வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 51

 


லிசென் தளிர் நீ ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது..” என்றான் உதயாதித்தன்.

அதேதான் நானும் சொல்றேன் டோன்ட் ட்ரீட் மீ லைக் எ சைல்ட்..! ஐ ஆம் எ டீச்சர் எனக்கு என் பிரச்சனைகளை பார்த்துக்க தெரியும் ஆனா நீங்க ஏன்...” என்று ஆரம்பித்தவள் தன்னை நிதானித்து, “ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட் உதய் ஐ ஆம் அப்சலூட்லி ஓகே” என்றாள்.

என்னடி ஓகே..? எதுவும் ஓகே இல்ல, நீ நினைக்கிற மாதிரி சரத் இல்ல அதைவிட மோசமா இருக்கான்.. எனக்கு நீ முக்கியம்! ப்ரீஸீ என்னமோ நீ அமைதியின் சிகரம், பொறுமையின் சின்னம், நவீன அன்னை தெரசான்னு சொன்னா ஆனா நாம என்ன மாதிரியான சூழல்ல இருக்கோம்னு புரிஞ்சுக்காம ஏன்டி குழந்தையை விட மோசமா அடம் பிடிக்கிற..? உனக்கு இதெல்லாம் கூட தெரியுமா..?” என்று ஆச்சர்யத்தோடு கேட்க,

எனக்கு எதுவும் புரியாமல் இல்லை... என் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன் நீங்க விலகிடுங்கன்னு தான் சொல்றேன் உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது..” என்று அவளும் உரத்த குரலில் கேட்டிட..,

சத்தம் போடாத தளிர், இந்த ப்ளோர்ல ஸ்டாஃப்ஸ் வந்துட்டு போயிட்டு இருப்பாங்க.. மெதுவா பேசு” என்ற போதே அவன் அறைக்கதவை தட்டி நின்றான் செல்வம்.

கம் இன்” என்றவன் தளிரை முறைத்துக்கொண்டே நாற்காலியில் அமரவும் உள்ளே வந்தவன் தான் கொண்டு வந்த உணவை கொடுத்துவிட்டு கிளம்ப,

செல்வம் இன்னும் ஒருமணி நேரத்திற்கு யாரும் ரூம்க்கு வரவேண்டாம் எமெர்ஜென்சி இருந்தா மெசேஜ் மட்டும் பண்ண சொல்லு” என்றவன் அவன் வெளியேறவும் அறைக்கதவை சாற்றி தாழ் போட்டுவிட்டு வந்தான்.

இருக்கிற பிரச்சனை போதாதுன்னு நீயும் ஏன்டி இப்படி முரண்டு பிடிக்கிற..? நான் எந்த பிரச்சனையை தான் பார்க்கட்டும்? நீ சாப்ட்டியா இல்லையானு ஒவ்வொருமுறை விசாரிக்கிறதும் உனக்கு ஊட்டி விடறதும் தான் என் வேலையா..? உன்னை குழந்தைன்னு சொன்னா மட்டும் கோபம் வந்துடுது..” என்றவாறே ஏசியை கூட்டி வைத்தவன்.,

நம்ம கல்யாணத்தின் போது சரத் சில நிமிஷம் லேட்டா வந்திருந்தா இந்நேரம் என்னோட தாலி உன் கழுத்துல இருந்திருக்கும்.. அப்படி நடந்திருந்தா நீ என்னை யார்னும் கேட்டிருக்க முடியாது, என் பொண்டாட்டி விஷயத்துல என்னை தலையிடாதன்னும் சொல்லியிருக்க முடியாது. அதைவிட நான் உன்னை  இப்படி தள்ளி வச்சு பேசிட்டு இருக்கமாட்டேன் புரியுதா..?” என்றதில் அவனை ஏறிட்டு பார்த்தாளே தவிர பதிலளிக்கவில்லை.

