வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 49




அனைவரையும் வரவேற்று அமர்த்திய நிவி தளிர் உறங்கி கொண்டிருப்பதை சொல்லி “நான் அண்ணியை கூட்டிட்டு வரேன்” என்று மாடிக்கு செல்ல,

இல்லங்க வேண்டாம் தளிர் தூங்கட்டும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.., நாங்க நாளைக்கு திரும்ப வந்து பேசிக்கிறோம்” என்றவர்களுக்கு காலை தங்களிடம் முன்பு போல நட்பு பாராட்டாத தளிரின் யாரோ போன்ற அணுகுமுறை வெகுவாக கலங்கடித்திருந்தது.

பின்னே இத்தனை வருடங்கள் கழித்து பார்த்த போதும் நண்பர்களை கண்டு தளிர் பெரிதாக ஆர்பரிக்கவில்லை.

அஜய் லேகாவை புன்னகையோடு வரவேற்றவள் இயல்பாகவே பேச தொடங்கியிருந்தாள். ஆனால் அவர்களுக்கு தான் குற்ற உணர்வில் பேச்சே வரவில்லை. தளிரை கண்டதும் லேகாவும் சந்தியாவும் ஆளுக்கு ஒருபுறமாக அவளை கட்டிக்கொண்ட போதும் அவள் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

அதிலும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தளிர் கொண்டிருந்த நிதானம் அவர்களையும் நிதானிக்க வைப்பதற்கு பதில் சரத் மீதான கோபத்தை அதிகரிக்க செய்திருந்தது.

ஸார் நான் அந்த துரோகியை பார்க்கணும் எந்த ஹாஸ்பிட்டல் சொல்லுங்க” என்று கட்டுபடுத்தப்பட்ட கோபத்தோடு அஜய் கேட்க லேகாவும் சந்தியாவும் அதை ஆமோதித்தனர்.

இல்ல இப்போ நீங்க அவனை பார்க்க வேண்டாம்.. இன்னொரு நாள் பார்க்கலாம் நேரமாச்சு கிளம்புங்க” என்று உறுதியாக மறுக்கவும் அவர்கள் சென்னை கிளம்பினர்.

*********************

உதய் தளிரை முத்தமிடும் காட்சியை இத்தோடு இருபது முறைக்கும் மேல் பார்த்துகொண்டிருந்த சரத்தின் முகம் நொடிக்கு நொடி விகாரமாகி கொண்டே போனது.

வீட்டில் அவன் பொருத்தியிருந்த கேமராக்கள் அகற்றப்பட்டதில்  இனி தளிரை பார்க்க முடியாதே என்ற ஆதங்கத்தில் வெந்து கொண்டிருந்தவனுக்கு இப்போது குமாரின் தம்பியை ஏமாற்றிவிட்டு உதய் தளிரை எங்கே அழைத்து சென்றான் என்று தெரியாமல் தவித்து போனான்.

நிச்சயமா தெரியுமாடா..?” என்று சுந்தரை கேட்க,

கண்டிப்பா தெரியும் ஸார் வண்டியில இருந்து அவங்க இறங்கினதை என் ரெண்டு கண்ணால பார்த்தேனே! அவங்க வேற யாரோ... சிக்னல்ல வேற வண்டி மாறியிருக்காங்க”

அப்போ தளிர் அவன் வீட்ல இல்லையா..?”

இல்ல ஸார் உங்களுக்கு தகவல் சொல்லிட்டு உதய் ஸார் ஷோரூம்க்கு போனேன் அவர் அங்க இல்லை.. ஆனாலும் நம்ம தோஸ்த் ஒருத்தனை அவர் வீட்ட வேவு பார்க்க சொல்லி இருக்க வச்சிருந்தேன்.. கடைசியா வீட்டுக்கு அவர் தனியா வந்ததா தான் சொன்னாங்க கூட தளிர் மேடம் இல்ல”

எனக்கு தளிர் இப்போ எங்க இருக்கான்னு தெரிஞ்சாகனும்.. அவளை பார்க்காம ஒருநாள் கூட இருக்க முடியாது போய் தேடுங்க” என்று கையை வீசி அவன் கத்திக்கொண்டிருக்கும் போதே அங்கே வந்த நர்ஸ்..,

ஸார் ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்னு நாங்க சொல்லியும் கேட்காம போனதுல தையல் பிரிஞ்சு மீண்டும் போட வேண்டியதா போச்சு... நீங்க இப்படி கத்தி உடம்பை அசைச்சுட்டு இருந்தா உங்களுக்கு தான் ஆபத்து புரிஞ்சுகோங்க” என்றவர் அவனுக்கு உறங்குவதற்கான மருந்தை செலுத்தியிருந்தார்.

