தன் திருமணத்தால் நிறுத்தபட்டிருந்த வேலைகளை இப்போது தொடர
செய்திருந்ததில் உதய்க்கு நேரம் போனதே தெரியவில்லை.. இடையில் தளிர் குறித்து
தென்றலிடம் விசாரித்து கொண்டவன் ஷோரூமில் இருந்து அழைப்பு வரவும் கிளம்பி
இருந்தான்.
காரை பார்க் செய்துவிட்டு உதய் தன் அறையில் சென்று அமர்ந்த
அடுத்த அரைமணி நேரத்தில் ராகவன் வந்துவிட்டான் உடன் இளந்தளிருடன்... இதை எதிர்பாராதவனிடம்
“எதுக்குடா இவளை இங்க கூட்டிட்டு வந்த..?” என்ற சீற்றம்.
“தளிருக்கு உன்கிட்ட ஏதோ பேசணுமாம் அதுதான்
கூட்டிட்டு வந்தேன் கவலைபடாத யார் கண்ணிலும் படாம தான்டா வந்திருக்கோம்”
“ப்ச்.. டேய் சரத் இங்கயும் ஆள்
போட்டிருக்கான்” என்று விழிகளை சிசிடிவியில் ஓடவிட்டவன் குமார் மற்றும் அவன்
தம்பியை கண்காணிக்க நியமித்திருந்தவர்களிடம் பேசிவிட்டு மீண்டும் சிசிடிவியை
பார்வையிட்டவாறே, “ஏன் நேத்து ரூம்க்கு வந்தப்போ பேசாம கதவை
சாத்திக்கிட்டவ இப்ப மட்டும் என்ன பேச போறாளாம்” என்று அவளுக்கு கேட்கும் விதமாகவே
உதய் கோபமாக முனுமுனுக்க சங்கடத்தோடு தளிரை பார்த்த ராகவன்,
“எனக்கு வேலையிருக்கு பேசி முடிச்சுட்டு நீயே
வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு” என்று கிளம்பிட தன் எதிரே
நின்றிருந்தவளிடம், “உன்னை யாருடி இங்க வர சொன்னா..?” என்றவனின்
குரல் என்றுமில்லாத வழமையாக சிடுசிடுத்தது.
“உங்ககிட்ட பேசணும்..”
“ஓஒ நேத்து நான் ரூமுக்கு வந்தப்போ இல்லாத
நம்பிக்கை இப்போ மட்டும் இருக்கா..?” என்று கேட்டவாறே தன்
அறையின் கதவை உதய் தாழ் போட தளிர் அமைதியாக அவனை பார்த்து நின்றாள்.
“இங்க நான் எதுவும் செய்யமாட்டேன்னு என்மேல
அவ்ளோ நம்பிக்கையா..? அமைதியா இருக்க..? ஏன் வெளியில போகலையா..?” என்று தளிரை நெருங்கி
நின்றவனின் தோரணையே ‘என்னை மீறி செல் பார்ப்போம்’ என்பதாக இருக்க அவளுமே அசராமல்
அவனை பார்த்து நின்றாள்.
“எவ்ளோ திமிர்டி உனக்கு..” என்றவாறே அவள்
தாடையை பற்றிய போதும் அவள் பார்வையில் மாற்றமில்லை. இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடொன்று
உரசிய அதேவேளை உதய்யின் அதரங்கள் அவளிதழ்களை உரசியது ஆனால் மோகத்தோடு அல்லாமல்
கோபத்தோடு.
“இப்போ எப்படி வெளியே போறன்னு பார்க்கலாம்”
என்று அவளிதழ்களை உரசியவனின் உஷ்ணம் அவளை பொசுக்கிய போதும் மீண்டும் அதேநிலை தான்
தளிரிடம் எந்த மாற்றமும் இல்லை.
அவள் விழிகளில் என்ன கண்டானோ தன் கோபத்தை ஒதுக்கி வைத்து, “ப்ச்
என்னை நீ ரொம்ப மாத்திட்டடி... நானா இதுன்னு யோசிக்க வைக்கிற..? டோன்ட் டெஸ்ட் மை பேஷன்ஸ் தளிர்” என்றவாறே அவளை தன் பிடியில் இருந்து
விலக்கிவிட்டு கதவை திறந்தவன்,
“உட்கார்” என்றுவிட்டு அவள் முகத்தின் சோர்வை
கண்டு பழச்சாறு கொண்டு வர சொன்னவன் அவள் முன் நீட்டி,
“முதல்ல உண்ணாவிரதத்தை முடி அப்புறம் பேசலாம்”
என்றான்.
