வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - ஃபைனல் 1


“காஃபி எடுத்துக்கோங்க ரிஷி..” என்ற மகாலட்சுமியை அகமகிழ பார்த்த ரிஷிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

பின்னே பல வருடங்களுக்குப் பிறகு அவள் முகத்தில் படர்ந்திருந்த புன்னகையும் பூரிப்பும் அவள் அலங்காரமும் அவனை கொள்ளை கொள்ள மனைவி மீதான பார்வையை அகற்ற முடியாமல் கிட்டத்தட்ட உறைந்து போய் நின்றான். 

“ரிஷி எல்லாரும் பார்க்கிறாங்க, முதல்ல காஃபி எடுத்துக்கோங்க..” என்று மகா சொல்ல “ப்பா மம்மு..” என்று தந்தையின் கன்னத்தை தன் பிஞ்சு கரங்களால் பிடித்து சொன்னான் கௌரவ். 

அதில் ஸ்மரன் பெற்றவன், “என்ன கண்ணா?” என்றிட “உன்க்கு மம்மு” என்று மகா கையில் இருந்த கப்பை காண்பித்தான். 

“நீங்க மம்மு குடிச்சுட்டீங்களா?” என்று கேட்க, “அவங்களுக்கு பால் ரெடியா இருக்கு ண்ணா, கொடுங்க நான் கொடுக்கிறேன்..” என்று பால் புட்டியோடு வந்த காயத்ரி பிள்ளைகளை வாங்கி கொண்டாள்.

“லச்..சு.. நீ.. நீ எப்..படி இங்க?” என்றவனுக்கு அதீத மகிழ்ச்சியில் வார்த்தை வெகுவாக திணறியது.

“மருமகளை எப்போ வந்தன்னு கேட்காம, எப்படின்னு கேட்கிற?” என்று சிரிப்போடு மகனிடம் வந்த சிவபாலன், 

“மதியம் சாப்ட்டுட்டு கொஞ்ச நேரம் படுக்கலாம்னு கதவை சாத்திட்டு அப்போ தான் கண் அசந்திருப்பேன் ஆனா திடீர்னு பெல் அடிக்கிற சத்தம். இந்நேரத்துக்கு யாருன்னு போய் கதவை திறந்தா வாசல்ல லட்சுமி!!”

“உன்னை மாதிரியே எனக்கும் அதிர்ச்சி தான்! என் கண்ணையே நம்ப முடியாம கசக்கி விட்டு பார்த்தவனுக்கு லட்சுமி நம்ம வீட்டுக்கு வந்ததை நம்பவே எனக்கு ரொம்ப நேரமாச்சு..”

“வர வழியிலேயே சம்பந்தியம்மாவுக்கும் ஃபோன் பண்ணி குழந்தைகளை கூட்டிட்டு இங்க வர சொல்லிடுச்சு போல லட்சுமி வந்த கொஞ்ச நேரத்துக்கு அவங்களும் வந்துட்டாங்க..” என்றிட ‘அப்படியா?’ என்று மாமியாரை பார்த்தான். 

“ஆமா மாப்பிள்ளை! நானும் சுமதியும் குழந்தைகளுக்கு ட்ரெஸ் எடுக்க போயிருந்த போது தான் மகாவோட கால் வந்தது. குழந்தைகளை கூட்டிட்டு இங்க வர சொல்லவும் என்னால நம்பவே முடியலை..”

“என்ன ஏதுன்னு ஒன்னும் புரியாமல் நாங்க அவசரமா கிளம்பி வந்தா இனி இங்கே தான் இருக்க போறேன்னு எங்களுக்கும் ஷாக் கொடுத்துட்டா…” என்றார் பாக்கியா.

அவரை தொடர்ந்து, “சந்தோஷத்துல அத்தையோட அழுகை நிற்க ரொம்ப நேரமாச்சு ண்ணா, அப்பாவுக்குமே கண் கலங்கிடுச்சு அவங்களை தேற்றுவதற்குள் போதும் போதும்னு ஆகிடுச்சு” என்று சுமதி சொல்லவும் ரிஷி தந்தையை பார்த்தான். 

“ஆமா ரிஷி, லட்சுமி கூட இருக்க தானே நீ இண்டர்வ்யூக்கு போன ஆனா மருமகள் உன்னோடு வாழ இங்க வந்தாச்சு.. சம்பந்தியம்மா குழந்தைகளோடு வர வரைக்குமே நான் பகல் கனவு காணுறேன்னு நினைச்சேன்...” என்றார் சிரிப்போடு.

“நான் வேலையில இருந்ததால எனக்கு விஷயம் லேட்டா தான் தெரிஞ்சது மாப்பிள்ளை.. தெரியவும், உடனே அங்க போய் பொருள் எல்லாம் பேக் பண்ண தொடங்கிட்டேன், கதிர் வரவும் எல்லாம் கொண்டு வந்து அடுக்கியாச்சு..” என்றார் தினகரன் புன்னகையோடு. 

