தன் விரலில் இருந்த மோதிரத்தை உதயாதித்தன் கழற்ற நெஞ்சம் வெதும்ப தளிர் அவனை பார்த்திருந்தாள்.
“அடுத்து
வளையல் மிஸ் ஆகுது”
“மொத்தம் பன்னிரண்டு கோல்ட் பேங்கல்ஸ் ஆறு
டைமன்ட் பேங்கல்ஸ் இருக்கு பாருங்க” என்று பெட்டியில் இருந்து தளிர்
எடுத்துகாட்ட..,
“இதை கேட்கலை நான் கொடுத்த கண்ணாடி வளையலை
கேட்டேன்”
“அது.. அது உடைஞ்சு போயிடுச்சு”
“எல்லாமுமா..?”
“ஆமா”
“எப்படி..?” என்றவாறே
தென்றலுக்கு அழைத்தவன்,
“ப்ரீஸீ உன் அக்கா உனக்கு போட்ட வளையல் எங்கே..?”
“அன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் கழற்றி பாக்ஸ்ல
வச்சுட்டேன் த்தான்”
“அந்த பாக்ஸ் எங்கே...?”
“அன்னைக்கு அக்காவே என்கிட்டே இருந்து
வாங்கிகிட்டா.. அனேகமா அவளோட பீரோல தான் வச்சிருப்பா..”
“ஓகே” என்றவன் தளிரை பார்க்க,
“என.. எனக்கு நியாபகம் இல்ல.. அது..
அன்..னை..க்கு கை தவறி விழுந்து உடைஞ்சுடுச்சு” என்று ஒருவழியாக சொல்லி முடிக்க,
“குட் ட்ரை!!! பட் இன்னைக்கு நைட் நான்
வீட்டுக்கு வரும்போது வளையல் என் கைக்கு வந்திருக்கணும்”
“இல்ல அது இல்ல..” என்று தளிர் படபடக்க,
“இன்னொரு முறை பொய் சொன்ன நடக்கிறதே வேற..”
என்று சீறியவன் ஒரு பேப்பரை எடுத்து அவள் பையில் கொண்டு வந்த புடவை மற்றும் நகைகள்
குறித்த விபரங்களை எழுத ஆரம்பித்தான்..
“என்ன பண்றீங்க..?”
“வைட் பண்ணு” என்றவன் பக்கத்தை திருப்பி மிகுந்த
யோசனையுடன் எதையோ எழுதி அவளிடம் நீட்டினான்.
தளிர் வாங்கி படிக்கவும்,
“உனக்கு நான் கொடுத்த எல்லாமே டீட்டெயிலா எழுதி
இருக்கேன் இது எல்லாத்தையும் திருப்பி கொடுத்துட்டு கிளம்புடி ” என்று
நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து வலியோடு கண்களை மூடிக்கொண்டான்.
பேப்பரின் முதல் பக்கத்தை படித்தவள் “அதுதான் கொடுத்துட்டேனே
இப்போ நான் கிளம்பலாம் தானே..?”
“பேப்பரை திருப்பி பாருடி” என்றான்.
‘அப்படியென்ன நாம் கொடுக்காமல் விட்டுவிட்டோம்’
என்று அவசரமாக விழிகளை ஓடவிட்டவள் “உதய்” என்று மின்சாரம் பாய்ந்த அதிர்வோடு
உதயாதித்தனை பார்த்தாள்.
அவனோ முகத்தின் இறுக்கம் சற்றும் குறையாமல் கூர்மையாக அவளை
பார்த்திருந்தான்.
“வாட் ரப்பிஷ் இஸ் திஸ்?” என்று அவன் முன்னே
பேப்பரை கோபத்தோடு தளிர் நீட்டவும்,
“ஏன் படிக்க தெரியாதா..?”
“என்ன எழுதி வச்சிருக்கீங்க..? இதையெல்லாம் எப்படி.. எப்.. நான்..” என்று அவள் திணற,
“நீதானடி கணக்கை கழிச்சுக்கலாம் சொன்ன.. அப்போ
எல்லாத்தையும் திருப்பி கொடுத்துட்டு போ இல்ல என்னை உன்னால கட்டுபடுத்த
முடியாது..” என்று அவன் எள்ளலாக சொல்ல,
“நோ!!!! ஐ கான்ட்”
“யூ ஹாவ் டூ!! உனக்கு வேறே ஆப்ஷனே கிடையாது” என்றவனின்
குரலில் சொன்னதை செய்யும் உறுதி.