ஆனால் அவளோ பதிலளிக்காமல் அமைதியாக கையிலிருந்த பையை
வெறித்திருந்தாள். இன்று மட்டுமல்ல நேற்று முதலே நிவியும் ராகவனும் எத்தனை
சொல்லியும் ஒரு கவளம் கூட எடுத்துக்கொள்ளவில்லை.
அத்தனை பிடிவாதமாக இருந்தவள் குறித்து நிவி உதய்க்கு தகவல்
தெரிவிக்கவும் இரவு அவளறைக்கு சென்று அழைத்தவனுக்கு எந்த பதிலும் சொல்லாதவள்
அமைதியாக அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.
ஒன்றும் புரியாமல் உதய் அவள் பின்னே செல்ல தளிரோ அவன்
வெளியில் வந்ததும் மீண்டும் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.
அனைவரும் கீழே இருக்க மேலே இருந்தது என்னவோ இவர்கள் இருவர்
மட்டுமே.. ஆனால் அறையினுள் நுழைந்தவனை வெளியே போக சொல்லாமல் இப்படி செய்ததை
கண்டவனுக்கு அவள் நேரடியாக ‘வெளியே போ’ என்று சொல்லியிருந்தால் கூட கோபம் இந்தளவு
அதிகரித்திருந்திருக்காது.
குறையாத சினத்தோடு கதவை தட்டுவதற்காக ஓங்கிய கரத்தை
கட்டுபடுத்தி கொண்டு கிளம்பிவிட்டான். இப்போது அவளே தேடி வந்திருக்க உதய்யால் தன்
கோபத்தை இழுத்து பிடிக்கவும் முடியவில்லை.
“உன்கிட்ட தான்டி சொல்றேன் குடி” என்று அவள்
இதழ்களில் குவளையை பொறுத்த அவளோ அழுத்தமாக இதழ்களை மூடியிருந்தாள்.
“தளிர்” என்று கண்களை இறுக மூடி திறந்தவன்,
“இப்போ நீ குடிக்க போறியா இல்ல நான் ஊட்டி விடட்டுமா..?” என்று கேட்க அழுத்தமாக அவனை பார்த்தவள்,
“எனக்கு வேண்டாம்”
“என்கிட்டே சண்டை போடவாவது உனக்கு ஸ்ட்ரெந்த்
வேண்டாமா குடி” என்ற போதும் அவள் அழுத்தமாக இருக்க ‘இது வேலைக்காகாது’ என்று
தெரிந்துகொண்டவன் வேறு வழியே இல்லாமல் தானே பழச்சாறை பருகி அவளிதழ்களோடு அழுத்தமாக
சேர்த்து அவளுக்கு புகட்ட தொடங்கினான்.
“விடுங்க” என்று திமிறியவளுக்கு புரைக்கேறிட
இருமிக்கொண்டே உதய்யை பார்க்கவும், அவளை விடுவித்தவன் ஜுஸை
நீட்டவும் அமைதியாக குடித்து முடித்தாள்.
“இதை முதல்லயே செஞ்சிருக்கலாம்” என்றவாறே தன்
இருக்கையில் சென்று அமர்ந்தவன், “சொல்லு என்ன விஷயம்..?”
என்றான்.
“நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பறோம்” என்றாள்
எடுத்ததுமே,
“ஏன்..?”
“அதுதான் கேமரா எல்லாம் ரிமூவ் பண்ணியாச்சே
இதுக்கு அப்புறம் எதுக்காக அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்கணும் நாங்க எங்க
வீட்டுக்கு கிளம்பறோம்” என்றவளை கூர்மையாக பார்த்திருந்தவன்,
“சிரமம்னு யார் சொன்னா..?”
“யாரும் சொல்லலை ஆனா இப்படி அடுத்தவங்களோட
வீட்ல வந்து எவ்வளவு நாள் இருக்க முடியும்..? எனக்கு
பிடிக்கல”
“என்ன பிடிக்கல..?”