ஆனால் அவன் மீண்டும் விழித்தது என்னவோ உதய் முத்தமிடும் வீடியோவில் தான்..!

தான் அத்தனை எச்சரித்த பிறகும் எப்படி..? எப்படி தளிர் அவனை நெருங்கவிடலாம்..?” என்று சரத் கொந்தளித்து கொண்டிருக்க அங்கே வந்த மருத்துவர் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்தவாறே அவன் நிலையை பொறுமையாக விளக்கனார்.

கேட்டுக்கொண்டவனின் முகத்தில் அத்தனை ரௌத்திரம்..! ஏற்கனவே உதய் மீது கொலைகாண்டில் இருந்தவனின் மூர்க்கம் இப்போது பன்மடங்காக பெருகியிருந்தது.விழிகள் அலைபாய எதிரில் இருந்த சுவரை வெறித்து கொண்டிருந்தவனின் முகத்தில் நொடிக்கு ஒரு பாவம் வந்து போனதை  கண்டு குமார் சுந்தருக்கு அவனை நெருங்கவே பயமாக இருந்தது.

அதேநேரம் அவனுக்கு அளிக்கபட்டிருந்த மயக்கமருந்தின் வீரியத்தில் உறக்கத்தை தழுவியவன் மீண்டும் விழித்தபோது, ஸார் என்று குமார் மெதுவாக அவனை நெருங்க,

என்ன நடந்தாலும் தளிர் என் பொண்டாட்டிங்கிறது மாறாது..! எனக்கு தளிர் குழந்தை தளிருக்கு நான் குழந்தை எங்களுக்கு எதுக்கு இன்னொரு குழந்தை” என்று கேட்டு சிரித்தவனை கண்டவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

ஆனா இவன் இருக்க கூடாது” என்று அடுத்த நிமிடமே சரத் உரக்க சொல்லவும் “ஸார் கொலையா..?” என்று அதிர்ந்து போயினர் இருவரும்.

ஆமா அதுவும் அவனை என் கையாள கொல்லனும்” என்று சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் அச்சத்துடன் பார்த்துக்கொண்டனர்.

*********************

நண்பர்கள் குழு விடைபெறவும் தன்னறைக்கு சென்று  குளித்துவிட்டு உடை மாற்றிகொண்டு மகனை மடியில் வைத்திருந்த ராகவனுக்கு காஃபி கொண்டு வந்து கொடுத்த நிவி,

அப்போ அண்ணியை அவன் மனைவியே இல்லன்னு நிருபிக்க முடியுமா..? டிவோர்ஸ் பண்ணாம எப்படிங்க அண்ணா கல்யாணம் பண்ண முடியும்..?”

டிவோர்ஸ் பண்ணினா சட்டபடி தளிர் அவனோட மனைவின்னு அர்த்தமாகும்..., இந்த திருமணத்தை ரத்து செய்யறதன் மூலமா தளிருக்கும் சரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஆகிடுமாம்”

எப்படிங்க இதுவரை டிவோர்ஸ் மட்டும் தான் வாங்குவாங்கன்னு நான் நினைச்சிருந்தேன் இப்படியும் ஒரு வழி இருக்கா...?” என்று ஆச்சர்யமாக கேட்க,

ஆமா நிவி இதுக்கு சட்டத்துலயே வழி இருக்காம் அதாவது ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்திருந்தாளோ, இருபத்தியோறு வயதுக்கு உட்பட்டு இருந்தாலோ,  திருமணத்திற்கு பின் அவள் கணவன் ஆண்மை இல்லாதவன் என்றோ இல்லை, மனநிலை பாதிக்கபட்டவன் என்றோ தெரியவந்தால், அவங்களோட குறையை மறைத்து செய்த திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது அதை void, nullified ன்னு சொல்லுவாங்களாம்”

திருமணத்தை ரத்து செய்த பிறகு தளிர் சரத்தோட மனைவியா இல்லாமல் தனி மனுஷியா தான் அறியப்படுவாள்..”