“...”
“நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துட்டா நீ
ஃப்ரீ பேர்ட் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் இல்லைன்னு சொன்னா இனி நான் சொல்றதை
மட்டும் தான் நீ செய்யணும்”
“முடி.. முடியாது..” என்று சிறு விசும்பலோடு
அவனை பார்த்தாள்.
“அப்போ எதுக்கு இன்னும் இங்க இருக்க..? வீட்டுக்கு கிளம்பு இன்னொரு முறை கணக்கை தூக்கிட்டு வராத.. இப்படி
பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்” என்றான் இளக்கமற்ற குரலில்.
கண்களில் திரண்டுவிட்ட நீரோடு மீண்டும் பேப்பரை பார்க்க அதில்
திருமணத்திற்கு முந்தின தினத்தில் இருந்து இன்று வரை அவன் கொடுத்த முத்தங்களின்
எண்ணிக்கையை ஒன்று விடாமல் விரிவாக கணக்கு எழுதி வைத்திருந்தான்.
‘நெற்றியில் தொடங்கி அவளிதழ்கள் வரை அவன்
கொடுத்ததை திருப்பி கொடுத்து கணக்கை நேர் செய்’ என்பவனுக்கு என்ன பதில் சொல்வது
என்று புரியாமல் தளிர் பார்க்க அவனோ துளியும் இளகாது அமர்ந்திருந்தான்.
“உதய்” என்று மெல்லிய குரலில் அழைக்க “ஒரு
நிமிஷம் பேப்பரை கொடு எத்தனை முறை ஹக் பண்ணினேங்கிறதை எழுத மறந்துட்டேன்” என்றவன்
அதையும் சேர்த்து எழுதி கொடுக்க இதழ்கள் துடிக்க அமர்ந்திருந்தவளுக்குள் பிரளயமே
நிகழ்ந்து கொண்டிருந்தது.
“ஹ்ம்ம் சீக்கிரம் எனக்கு டைமாச்சு இன்னும்
எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்க போற..? கணக்கை நேர்
பண்ணிட்டு கிளம்பு எனக்கு வேலையிருக்கு” என்ற உதய்யின் குரலில் தளிர் திடுக்கிட்டு
அவனை பார்த்தாள்.
“என்னடி லுக்கு..!”
“என்னால முடியாது” என்று உடனே பதில் வந்தது.
“அப்போ இதையெல்லாம் எடுத்து வைடி” என்றான்
அதிகாரகுரலில்.
“இது... இது.. சரியில்ல”
“எது சரியில்ல..?”
“நீங்களே கொடுத்ததுக்கு நான் எப்படி பொறுப்பு..?
என்..” என்றவளை இடையிட்டு
“அப்போ இந்த நகை புடவை எல்லாம் நீ கேட்டு நாங்க
கொடுத்ததா..?” என்றான் ஆழ்ந்த குரலில்..
“இல்ல” என்று தளிர் அவசரமாக மறுக்க,
“இதெல்லாம் எங்க வீட்டு மருமகளுக்கு என்னை
சார்ந்தவங்க கொடுத்தது இதை நீ கேட்டு தான் அவங்க கொடுக்கணும்னு இல்ல அதேபோல நான்
கொடுத்தது எல்லாமே என் பொண்டாட்டிக்கு கொடுத்தது அதை நீ கேட்டு கொடுக்கணும்னு
இல்ல.. ஸோ நீ கேட்காம உனக்கு கொடுத்ததை திருப்பி கொடுக்க முடிவு பண்ணின அப்புறம்
எல்லாமே கொடுக்கிறது தானே நியாயம்..!” என்று கேட்க தளிரின் தலை ஆமென்பதாக
தன்னிச்சையாக அசைந்தது.
“யாஹ்! நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துடு
உனக்கும் எனக்குமான உறவு முடிஞ்சுடும், இட்ஸ் வெரி சிம்பிள்
யு க்நொவ்..! (அது மிகவும் எளிதானது தான்)” என்றான் இலகுவான குரலில்.
“சிம்பிளா..?” என்று
அதிர்வோடு அவனை பார்த்தவளுக்கு ‘உணர்வுபூர்வமான முத்தத்தை பொருட்களுடன்
ஒப்பிடுபவனை என்ன செய்வது..?’ என்று புரியவில்லை.
