வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 53

 



தன் உடற்பயிற்சி அறையில் இரு கைகளிலும் க்ளவுஸோடு இருபது கிலோ மதிப்பிலான பன்ச்சிங் பேக்(punching bag) முன்னே ஆர்ம்கட் பனியன் ஷார்ட்ஸ் சகிதம் நின்றிருந்த உதய் வியர்வை வடிய ஏறி இறங்கிய வேக மூச்சுக்களுடன் தீவிரமாக பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

தளிர் கிட்ட என்னடா பேசின...?” என்று கோபமாக ராகவன் வந்து நிற்க அதை காதிலேயே வாங்காமல் அவன் கைகளும் கால்களும் ஒருவித ரிதத்தோடு இருந்தது... அதுவும் வழக்கத்திற்கு மாறான வேகத்தோடு!

உன்கிட்ட தான்டா கேட்கிறேன்... வாய் இல்லாத பச்ச பிள்ளை கிட்ட ரொம்ப தான் துள்ளிட்டு இருக்க கேட்க யாரும் இல்லைன்னு நெனச்சியா..? அண்ணன் நான் இருக்கேன்டா” என்றான் குறையாத சீற்றத்தோடு.

யாரை சொல்ற..?” என்றவனின் கைகள் வேகத்தை கூட்டினாலும் பார்வை என்னமோ ராகவன் மீது அழுத்தமாக படிந்திருந்தது..

வேற யாரு தளிரை தான் சொல்றேன். உன் தங்கச்சி மாதிரி இல்ல ரொம்ப அமைதியான, பாசமான, அறிவான பொண்ணுடா.. அந்த பொண்ணுக்கு அதிர்ந்து பேசகூட தெரியாது. யாரையும் கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைக்கிற தளிர் அழற அளவுக்கு நீ என்ன சொன்ன...?” என்றவனை ஒரு பார்வை பார்த்த உதய் மீண்டும் இருகைகளாலும் மாறி மாறி பையில் குத்துவிட்டு கொண்டிருந்தான்..

பதில் சொல்லுடா..!”

என்ன பதில்..?” என்றவனின் குரலில் இருந்த ஆவேசத்தை  ராகவன் அறிந்தானோ இல்லையோ எதிரே இருந்த பன்சிங் பேக் உள்ளுக்குள் வாய் விட்டு கதறிக்கொண்டு இருந்தது.

வந்த நாளில் இருந்து இன்னைக்கு தான் எங்ககூட கொஞ்சம் சந்தோஷமா சிரிச்சு பேசி விளையாடிட்டு  இருந்த பொண்ணை இப்படி அழவச்சுட்டியே...” என்று ராகவன் சொன்ன கணம் உதய்யின் கைகள் ஒருநொடி அசைவற்று போனாலும் அடுத்த கணமே அவன் ஓங்கிவிட்ட குத்தில் பன்ச்சிங் பேக் ராகவன்  மீது மோதியிருந்தது..

முகத்தில் வந்து அறைந்த பையின் வேகம் தாளாமல் தடுமாறிய ராகவன் அதையே பிடித்துகொண்டு தன்னை நிலைபடுத்தி திகைப்போடு நண்பனை பார்த்தான்.

தேவையில்லாம பேசி அடிவாங்காத கிளம்பு” என்ற உதய் க்ளவுஸை கழற்றி வியர்வையை வழித்து விட்டவன் மீண்டும் அணிந்து கொண்டு கைகளை ஓங்கிட ராகவனோ மூக்கை தேய்த்துவிட்டு பையை விடாமல் இறுக்கமாக பிடித்துகொண்டான்.

நகருடா” என்றவனிடம் அத்தனை சீற்றம்.

மச்சான் உனக்கு யார் மேலடா கோபம்..? எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க..? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் வா..” என்றழைத்த போதும் அதை காதிலேயே வாங்காதவன்  க்ளவுஸை கழற்றி எறிந்துவிட்டு அங்கே இருந்த டம்பிள்ஸை எடுத்துக்கொண்டு கைகளுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கியிருந்தான்.

மச்சான் நானும் பார்த்துட்டு தான் இருக்கேன் உன் போக்கே சரியில்ல.. வீட்டுக்கு போற வழி முழுக்க தளிர் கண்ணுல இருந்து தண்ணி நிற்கவே இல்லை தெரியுமா..? என்னமா ஆச்சுன்னு கேட்டாலும் பதில் சொல்லல, வீடு வரவும் எங்க அம்மா பார்ப்பாங்களோன்னு அவசரமா வெளியிலேயே முகம் கழுவிட்டு உள்ள போச்சு..” என்றதில் உதய்யிடம் எந்த மாற்றமும் இல்லை டம்பிள்ஸோடு reverse lunge செய்ய தொடங்கி விட்டான்.