அப்போ அண்ணா அண்ணி கல்யாணம் பண்ணிக்கலாமா..?”

தாராளமா பண்ணிக்கலாம்” என்று ராகவன் சொல்ல மகிழ்ச்சியோடு கணவனை கட்டிக்கொண்டு அழுத்தமாக முத்தமிட அவன் கையில் இருந்த குழந்தை அழுது தன் இருப்பை உணர்த்தியது.

தள்ளிபோடி இவ்ளோ நாளா நான் உன் கண்ணுக்கு தெரியலை இப்போ மட்டும் என்ன...?” என்று ராகவன் தள்ளி அமர,

எனக்கும் ஒண்ணுமில்ல! உங்க மாமியார் தான் என்னை  திரும்ப  அங்க வர சொல்லி கேட்டாங்க நான் உங்ககிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்... இப்போதான் நீங்க தள்ளி போக சொல்லிட்டீங்களே நாளைக்கே வந்து கூட்டிட்டு போக சொல்றேன்” என்று தோள்களை குலுக்கிக்கொண்டு நிவேதா எழுந்து கொள்ள அவளை விடாமல் வளைத்திருந்தது ராகவனின் கரம்.

அங்கே அம்பலவாணன் வீட்டில் எந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரியக்கூடாது என்று சொல்லியிருந்தாரோ அது சிறப்பாக ஜெகா காதிற்கு சென்றுவிட்டது .

ஆம் தளிர் குடும்பம் ராகவனின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த செய்தி ராகவனின் அன்னை மூலமாக ஜெகாவிற்கு தெரிந்துவிட்டது. பின்னே நிவிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில் திருமணம் நின்றுபோனது அதைதொடர்ந்து அண்ணாமலை உடல்நிலை என்று மாமனார் வீட்டு சூழல் புரிந்துகொண்ட ராகவன் மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.

ஆனால் அண்ணாமலை ஓரளவு உடல்நிலை தேறி வரும் நிலையில் ஆறுமாதங்களுக்கு மகளை வைத்து சீராட்டி அனுப்ப வேண்டும் என்றிருந்த ஜெகாவிற்கு மகள் சென்றுவிட்டது மனதை ஒருபுறம் பிசைய மறுபுறம் பேரன் முகம் கண்ணிலேயே நிற்கவும்  சம்பந்திக்கு அழைத்துவிட்டார்.

நிவியை இப்போதைக்கு அனுப்பும் சூழல் இல்லை என்றவர் தளிர் குடும்பம் அங்கு தங்கியிருப்பதையும் அம்பலவாணன் மற்றும் உதய் வந்து பார்த்துவிட்டு சென்றதை சொல்லவும் உடனே மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்த மாமியாரிடம் சென்று நின்றுவிட்டார்.

நேத்து ராத்திரி இருந்து எனக்கு தூக்கமே இல்ல ஜெகா, உங்க மாமா  தேறிக்கிட்டு வராங்க பயப்பட தேவையில்லன்னு டாக்டருங்க சொல்லியும் எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது  எதுக்கும் இன்னைக்கு நான் அவர்கூட இருக்கிறேன் நீயும் ராஜியும் நாளைக்கு வந்தா போதும் சுஜி துணைக்கு இருக்கா நீங்க சாப்பாடு மட்டும் கொடுத்துவிடுங்க” என்றார்.

உங்க உள்மனசு எப்பவும் பொய்யாகாது அத்தை..” என்ற ஜெகா அத்தனையும் மாமியாரிடம் சொல்லிவிட்டார்.

பின்னே அவர் சொல்லி கேட்க கூடியவரா அம்பலவாணன்..! அப்படி கேட்பதாக இருந்தால் நேற்று உதய்க்கு வேறு இடத்தில் பெண் கொடுக்க தயாராக இருக்கின்றனர் என்று சொல்லிய பின்னரும் ‘இப்போ என்ன அவசரம் அப்பா வீட்டுக்கு வரட்டும் கல்யாணம் பேசுற நேரமா இது..’ என்று திட்டிவிட்டு சென்றிருக்க மாட்டாரே..!

ஆனால் அவர் ஏன் அப்படி சிடுசிடுத்தார் என்பதே இப்போதுதானே ஜெகாவுக்கு புரியவந்தது.

