”
“எப்போ, எப்படி இவங்க
மாறினாங்கன்னு எனக்கு புரியலை.. ஒருமுறை கூட அவன் தளிருக்கு ப்ரொபோஸ் பண்ணினது
இல்லை நீங்க தளிருக்காக வந்திருக்குறதிலேயே அவன் சொன்ன எதையுமே நம்பலைன்னு
புரியுது ஸார். தளிர் மேல நீங்க வச்சிருக்க நம்பிக்கைக்கு பெரிய தேங்க்ஸ்!”
“உங்க வீட்ல யார் காலுல விழுந்தா தளிர்
கல்யாணம் நடக்கும்னு சொல்லுங்க நான் என்னோட தப்பை சொல்லி மனசார மன்னிப்பு
கேட்கிறேன். தளிர் ரொம்ப நல்ல பொண்ணு எல்லார் மேலயும் பாசமா இருப்பா யாருக்கும்
கெடுதல் செய்ய தெரியாது தயவுசெய்து தளிரை விட்டுடாதீங்க ஸார்” என்று கலங்கிய
விழிகளுடன் உதய்யின் கையை அஜய் பிடித்துக்கொள்ள,
“சிந்திய பாலுக்காக வருத்தப்பட்டு உபயோகமில்லை
அஜய் முதல்ல கண்ணை துடைங்க..!” என்று தண்ணீரை அவன் புறம் நகர்த்த எடுத்து
குடித்தவனிடம்,
“எனக்கு சரத் பேக்ரவுண்ட் சொல்லுங்க” என்றதில்
அவன் குடும்பம், வீடு, பண்ணைவீடு,
தொழில், பணபலம், அதிகாரபலம்
என்று அவன் அறிந்த அத்தனையும் சொல்லிக்கொண்டு வந்தான்.
“ஸோ அவனோட அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க,
ஆனா அப்பா எங்க..? இவ்வளவு நடந்தும் அந்த ஆள்
வரவே இல்லை”
“ஸார் சரத்தோட அப்பா உயிரோட இல்லை”
“வாட்..?”
“ஆமா ஸார் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஃபிளைட்
க்ராஷ்ல இறந்துட்டார் இவனுக்கு அவங்க பரம்பரை சொத்தே இன்னும் நாலு தலைமுறைக்கு
வரும்... கேட்பார் யாருமில்லை கட்டவிழ்த்து விடப்பட்ட காளை தான்... இந்தியா
மட்டுமில்ல வெளிநாடுகளிலும் அவங்களுக்கு பிஸினஸ் இருக்கிறதால ஒரு இடத்துல நிலையா
இருக்கமாட்டான் சுத்திட்டே இருப்பான்... ஆனா எங்களோட க்ரூப் சாட்டிங் பண்ணுவான்
எப்பவாவது பேசுவான் வருஷத்துக்கு ஒருமுறை கெட்டூல கலந்துப்பான்”
“அப்போ நிச்சயமா அவனுக்கு வீக்னெஸ் எதாவது
இருக்குமே..”
“இல்ல ஸார்! அதிசயமா மற்ற பணக்கார பசங்களை போல
இவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அதனால தான் எங்களோட பிரெண்ட்ஷிப் இத்தனை
வருஷம் தொடருது. ஆனா இப்போ நடக்கறதை வச்சு பார்க்கிறப்போ தளிர்
மட்டும் தான் அவனோட வீக்னெஸ்ஸா இருப்பான்னு நினைக்கிறேன். எப்பவும் அவன் தன்னோட
பொருளை யாருக்கும் விட்டு கொடுத்திட மாட்டான். நாம வேணும்ன்னு கேட்டா அதே
போல வாங்கி கொடுப்பானே தவிர தன்னோடதை விடமாட்டான்”
“அவன் வாழ்க்கை அவனோட முடிவு! செலவு பண்ண
எக்கச்சக்க பணம் அதை நிர்வகிக்க ஆள்கள் அதனால தான் அவன் தீனாவை மேற்படிப்புக்கு
பாரீன் அனுப்பினான்.. அசோக்கு அவன் ரொம்பவும் ஆசைப்பட்ட டான்ஸ் அகாடெமி செய்து
கொடுத்தான்..”
“தீனா அசோக் எங்க இருக்காங்க...?”
“ஸார் ug வரைதான் எங்களோட
படிப்பு தொடர்ந்தது.. pg எல்லாம் தனி தனியா பிரிஞ்சுட்டோம்
ஆனா டச்ல இருந்தோம்.. தீனா படிச்சு முடிச்சுட்டு tefl முடிச்சு
ஃப்ரான்ஸ் போயிட்டான். அதுக்கு ஏற்பாடு பண்ணினதும் சரத் தான்.. அங்க காண்ட்ராக்ட்
முடிஞ்சு ஜெர்மனி இல்ல ஜப்பான் போக போறதா சொல்லிட்டு இருந்தான்.. நான் என்னோட
கல்யாணத்துல பிஸியாகிட்டதால ஒரு ஆறு மாசமாவே பேச முடியலை”
“அப்போ கல்யாணத்துக்கு அவன் வரலையா..?”
“இல்ல ஸார்...”
“அசோக்..?”
“ஸார் அவனுக்கு டான்ஸிங் பேஷன். ஆனா அவங்க
வீட்ல கூத்து கட்டற வேலையெல்லாம் இருக்க கூடாது வேலை பார்க்கணும்னு கண்டிப்பா
சொல்லிட்டாங்க அதனால் சரத் சூரத்ல இருக்க அவங்க பிசினஸ் பார்த்துக்க ஆள் வேணும்
சொல்லி அவனை அங்க கூட்டிட்டு போனவன் அவனுக்கு வேலையும் போட்டுகொடுத்து டேன்ஸ்
அகாடமியும் வச்சு கொடுத்துட்டான்..”
“ஸோ காலேஜ் முடிச்ச பிறகும் அவங்க ரெண்டு
பேரையும் அவன் கட்டுப்பாட்டுல வச்சிருந்திருக்கான் அப்படிதானே..!”
“ஆமா ஸார் அப்போல்லாம் அவனோட உதுவும் குணத்தை
நாங்க எவ்வளவு பாராட்டி இருப்போம் ஆனா இப்போதான் அதுக்கு பின்னாடி இப்படி ஒரு
காரணம் இருக்கிறதே தெரியுது..” என்று அஜய் கைமுஷ்டிகள் இறுக கூறவும்,
“அவங்க இரண்டு பேரையும் ரீச் பண்ண முடியலைன்னா
விஷயம் அவங்களுக்கு தெரியும்னு தானே அர்த்தம்..?”
“ஆமா ஸார்.. இப்பவும் அவன் பணத்துக்கு
விசுவாசமா இருக்காங்க ஆனா நானே நேரடியா சூரத் கிளம்பறேன் அசோக்கை முதல்ல
கூட்டிட்டு வரேன்..”
“அதுக்கு முன்ன அவங்களோட சோஷியல் மீடியா
ஆக்செஸ் செக் பண்ணு அஜய்” என்று சொல்லவும் கைபேசியை எடுத்தவன் தகவல்களை உதய்க்கு
சொல்லவும் குறித்துக்கொண்டவன் “சரி நேரமாச்சு மற்றதெல்லாம் வீட்ல போய்
பேசிக்கலாம்” என்று வீட்டிற்கு அழைத்து சென்றான்.
By RP
Comments
Post a Comment