மேலும் சில நாள்கள் கழிந்த நிலையில்:
எப்போது தளிர் வீட்டிற்கு வந்து மிரட்டி சென்றான் என்பது
தெரிந்ததோ அப்போதே சரத்தும் அவனை சார்ந்தவர்களும் முழுதாக உதய்யின் வட்டத்திற்குள்
வந்துவிட்டனர். அவர்களை கண்காணிப்பதற்கு தனியாக ஆள்களை நியமித்திருந்த நிலையில்
அவன் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனையையும் உதய் விட்டுவிடவில்லை.
முதலில் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்த சரத் தளிரின்
வீட்டிற்கு வந்து சென்ற பின்னர் சேர்ந்திருந்தது சிவனேஷின் மருமகனும் உதய்யின்
பள்ளிதோழியுமான டாக்டர் உமையாளின் கணவரின் மருத்துவமனை..!
அங்கே நிவியின் தோழியும்
செவிலியராக பணியாற்றுவதால் விஷயம் தெரிந்ததும் சரத்தை கண்காணிக்கவும் பேசுவதை கேட்பதற்கான
ஒட்டுகேட்கும் கருவியையும் அடுத்த ஓரிரு நாளில் பொருத்துவது உதய்க்கு அத்தனை
சிரமமாக இருந்துவிடவில்லை.
அதுமட்டுமின்றி பாதிநேரம் சிகிச்சை, டெஸ்ட்,
ஸ்கேன் என்ற பெயரில் அவனை
அலைகழித்து இறுதியில் அவன் அனுமதிக்கபட்டிருந்த அறைக்கு நிவியின் தோழியை மாற்ற
செய்திருந்தான்.
பகல் முழுக்க அவன் அறையை ஒட்டிய முன் அறையில் இருப்பவர் அவனை
சந்திக்க வருபவர்களையும் அவர்கள் பேசுவதையும் வீடியோ எடுத்து உதய்க்கு அனுப்பி
வைத்து கொண்டிருந்தார்.
சரத்திற்கு சந்தேகம் வராத அளவில் நடந்து கொள்பவர் இரவில் அவன்
உறங்குவதற்கான மருந்தை செலுத்திவிட்டு சென்றுவிடுவார்.
இத்தனை நாட்களாக எந்த நாட்டில் இருந்தாலும் தளிரை தினமும்
பார்த்து கொண்டு இருந்தவனுக்கு ‘இப்போது அவள் எங்கே இருக்கிறாள்..?’ என்ற விபரம்
தெரியாததில் சரத்தின் மூர்க்கத்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போனது..
தளிரை திருமணம் செய்யவிருப்பவன் யாராக இருந்தாலும் அவன்
காட்டக்கூடிய ஆதாரங்களை பார்த்த பின்னர் அவளை தூக்கியெறிந்து விட்டு சென்று
விடுவான் தன் எண்ணம் எளிதாக ஈடேறிவிடும் என்ற சரத்தின் எண்ணத்தில் உதய் மண்ணள்ளி
போட்டதோடு அல்லாமல் அவனையும் மருத்துவமனையில் சேர்த்து விடுவான் என்பதை சரத்
எதிர்பார்க்கவில்லை.
தன் மீது கை வைத்தவனுக்கு தானே தக்க பாடம் புகட்ட வேண்டும்
என்றே அவன் உதய் மீது புகார் கொடுக்கவில்லை. தன் எதிரியான உதய்யை கண்காணிக்க
ஆள்களை நியமித்து இருந்தவன் அவனை சார்ந்த மற்றவர்களை
அலட்சியமாக விட்டிருந்தான் அதனாலேயே தளிர் ராகவன் வீட்டில் இருப்பாள் என்று அவன்
யூகிக்கவே இல்லை நிச்சயம் சென்னையில் இருந்து வேலூருக்கு மாறியது போல அவர்கள் வேறு
வீட்டிற்கு இடம் பெயர்ந்து விட்டதாகவே நம்பியிருந்தான்.
தளிருக்கு முத்தமிட்டதையும் அவனால் தனக்கு நேர்ந்த நிலையையும்
அறிந்த பின்னர் உதய் மீதான அவன் வன்மம் அதிகரித்து அவனை தன் கையால் சிதைக்கும்
உறுதி கொண்டவன் அதற்கான திட்டத்தையும் மருத்துவமனையிலேயே தொடங்கிவிட்டான்.