“எதுவுமே பிடிக்கலை”
“அதுதான் என்ன சொல்லு”
“எனக்கு நீங்க செய்யற எதுவும் பிடிக்கலை.
அதுவும் இப்படி என்னோட முடிவை இன்னொருத்தர் எடுக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல”
“வாட் டூ யூ மீன்..?”
“நான் இதைதான் செய்யணும் இதை செய்யகூடாதுன்னு
என்னை அதிகாரம் பண்ண நீங்க யார்...? ஏன் இந்த மாதிரி பிரஷர்
பண்றீங்க ஐ கேன் நாட் டாலரேட்” என்று தளிர் படபடக்கவும்..,
“நான் யார்..? இதுதானே
உன்னோட கேள்வி” என்றவாறே தன் கைபேசியை எடுத்தவன் அதில் குறிப்பிட்ட காணொளியை
திறந்து அவள் முன் நீட்டினான்.
“என்னை தொலைத்துவிட்டேன்…
என் உன்னை அடைந்துவிட்டேன்…”
என்ற பாடல் ஒலிக்க அதில் சந்தனம் பூசப்பட்ட வசீகர தோற்றத்தோடு
சிவப்பு நிற இதயத்தினுள் உதய் தோன்ற “சொல்லுடி இதுக்கு என்ன அர்த்தம்..?” என்றதற்கு பதிலளிக்காமல் கைபேசியையே வெறித்திருந்தாள் தளிர்.
“ஏனோ ஏனேனோ தொலைந்தே மீண்டேனோ…
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ…”
என்ற வரிகளின் பின்னணியில் அவர்களின் வரவேற்பின் போது தளிர்
உதய் இருவரின் பார்வை பரிமாற்றமும் ரகசிய சிரிப்பும் இடம்பெற்றிருக்க மேலிதழை
கடித்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“உதயா உதயா உளறுகிறேன்…
உயிரால் உனையே எழுதுகிறேன்…”
என்று பாடல் தொடர அதில் உதய்யுடன் நிச்சயத்தில் ரிசெப்ஷனில்
என்று இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இணைத்து தளிர் தான் இப்பாடல்
பின்னணியில் தன் மனதை எடுத்துரைக்கும் விதமாக அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதை
இப்போது போட்டு காண்பித்து அவன் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவனை
பார்த்திருந்தாள்.
“நான் யாருன்னு கேட்டியே அதுக்கு இதுதான்
பதில்..! இப்போ பேசுடி” என்று உதய் அடிக்குரலில் சீற கலங்கும் மனதை
இறுக்கிபிடித்துகொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.
‘இன்னொரு முறை இந்த கேள்வியை கேட்ப..?’ என்பதாக மீண்டும் மீண்டும் “என் உன்னை அடைந்துவிட்டேன்..” என்றும் “உதயா உதயா உளறுகிறேன்” என்றும் அவன் ப்ளே செய்துகொண்டே இருக்க
ஒருகட்டத்தில் தளிர் அதை அணைத்து வைத்தாள்.
“என்னமோ கேட்டியே இப்போ கேளு” என்றதற்கும்
விரல்களை கோர்த்து பிரித்துகொண்டிருந்தவள் பதிலளிக்காமல் போகவும்,
“ஓகே எதுக்கு அப்பா கிட்ட ரெஸிக்னேஷன் லெட்டர்
கொடுத்த..?” என்றான்.
“எதுக்கு குடுப்பாங்கன்னு உங்களுக்கு
தெரியாதா..?” விரல்களை பார்த்தவாறே பதில் சொன்னதில் பல்லை
கடித்தவன்
“ஏன் கொடுத்தன்னு கேட்டேன்..?”
“ஒரே நேரத்தில் இரண்டு ஸ்கூல்ல ஒர்க் பண்ண
முடியாது அதனாலதான்”
“இங்க என்னடி குறைச்சல் எதுக்காக வேற
ஸ்கூல்க்கு போறேன்னு சொல்ற..?”