தளிரை அங்க விடறதுக்கு வந்தப்பவே நீ கோபமா ஆரம்பிச்ச அப்புறம் என்னாச்சு சொல்லு..?” என்று  டம்பிள்ஸை பிடுங்கிட,

அவ பேச்சை எடுத்துட்டு இங்க வராதடா..” என்று ராகவனை முறைத்துக்கொண்டே உதய் டம்பிள்ஸை பிடுங்க அவனோ அதை கொடுக்காமல் “அப்போ உனக்கு தளிர் மேல கோவம் அப்படிதானே..!” என்றிட..,

ஆமா அதுக்கென்ன..?” என்றவன் உடனே jump squats செய்ய தொடங்கிவிட்டான்.

அதுக்கென்னவா..? டேய் உன்னால தளிர் அழுதுட்டு இருக்குன்னு சொல்றேன் நீ இவ்ளோ கேர்லெஸ்ஸா இருக்க.. பாவம் அப்பா இல்லாத பொண்ணுடா எதுவா இருந்தாலும் பொறுமையா எடுத்து சொல்லு புரிஞ்சுக்கும்” என்றவனை ஒரு பார்வை பார்த்தவன் தன்போக்கில் பயிற்சியை தொடர்ந்து கொண்டிருந்தான்.

உன்கிட்ட தான் டா பேசறேன், காதுல விழுதா..?”

ப்ச் என்னால அழல, என்னை பிடிக்காததால அழறா...” என்றவாறே  புஷ் அப்ஸ் எடுக்க உதய் முன்னே கீழே அமர்ந்த ராகவன்,

என்னடா சொல்ற..?” என்றான் ‘எங்கே தான் தவறாக கேட்டுவிட்டோமே’ என்று..!

என்னை ஏன் கேட்கிற..? என்னை பிடிக்கலைன்னு சொன்னவளை போய் கேளு” என்று எரிச்சலோடு உதய் க்ளாப்பிங் புஷ் அப்ஸ் எடுக்க, ஒவ்வொருமுறையும் அவன் கைகளை தட்டும் சத்தம் அத்தனை அதிர்வோடு அறையெங்கும் எதிரொலித்தது.

மச்சான் என்ன நடந்ததுன்னு சொல்லாம எனக்கு எப்படி புரியும்..? ஏன் தளிருக்கு உன்னை பிடிக்கலையாம்” என்று கேட்கவும் தன் பயிற்சியை நிறுத்திய உதய் அப்படியே கண்களை மூடிக்கொண்டு தரையில் தளர்ந்து படுத்துவிட்டான்.

சில நிமிடங்களில் அவன் மூச்சு சீர்படவும் துண்டையும் தண்ணீரையும் அவன் முன்னே வைக்கவும் வியர்வையை துடைத்தவாறே நடந்ததை உதய் சொல்லி முடிக்க ராகவனுக்கு அதிர்ச்சியில் வார்த்தை வரவில்லை.

உன் தொங்கச்சி பேசின பேச்சு போதுமா..?” என்ற உதய் தண்ணீரை நிதானமாக குடித்த போதும் அவன்  கோபம் மட்டுபடுவது போல தெரியவில்லை.

ப்ச் வில்லங்கம் புடிச்சவனே..! அதுக்காக நீ என்னடா கேட்டு வச்சிருக்க..?”

வேற என்ன செய்ய சொல்ற..?  நான் இப்படி கேட்கலைன்னா உன் தொங்கச்சி வீட்டை விட்டு கிளம்பறேன்னு சொல்றா.. அவளை தடுக்க எனக்கும் வேற வழி தெரியலை..”

என்னை பிடிக்கலையாம் நான் வேண்டாமாம், என்னை விலக சொல்லி என்ன வேண்டுமானாலும் பேசலாமா..? இதோபார் மச்சான் அவளுக்கு எப்படியோ தெரியாது ஆனா எப்போ அவ என் மனசுக்குள்ள வந்தாளோ அப்போயிருந்தே அவளை என்னோட பொண்டாட்டியா தான் பார்க்கிறேன்.. ஊரறிய தாலி மட்டும் தான் கட்டலை அதுக்காக என்னை வேண்டாம் சொல்லுவாளா..? விலகி போவாளா..? அப்படி போன பிறகு சந்தோஷமா இருந்துடுவாளா..? எதையுமே மனசு விட்டு பேச மாட்டேங்கிறாடா.., என்னை பற்றி யோசிக்கிறவ அவளை பற்றி யோசிக்கவே மாட்டேங்கிறா..?”