“அதெப்பெடி..?” என்று
தொடங்கிய தளிர் இதழ்களை கடித்துக்கொண்டு இயலாமையோடு ‘என்னை புரிந்துகொள்ள
மாட்டாயா..?’ என்பதாக அவனை பார்த்திருந்தாள்.
“ஏன்டி நானா இதையெல்லாம் கேட்டேன்..? நீயா பையை தூக்கிட்டு வந்து கணக்கு கொடுத்த நமக்குள்ள உறவு முடிஞ்சதுன்னு
சொன்ன.. நான் விடுபட்ட கணக்கை கொடுத்து முழுசா முடிக்க சொன்னேன்.. இதில்லென்ன
தப்பு..?”
“ஆ.. ஆனா உதய்..” என்று தவிப்போடு
பார்த்தவளிடம்,
“லிசென் உன்கிட்ட ஆனா ஆவன்னான்னு பாடம் படிக்க
எனக்கு நேரமில்ல..! ஒன்னு கணக்கை மொத்தமா முடிச்சுட்டு கிளம்பு இல்லையா
இனி ஒரு வார்த்தை பேசாம அமைதியா வாயை மூடிட்டு போடி” என்று சொல்லவும் தளிர் அவனையே
வெறித்து பார்க்க உதய்யும் அசராமல் அவள் பார்வையை எதிர்கொண்டிருந்தான்.
இமை மீறிய கண்ணீரை துடைத்தவள் “எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”
என்றாள்.
“எவ்ளோ நாள்..?”
“...”
“ஓகே டேக் யுவர் ஓன் டைம் ஆனா ரொம்ப டிலே
பண்ணிடாத எனக்கு வீட்ல எப்போ அடுத்த பொண்ணு பார்க்க போகலாம்னு கேட்டுட்டு இருக்காங்க..”
என்று சொல்ல தளிரின் இதயத்தில் மெல்லிய வலி பரவ அதை அவள் விழிகளும் பிரதிபலித்தது.
“என்ன பார்க்கிற..? நீ
தானே ஊருக்குள்ள நல்ல பொண்ணுங்க நிறைய இருக்காங்கன்னு சொன்ன அதுல எனக்கானவளை தேடி
கண்டுபிடிக்க வேண்டாமா..? நீ கணக்கை முடிச்சதும் தான் வீட்ல பெண்
பார்க்க ஆரம்பிக்க சொல்லணும்” என்றதில் வேகமாக எழுந்து கொண்டவள் முகத்தில் நொடி
நேரத்தில் வந்து போன ரௌத்திரத்தை கண்ட உதய்யின் அதரங்கள் எள்ளலாக வளைந்தது.
“ஓஒ இப்பவே கொடுக்க ரெடியாகிட்டியா..? கவுன்டிங் ஸ்டார்ட் பண்ணலாமா..?” என்று
கேட்டுக்கொண்டே உதய் எழுந்துகொள்ள, அவனை கண்டுகொள்ளாதவள்
மேஜையில் இருந்த பொருட்களை வேகமாக எடுத்து பையில் அடுக்க தொடங்கினாள்.
‘அப்படி என்னடி வறட்டு பிடிவாதம் உனக்கு!’
என்று மனதினுள் கேட்டவாறே நெரிந்த புருவங்களுடன் அமைதியாக கைகளை கட்டிக்கொண்டு
கூர்மையாக அவள் உணர்வுகளை அவதானித்திருந்தான்.
கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டு விடைத்த நாசியோடு பொருள்களை
அடுக்கி முடித்த தளிர் கதவை திறக்கவும் “ஒருநிமிஷம் இதை விட்டுட்டு போயிட்ட..”
என்று அவன் போட்ட நிச்சய மோதிரத்தை அவளிடம் நீட்டியிருந்தான்.
தளிர் முறைத்து நிற்க “ஏன் வேண்டாமா..?” என்றவாறே
அவளிடமிருந்த பையை பிடுங்கியவன் கையை இழுத்தெடுத்து மோதிரத்தை அணிவித்து அதே
வேகத்தோடு மோதிரத்தோடு சேர்த்து அவள் விரலில் அழுத்தமாக முத்தமிட்டிருந்தான்.
தளிர் கையை இழுத்துக்கொள்ள, “இதையும் கணக்குல
சேர்த்துக்கோ..” என்றுவிட்டு தன் கையில் இருந்த மோதிரத்தை கொடுத்து “போட்டுவிடு” என்றான்.
“....”