“இதை உங்க அப்பா கேட்கட்டும் நான் அவருக்கு
பதில் சொல்றேன்.. திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்” என்று தளிர் எடுத்தெறிந்து
பேசவும்,
“என்னடி சொன்ன..?” என்று கோபமாக
எழுந்துவிட்டான் உதயன்.
“நான் உங்ககிட்ட வேலை செய்யலை உங்கப்பா கிட்ட
தான் வேலை செய்தேன் என்னை கேள்வி கேட்கிற உரிமை அவருக்குதான் இருக்குன்னு
சொன்னேன்” என்றதுமே அவளருகே வந்தவன்,
“தளிர் என் பொறுமையை சோதிக்காத.. இப்போதைக்கு
நீ எங்கயும் போககூடாது அவ்ளோதான்.. அமைதியா கிளம்புடி வீட்டுக்கு போகலாம்” என்று
அவள் கையை பிடிக்கவும்,
“விடுங்க, நான் இன்னும்
பேசி முடிக்கலை முடிச்சுட்டு நானே கிளம்புவேன்” என்று அடமாக அமர்ந்துகொள்ள மூச்சை
ஆழ்ந்து எடுத்துவிட்டவன் “சரி சொல்லு என்ன பேசணும்” என்றவாறே அவளருகே நாற்காலி
எடுத்து போட்டு அமர்ந்தவனுக்கு சுஜியிடம் இருந்து அழைப்பு வரவும் பேசிமுடித்தவன்,
“நேத்து வைஷுகிட்ட என்ன சொன்ன..?” என்றவனின் குரலில் அத்தனை காரம். ஆனால் அவளோ அதற்கு பதிலளிக்காமல் தான்
கொண்டு வந்த பையை திறந்து கொண்டிருந்தாள்.
“உன்னை தான்டி கேட்கிறேன் நேத்து வைஷுகிட்ட என்னத்த
சொல்லி தொலைச்ச அவ எனக்கு கால் பண்ணி ஒரே அழுகை... இன்னிக்கு திரும்பவும் அழ
ஆரம்பிச்சவ நிறுத்தவே இல்லையாம், அவளுக்கு ஆல்ரெடி ப்ரீதிங்
ப்ராப்ளம் இருக்குன்னு தெரியாதா..?” என்று சீறவும் அவனை
பார்த்தவள்,
“மாமின்னு கூப்பிட கூடாதுன்னு சொன்னேன்” என்று
அசராமல் அழுத்தமான குரலில் சொன்னாள்.
“ஏன்டி, உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..?
அவளுக்கு நீன்னா உயிர்..! எதுக்குடி குழந்தை கிட்ட அப்படி சொன்ன..?”
என்று கேட்கவும் அவனுக்கு பதிலளிக்காது அமைதியாக அவனை பார்த்தாள்.
“தளிர் உன்கிட்ட தான் கேட்கிறேன் எதுக்காக
குழந்தை கிட்ட அப்படி சொன்ன..?” என்றவனின் பொறுமை கொஞ்சம்
கொஞ்சமாக விடைபெற்று கொண்டிருந்தது.
“ஏன் சொல்லகூடாது..?” என்று
அவனையே திருப்பி கேட்டதும் “தளிர்” என்ற அதட்டல்..!
ஆனால் அதற்கு அசராதவளாக “குழந்தை மனசுல வீண் கற்பனை வளர்ப்பது
நல்லதில்லை அதனால தான் சொன்னேன்.. வைஷு ரொம்ப ஸ்மார்ட் அவளுக்கு புரியும், நீங்க
தேவையில்லாம எக்ஸாஜிரேட் பண்ணாதீங்க”
“ஏன்டி நம்ம பிரச்சனை நம்மோட..! அவ சின்ன
குழந்தை அவளுக்கு என்ன புரியும்..? ஏற்கனவே கல்யாணம் நடக்கலைன்னு ரொம்ப உடைஞ்சு
போயிட்டா, நிச்சயம் நீதான் அவளோட மாமின்னு சொன்னதுல கொஞ்சம்
நார்மலாகி இருந்தா.. ஆனா நீ என்ன பேசி வச்சிருக்க..? குழந்தையால
தாங்கிக்க முடியாதுன்னு தெரியாதா..?” என்றவன் முகத்தில்
கலவையான உணர்வுகள்.
“...”