அவர் சொன்னது போல குழந்தைகளின் மூன்று சக்கர சைக்கிள் தொடங்கி ஹால் முழுக்க அவர்களின் விளையாட்டு பொருட்கள் நிறைந்திருந்தது. 

ஆனால் ரிஷி தான் இன்னும் நிஜத்தை நம்ப முடியாமல் ஆச்சர்யத்தோடு மனைவியை பார்த்திருந்தான்.

“இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்க போறீங்க? காஃபி ஆறிடும் ரிஷி..” என்றதும், “என்னை கொஞ்சம் கிள்ளு லச்சு” என்றான். 

“என்ன விளையாடறீங்களா?” என்றாள் சிரிப்போடு. 

“நிஜமா தான் சொல்றேன், காலையில பேசின போது கூட நீ இங்க வருவன்னு நான் எதிர்பார்க்கலை..” என்றவன், “என்ன ஒரு கப் தான் இருக்கு, உனக்கு எங்க லச்சு?” என்றான்.

“நான் அப்புறமா சாப்பிடுறேன், நீங்க எடுத்துக்கோங்க..” 

“உனக்கும் எடுத்துட்டு வா ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்..” என்றவர்களின் இணக்கம் கண்டு பாக்கியாவின் கண்களில் நீர் திரண்டு விட்டது.

சொன்னதோடு நிற்காமல் மனைவிக்கான காஃபி கலக்க சமையலறைக்கு சென்றான். அவன் பின்னே சென்ற மகாலட்சுமி, “நான் பார்த்துக்கிறேன் நீ போங்க..” என்றாள். 

“இருக்கட்டும்..” என்றவன் கரம் ஒருவித நடுக்கத்தோடு கப்பை எடுத்து வைக்க,

“ஏன் உங்க கை இவ்ளோ ஷிவர் ஆகுது?”

“தெரியலை, சந்தோஷத்துல கை கால்  ஓடலை..”

“அதனால தான் நான் பண்றேன்னு சொல்றேன், நகருங்க..” என்ற மகா மற்றொரு கப்பை எடுத்து காஃபி கலக்க பரவசத்தோடு மனைவியை பார்த்திருந்தான். 

மனைவி கப்பை நீட்டவும், “யாருக்கு?” என்றான்.

“உங்களுக்கு தான்! இது ஆறிடுச்சு, சூடா உங்களோட பதத்துல குடிக்க தானே பிடிக்கும் அதுதான் திரும்ப கலந்தேன்..” என்றவள் காஃபியோடு சோஃபாவில் கணவன் அருகே இயல்பாக அமர்ந்தாள்.

இக்காட்சியை கண்ட பெரியவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. 

“இப்ப தான் மாப்பிள்ளை எங்களுக்கு மனசு நிறைஞ்சு இருக்கு.. எங்க பொண்ணுக்கு நல்லது செய்யறதா நினைச்சு அவளோட விஷயத்துல நாங்க கொஞ்சம் அதிகமாவே நடந்துக்கிட்டோம், அதனால தான் திரும்ப உங்களுக்குள்ள ஒரு விரிசல் வர நாங்களே காரணமாகிட்டோம்..”

“என்ன பேச்சு ம்மா இது?! பழசை பேச வேண்டாமே” என்றாள் தாயிடம். 

“இல்லைடா நானுமே சில விஷயத்தை மறைச்சு, உன்னை காயத்ரியோடு கம்பேர் பண்ணின்னு என்னை அறியாம பேசி உன்னை காயப்படுத்திட்டேன்..” என்றார் விடாமல். 

ரிஷி அவரை சமாதானப்படுத்த முயல, “சில விஷயங்களை வற்புறுத்தி திணிக்காம அதன் போக்கில் இயல்பா விட்டாலே போதும் காயம் ஆறிடும்னு மகா விஷயத்துல புரிஞ்சுக்கிட்டோம்..” என்றார் தினகரன்.

“மாப்பிள்ளை மனம் திருந்தி வந்த சந்தோஷத்துல உன்னை கூட போய் வாழ சொன்னவ, என் பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சுக்காம போயிட்டேன்.. அதனால தானே நீயும் மாப்பிள்ளையும் இவ்ளோ நாள் பிரிந்து இருக்க வேண்டியதா போச்சு..” 

“அப்படி எதுவும் இல்லை ம்மா. ஆனா ஒருவிதத்துல நீங்க சொன்னது சரி! கலங்கின தண்ணியில கல் எறிஞ்ச மாதிரி உங்களோடு பேச்சு இருந்தாலும் எங்களோட விரிசலுக்கு நீங்க மட்டுமே காரணமில்லை..” என்ற மகளை புரியாமல் பார்த்தார். 

“ஆனால் என் மனசு சீக்கிரம் தெளிவாக உங்களோட பேச்சும் ஒரு காரணம்.. இப்போ நான் இவரோடு இவ்ளோ சீக்கிரம் சேர நீங்களும் ஒரு காரணமாகி இருக்கீங்கன்னு சொல்லலாம்..”

“என்னடா சொல்ற?”