ஏற்கனவே தளிரை மகளாக பாவித்து சீதாவை உடன் பிறந்த தங்கையாகவே நடத்துபவர் இத்தனை நடந்த பிறகும் தங்கள் குடும்பத்தை அவமானபடுத்தியவர்களை ஒரு கேள்வி கேட்காமல், அவர்களிடம் கொடுத்த நகைகளை திரும்ப பெறாமல், கல்யாண செலவுகள் குறித்த எந்த பேச்சையும் எடுக்காமல் அவர்களுக்கு  ஊழியம் செய்து கொண்டிருக்கார் என்றால் இனியும் அவரிடம் பேசி ஜெகா எதையும் சாதித்து விட முடியுமா என்ன..?

அதுதான் கணவனையும் மகனையும் வழிக்கு கொண்டு வர மாமியாரை சரணடைந்து விட்டார்.

ஜெகா சொன்னதை கேட்டு அன்னபூரணிக்கு மகன் மற்றும் பேரனின் மீது ஏக வருத்தம்.

நான் சொன்னா உங்க பிள்ளை கேட்க மாட்டாங்க அத்தை.. எப்பவும் நிம்மதி முக்கியம்னு சொல்ற மனுஷனோட நிம்மதியும் நம்ம குடும்ப கௌரவம்  பறிபோக காரணமே அவங்க தான்... அதையெல்லாம் விட மாமாவை இந்த நிலைக்கு கொண்டு வந்தது அவங்க தான் என்பதை மறந்துட்டு அவர் செய்யற எதுவுமே சரியில்ல அத்தை நீங்க சொன்னீங்கன்னா உங்க வார்த்தைக்கு மதிப்பு இருக்கும்.. தயவுசெய்து பேசுங்கத்தை” என்று ஜெகா மூக்கை உறிஞ்சவும்,

ராத்திரி பகலா தூங்காம  மாமா நல்லபடியா கண் முழிச்சு வரணும்னு ஜெகா விரதம் இருந்து பூஜையறையே கதின்னு இருக்காத்தை ஆனா அதையெல்லாம் அந்த குடும்பத்தை கூட்டிட்டு வந்து உங்க மகன் ஒண்ணுமில்லாம செய்திடுவார் போல.., அவ என்ன ரம்பையா ஊர்வசியா, ஊருல அவளை விட்டா நம்ம ஆதிக்கு வேற பொண்ணே கிடைக்காதா..?”

மாமாக்காக நாம இங்க வேண்டுதல் விரதம்னு இருக்கோம் ஆனா உங்க பிள்ளை செய்திருக்க வேலை மாமாக்கு தெரிஞ்சா அவர் மனசு என்ன பாடுபடும் த்தை, அப்பா, தாத்தாவை விட அப்படி என்ன அந்த பொண்ணு முக்கியமா போயிட்டான்னு  எனக்கு புரியல ஏதோ கடவுளா பார்த்து நல்ல நேரத்துல நம்மளை காப்பாற்றி இருக்கார் திரும்ப அந்த சகதியில் போய் விழுவேன்னு சொல்றவங்களை என்ன சொல்றதுன்னு புரியலை” என்று ராஜியும் தன் பங்கிற்கு அன்னபூரணியின் கோபத்தை கிளறிவிட்டார்.

"இரண்டு நாள் முன்ன மாமாவை பார்க்க வந்திருந்த நம்ம பெரிய சம்பந்தியோட தம்பிக்கு இரண்டு பெண் இருக்காம் ஆதி பற்றி என்னென்னமோ பேச்சு வந்த பிறகும் அவர் நம்மோட சம்பந்தம் வச்சுக்க ஆசைபடறார் அத்தை.. நாம சம்மதிச்சா இந்த வாரத்துலயே வீட்டோட நிச்சயம் வச்சுக்கலாம் மாமா குணமாகி வந்ததும் கல்யாணம் வச்சுக்கலாம் சொல்லியிருக்காங்க..”

அப்படியா..?”

ஆமாத்தை நம்ம ஆதிக்கு என்ன குறை..? எதனால ஊரே இப்படி பேசுறதை பார்த்து பொறுத்துட்டு இருக்கணும்.. சூட்டோட சூடா கல்யாணம் பண்ணி பேசறவங்க வாயை அடைக்க வேண்டாமான்னு கேட்கிறார்..”