“லிசென் தளிர் வைஷு என் பொண்ணு மாதிரி, அவகிட்ட
நீ இப்படி பேசுறது இதுவே கடைசியா இருக்கணும்... டோன்ட் டூ திஸ் அகைன்! எனக்கு இது
சுத்தமா பிடிக்கல.. திரும்ப இதுபோல நடந்தது நான் இந்தளவு பொறுமையா இருக்க
மாட்டேன்” என்று கடுமையான குரலில் எச்சரிக்கவும் அவளிடம் பதிலில்லை.
“உன்கிட்ட தான்டி பேசிட்டு இருக்கேன்” எனவும்
அத்தனை நேரம் கொண்டிருந்த மௌனத்தை கலைத்தவள்,
“இதுதான்! இந்த ஆட்டிடியூட் தான் பிடிக்கலை.
நான் என்ன செய்யணும் என்ன பேசணும்னு எல்லாமே நீங்க டிஸைட் பண்றீங்க. ஆனா ஏன்
இப்படி..? வை ஆர் யூ டூயிங் திஸ்..?”
“ஏன்னா புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருல
யாராவது ஒருத்தருக்கு உருப்படியா யோசிக்க தெரிஞ்சிருக்கணும்... எங்க உனக்கு தான்
மூளைன்னு ஒரு வஸ்த்துவை ஆண்டவன் படைச்சானான்னு
தெரியலையே, ஒருவேளை உன் மண்டைக்குள்ள அதை
வச்சிருந்தாலும் யூஸ் பண்ண கூடாதுன்னு முடிவோட இருக்க அதுதான் உனக்கும் சேர்த்து
நான் யோசிக்கிறேன்..” என்று கடுகடுத்தவன்..,
“கொஞ்ச நாள் இந்த பிரச்சனை எல்லாம் முடியற வரை
நீ நான் சொல்றதை மட்டும் செய் போதும்..!” என்றான் கட்டளையாக.
“முடியாது” என்றாள் உறுதியான குரலில்.
“என்னடி முடியாது” என்று இருக்கையில் இருந்து
எழுந்தவனுக்கு தலை விண்விண்ணென்று வலிக்க தொடங்கிவிட்டது.
பின்னே! கடந்த சில நாட்களாக அவன் கொண்டிருக்கும் அழுத்தம்
இதுநாள் வரை இல்லாத அளவு அதீதமானது... இளம் வயதில் இருந்தே தொழிலில் கால் பதித்து
ஏற்ற இறக்கங்களுக்கு பழகி சிக்கல்களை எதிர்கொண்டிருந்தாலும் சரத் மூலமான
சிக்கல்கள் அத்தனையும் சவாலானது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகுபவனை காவலில் வைக்கும்
வரை உதய்யால் நிம்மதியாக உறக்கம் கொள்ள முடியாது.. இவ்வளவு ஏன் எப்போது கடைசியாக
உணவை ரசித்து உண்டான் என்பதே நினைவில் இல்லை..
அண்ணாமலையில் தொடங்கி வைஷு, சரத், பெற்றோர், உறவினர் என்று அனைத்து
பக்கமும் நெருக்கி பிடிக்கையில் குறைந்தபட்சம் தளிர் அவனை புரிந்து
கொண்டாலாவது ஆசுவாசம் கொண்டு அவள் தன்னோடு நிற்கும் பலத்தில் மற்ற பிரச்சனைகளை
எளிதாக கையாண்டு விடுவான்.
மற்றவர்களை விட தளிரை சமாளிப்பது தான் அவனுக்கு பெரும்பாடாக
இருந்தது. தன்னிடம் இருந்து ஒதுங்கி விலகி போக நினைப்பவளின் காரணமே இல்லாத
பிடிவாதம் அவனை வெகுவாக பாதிக்கிறது.. அவன் சிந்தையை சிறையெடுத்து இருப்பவள்
எதையும் பேசி தீர்க்க முயலாதது மட்டுமின்றி வாயை திறக்காமலே அவனை சோதித்து
கொண்டிருக்கிறாள்.
“உஃப்ப்ப்ப்..’ என்று மூச்சை ஆழமாக எடுத்துவிட்டு, “லிசென்
தளிர் நீ ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது..” என்றான்.
Comments
Post a Comment