வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

தீராத காதல் தொல்லையோ?!... 2.1

 


அர்ஜுனை கட்டிக்கொண்டு அவன் வயிற்றில் முகம் புதைத்திருந்த தன்ஷிகா அப்போது தான் வித்யாசத்தை உணர்ந்து பதறிக்கொண்டு நிமிர்ந்தவள் அத்தனை நெருக்கத்தில் அர்ஜுனை கண்டு விதிர்விதிர்த்து போனாள்.

“ஸா.. ஸஸ்.. ஸாரி.. நான் தெரியாம..” என்றவள் திக்கி திணறி அச்சத்தோடு அர்ஜுனை பார்க்க, “தன்ஷி, நான் தான்! எதுக்கு இவ்ளோ பயம் உனக்கு?” என்றதில் தன்ஷிகா பின்னே நகர முயன்று முடியாமல் அர்ஜுனை பார்த்தாள்.

அப்போது தான் அவள் கூந்தல் அர்ஜுனின் டீஷர்ட் பட்டனில் சிக்கிக்கொண்டு இருப்பதை கண்டவளுக்கு அச்சம் அதிகரித்தது. 

“ஹே டொன்ட் மூவ்! நல்லா சிக்கி இருக்கு நகர்ந்தா உனக்கு தான் வலிக்கும். இப்படியே இரு நான் பார்க்கிறேன்...” என்றிட அவளோ எக்குத்தப்பாக எகிறி போயிருந்த இருதய துடிப்போடு, “எனக்கு நீங்கன்னு தெரியாது, நான் தெரியாம.. குழந்.. குழந்தைங்கள்னு நினைச்சு தான், ப்ச் ஐ’ம் ஸாரி” என்றாள் கெஞ்சலான குரலில் மீண்டும். 

“ரிலாக்ஸ் தன்ஷி, ஐ அண்டரஸ்டான்ட். எதுக்கு இவ்ளோ பயம்..” என்று அவள் நெற்றியிலும் நாசி நுனியிலும் கழுத்து வளைவிலும் பூத்திருந்த வியர்வையை கண்டு  சொல்ல அவளோ அவன் பட்டனில் இருந்த முடியை பிரிக்க முயன்று பதற்றத்தில் எதையும் சரியாக செய்ய முடியாமல் திண்டாடி கொண்டிருந்தாள்.

அவளில் லயித்திருந்தவன், “தன்ஷி நான் எடுக்கிறேன், உன்னோட கை எவ்ளோ ஷிவர் ஆகுது பார். நீ கொஞ்சம் அமைதியா இரு..” என்றவன் மென்மையாய் அவள் முகத்தை மறைத்திருந்த கூந்தலை விலக்கி சட்டையில் சிக்கி இருந்தவற்றை மெல்ல எடுக்க தொடங்கினான். 

அதேநேரம் “தன்ஷி” என்று கீழிருந்து அழைத்தபடி காஃபியோடு மாடிக்கு வந்து கொண்டிருந்தார் வாகீஸ்வரி.

“அச்சோ அம்மா வந்துட்டாங்க, ப்ளீஸ் சீக்கிரம் எடுங்க..” என்றவள் அவசரமாக அவள் முடியை பிடித்து இழுக்க முயன்றாள்.

“அத்தை வந்தா என்ன? நான் பார்த்துகிறேன், நீ அவசரபடாத அவ்ளோ தான் ஆச்சு” என்றிட தன்ஷியோ நிலைகொள்ளாமல் தத்தளித்து கொண்டிருந்தாள். 

“எதுக்கு உனக்கு இவ்ளோ டென்ஷன்? கொஞ்சம் அமைதியா நில்லு தன்ஷி..” என்றவனிடம், “நான் நெஜமாவே தெரியாம தான், ஸாரி..” என்றாள் மீண்டும். 

அதில் தான் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திய அர்ஜூன், “நீ என்னை தெரியாம ஹக் பண்ணினது தான் உன்னோட பிராப்ளமா தன்ஷி?” என்றான் ஆழ்ந்த குரலில். 

அவனுக்கு என்ன பதில் அளிப்பது என்று புரியாமல் பார்த்தவளிடம், “நீ இப்படி இருந்தா என் பாடு ரொம்பவே திண்டாட்டம் தான். நம்ம கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு மாசம் கூட முழுசா இல்லை இன்னமும் நீ  இப்படியே இருந்தா எப்படி?” என்று மென்மையாய் அணைத்தவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு, 

“இப்போ நான் உன்னை தெரிஞ்சே ஹக் பண்ணி கிஸ் பண்ணிட்டேன்.. ஸோ நீ தெரியாம செய்ததை நினைச்சு வொரி பண்ண வேண்டியதில்லை..” என்று மென்னகையோடு சொல்லவும் திகைத்து போனாள்.