உதய்யை கண்காணிக்க ஆளை நியமித்து இருந்தவன் அவன் தினசரி
வழக்கங்களை அறிந்து கொண்டு உதய் வேலூரில் இருந்து ராணிபேட்டைக்கு செல்லும் வழியில்
அவனை லாரி ஏற்றி கொல்லும் முடிவிற்கு வந்திருந்தான்.
அவன் திட்டத்தை அறிந்து கொண்ட உதய் இப்போது சரவணனின் வீட்டு
தோட்டத்தில் இருந்து அதை ராகவனுக்கும் சரவணனுக்கும் போட்டு காண்பித்தான்.
‘உதய்யை தன் கையாலேயே லாரி ஏற்றி கொல்ல
வேண்டும் என்றதை கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது ராகவனுக்கு.
“வாடா இப்பவே அலர்விழி மேடம்கிட்ட இதை சொல்லி
அவனுக்கு ஒரு முடிவு கட்டலாம்”
“ம்ப்ச் வேண்டாம்”
“வேண்டாமா..? அப்போ
அங்கிள் கிட்ட சொல்லலாமா..?” என்றதற்கும் உதய் இல்லை என்று
சொல்ல,
“வேற என்னதான் மாப்பிள்ளை செய்ய போற..?” என்றார் சரவணன்.
“அண்ணா ஏற்கனவே ஆளுங்களை வச்சு அவனை
போட்டுடலாம் சொன்ன போதும் வேண்டான்னு சொல்லிட்டான் இப்பவும் வேண்டான்னா என்ன
நினைக்கிறான்னே புரியலை” என்று ராகவன் புலம்ப அவனையே பார்த்திருத்த உதயாதித்தனின் புருவமத்தி
வெகுவாக முடிச்சிட்டது.
இருவரும் அவன் பதிலுக்காக காத்திருக்க “மச்சான் அவன் ப்ளான்
பண்ணின மாதிரியே சம்பவம் செய்யட்டும்.. யாருக்கும் தெரியவேண்டாம்” என்றான்.
“டேய் என்ன பேசற..? அவன்
உன்னை போட்டு தள்ள ப்ளான் பண்றான் அதை நிறுத்தாம நடக்கட்டும்னு சொல்ற..? அறிவுகெட்டவனே” என்று ராகவன் படபடக்க,
“மாப்பிள்ளை நல்லா யோசிச்சுக்கோ..” என்ற
சரவணனுக்கு உதய் தன் முடிவை அத்தனை எளிதாக மாற்றான் மாட்டான் என்று தெரியும்.
“இதைவிட்டா அவனை உள்ள தள்ள வேற வழி இல்லடா..
இவன் செய்யாம இருந்திருந்தா நானே இதை செய்திருப்பேன்”
“என்ன..? என்ன செய்திருப்ப..?”
என்றவனுக்கு படபடப்பு குறையவில்லை.
“ஆக்சிடென்ட்” என்று உதய் அலட்டிக்கொள்ளாமல்
சொல்லவும் ராகவனுக்கு பேச்சு எழவில்லை.
“மாப்பிள்ளை தளிரோட சேஃப்டிக்காக இந்த ரிஸ்க்
எடுக்கணுமா..?”
“நிச்சயமா மாமா..” என்றவன் நண்பனின் தோளில்
கைபோட்டு,
“புரிஞ்சுக்கோ மச்சான் தளிர் கேஸ்ல தான் அவனை
குற்றம் நிருபிக்கபடாமல் உள்ள தள்ள முடியாது... நான்
அவனை அடிச்சது ஊருக்கே தெரியும் பழிவெறியில் சரத் இப்படி செய்ததுக்கான சாட்சியும்
ஆதாரமும் ரெடி பண்ணிட்டா போதும் அவனை வெளியே வர முடியாதளவு செய்துடலாம்...”
“இப்போ இது கிரிமினல் கேஸா இருக்கிறதால FIR போட்டு ரிமான்ட் பண்றது
ஈஸி..”
“அதுக்காக உன் உயிரை கொடுப்பியா..” என்றதில்
தான் பேயறைந்தது போலிருந்த நண்பனின் முகத்தை பார்த்த உதய் சட்டென
சிரித்துவிட்டான்.
“உயிரோட விளையாட பார்த்துட்டு என்ன சிரிப்பு..?
வாயை மூடுடா...”
“ஏன்டா நல்லதாவே யோசிக்க மாட்டியா..? ஆக்சிடென்ட் ஸினாரியோ க்ரியேட் பண்ணி அவனை சிக்க வைக்க யோசிச்சிட்டு
இருந்தேன் ஆனா அதுலயும் ஒரு சிக்கல்..”
“என்ன சிக்கல்..?”