இதே தாலி கட்டின பிறகு இப்படி நடந்திருந்தா இதெல்லாம் பேசி இருப்பாளா..? இல்லை அவ சொல்றதுக்காக நான் விட்டுட்டு போயிட முடியுமா..? அப்படி போனா நீயே வந்து என் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கமாட்ட..?” என்று திருப்பி கேட்க பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தான் ராகவன்.

அதுக்காக இப்படியாடா..?”

சரி வேற எப்படி சொன்னா உன் தங்கச்சி கேட்டு அமைதியா இருப்பான்னு நீயே சொல்லு” என்று கேட்க ராகவனுக்கு முதல் நாள் தளிர் பேசியது நினைவில் எழ ‘நிச்சயம் யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் தளிர் இல்லை’ என்பது உள்ளங்கை நெல்லியாக புரிபட்டது.

அவளுக்காடா பேச தெரியாதுன்னு சொன்ன..? கொஞ்சம் விட்டா பேசியே என் கழுத்தறுத்திருப்பா.. திருக்குறள்ல தொடங்கினவ நான் விட்டிருந்தேன்னா நான்மணிக்கடிகை, நாலடியார், விவேகானந்தர் அப்துல்கலாம்னு  நான்ஸ்டாப்பா போயிருப்பா..! நானே எதிர்பார்க்கலை மச்சான் அந்த பேச்சு பேசுறாடா..” என்ற நண்பனை யோசனையுடனே பார்த்திருந்தவன்,

ஒருவேளை நீ கேட்டதெல்லாம் கொடுத்துட்டா என் தங்கச்சியை விட்டுடுவியா மச்சான்..?” என்றவனின் குரலில் அத்தனை தவிப்பு.

யாரு உன் தங்கச்சியா..?” என்றவன் மனமோ தளிருடனான நிமிடங்களில் திளைத்து மீள அதரங்களில் நெளிந்த குறுநகையோடு “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை” என்றான்.

உனக்காக யோசிக்கிற தளிர் ஒருவேளை அதையும் செய்துட்டா என்னடா பண்ணுவ..? சொன்னமாதிரியே விட்டு விலகிடுவியா..?” என்ற ராகவனின் மனமோ தளிர் எப்போதுமே கணக்கை தீர்த்துவிடக்கூடாது என்று வேகமாக அடித்துக்கொண்டது.

ஏன்டா நீயென்ன லூசா..?”

என்ன மச்சான் இப்படி கேட்கிற..?”

வேறே எப்படி கேட்க..? நான் தான் சொல்றேனே அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை அப்படியே அவ கொடுத்தாலும் கணக்கு தப்புன்னு சொல்லி கோட்டை அழிச்சுட்டு முதல்ல இருந்து வர சொல்லுவேன்” என்று சிரிப்போடு உதய் கண்சிமிட்ட,

அடப்பாவி!” என்று வாய்மேல் கை வைத்துவிட்ட ராகவன், “அடுத்தமுறை சரியா கொடுத்துட்டா என்ன பண்ணுவ..” என்றவனுக்கு அவர்கள் பிரிந்து விடக்கூடாதே என்ற பரிதவிப்பு.

அப்பவும் கோட்டை அழிப்பேன்”

சரியா கொடுத்த அப்புறமும் ஏன்டா..?”

ஏன்னா அவளுக்கு மட்டுமில்ல எனக்குமே கணக்கு தெரியாது மச்சான்..!”

என்னடா சொல்ற..? அப்போ நீ கொடுத்தது பொய் கணக்கா..?” என்று ராகவன் வாயை பிளக்க அதில் அட்டகாசமாக சிரிக்க தொடங்கிவிட்டான் உதய்.

ஏன்டா கணக்கு வச்சு கொடுக்க இதென்னா கடலைமுட்டையா..?” என்றவன் முகத்தில் வெட்கத்தின் கீற்று..!

திறந்த வாய் மூடாமல் நண்பனை பார்த்திருந்த ராகவன், “பாவம்டா தளிர்” என்று முனுமுனுக்க,

மச்சான் நிஜமாவே நான் கணக்கு வச்சுக்கல டா” என்றவன் அதரங்களில் வெட்கப்புன்னகை தவழ்ந்தது.