அடுத்த சில நொடிகளில், “எடுத்தாச்சு தன்ஷி., ஹே என்ன ஆச்சு?” என்று அவள் முன் சொடக்கிட்டவன், “அத்தை வந்துட்டாங்க போல..” என்றதும் தான் தாமதம் அவசரமாக அவனிடம் இருந்து விலகி ஓடியவள், “சொ.. சொல்லுங்க ம்மா..” என்றாள்.

“என்னாச்சு ஏன் இப்படி வேர்த்து கொட்டி போய் இருக்க?”

“ஒன்னுமில்லை ம்மா அவர்.. அவர் வந்திருக்கார் நீங்க சொல்லவே இல்லையே..”

“ஆமா தன்ஷி மாப்பிள்ளையும் வந்திருக்கார். ஆனா அதை சொல்றதுக்குள்ள நீ கட் பண்ணிட்ட.. மாப்பிள்ளை எங்கே?”

“அது.. அது ம்மா… அங்கே...” என்று அவள் வியர்வையை துடைக்க, “இங்கே இருக்கேன் அத்தை, ஆமா மாமா எங்கே காணோம்?...” என்றான் அர்ஜூன்.

“வாக்கிங் போயிருக்கார் மாப்பிள்ளை, நீங்க காஃபி எடுத்துக்கோங்க..” என்றவர், “நீ என்ன பண்ற? போ போய் மாப்பிள்ளைக்கு டிஃபன் ரெடி பண்ணு..” என்று தன்ஷி முகத்தில் இருந்த பதற்றத்தை கண்டு மகளை அங்கிருந்து அனுப்ப முயன்றார். 

“டிஃபன் எதுவும் வேண்டாம் த்தை..” என்ற அர்ஜூன் காஃபியை எடுத்து தன்ஷியிடம் கொடுத்தான். 

அவள் கப்பை வாங்காமல் அன்னையை பார்க்க, “நீங்க  சாப்பிடுங்க மாப்பிள்ளை அவ எப்பவும் என்னோடு தான்..” என்றார்.

“இருக்கலாம், ஆனா தன்ஷி திடீர்னு என்னை பார்த்ததுல கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டா.. காஃபி இப்போ அவளுக்கு தான் அவசியமா தேவை. ஷீ வில் ஃபீல் பெட்டர்..”

“இல்.. இல்லை நான் அம்.. அம்மாவோட” என்றாள் தன்ஷிகா தாய் பக்கம் நின்றுகொண்டு. 

“தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை, தன்ஷி உத்ரா மாதிரி கிடையாது.. உங்களை காலையில எதிர்பாராததுல டென்ஷன் ஆகிருப்பா.. நீங்க சாப்பிடுங்க, நீயும் எடுத்துக்கோ தன்ஷி..” என்றார். 

“தெரியும் அத்தை..” என்று தன்ஷியை பார்த்தபடி சொன்னவன் இன்னுமே அவள் இயல்பு நிலைக்கு திரும்பாததில், “நான் ஆரியை பார்த்துட்டு வரேன்..” என்று நண்பனின் அறைக்கு சென்றான்.

அறையை திறந்து சென்றவன் வேதாந்த் இல்லாததை கண்டு அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தபடி நண்பனுக்கு அழைத்தான். 



சென்னை மாநகரம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த அதிகாலை வேளையில் புறநகர் பகுதியில் சுற்றிலும் முட்புதர்களால் சூழப்பட்டு இருந்த மைதானத்தில் போலீஸார் குவிக்க பட்டிருந்தனர். 

“ஸார் நீங்க சொன்ன மாதிரி ஃபாரன்சிக் ஆட்களுக்கு கால் பண்ணியாச்சு.. அடுத்து?” என்று தர்ஷன் கேட்க மறுபுறம் என்ன சொல்லப்பட்டதோ அவசரமாக நுழைவு வாயிலுக்கு சென்றான். 

அதிகாலை வேளை என்பதால் அதிக கூட்டமில்லை. இருந்தாலும் தடயம் எதுவும் அழிந்து விடக்கூடாது என்பதால் குற்றம் நடைபெற்ற மைதானத்திற்கு பல அடி தொலைவிலேயே பேரிகார்ட் அமைக்கப்பட்டு இருந்தது. 

மற்ற போலீசாரோடு தர்ஷன் நுழைவு பகுதிக்கு வர அங்கே கவிழ்ந்திருந்த அமைதியை கிழித்துக்கொண்டு வந்து நின்றது போலீஸ் ஜீப். 