“அப்படி செய்தா ஆக்சிடென்ட் பண்ணினவனை தான்
உள்ள தூக்கி வைப்பாங்க அதை செய்ய சொன்னவன் மேல குற்றம் நிருபணம் ஆகாமல் ஒன்னும்
செய்ய முடியாதாம்..”
“அதனால..?”
“அதுதான் வேற எப்படி அவனை லாக் பண்றதுன்னு
யோசிச்சிட்டு இருந்தேன் எனக்கு கஷ்டம் கொடுக்காம அவனே வலையில வந்து சிக்கிட்டான்.
இப்போ அவன் கையால என்னை போட்டு தள்ள அவன் போட்ட ப்ளானை நான் எக்ஸ்கியூட்
பண்ணபோறேன்”
“எப்படிடா..? எப்படி
முடியும்...? அவன்கிட்ட பணபலம் இருக்கு FIR போடும் முன்னமே ஈஸியா
தப்பிச்சுடுவான்”
“மத்தவங்க கிட்ட தப்பிக்கலாம் ஆனா வேலு கிட்ட..?”
என்று ஒற்றை புருவமேற்றி கேள்வியாக பார்க்க,
“வேலுவா..?” என்ற சரவணின்
முகத்தில் முன்பிருந்த குழப்பம் நீங்கி நம்பிக்கை பிறந்தது.
“அவனே தான்..!”
“மச்சான் வேலு கிட்ட இருந்து தப்பிக்க முடியாது
தான் ஆனாலும் இந்த ரிஸ்க் நிச்சயம் எடுத்தாகனுமா டா... எங்கயாவது மிஸ் ஆச்சுன்னா
உனக்கு தான்..” என்று ராகவன் தயங்க..,
“வேறே வழி இல்ல.. அந்த சைக்கோவை இப்படி
ஹாண்டில் பண்ணி கட்டி வச்சாதான் உண்டு.. என் சேஃப்டி நான் பார்த்துப்பேன் நீ
கவலையை விடு” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கேட் திறக்கப்பட்டு கருப்பு வர்ண
கார் வந்து நின்றது.
முட்டிவரை மடித்துவிடபட்ட கருநீல முழுக்கை சட்டை ஆகாயவர்ண
ஜீன்ஸ் சகிதம் தன் காரில் இருந்து இறங்கி போலீசுக்கே உரிய மிடுக்கான தோற்றத்தோடு
தோட்டத்தில் இருந்தவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் சிவனேஷின் மகனும்
காவல்துறை அதிகாரியுமான ருத்ரவேலன்.
இருபத்து நான்கு வயதான ருத்ரவேலன் உதயாதித்தனுக்கு உடன்பிறவா
சகோதரன் போல.., ருத்ரவேலனின் அக்கா உமையாள் உதய் மற்றும்
ராகவனின் பள்ளி தோழி.. வேலுவும் நிவியும் சிறுவயது முதலே ஒரே பள்ளி ஒரே வகுப்பில்
பயின்றதில் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உண்டு.
ஆம் சிவனேஷ் அம்பலவாணனின் நட்பு அடுத்த தலைமுறையிலும்
தொடர்ந்திருந்தது.
“ஹாய் உதிண்ணா! மாம்ஸ்சும் இங்க தான்
இருக்காங்களா...?” என்று புன்னகையோடு கேட்க,
“வேலு நீயாவது இவனுக்கு சொல்ல கூடாதாடா..?”
என்று பிடித்துக்கொண்டான்
ராகவன்.
“வேணும்னா நிவிகிட்ட சொல்லி
முதல்ல உங்களை டிவோர்ஸ் பண்ண சொல்லட்டா..?” என்று
அடக்கப்பட்ட புன்னகையோடு ராகவனை சீண்ட,
“சொல்லி தான் பாரேன்” என்று சிரிப்போடு
ராகவனும் அவன் கழுத்தை வளைத்துக்கொள்ள “இங்க பேச வேண்டாம் உள்ள வாங்க..” என்று
சரவணன் மாடிக்கு அழைத்து சென்றார்.
அவர்களை வரவேற்ற சுஜியிடம், “அக்கா
எனக்கு முறுகலா மூணு தோசை, ஒரு சப்பாத்தி, தேங்காய் சட்னி, சப்பாத்திக்கு நீங்க பெப்பர் போட்டு
உருளை ஃப்ரை செய்வீங்களே அதுவே ஓகே”
“ஏன்டா தோசை சப்பாத்தி மட்டும் போதுமா..?