“என்னோட இத்தனை வருஷ கோபம், ஆதங்கம், வேதனை, வருத்தம், வலி அனைத்தையும் வெளியேற்ற உங்களோட பேச்சு உதவியா இருந்தது. ஒருவேளை நீங்க அப்படி பேசாமல் போயிருந்தா நான் இவர் கிட்ட எதுவும் பேசாமல் அமைதியா மொத்தமாக விலகி போயிருப்பேன், அந்தளவு எனக்கு வெறுப்பு இருந்தது..”

“மகா..”

“அப்போ என் மனசுல இருந்ததை தான் ம்மா சொன்னேன். ஆனால் உங்களால இவர் கிட்ட என் மனசுல இருந்ததை எல்லாம் கொட்டாம போயிருந்தா என்னோட மன பாரமும் இறங்கி இருக்காது.. இவரோடு சேர்ந்தும் இருந்திருக்க மாட்டேன். நிச்சயம் விவாகரத்து என்ற முடிவில் உறுதியா இருந்திருப்பேன்..” என்றதில் அனைவர் முகத்திலும் மிரட்சி. 

அதை கண்டவள், “ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க? இது அப்போ நான் எடுத்த முடிவு!” என்றவள், “ப்ச் விடுங்க இப்போ எதுக்கு இந்த பேச்சு?!” என்று அவளே முற்றுபுள்ளியும் வைத்தாள்.

“எது எப்படியோ இனி உங்களுக்குள்ள எந்த பிரிவும் வராது, அந்த சந்தோஷம் போதும் எங்களுக்கு..” என்றார் தினகரன். 

போர்டிகோவில் சைக்கிள் ஓட்டிய படி பால் குடித்து முடித்த குழந்தைகள் இருவரும் போட்டி போட்டு கொண்டு ரிஷி மடியில் அமர்ந்து ஏதோ ஒரு நிகழ்வை மழலை பேச்சில் விவரிக்க குடும்பம் சகிதமாக மகனை கண்ட சிவபாலன் முகத்தில் இன்னும் குறையாத மகிழ்ச்சி.

“சரி மாப்பிள்ளை நாங்க கிளம்புறோம்..” 

“அப்பா எங்க கிளம்பிட்டீங்க? இருங்க நைட் டின்னர் சாப்பிட்டு போவீங்க..” என்றாள் மகாலட்சுமி. 

“ஆமாம் மாமா, எவ்வளவு நாள் கழிச்சு வந்து இருக்கீங்க.. இன்னைக்கு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடலாமே..” என்றான் ரிஷி. 

“இல்ல ரிஷி எனக்கு வேலை இருக்கு. குழந்தைகள் காயத்ரி வீட்ல இருக்காங்க அவங்களை கூட்டிட்டு வரணும் ஸோ நாங்க கிளம்புறோம்.. அப்பா, அம்மா, அண்ணி அப்புறம் வரட்டும்..” என்றான் கதிர். 

“இருக்கட்டும் கதிர் வேலையை முடிச்சுட்டு டின்னர் எங்களோட ஜாயின் பண்ணிக்கோங்க..”

“சரி ட்ரை பண்றேன்..” என்றவன் மனைவியை அழைத்து கொண்டு கிளம்பினான். 

“சரி மாப்ள குழந்தைகளை சாயந்திரத்துல தினமும் பார்க்குக்கு கூட்டிட்டு போய் பழகிட்டோம். போகணும்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இங்கே பக்கத்துலையே பார்க் இருக்காமே, நாங்க கூட்டிட்டு போயிட்டு வந்துடறோம்..” என்ற தினகரன், சிவபாலன் உட்பட அனைவரும் அழைத்துக்கொண்டு கிளம்பினர். 

அவர்களை வழி அனுப்பி விட்டு மனைவி புறம் திரும்பிய ரிஷி “என்னால எதையும் நம்ப முடியல! சந்தோஷத்துல மூச்சை அடைக்குது. இதெல்லாம் கனவா நினைவா என்று புரியாது நிலையில இருக்கேன். ” என்றான் இதழ் கொள்ளா புன்னகையோடு.

“எல்லாமே வாசல்ல வச்சு தான் கேட்கணுமா? வாங்க உள்ள போகலாம்..” என்று கேட்டை சாற்றிவிட்டு கணவனின் கை கோர்த்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். 

‘அன்று தொடாதே!!’ என்ற மகாவின் இன்றைய இணக்கத்தை இன்னுமே நம்ப முடியாமல் ரிஷி வீட்டினுள் செல்ல மகாவோ கணவனை கட்டிக்கொண்டு அவன் மார்பில் முகம் பதித்து, “இப்போ நம்ப முடியுதா?” என்றாள்.

அதில் ரிஷியின் இருதய துடிப்பின் வேகம் மும்மடங்காகி போனது. 

அதை உணர்ந்த மகா கணவனை சோஃபாவில் அமர்த்தி அவன் அருகே அமர்ந்து ரிஷி ஆஃபிஸ் வந்து சென்ற பின்பான நிகழ்வை விவரித்தாள்.

Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17