“நீ கணக்கை முடிக்காதவரை நான் சொல்றதை கேட்டு
தான் ஆகணும் போட்டு விடுடி” என்று கடுப்போடு சொல்ல தளிரோ ‘முடியாது’ என்பது போல
இன்னுமே திடமாக பார்த்திருந்தவள்..,
“நீங்க..” என்று ஆரம்பிக்கவுமே அவளை இழுத்து
அணைத்துக்கொண்டவன் தளிரின் முகமெங்கும் ஆவேசமாக முத்தமிட ஆரம்பித்தான்.
அவன் முத்தத்தில் அத்தனை நேரம் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து
சிதற, “என்ன பண்றீங்க டோன்ட் ப்ளே வித் மை எமோஷன்ஸ்” என்று கோபமாக நகர்ந்த
தளிரின் முழங்கையை பற்றி இழுத்தவன்,
“யாருடி..? யார் ப்ளே
பண்றா..? நீயா நானா..?” என்று
கோபத்தோடு கேட்டுக்கொண்டே அவளிதழ்களை அழுத்தமாக சேர்ந்திருந்தவனின் வலி முழுதாக
அவளிதழ்களில் வடிந்திருந்தது.
மூச்சு முட்டும் அவன் முத்தத்திலும் அணைப்பிலும் சிக்கி
தவித்த தளிர் சுவாசத்திற்கு ஏங்குவதை கண்ட பின்னரே அவளை விடுவித்தவன், நாசி
விடைக்க நடுங்கும் இதழ்களோடு தன்னை பார்த்தவளிடம்,
“இது மட்டுமில்ல எவ்வளவுக்கு எவ்வளவு கணக்கை நீ
சீக்கிரம் முடிக்காம போறியோ அவ்வளவுக்கு அவ்வளவு அது கூடிக்கிட்டே போகும்... நீ
தொடங்கி வச்ச கணக்கை நீதான் முடிக்கணும், காட் இட்..!”
என்றவன் அவள் முன்னே தன் மோதிரத்தை நீட்டினான்.
வேக மூச்சுகளுடன் அவனை பார்த்திருந்தவள் வெடுக்கென பிடுங்கி
அவன் கையில் கோபமாக போட்டுவிட, “குட்! சீக்கிரம் கணக்கை முடிச்சுட்டு
மோதிரத்தை திரும்ப வாங்கிக்கோ” என்றவன் அவள் கதவை திறக்கவும் சொடக்கிட்டு
நிறுத்தினான்.
‘என்ன..?’ என்பதாக
பார்த்தவளிடம், “கணக்கை முடிக்க உனக்கு இரண்டு சான்ஸ் தான்
கொடுப்பேன்... நான் கொடுத்த எல்லாமே ஒன்னு விடாம எனக்கு திரும்ப வந்தாகணும்” என்று
மேஜையில் இருந்த பேப்பரை எடுத்து இப்போது கொடுத்த முத்தத்தையும் அணைப்பையும்
கணக்கில் சேர்த்தவன் பேப்பரை அவள் கையில் திணித்து,
“உனக்கு கொடுத்த வாய்ப்புல முதல்முறை கணக்கை
முழுசா முடிக்காம நீ விட்டுட்டா அடுத்தமுறை புதுசா தான் ஆரம்பிக்கணும்.. பழசு
கணக்குல சேராது” என்றதில் தளிர் விழிவிரித்து அவனை பார்க்க,
“அன்ட் அந்த இரண்டாவது சான்ஸ்லயும் நீ முழுசா
முடிக்காம போனா அடுத்து உனக்கு சான்ஸே கிடையாது.. இந்த உறவு காலம் முழுக்க தொடரும்
யாராலையும் தடுக்க முடியாது ஸோ அடுத்தமுறை என்கிட்ட வரும் முன்ன நல்லா
யோசிச்சுட்டு பையை தூக்கு புரியுதா...?” என்றவன் மேலும்
ஐந்தாறு வெற்றுத்தாள்களை கொடுக்க புரியாமல் பார்த்தாள் தளிர்.
“என்ன பார்க்கிற..? அடிஷனல்
ஷீட்டி! கண்டிப்பா உனக்கு தேவைப்படும் வச்சுக்கோ” என்றவன் செல்வத்திற்கு அழைத்து
தளிரை பின்புறமாக காத்திருக்கும் ராகவனிடம் அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு குறையாத
கோபத்தோடு முன்வாசல் வழியாக முதலில் கிளம்பியிருந்தான்.
Comments
Post a Comment