ஸோ திரும்ப திரும்ப இதையே பேசி என்னை டென்ஷனாக்காத..! சரத் தவிர்த்து உனக்கு வேற என்ன பிரச்சனைன்னு  சொல்லு லெட்ஸ் சார்ட் இட் அவுட்” என்று கேட்ட போதும் அவளிடம் கனத்த மௌனம்.

ஷப்ப்பா படுத்துறாளே’ என்றவாறே தன் அறையில் ஒருபக்க சுவரை அடைத்திருந்த கண்ணாடி ஜன்னலின் எதிரே சென்று நின்றுகொண்டவன் பார்வை வெளியே இருந்தாலும் மனதிலோ திருமண தினத்தில் இருந்தே அவளிடம் தென்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றாக ஊர்வலம் போனது..’

தளிருடனான நிமிடங்களை அசைப்போட்டவனுக்கு அப்போதுதான் அவள் மனநிலையை கணக்கிடாமல் தனக்கான அவள் தவிப்பை புரிந்துகொள்ளாமல் தன் போக்கில் பேசிவிட்டதை எண்ணி தன்னையே கடிந்துக்கொண்டவன் சில நிமிடங்களில் தளிரிடம் சென்று, “ஓகே! கம் வித் மீ” என்று கையை நீட்டினான்.

எங்கே..?” என்றதில் அவன் பொறுமை காற்றில் கற்பூரமாக கரைய நாற்காலியில் இருந்தவளை வேகமாக இழுத்து அணைத்துக்கொண்டான்.

உதய் என்ன பண்றீங்க..? லீவ் மீ” என்றபோதும் விடாமல் அவளை இறுக்கி கொண்டவன் மெல்ல அவள் முதுகை வருடியவாறே கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு,

என்னை கோபபடுத்துறதுக்காகவே பேசாதடி!! நீ வேற நான் வேற இல்லைன்னு சொல்லிட்டு இருக்கேன் உனக்கு அது  புரியலயா..இல்ல புரியற விதத்துல நான் சொல்லணும்னு எதிர்பார்க்கிறியா..?” என்று அவள் முகத்தை கையிலேந்தி நெற்றியில் முத்தமிட தளிரின் விழிகள் கேள்வியாக அவனை பார்த்தது.

என்ன பார்க்கிற..? நம்ம கல்யாணம் அன்னைக்கு முடிஞ்சிருந்தா நீயும் நானும் இன்னைக்கு ஹனிமூன்ல இருந்திருப்போம்”  என்றவன் தளிரை தன் கைகளில் அள்ளிக்கொண்டு அங்கிருந்த கௌச்சில் (couch)அமர்த்தி தானும் அருகே அமர்ந்து தன் சட்டையின் முதலிரண்டு  பட்டனை கழற்றிவிட்டவாறே,

வேலை டென்ஷன்ல மதியம் சாப்பிட மறந்துட்டேன் அதனாலேயே தலைவலில உன்கிட்ட கொஞ்சம் கத்திட்டேன்.. முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்”  என்றவாறே கிச்சிடியை எடுத்து அவளுக்கு ஊட்டிட என்ன அதிசயம்! தளிர் பிடிவாதம் பிடிக்காமல் அமைதியாக வாங்கிக்கொண்டாள்.

ஆச்சரியமாக அவளை பார்த்தவன் மேலும் எதுவும் பேசாமல் ஊட்டியபடி தானும் உண்டு முடித்து கைகழுவிக்கொண்டு வந்தான்.

இப்போ சொல்லு சரத் தவிர உனக்கு வேற என்ன பிரச்சனை..?”

எனக்கு பிடிக்கல”

என்ன பிடிக்கல..?”

“...”

தளிர் உனக்கு என்ன பிடிக்கல சொல்லுமா..?” என்றான் பொறுமையை இழுத்து பிடித்து,

தன் கைவிரல்களை கோர்த்து பிடித்துகொண்டிருந்தவள் சில கணம் தன் கண்களை மூடி திறந்து மெல்லிய குரலில், “எனக்கு உங்களை பிடிக்கல..” என்றாள்.