அண்ணி இட்லி கூட செய்திருக்காங்க அதை விட்டுட்டியே”
“வளர்ற பிள்ளையை கண்ணு வைக்காதீங்க” என்று நிவி
வரிந்து கட்டிக்கொண்டு நண்பனுக்காக வந்துவிட வேலு அவள் கையில் இருந்த குழந்தையை
கொஞ்சி கொண்டிருந்தான்.
“என்ன வேலு நீ மட்டும் தனியா வந்திருக்க
அக்காவையும் ஆன்டியையும் கூட்டிட்டு வர வேண்டியது தானே..!”
“அவங்க வர்றது இருக்கட்டும் அம்மாகிட்ட நீ என்ன
சொல்லி கொடுத்த..? கண்டதையும் சமைச்சு கொடுத்து இரண்டு நாளா
எனக்கு ஸ்டொமக் அப்செட்”
“உனக்கு பிடிச்ச தந்தூரி ரெசிபி தான்டா
சொல்லியிருந்தேன், ஏன் நல்லா இல்லையா..?”
“நல்லா இருந்தது ஆனா நீ செய்யற அளவுக்கு இல்ல
நிவி...”
“ஸ்டொமக் அப்செட்ன்னு சொல்லிட்டு ஏன்டா அக்கா
கிட்ட மெனு கொடுத்த...?”
“அவனுக்கு இட்லி போதும்டி தோசை வேண்டாம்
சொல்லிடு”
“யோவ் மாம்ஸ் ரெண்டு நாளா சாப்பிடாம நாக்கு
செத்து போய் வந்திருக்கேன்.. டிவோர்ஸ் பண்ண சொன்னதுக்கு இப்படியெல்லாம் பழி
வாங்ககூடாது...” என்று சுஜியை தேடி சென்ற ருத்ரவேலன் காவல்துறை வட்டத்தில் ஆர்.வி
என்று அழைக்கபட்டாலும் நெருங்கிய உறவுகளுக்கு அவன் என்றுமே வேலு தான்..!
உணவை முடித்துக்கொண்டு அனைவரும் மாடியில் இருந்த தனி அறையில் ஒன்று
கூடியிருந்தனர்.
“உதி ண்ணா குமாரோட தம்பி ஆட்டோல ஸ்கூல்
பசங்களுக்கு கஞ்சா சப்ளை பண்ணின கேஸ்ல கையும் களவுமா பிடிச்சு உள்ள
தள்ளியாச்சு...”
“என்னடா சொல்ற அவன் கஞ்சா விக்கிறவனா..?
அதுவும் ஆட்டோவுல வச்சா..?”
“ரிலாக்ஸ் மாம்ஸ் அவன் கஞ்சா விக்கிற விஷயம்
அவனுக்கே இன்னைக்கு தான் தெரியும்...”
“அப்புறம் எப்படிடா அவன் ஆட்டோல
வச்சுருந்தான்...?”
“அதானே எப்படி..?” என்ற
வேலு நாற்காலியில் இருந்து சற்று முன்னே நகர்ந்து ராகவனையே திருப்பி கேட்க,
“வச்சதும் நாங்க தான் எடுத்ததும் நாங்க தான்”
என்றான் உதயாதித்தன் சிரிப்போடு.
“அடப்பாவி இதெல்லாம் எப்போடா எனக்கு சொல்லவே
இல்ல...”
“நீ உன் பாசமலரோட பாசபயிரை வளர்த்துட்டு இருந்த
நேரத்துல முடிச்சோம்” என்றவன், “வேலு நான் சொன்ன யூடியூபர்
விஷயம் என்னாச்சு..?”
“ஆல் செட் ண்ணா! எந்த டவுட்டும் வராது...”
“அவங்க வீடியோ எடுத்ததும் சோஷியல் மீடியால ஷேர்
பண்ணிட்டு அப்புறம் உனக்கு கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லிட்டியா..?”
“சொல்லிட்டேன் ண்ணா கட்சிதமா செஞ்சுடுவாங்க..”
“என்னடா பேசிக்கிறீங்க கொஞ்சம் எங்களுக்கும்
புரியற மாதிரி சொல்லலாமே..?” என்ற சரவணனிடம் தன்
திட்டத்தை உதய் விளக்கிட,
“டேய் செம ப்ளான்! ஒருவேளை முதல்ல வேலுகிட்ட
போனா அவனுக்கு மேலிடத்துல இருந்து ப்ரெஷர் கொடுத்து ஆதாரத்தை மறைக்க வாய்ப்பு
இருக்கு ஆனா மீடியால வந்த பிறகு ஒன்னும் செய்ய முடியாது..”
