வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

தீராத காதல் தொல்லையோ?!... 1.2



“சரி வாகீ நான் வாக்கிங் போய்ட்டு வரேன்.. வேத் இன்னைக்கு வீட்டுல இருக்கிறதால உன் பூஜைக்காக அவன் தூக்கத்தை கெடுத்துடாத. ஏதோ அவசர மீட்டிங்ன்னு டின்னர் சாப்பிடாம நேத்து கிளம்பினவன் நைட் பன்னிரண்டு வரையிலுமே வரலை” 

“சரிங்க வேத் எந்திரிச்சு வர வரைக்கும் நான் டிஸ்டர்ப் பண்ணலை. ஆமா நீங்க ஏன் பன்னிரண்டு மணி வரை முழிச்சு இருந்தீங்க?” 

“பரமேஷ் கால் பண்ணி இருந்தான் அவனோட அக்காவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கங்க அவங்களுக்கு அவசரமா ரத்தம் தேவைபடவும் எனக்கு கூப்பிட்டு இருந்தான்.. அவனோடு பேசிட்டே டைம் பார்த்தா பதினொன்றரை வேத் வந்துட்டா சாப்பிட கொடுக்கலாமேன்னு அரை மணி நேரம் வெயிட் பண்ணிட்டு வந்து படுத்தேன்..”

“அவசரமா கிளம்பி இருந்தாலும் வேத் எப்பவுமே வெறும் வயிற்றோடு படுக்க மாட்டான்.. நீங்க கவலை படாதீங்க நிச்சயம் சாப்பிட்டு இருப்பான்..” என்றதில் புன்னகையோடு வாகீஸ்வரியிடம் விடை பெற்று கிளம்பினார். 

வாகீஸ்வரி அவர்கள் வீட்டின் தலைவி. பின் ஐம்பதுகளில் இருப்பவர். அந்த காலத்திலேயே அவர் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பதோடு டபுள் டிகிரி பெற்று அரசாங்கத்தில் பணியாற்றியவர். 

அவர் பணியில் சேர்ந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெற்றோரால் அவருக்கு பார்க்கப்பட்ட வரன் தான் சைலேந்தர். படித்து முடித்து நண்பர்களுடன் சேர்ந்து சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி கொண்டிருப்பவரை அவருக்கும் பிடித்துப்போக முப்பது வருடத்திற்கு முன் அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. 

அவரின் தொழில் சென்னையில் என்பதாலும் வாகீஸ்வரி அரசாங்க பணியில் இருந்ததாலும் முதல் சில வருடங்கள் சைலேந்தர் வார இறுதிகளில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்து சென்று கொண்டிருந்தார். 

அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளாகி போக உடனடியாக குடும்பத்தை சென்னைக்கு மாற்ற முடியாமல் போனது. அதை தொடர்ந்து மூன்றாவது குழந்தையும் தங்கிவிட சென்னைக்கு செல்லும் திட்டத்தை ஒத்தி போட்டனர்.  

இப்படியே பத்து வருடங்கள் உருண்டோட ஒருவழியாக சென்னையில் குடும்பத்தோடு செட்டிலான போதிலும் இருவரின் வேலை காரணமாக பிள்ளைகளை சரிவர கவனிக்க முடியவில்லை. 

பணம் தேவைக்கு அதிகமாகவே இருந்த போதிலும் பிள்ளைகளுக்கான நேரம் ஒதுக்க முடியாமல் போனது.

திருமணம், பிள்ளைபேறு, இடமாற்றம் என்று வாகீயின் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்தேற ஒருகட்டத்தில் குடும்பம் முக்கியமாகி போகவும்  திருமணமான பன்னிரண்டு வருடத்திற்கு பின்னர் வாலண்டரி ரிடையர்மென்ட் கொடுத்து விட்டார்.   