வாட்..?”

எஸ்! எனக்கு உங்களை பிடிக்கல...”

பொய் பேசாதடி! உனக்கு வரலைன்னு சொல்லிட்டேன்” என்று உதய் அவளை தீயாய் முறைக்க,

இல்ல நிஜமா உங்களை பிடிக்கலை”

உளறாதடி!”

உளறலை, எனக்கு நிஜமாவே நீங்க செய்யற எதுவுமே பிடிக்கலை” என்று திடமாக தளிர் சொல்ல,

என்ன பிடிக்கலை..?” என்ற உதய்யின் குரல் எரிச்சலோடு ஒலித்தது.

“...”

உன்னை தான்டி கேட்கிறேன்” என்று உதய் கர்ஜிக்கவும்,

இதோ இப்படி கத்தறது பிடிக்கலை, என்னை இப்படி ஹவுஸ் அரெஸ்ட் பண்ணியிருக்கிறது பிடிக்கலை, என்னை கட்டாயபடுத்துறது பிடிக்கலை, என்னோட விருப்பத்தை மதிக்காம உரிமை எடுத்துக்கறது சுத்தமா பிடிக்கலை.. இப்படி எதுவுமே பிடிக்கலை... எனக்கு நீங்க வேண்டாம்..” என்றதில் அவன் கொண்டிருந்த கட்டுபாடுகள் சிதறியது.

தன்னை வேண்டாம் என்ற தளிரின் நிராகரிப்பில் உதய்யின் காதல் மனம் சில்லு சில்லாக சிதறியதை மனதார உணர்ந்தவளின் இதயத்திலும் மெல்லிய வலி ஊடுருவியது... சத்தமின்றி தளிரின் மனம் கண்ணீரில் வெதும்ப அதற்கு நேர்மாறாக உதய்யின் மனமோ தணலாக தகித்து கொண்டிருந்தது.

அப்புறம் எதுக்குடி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட..?” என்றவனின் குரலில் அத்தனை அனல்.

அது அம்பலவாணன் ஸாரோட பையன்ங்கிறதால ஒத்துக்கிட்டேன்..”

ஏன் இப்போ நான் அம்பலவாணன்..” என்று ஆரம்பித்து, “ப்ச் என்னை பேச வைக்காதடி அப்புறம் தாங்கமாட்ட..” என்றவனின்  வார்த்தைகள் பற்களுக்கிடையில் அரைபட்டது.

அன்னைக்கு நீங்க என்கிட்டே பேசினதை வச்சு இந்த கல்யாணம் சரிப்படும்னு நினைச்சேன் ஆனா இப்போ தான் புரியுது உங்களுக்கும் எனக்கும் சரிபட்டு வராது.. நீங்க வேற நான் வேற” என்றாள் தெளிவான குரலில்.

அப்போ மருதாணியில என் பெயர் எழுதினதுக்கு என்ன அர்த்தம்..?” என்றான் இடுங்கிய கண்களோடு.

நீங்க தான் சுத்தி சுத்தி வந்து எனக்கு உங்களை பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டீங்க... கல்யாணம் பண்ணிக்க போறவங்கள பிடிக்காம யாராவது சம்மதிப்பாங்களா..? உங்களுக்கு அதுகூட புரியல அது புரிய வைக்கிறதுக்காக தான் கையில பேர் எழுதினேன்”

ஸோ வளையலும் அப்படிதான் இல்லையா..?” என்று உதய் ஒற்றை புருவம் ஏற்றி இறக்கவும் அவள் தலை ஆமென்பதாக அசைந்தது.

ஃபைன்! அப்போ என்னை பிடிச்சு சம்மதிச்சது இப்போ பிடிக்காம போயிடுச்சு அப்படி தானே..?”