கான்ஸ்டபிள் ஓடி சென்று கதை திறக்க கம்பீரமாக இறங்கினான் நம் நாயகன் ஏசிபி வேதாந்த் ஆர்யன். அவன் உத்தியோகத்திற்கு ஏற்ற உடல் அமைப்பு, மிடுக்கு, தோரணையோடு, மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறம் கொண்டு இருந்தான். 

வேதாந்துக்காகவே காத்திருந்த தர்ஷனும் இன்னப்பிற காவலர்களும் அட்டென்ஷனில் நின்று அவனுக்கு சல்யூட் வைக்க அதை ஏற்ற படி கண்களில் இருந்த குளிர் கண்ணாடியை கழற்றிய வேதாந்த், “என்ன ஸ்டேட்டஸ் தர்ஷன்?..” என்றான்.

“ஸார்… சம்பவம் ரொம்ப க்ரூரமா இருக்கு…” என்றான் சற்றே குரல் தாழ்த்தி.

பல அடி தொலைவில் முட்புதருக்கு அருகில் தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேர்த்து கொண்டிருக்க அவர்களை நோக்கி வேகமாக நடந்த வேதாந்த்தின் கேள்விகளுக்கு பதில் அளித்தபடி மற்றவர்கள் அவனை தொடர்ந்தனர்.  

“ஸார் மோட்டிவ் ஆஃப் மர்டர் இப்போ வர சரியா தெரியல சம்பந்தப்பட்ட ஆளுங்க எல்லாருமே அப்ஸ்கான்ட்…”

“எனி ஐவிட்னஸ்?” என்ற வேதாந்தின் பார்வை கூர்மையாக சுற்றுபுறத்தை அலசியது. 

“ஸார் மர்டர் நடந்து பல மணி நேரமாகி இருக்கும் போல.. எக்ஸாக்ட் டைம் தெரியலை பட் மிட் நைட் நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால மர்டரை நேரில் பார்த்தவர்கள்னு யாரும் இல்லை.. பட் விக்டிமை முதல்ல பார்த்தவர் சொன்னதை வைத்து பார்க்கிறப்போ அவங்க இந்த ஏரியால விளையாட ஆரம்பிச்சு இரண்டு வாரம்  தான் இருக்கும்…” 

“எல்லாருமே ஃப்ரெண்ட்ஸ். பொதுவாவே சாயங்காலம் வரவங்க நைட் வரையிலும் அங்க இருப்பாங்களாம். விளையாடி முடிச்சதும் சரக்கடிக்க ஆரம்பிச்சுடுவாங்களாம். பக்கத்துல இருக்கிற டீக்கடையில் விசாரிச்சப்போ தெரிஞ்சது..”

“சரக்கடிச்சாலே சில நேரம் வாய் தகராறு ஆரம்பிக்குமாம் அது கை தகறாராகவும் மாறுமாம். அப்புறம் அவங்களே இரண்டா பிரிஞ்சு சமாதானமாகி கிளம்பிடுவாங்க…”

“பட் நேத்து அது கொலையில முடிச்சுருக்கு” என்று நிலவரத்தை சொன்னான் தர்ஷன். 

“மொத்தம் எத்தனை பேர் தர்ஷன்?” 

“விக்டிம்மோடு சேர்த்து மொத்தம் ஏழு பேர்..” 

“அவங்கள்ல ஒருத்தரை கூடவா யாருமே பிடிக்கலை..”

“ஸர் ஆல்ரெடி சொன்ன மாதிரி தண்ணி அடிச்சுட்டு இருந்தப்போ கையில் கிடைச்ச பாட்டிலை உடைச்சு கொன்னு இருக்காங்க..”

“ஸோ இது ப்ரீபிளான்ட் மர்டர் இல்லை.. யாருமே பார்க்கலையா?”

“எஸ் ஸர், டீக்கடைகாரரும் கடை சாத்துறதுக்கு முன்னாடி அவங்களுக்குள்ள ஏதோ வாக்குவாதமானதை பார்த்தார் ஆனா வழக்கம் போல அவங்களுக்குள்ளவே அடிச்சுக்கிட்டு கிளம்பிடுவாங்கன்னு இருந்திருக்கார்..” என்று அவனுக்கு தேவையான தகவலை கொடுத்தான்.

“ஓகே ஃபாரன்சிக் ரிப்போர்ட் வந்தாச்சா?”

“இன்னும் இல்லை ஸர்..”

“அப்ஸ்கான்ட் ஆனவங்களை தேட டீம் அனுப்பியாச்சா தர்ஷன்…”

“அனுப்பிட்டேன் ஸர்..”