அவரின் சம்பாத்தியம் இல்லாததால் அவர்கள் இல்லறத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. சொல்லப்போனால் வாகீஸ்வரியின் சம்பாத்தியம் ஆயிரங்களில் என்றால் டைல்ஸ் மற்றும் கிராணைட் தொழிலில் சைலேந்தர் மாதத்திற்கு பல லட்சங்களை ஈட்டிக்கொண்டு இருந்த நேரம். 

மனைவி பிள்ளைகள் வந்த நேரம் அவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாற இன்னும் பல தொழில்களில் முதலீடு செய்ய தொடங்கினார். அதோடு கூட்டாக நண்பர்களோடு செய்தது மட்டுமல்லாமல் தனியாக தன் தொழிலை மற்ற நகரங்களிலும் விரிவாக்கம் செய்ய தொடங்கி இருந்தார். 

வளரும் பிள்ளைகளுக்கு யாராவது ஒருவர் பக்கத்தில் இருக்க வேண்டும் என்ற சூழல் வந்த போது வாகீஸ்வரி தன் வேலையை துறந்து பிள்ளைகளுக்கு பக்கபலமாக இருந்தார். 

இத்தனைக்கும் இருவீட்டு பெரியவர்களில் யாரையாவது துணைக்கு அழைத்து கொள்ளலாம் என்று சைலேந்தர் சொன்ன போதும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

“அம்மாவோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது இந்தர். இந்த ஸ்டேஜ்ல அவங்களுக்கு என்னோட இருப்பு ரொம்ப அவசியம். திரும்ப கிடைக்காத நாட்கள் இவை. என்னோட வேலையை ரொம்ப திருப்தியாவே செய்துட்டு வந்தேன்…”

“அந்த திருப்தி நம்ம குழந்தைகளோட வளர்ப்புலயும் இருக்கனுமில்லையா? மிஸ் பண்ணிட்டோமேன்னு நாளைக்கு நாம இதை நினைச்சு ஃபீல் பண்ண கூடாது. எப்படியும் நம்ம கணக்கு வழக்கெல்லாம் நான் தானே பார்க்கிறேன் இனி ஃபுல் டைம் வீட்டுல இருந்து அந்த ஜாப் பார்க்கிறேன்..”

“சரி வருமா வாகீ? என்ன இருந்தாலும் உன்னோட சம்பாத்தியம் போல எதுவும் உனக்கு..” என்றவரை இடையிட்டு, 

“நீங்க இவ்ளோ ஃபீல் பண்ணினா கணக்கு பார்க்கிறதுக்கு எனக்கு தனியா பணம் கொடுத்துடுங்க.. என்னோட சம்பளத்துக்கு ஈடா..” என்று புன்னகைத்தார். 

“என்னோட மொத்தமும் உனக்கு தான். அதை தனிதனியா  பிரிச்சு பார்ப்பியா நீ?” 

“இருக்கட்டுமே இந்தர். பட் மாசா மாசம் என்னோட அக்கவுண்ட்க்கு வரக்கூடிய பணம் நீங்க சொல்ற மாதிரி எனக்கே எனக்கானதுன்னு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும்.. அதுக்கான கணக்கை நான் உங்களுக்கு  கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது..” என்று சொல்ல சைலேந்தரும் சம்மதித்தார். 

இப்படி இருவரின் இல்லறமும் நல்லறமாக திகழ மகள்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்ட நிலையில் மகனின் திருமணம் கை கூட வேண்டும் என்பதற்காக தான் இந்த அதிகாலை பூஜை.

அதோடு அடுத்த வாரம் அவர்கள் வீட்டில் வரமகாலட்சுமி பூஜை வைத்திருப்பதால் கடந்த சில நாட்களாகவே அவருக்கு தொடர்ந்து வேலைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. 

மீண்டும் பூஜையறையில் வந்து அமர்ந்து தன் வேலையை துவங்கியவர் கண்கள் சட்டென மூடப்பட “நான் யாருன்னு கண்டுபிதிங்க வாகீம்மா..” என்ற குழந்தையின் மழலை பேச்சில் வாகீஸ்வரியின் இதழ்களில் புன்னகை படர்ந்தது. 