எஸ்”

ஓகே அடுத்து என்ன பண்ண போற..? ஐ மீன் கல்யாணம்....” என்று அவன் முடிக்கும் முன்னமே,

Marriage is not the only destination for women (திருமணம் மட்டுமே பெண்ணுக்கு இலக்கு கிடையாது) எனக்கு கல்யாணம் தேவை இல்லை என் குடும்பம் போதும்...”

அதாவது சரத் சொன்ன மாதிரி காலம் முழுக்க கல்யாணம் செய்யாம இருக்க போறே.. அப்படிதானே” என்று உதய்யின் எள்ளலில் அவனை வெறித்து பார்த்தவள்.,

அப்படியும் சொல்ல முடியா...” என்று வார்த்தைகளை நிறைவு செய்யும் முன்னமே..,

என்னைத் தவிர வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிடுவியாடி நீ..?” என்று  கோபத்தோடு எழுந்தான் உதய்.

ஏன் செய்யாமல் ஏற்கனவே ஒருத்தனோட தாலியை கழட்டி போட்டுட்டு உங்க தாலிக்காக மணமேடை ஏறினாதை மறந்துட்டீங்களா? இப்போ நமக்குள்ள செட் ஆகாதுன்னு தெரிஞ்ச பிறகு அப்படியே இருந்திட முடியுமா என்ன? கண்டிப்பா அடுத்து இன்னொ..” என்றவளின் வார்த்தைகள் உதய் அவள் கழுத்தில் கொடுத்த அழுத்தத்தில் நின்றுபோனது.

இதோப்பாரு என்னை விரட்டணும்னு உன்னை இன்னொரு முறை இந்த மாதிரி அசிங்கப்படுத்த நினைச்ச கொன்னுடுவேன்டி..” என்று கையை இறக்கியவன்,

என்னை தவிர வேற ஒருத்தனை உனக்கு பிடிச்சிடுமா..?”

ஏன் பிடிக்காம..?” என்று கேட்டு இன்னுமே அவன் கோபத்தை கிளறி இருந்தாள்.

நெற்றியை வருடி விட்டுக்கொண்டே அறையினுள் நடந்தவன் ஒருகட்டத்தில் அவள் முன்னே நடையை நிறுத்தி, “ஹ்ம்ம் பிடிக்கலாமே..!”  என்று மெல்ல தாடையை நீவியவன்,

கண்டிப்பா என்னை தவிர உனக்கு இன்னொருத்தனை பிடிக்கலாம்.. ஆனா அவன் உனக்கும் எனக்கும் பிறக்கும் பையனாதான் இருப்பானே தவிர வேற ஒருத்தன் வாய்ப்பே இல்ல..” என்று உறுதியாக சொன்னவனை வார்த்தைகள் இன்றி பார்த்த தளிரின் முகத்தில் உணர்வுகள் துடைத்து வைக்கபட்டிருந்தது.

உனக்கு பேச தெரியுமா..? என்கிட்டே எப்போ பேசுவன்னு ரொம்ப எதிர்பார்த்திருந்தேன்டி.. ஆனா நீ இவ்ளோ பேசுவன்னு எனக்கு  இப்பதான் தெரியுது.. சரி அடுத்து என்ன சொல்லு..?” என்றான்.

உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது, அதனால..” என்று தயக்கத்தோடு நிறுத்த, உதயாதித்தனோ ‘மேலே சொல்’ என்பதாக அவள் மீதிருந்த பார்வையை அகற்றவில்லை.