எமகாதகன் டா நீ..! தளிர் எந்த பக்கமும் போக முடியாதபடி மொத்தமா கேட் போட்டுட்ட..” என்று சிரிக்க,

சின்ன குழந்தையை விட மோசமா இருக்காடா... சரத் பிரச்சனைக்கு முடிவு கட்டும் வரை அவளை இப்படிதான் சமாளிச்சாகனும், உன் தொங்கச்சிக்கு இரண்டு சான்ஸ் கொடுத்திருக்கேன்.. அவ எத்தனை முறை கணக்கை தீர்க்க வந்தாலும் அவளை எப்படி வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும். நீ கவலைபடாம கிளம்புடா” என்று சொல்ல நிம்மதி புன்னகை தவழ வீட்டிற்கு கிளம்பியிருந்தான் ராகவன்.

சரத் வந்து பேசி சென்றதில் மற்றவர்களை விட அதிகம் காயப்பட்டு போனது சீதா தான். அதிலும் அவன் காண்பித்த வீடியோவில் தளிரும் அவனும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து அறைக்குள் சேர்ந்து செல்வது போல இருந்ததை கண்டத்தில் அவர் இருதயதுடிப்பே சில கணங்களுக்கு நின்று போயிருந்தது.

இத்தனை வருடங்களாக மகளின் வாழ்க்கையை காப்பாற்றி கொண்டு வந்தவருக்கு திருமணமண்டபத்தில் அத்தனையும் அவன் சுக்குநூறாக்கியதில் ஏற்கனவே மனமுடைந்து போயிருந்தவருக்கு உதய்யின் வார்த்தைகள் இருண்டிருந்த மகளின் எதிர்காலத்தின் சிறு ஒளிக்கீற்றாக இருந்தது.

ஆனால் தளிர் அவன் குழந்தைக்கு தாயாகியதாகவும் கருவை கலைத்ததாகவும் அவன் சொன்னதில் முழுதாக நொறுங்கி போயிருந்தார்.

எப்படியாவது மகளை களங்கமற்றவள் என்பதை நிருபிக்க அடுத்தநாளே தன் முதலாளியிடம் சென்று நின்றுவிட்டவர் அவர் மூலமாக வக்கீலை பார்த்திருந்தார்.

வக்கீல் ஆஃபிசில் இருந்து திரும்பிய சீதா மிகுந்த யோசனைக்கு பின் மீண்டும் முதலாளியை நாடியிருந்தார். பின்னே! அவர் தங்கை மருத்துவராக இருப்பதால் அவரிடம் தன் பெண்ணின் கன்னித்தன்மையை நிருபிக்கும் சோதனையை நடத்தி கொடுக்குமாறு கேட்டிருந்தார்.

சீதா கேட்ட உதவி சாதாரணமானது கிடையாது நிச்சயம் தன்னால் முடியாது என்று அவர் மறுத்துவிட்ட போதும் கடந்த இரு நாட்களாக  விடாமல் அவரை தொடர்புகொண்டு பேசி வந்தவர் இப்போதும் அவருக்கு அழைத்து,

"ப்ளீஸ் மேடம் என்னை புரிஞ்சுக்கோங்க..!  இது என் பெண்ணோட வாழ்க்கையை தீர்மானிக்கிற விஷயம் நிச்சயமா சம்பந்தி வீட்ல அவங்க கேட்கும் கேள்விக்கு  என்னால  பதில் சொல்ல முடியாது.."

"என் பொண்ணு தப்பானவள் இல்லை அதை நிருபிக்க இதை விட்டா வேற வழியில்லை.. இப்போ வரைக்கும் என் பெண்ணை நம்புற  மாப்பிள்ளை அவன் அந்த வீடியோவை காட்டின பிறகு நிச்சயம் நம்பமாட்டார் மேடம் தயவு செய்து உதவி பண்ணுங்க

சீதா நீ கேட்கிறது சாதாரண உதவி இல்ல இதுல நிறைய சிக்கல் இருக்கு புரிஞ்சுக்கோ..”

மேடம் ப்ளீஸ் உங்க தங்கச்சி கிட்ட நீங்க சொன்னா செய்வாங்க... என்னை பற்றியும் என் பெண்களை பற்றியும் உங்களுக்கு தெரியும் தானே எனக்கு வேற யாரை உதவி கேட்கிறதுன்னு தெரியலை உங்களை தான் மலை போல நம்பி இருக்கேன் எனக்காக இதை செஞ்சு குடுங்க மேடம்” என்று சீதா கண்ணீரோடு சொல்ல,

சரி சீதா நான் பேசிட்டு சொல்றேன்” என்று வைத்துவிட்டவர் அடுத்த சில மணிநேரங்களில் அழைத்து தளிரை குறிப்பிட்ட நாளில் மருத்துவமனைக்கு அழைத்து வரவும் சொல்லி இருந்தார்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17