“விக்டிமை விட்னஸ் பண்ணினவர் எங்கே? மற்றங்களை அடையாளம் காட்டினாரா? எனி சிசிடிவி ஃபுட்டோஜ்?”

“ஸர் இந்த ஏரியாவுல மொத்தம் ஆறு கேமராஸ்.. அண்ட் ஸரவுண்டிங்ல முப்பத்தி ஆறு இருக்கு… தீபக் & சுந்தரோட டீம் ஃபுட்டேஜ் எடுக்க போயிருக்காங்க…”

“ஓகே!!” என்றவன் கொலை செய்யப்பட்ட நபரை முதலில் பார்த்தவரிடம் தன் விசாரணையை தொடங்கினான். 

பின் உடலை போஸ்ட்மாற்றத்திற்கு அனுப்ப சொல்லி விட்டு ஃபாரன்சிக் டீமோடு பேசிக்கொண்டு இருந்தவனுக்கு அழைப்பு வந்தது. 

சற்று ஒதுங்கி வந்து நண்பனின் அழைப்பை ஏற்றான்.

******************

அதேநேரம் “நீங்க சொல்றது நிஜம் தானே? பேச்சு மாற மாட்டீங்களே என்னால உங்களை மறக்க முடியாது சஞ்சீவ். அதே சமயம் அப்பா அம்மாவை எதிர்த்துகிட்டு கல்யாணமும் செய்ய முடியாது. ஒரே ஒரு முறை அப்பா கிட்ட வந்து பேசுங்க.. நீங்க சொன்னா கண்டிப்பா அவர் புரிஞ்சுப்பாரு..” என்று நா தழுதழுக்க பேசிய மிருதுளாவின் விழிகள் கலங்கி போயிருந்தது.

“இனிமேல் இப்படி காலேஜ் கேண்டிலுக்கு வர வேண்டாம். என்னோட ஃபிரண்ட்ஸ் ப்ரொஃபஸர்ஸ் யாராவது பார்த்தா எனக்கு பிரச்சனையாகும்.. காலேஜ் முடிய இன்னும் நாலு மாசம் தான் இருக்கு அதுவரைக்கும் நாம ஃபோன்ல மட்டும் பேசிக்கலாம் ப்ளீஸ்.. என்று கெஞ்சலாக சொன்னதற்கு அவன் சம்மதிக்கவும் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. 

“அப்பா அம்மா ஒத்துக்கிட்டாலும் என் அண்ணாங்க  ஒத்துப்பாங்களான்றது சந்தேகம் தான் அதனால அவங்க ஏதாவது கோபமா பேசினாலும் நீங்க அவசரப்பட்டு பேச வேண்டாம், ப்ளீஸ்..” என்றதற்கு அவன் பார்வையின் மாற்றத்தை கண்டு, 

“என்ன பார்க்கறீங்க உங்க கோபத்தை பத்தி எனக்கு தான் தெரியும்.. அப்பா உங்களை விட கோபக்காரர் நீங்க ரெண்டு பேரும் நேர்ல பார்க்கும் போது என்னாகுமோன்னு  எனக்கு பயந்து வருது. ஹார்ட் எல்லாம் எவ்ளோ படபடன்னு இருக்கு தெரியுமா?...” என்றதற்கு “எங்கே நான் பார்க்கிறேன்” என்று சஞ்சீவ் சொல்லவும் பதறி,   

“என்ன பண்றீங்க? அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை…” என்று சிவந்த முகத்தோடு சொன்னவள்,  

“உங்க வீட்ல பரவால்ல எல்லாருமே நம்ம காதலை ஏத்துக்கிட்டாங்க ஆனா எங்க வீட்ல கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம். ஸோ அவசரபட வேண்டாம். அப்பா நல்ல மூட்ல இருக்கிறப்போ சொல்றேன் அப்போ பேசுங்க.. முக்கியமா நான் வீட்ல இருக்கும் போதே வந்து பேசுங்க சஞ்சீவ் நான் இல்லாத போது வர வேண்டாம்..”

“உங்களை அப்பா சரியா புரிஞ்சுக்காம போனாலோ அப்பா கிட்ட நீங்க கோபத்தை காமிச்சுட்டாலோ என்னால தாங்கிக்க முடியாது. எனக்கு நீங்க இரண்டு பேருமே முக்கியம் ஒருத்தருக்காக ஒருத்தரை இழக்க முடியாது சஞ்சீவ்..” என்றாள் க்ருதி மிருதுளா நெஞ்சம் வெதும்ப.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17