அவர்கூட ஆதி மேல விழுந்த களங்கத்தை துடைக்க  துடிக்கிறார் ஆனா இதை உங்க பிள்ளைகிட்ட சொன்னா எதையும் அவர் காதுலையே வாங்கலை அவர் போற போக்கு எனக்கு சுத்தமா பிடிக்கலை அறுபது வயசுல சேய் குணம்னு சொல்லுவாங்க  நீங்களாவது சொல்லுங்கத்தை கேட்கிறாரா பார்க்கலாம்” என்று சொல்லவும் மருத்துவமனைக்கு செல்வதை விடுத்து மகனுக்காக காத்திருந்தார்.

*********************

அடுத்த நாள் அலர்விழிக்கு கோர்டில் முக்கிய வழக்கு விசாரணைகள் இருப்பதால் உதய்க்கு அழைத்து மற்றொரு நாள்  வர சொல்லி நேரமும் ஒதுக்கியிருந்தாள். அன்று காலையே உதய் சைட்டிற்கு கிளம்பியிருக்க இங்கே தளிரை பார்ப்பதற்காக அனைவரும் ராகவனின் வீட்டிற்கு  வந்துவிட்டனர்.

குடிக்க ஏதாவது கொண்டு வா தென்றல்” என்றவள் அமைதியாக அவர்களை பார்த்திருக்க லேகாவின் அருகே அமர்ந்திருந்த அஜய் “ஸாரி தளிர்” என்று அவள் முன் மண்டியிட்டான்.

என்ன அஜய் இது..? மன்னிப்பு கேட்கிறதால ஏதாவது மாறிடபோகுதா..?  எந்திரி” என்று தளிர் சொல்லவும்,

அவன் பண்ணின தப்புக்கு உன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்டாலும் தப்பில்லை.., விடு” என்று லேகா..

ப்ச் அந்த பேச்சை விடுன்னு எத்தனை முறை சொல்றது லேகா..” என்றவள் அவர்களை இதுவரை ஒரு கேள்விகூட கேட்காததில் நொறுங்கி போன லேகாவும் அஜய்யும்,

ஏன் தளிர் இப்படி யாரோ மாதிரி பேசுற, நாங்க பண்ணினது மிகபெரிய தப்பு.. அன்னைக்கு மட்டும் நான் உங்களோட வந்திருந்தா அவங்க இதை தைரியமா செய்ய துணிஞ்சு இருக்க மாட்டாங்க.. ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு தளிர்” என்று கலங்கிய குரலில் அஜய் மேலும் பேசிக்கொண்டே சென்ற போதும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லாது போனது.

நண்பர்கள் அனைவரும் பரிதவித்து போய் அவளை பார்த்திருக்க மெல்ல குரலை செருமியவள், “அன்னைக்கு நான் உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன்” என்றாள்.

தளிர்”

ஆமாம்! எனக்கு மயக்கம் தெளிஞ்ச பிறகு நான் முதலில் தேடினதே உங்களை தான்..! ஆனா  நீங்க இல்லை” என்ற தளிரின் குரல் கமற அவளருகே இருந்த அஜய்யால் அவளை ஏறிட்டு பார்க்கவே முடியவில்லை.

அங்க இருந்த யாருமே எனக்காக பேசலை.. எல்லாருமே அவன் செய்தது சரின்னு சொல்லி என்னை புரிஞ்சுக்க சொன்னங்க. அப்போ நீங்க ரெண்டு பேரும் வந்து எனக்காக பேசுவீங்களான்னு  என் மனசு ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தது.. ஆனா நீங்க வரலை” என்றவளின் குரல் கரகரக்க தன்னை நிதானித்தவள்,

அப்போ மட்டுமில்ல லேகா அதுக்கப்புறம் யாருமில்லாத ரோட்டுல வேகமா அடிச்சுக்கிட்ட நெஞ்சை ஒருகையில பிடிச்சிட்டு ஓட்டமும் நடையுமா இருந்தப்பவும் நீங்க வந்துட மாட்டீங்களான்னு ரோட்டுல ஒவ்வொரு முறை பஸ்சும் காரும் க்ராஸ் பண்றப்போ ஏதாவது ஒண்ணுல இருந்து எனக்காக ஓடிவந்துடுவீங்கன்னு ரொம்ப நம்பினேன் தெரியுமா..?”