அதனால..” என்று உதய் எடுத்து கொடுத்த போதும் பேச முடியாமல் மேலிதழை அழுத்தமாக கடித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

சொல்லுடி” என்றவனின் குரலில் இருந்த ஆவேசத்தில் தூக்கிவாரி போட தளிர் உதய்யை பார்க்கவும்,

ஓகே லெட்ஸ் ப்ரேக் அப்... இப்படி என்னை வேண்டாம் பிடிக்கலைன்னு சொல்ற உன்னை இனியும் பிடிச்சு வச்சு நான் எதுவும் செய்ய முடியாது... ஸோ லெட்ஸ் ஸ்டாப் திஸ் ஹியர்” என்று உதய் சொன்னதில் அங்கே கனத்த மௌனம்.

அவளெதிரே அமர்ந்திருந்தவனின் பார்வை அவளை விட்டு அகலாமல் இருக்க தளிரோ அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் மெளனமாக தான் கொண்டு வந்திருந்த பையை திறந்து,

 “இது எனக்காக கொடுத்த புடவைகள்... இது நிச்சய புடவை, இது கல்யாண புடவை, இது...” என்று தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக மேஜையில் அடுக்கியவள் அடுத்து நகைகளையும் வரிசையாக அவன் முன் வைத்துவிட்டு,

நீங்கள் கொடுத்த எல்லாமே நான் திருப்பி கொடுத்துட்டேன்.. இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று திரும்பி நடக்க,

ஒரு நிமிஷம் இன்னும் கணக்கு தீரல நில்லு” என்றான்.

அதுதான் எல்லாமே கொடுத்துட்டேனே... இன்னும் என்ன..?” என்றவளுக்கு எங்கே அவன் அணிவித்த மோதிரத்தையும் வளையல்களையும் கேட்டு விடுவானோ என்ற அச்சம் எழ சட்டென தன் வலக்கரத்தை பின்னே மறைத்துக்கொண்டாள்.

நீ தாராளமா கிளம்பலாம் ஆனா நீ சொன்ன கணக்கை முழுசா முடிச்ச பிறகு..” என்றவன் “நல்லா யோசிச்சு சொல்லு எல்லாமே கொடுத்துட்டியா..?” என்றவனின் பார்வை அவள் வலது கரத்தில் படிந்தது.

ஹ்ம்ம் கோல்ட், டைமன்ட், எமேரால்ட் எல்லாம் கொடுத்துட்டேனே.. வேணும்னா அண்ணி” என்று தொடங்கியவள்,

உங்க அக்கா இல்ல அப்பாகிட்ட கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க”

தேவையில்ல!” என்றவன் மீண்டுமொருமுறை நகைகளை ஆராய்ந்துவிட்டு,

என்கேஜ்மென்ட் ரிங் எங்கே..?” என்றான்.

அது... அது..”

உன் கையில இருக்கு பாரு கழட்டி கொடு” என்றான்.

உதய் அது எங்க அம்மா...” என்று அவள் முடிக்கும் முன்னமே தன் விரலில் அவள் அணிவித்திருந்த மோதிரத்தை கழற்றி மேஜையில் வைத்தவன்,

இதுதான் அத்தை எனக்கு எடுத்தது, இதை நீ எடுத்துகிட்டு நான் உனக்கு கொடுத்த மோதிரத்தை திருப்பி கொடு” என்றான்  அழுத்தம் திருத்தமாக.

இத்தனை நேரமாக பிரிவை யாசித்தவளுக்கு அவன் ஒப்புகொண்டது எதிர்பாரா அதிர்ச்சி என்றால் இப்போது மோதிரத்தை கேட்பது அதைவிடவும் பேரதிர்ச்சியாக இருந்தது.

சீக்கிரம் கழட்டுடி” என்று அவன் பொறுமை இழக்க,

உதய் அது டைட்டா இருக்கு நான் வீட்டுக்கு போயிட்டு...” என்று வார்த்தைகளை நிறைவு செய்யும்  முன்னமே பொறுமையற்று மேஜையை தட்டிவிட்டு எழுந்து கொண்டவன் அவள் வலக்கையை இழுத்து பிடித்து மோதிரத்தை கழற்றி எடுத்துக்கொண்டான்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17