“இப்படி திடீர்னு கேட்டா எப்படி? எனக்கு யாருன்னு தெரியலையே.. ஏதாவது க்ளு கிடைக்குமா?” என்று அவரும் குழந்தைகளுக்கு சரிசமமாக பேச்சுக் கொடுத்தார்.

“க்ளூவா?” என்று விஹான் யோசிக்க அவன் காதில் கிசுகிசுத்தாள் ரியா.

“உங்களுக்கு என்னை நல்லா தெரியும்.. அதுதான் க்ளூ கண்டு பிச்சுதிங்களா?”

“அப்படியா? எனக்கு உங்களை தெரியுமா?”

“ஆமா, அப்புதம் உங்களுக்கு என்னை ரொம்ப பிதிக்கும் இப்ப கண்டுபிதிங்க..” 

“இல்லை, இல்லை உங்களுக்கு அவனை விட என்னை தான் பிடிக்கும் வாகீம்மா..” என்று யுவராஜ் குரல் கொடுக்க சிரிப்போடு கைகளை விளக்கி பேரனை இழுத்து அணைத்துக் கொண்டார்.

“அப்போ நாங்க வாகீம்மா..” என்று ரியாவும் மற்ற குழந்தைகளும் அவர் முன்னே வர அனைவரையும் அணைத்து உச்சியில் முத்தமிட்டவர் “என்ன இவ்வளவு காலையில் வந்திருக்கீங்க? யாரோட வந்தீங்க?” என்றிட,

“என் கூட தான் வந்தாங்க அத்தை..” என்றான் அர்ஜுன்.

அவன் குரலை கேட்டதுமே சட்டென எழுந்துக் கொண்டவர் “வாங்க மாப்பிள்ளை.. இவ்வளவு காலையில் உங்களையும் குழந்தைகள் கூட்டிட்டு வந்திருக்காங்க ஏதாவது முக்கியமான விஷயமா?” 

“எதுவும் இல்ல அத்தை. இன்னிக்கு மார்னிங் நான் கொஞ்சம் ஃப்ரீ ஆரி இன்னைக்கு வீட்ல தான் இருப்பேன்னு சொன்னான். அதை நேத்து நைட்டு பசங்க கிட்ட சொல்லவும் உடனே கிரிக்கெட் விளையாடனும்ன்னு ஒரே அடம்..”

“தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி கூட்டிட்டு வந்துட்டாங்க.. நீங்க பூஜையை பாருங்க நான் பசங்களை கூட்டிட்டு கிளம்புறேன்..”

“இருங்க மாப்ள நான் காஃபி போடறேன். குழந்தைங்க உத்ரா கூட வந்திருப்பாங்கன்னு நினைச்சேன்..”

“இல்ல அத்தை இன்னைக்கு வெள்ளிக்கிழமை என்பதால அண்ணியும் பூஜையில் பிஸி. அண்ணா காலையிலயே மித்துவை கூட்டிட்டு கிளம்புறதுக்காக எந்திரிச்ச போது இவங்களும் எந்திரிச்சிட்டாங்க.. அண்ணாவை தொல்லை பண்ணி குளிச்சு முடிச்சு வந்தாச்சு..” என்றான் புன்னகையோடு. 

“சித்தா வாங்க ஆரி மாமாவை கூட்டிட்டு வரலாம்..” என்று குழந்தைகள் அவனை பேச விடாமல் தொல்லை கொடுக்க, 

“நீ வா வி.. நாமலே போய் சித்தப்பாவை எழுப்பலாம்..” என்று மாமன் மகன் விஹானை அழைத்தாள் ரியா.

“சூப்பர் ஐடியா. நாமலே எழுப்பி விடலாம் ஆனா நான் தான் மாமாவை முதல்ல எழுப்புவேன்..” என்று யுவராஜ் முதலில் செல்ல அவனை எட்டி பிடிக்க மற்றவர்களும் வேகமாக அவன் பின்னே சென்றனர். 