“எல்லாம் சரிடா ஒருவேளை அவன் உன்னை
இடிச்சதுக்கு அப்புறம் தப்பிச்சுட்டா என்ன செய்யறது..?”
“அவன் தப்பிக்க முடியாதளவு சைலென்ட்டா காலேஜ்
ஸ்டுடென்ட்ஸ் வச்சு ஒரு ராலி (பேரணி) அரேஞ் பண்ணியிருக்கோம். அன்னைக்கு அவன் என்னை
இடிச்சுட்டு தப்பிக்கறதுக்கு ஒரு கிலோ மீட்டர்ல அவங்க ரோட்டை
ஆக்கிரமிச்சுடுவாங்க..”
“என்ன பேரணி..?”
“ஸ்கூல் காலேஜ்ல போதை மருந்து சப்ளை அதிகமா
இருக்கு அதை கட்டுபடுத்த சொல்லி நடத்த போறாங்க.. ஸோ ஒன்னு அவன் ஸ்பீடை கண்ட்ரோல்
பண்ணி அவங்க விலகற வரை காத்திருக்கணும் இல்லை வேற சைட் ரூட் எடுக்கணும்..”
“அப்படி எடுத்து தப்பிச்சுட்டான்னா என்ன பண்றது
மாப்பிள்ளை..?”
“இல்ல மாமா அது அவ்ளோ ஈஸியில்ல அதுக்கும் அவன்
அவங்களை க்ராஸ் பண்ணிதான் ஆகணும்”
“ஆனா அதுக்குள்ள அவனை யார் பிடிப்பா..? தப்பிச்சு தலைமறைவாகிட்டா என்னடா செய்யறது..?”
“டேய் நான் சொன்னேனே அந்த யூடியூபர்! அவங்க
மூணு கார்ல வருவாங்க.. ஆக்சிடென்ட் ஆனதும் ஒரு கார் என்னை காப்பற்றுவதற்காக அங்கேயே
நின்னுடும் மற்ற இரண்டு கார் அவனை ஃபாலோ பண்ணும் அதேநேரம் போலீஸ்க்கும் தகவல்
கொடுத்துடும்..”
“எல்லாம் ஓகே மச்சான் ஆனா யாருடா அந்த
யூடியூபர் அவங்க விஷயத்தை உளறிட்டா என்ன செய்ய..?”
“உளற மாட்டாங்க... ரொம்ப நம்பிக்கையானவங்க
அவங்களுக்கு அண்ணி கேஸோட சீரியஸ்னஸ் தெரியும் சரத் உதிண்ணாவை போட்டு தள்ளறேன்னு
சொன்ன வீடியோவையும் அண்ணி பற்றி பேசினதை கேட்டதும் உதவறேன்
சொல்லிட்டாங்க, வ்லாக் எடுத்துட்டு போனவங்க வழியில இந்த
சேஸிங்கையும் ஆக்சிடென்ட்டையும் எதேர்ச்சையா அவங்க கேப்சர் பண்ணினதா தான்
இருக்கும் ஸோ அவங்களோட சாட்சி ரொம்ப ஸ்ட்ராங்கா நிற்கும் அவனால லேசுல வெளியே
வந்துட முடியாது...”
“அதோட அவன் பேசினது ஆக்சிடென்ட் நடக்க கொஞ்ச
நேரம் முன்னாடி சோஷியல் மீடியாவுல வந்துடும் அதுக்கப்புறம் யாரும் எனக்கு ப்ரெஷர்
போட முடியாது அது எங்கப்பாவா இருந்தாலும்” என்று ருத்ரவேலன் சொல்ல..,
“ஏன்டா அங்கிள்க்கு இதுல உடன்பாடு இல்லையா..?”
“அப்படி சொல்றதுக்கு இல்ல.. உதிண்ணாவை அண்ணி
விஷயத்துல இருந்து விலக சொல்லிட்டு எங்க மாமா சைட்ல பொண்ணு கிடைக்குமான்னு
விசாரிச்சுட்டு இருந்தார். ஒருவேளை அவருக்கு ப்ரெஷர் வந்ததுன்னா என்னை ஸ்டாப்
பண்ணி விலக வைக்கவும் வாய்ப்பு இருக்கு அதுக்கு தான் இந்த முன்னேற்பாடு”
“ஏன்டா அப்படி..?”
“அவர் டிஎஸ்பி மட்டுமில்ல எனக்கு அப்பா மாம்ஸ்”
என்று சொல்ல ‘புரியுது’ என்பதாக தலையசைத்தான்.
Comments
Post a Comment