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்ற ப்ராவர்பை (proverb) யார் அதிகமா நம்ம கிளாஸ் போர்ட்ல எழுதுறாங்களோ அவங்க தான் உண்மையான பிரெண்ட்னு  நமக்குள்ள பெட் கட்டி அடிச்சு பிடிச்சு போட்டி போட்டுட்டு எழுதுவோம்  ஆனா தேவையான நேரத்துல ஓடிவந்து நமக்கு கைகொடுக்காத நட்பு அதுக்கப்புறம் எதுக்குன்னு தோனுச்சு..” என்று சொல்ல அவள் வார்த்தைகளில் இருந்த நிஜம் அனைவரையும் ஒருசேர சுட்டு பொசுக்கியது.

உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா அஜய்..”

சொல்லு தளிர்

லேகா உன்னோட ஹாஸ்பிட்டலுக்கு வரேன் சொன்னப்போ என் உள்ளுணர்வு நீங்க இல்லாம கோவிலுக்கு போக வேண்டாம் வீட்டுக்கு போயிடலாம்னு சொல்லுச்சு.. ஆனா என் மனசை விட உங்களை அதிகமா நம்பினேன்..”

கண்டிப்பா நீங்க ட்ரீட்மென்ட் முடிச்சுட்டு கோவிலுக்கு வருவீங்கங்கிற நம்பிக்கையில தான் நான் கிளம்பினேன்.. ஆனா நான் வீடு வந்து சேர்ந்த பிறகுகூட நீங்க வரவே இல்ல அஜய்” என்றவளின் இமையோரம் உருண்டோடிய ஒற்றை துளி நீர் அன்றைய அவள் எதிர்பார்ப்பு பொய்த்து போனதன் வலியை அவர்களுக்கு உணர்த்தியது.

ஸாரி! ஸாரி! எக்ஸ்ட்ரீம்லீ ஸாரி தளிர்..! என்னை மன்னிச்சிடு எனக்கு இதுக்குமேல வேற என்ன கேட்கிறதுன்னு தெரியலை” என்றவன் சாஷ்டாங்கமாக தளிரின் காலில் விழுந்திருந்தான்.

பின்னே அவனது அறிவீனத்தால் ஒரு பெண்ணின் வாழ்வே அஸ்தமனத்தை நோக்கி செல்வதை அவன் மட்டுமல்ல அவன் குடும்பத்தினராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அஜய் என்ன பண்ற..?” என்று பதறிக்கொண்டு எழுந்தவள் அவனையும் பிடித்து நிறுத்த,

நான் பாவி..! நாம எங்க, எப்போ வெளியில போனாலும் எங்கம்மா என் தங்கச்சியை எப்படி பத்திரமா பார்த்துக்க சொல்லுவாங்களோ அப்படிதான் உங்களையும் பார்த்துக்க சொல்லுவாங்க..

அதுவும் அங்கிள் இறந்த பிறகு எங்கம்மா என் தங்கச்சிக்கும் உனக்கும் எந்த வித்யாசமும் இருக்ககூடாதுன்னு நிறைய முறை சொல்லியிருக்காங்க அப்படிதான் நானும் இருந்தேன். ஆனா அன்னைக்கு என்னோட சந்தோஷம் பெருசா தெரிஞ்சதுல கண்மூடிதனமா இருந்துட்டேன்.. அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போதான் புரியுது” என்றவன் தன் முகத்தில் அறைந்து கொள்ள..,

காம் டவுன் அஜய்!” என்று அவன் கைகளை பிடித்துக்கொண்டவள், “இத்தனை வருஷம் உங்களை பார்க்காம பேசாம இருந்ததுக்கு காரணம் உங்க மேல சந்தேகமோ இல்ல உங்களை வெறுத்துட்டேன்னோ அர்த்தம் இல்லை வேண்டாம்னு கடந்துட்டேன்”  என்று சொல்ல அங்கே கனத்த அமைதி.

ஆனால் முன்பு போல தளிரின் நட்பு தொடராது’ என்பது புரிந்த போதும் இம்முறை தன் தவறை திருத்திட முனைந்த அஜய்,

நானும் லேகாவும் இன்னைக்கு ஈவ்னிங் சூரத் கிளம்ப போறோம் திரும்ப அசோக்கோட வரோம் நீ கவலைபடாத” என்று அஜய் சொல்ல "சரி" என்று தலையசைத்து அவர்களுக்கு விடை கொடுத்தாள்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17