“ஹே பார்த்து டா மெதுவா.. விழுந்து வைக்க போறீங்க..” என்ற அர்ஜூன், “அத்தை நான் ஆரியை கூட்டிட்டு வரேன் ரெண்டு பேருக்கும் காஃபி எடுத்து வைங்க..” என்று கிளம்பிவிட்டான். 

ஆனால் அவர்கள் தேடி வந்த வேதாந்த் ஆர்யன் இப்போது அறையில் இல்லாமல் ஒரு கொலை வழக்கு குறித்த தீவிர விசாரணையில் இருக்கிறான் என்பதை யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அர்ஜூன் சொன்ன பிறகு தான் மகன் உறங்கி கொண்டிருப்பது நினைவு வர, எப்படி அவர்களை தடுப்பது என்று பார்த்திருந்த வாகீஸ்வரி உடனே மகளுக்கு அழைத்தார். 

“சொல்லுங்க ம்மா..” என்று குளித்து விட்டு வந்த தன்ஷிகா கேட்க, “தன்ஷி எந்திரிச்சுட்டியா?”

“ஆச்சு ம்மா.. இப்போ தான் குளிச்சுட்டு வந்தேன் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்..”

“அதெல்லாம் இருக்கட்டும் குழந்தைகள் மாடிக்கு வந்துட்டு இருக்காங்க…”

“குழந்தைகளா? அக்கா வந்திருக்காங்களா ம்மா..”

“இல்லை வேத் லீவ்ன்னு தெரிஞ்சுட்டவங்களுக்கு காலையிலேயே கிரிக்கெட் விளையாடனும்னு வந்துட்டாங்க.. ஆனா உன் அண்ணன் நைட் லேட்டா தான் வந்திருக்கான் தூங்கிட்டு இருப்பான் அவனை டிஸ்டர்ப் பண்ணாம வழியிலேயே அவங்களை பிடிச்சு உன் ரூமுக்கு கூட்டிட்டு போயிடு..” 

உடனே தன் அறைக்கதவை திறந்த தன்ஷிகா யுவராஜும், ரியாவும் போட்டி போட்டு ஓடி வருவதை கண்டவள், “சரிம்மா நான் பார்த்துக்கிறேன்..” என்றிட, “ஒருநிமிஷம் தன்ஷி மாப்பிள்ளையும்..” என்றவர் பேச்சை முடிக்கும் முன்பே அழைப்பை துண்டித்து துண்டை எடுத்து தலையில் கட்டியபடி வெளியில் வந்தவள், சுவரோரம் மறைந்து நின்று அவர்களுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

பொதுவாகவே மாடிக்கு வரும் குழந்தைகள் அங்கிருக்கும் பால்கனியில் அவர்களுக்காக வைத்திருக்கும் விளையாட்டு பொருட்களை நோக்கி தான் முதலில் செல்வார்கள் இன்றும் அப்படியே வேதாந்தை தேடி வந்த யுவராஜ் அங்கு சென்றுவிட மற்றவர்களும் அவனை தொடர்ந்தனர். 

இதை அறியாத அர்ஜூன் வாகீஸ்வரியிடம் பேசி விட்டு மாடிக்கு வந்தவன் நண்பனின் அரை நோக்கி சென்றான். 

வேதாந்தின் அறைக்கு முந்தைய அறை தன்ஷிகாவுடையது என்பதால் அவன் நடையின் வேகம் குறைய பார்வை தன்னை அறியாமல் அவள் அறை மீது மந்தகாச புன்னகையோடு படிந்து  மீண்டது. 

மறைந்து நின்றிருந்த தன்ஷிகா அடுத்த சில நொடிகளில் கேட்ட காலடி சப்தத்தில் குழப்பத்துடனே நின்றிருந்தவள் சப்தம் அருகே கேட்கவும் “சத்தம் போடக்கூடாது..” என்றபடி பாய்ந்து வந்து குழந்தைகளை கட்டி கொள்வதற்கு பதில் அர்ஜூனை கட்டிக்கொண்டிருந்தாள்.

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17