வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

தீராத காதல் தொல்லையோ?!... 2.2



அது நகரின் மையத்தில் அமைந்திருந்த டப்பிங் ஸ்டூடியோ. குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்குள் மைக் முன்னே நின்றிருந்தாள் க்ருதி மிருதுளா.

“உங்களை அப்பா சரியா புரிஞ்சுக்காம போனாலோ அப்பா கிட்ட நீங்க கோபத்தை காமிச்சுட்டாலோ என்னால தாங்கிக்க முடியாது. எனக்கு நீங்க இரண்டு பேருமே முக்கியம் ஒருத்தருக்காக ஒருத்தரை இழக்க முடியாது சஞ்சீவ்..” என்று மிருதுளா நெஞ்சம் வெதும்ப மெல்லிய குரலில்  உணர்வுபூர்வமாக பேசி முடிக்க திரையில் வந்த காட்சியும் நிறைவு பெற்றது. 

“டேக் ஓகேவா ஸர்?.. இல்லை ஒன்மோர் போகலாமா?” என்றிட “பெர்ஃபெக்ட் மிருதுளா..” என்று அவளை நோக்கி ஆள் கட்டி விரலை உயர்த்திய சவுண்ட் இன்ஜினியர், “அடுத்தது போயிடலாம்..” என்றார்.

 “டூ மினிட்ஸ் ஸர்..” என்றவள் வெந்நீரை குடித்து விட்டு மீண்டும் மைக்ரோஃபோன் முன் நின்றாள். 

இப்போது மானிட்டரில் ஒரு அழகான கார்டூன் கேரக்டர் ஓடிக்கொண்டு பேசும் காட்சி வந்தது.

சிக்னல் கொடுக்கப்பட்டதும், க்ருதி மழலை கேரக்டரின் குரலைப் போலவே லேசாக மூச்சு வாங்க உற்சாகமாகப் பேச ஆரம்பித்தாள்.

“ஹாய் நண்பர்களே! இன்று நாம் ஒரு பெரிய சாகசத்திற்கு போகப் போறோம்! ரெடியா?” என்று கார்டூன் கேரக்டர் சிரிக்கும் காட்சிக்கு க்ருதி சின்ன சிரிப்பு குரலையும் கொடுத்தாள்.

அதில் முக்கிய கதாபாத்திரத்தில் அவள் பேசுவதால் தொடர்ந்து இருபது நிமிடங்களுக்கு அவள் அத்தனை காட்சியையும் முடித்திட, “டேக் ஓகே!” என்ற சப்தம் வரவும் க்ருதி மிருதுளா சிரித்தபடி ஹெட்போனை கழற்றி, “இந்த கேரக்டர் ரொம்ப க்யூட் ஸர்!” என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

“நான் தான் சொன்னேனே இந்த கேரக்டருக்கு உன்னோட வாய்ஸ் தான் பெர்ஃபெக்டா பொருந்தும்னு.. நீ தான் சந்தேகத்தோடவே இருந்த பட் ரொம்ப நல்லா பண்ணின மிருதுளா..” என்றவர், 

“இவ்ளோ சீக்கிரம் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் மா.. இந்த சீரியல் ஹீரோயின் கால்ஷீட் சொதப்பினதால நைட்டோட நைட் ஷூட் முடிச்சு காலையில பத்து மணிக்கெல்லாம் டப்பிங் முடிக்கணும்னு சொல்லிட்டாங்க. அதனால தான் சீக்கிரம் வர சொன்னேன்.. உன் அப்பா ஒன்னும் சொல்லலையே?!…” 

“இருக்கட்டும் ஸர். நோ ப்ராப்ளம்! எப்படி இருந்தாலும் நான் மார்னிங் வந்து தானே ஆகணும். என்ன இன்னைக்கு கொஞ்சம் எர்லியா வந்திருக்கேன்… அப்பா எதுவும் சொல்லலை அவருக்கு காலேஜ் கட் பண்ணாம என்ன பண்ணினாலும் ப்ராப்ளம் கிடையாது..”

“நெக்ஸ்ட் ட்ராக் இப்போவே பண்ணிடலாமா ஸர்?”

“ஒன்னும் அவசரமில்லை. பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு அடுத்தது போகலாம் மிருதுளா..” என்று அவர் டாக்பேக்கில் சொல்ல ஹெட்ஃபோனை கழற்றி வைத்துவிட்டு வெளியில் வந்தாள்.

க்ருதி மிருதுளா, வாசுதேவன் - சௌந்தர்யாவின் ஒரே மகள். இருபத்தி இரண்டு வயது பாவை தற்போது சென்னையில் பிரபலமான பெண்கள் கல்லூரியில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள்.

சிறு வயது முதலே ‘க்ருதி மிருதுளா’ என்று அவள் தன்னை மற்றவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் அனைவரும் அவளை ‘கீர்த்தி’ என்று தான் புரிந்து கொள்வார்கள்.

‘கீர்த்தி இல்ல க்ருதி’ என்று அவள் திருத்தினாலும் அத்தனை சுலபமாக அவர்களால் நினைவு வைத்துக் கொள்ள முடியாது.

மீண்டும் ‘கீர்த்தி’ என்று தான் அழைப்பார்கள் அதனாலேயே கல்லூரியில் சேர்ந்தது முதலே யார் கேட்டாலும் “மிருதுளா” என்று தான் தன்னை அறிமுகம் செய்து கொள்வாள்.

க்ருதி தன் பேக்கை எடுத்துக்கொள்ள அதில் அதிகாலையே அவளுக்காக உத்ரா செய்து கொடுத்திருந்த பூரி மசாலா உடன் தயிர் வடையும் கனத்தது.

சிறு வயது முதலே அவளுக்கு தயிர் வடை என்றால் மிகவும் பிடித்தம். இது வாசுதேவன் ஏற்படுத்திய பழக்கம் தான். தாய் இல்லாத பிள்ளை என்பதால் மனைவியை இழந்த நொடியில் இருந்து இன்று வரையிலுமே ஒற்றை மகளை சுற்றி தான் அவர் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. 

பள்ளிப்பருவத்தில் அவளை ஒருமுறை தன் நண்பனின் கடைக்கு அழைத்து சென்றவர் அங்கே மிகவும் பிரசித்தி பெற்ற தயிர் வடையை வாங்கி கொடுத்தார். 

முதல் முறை உண்ட போதே க்ருதிக்கு அதன் சுவை மிகவும் பிடித்து போக அன்று முதலே அடிக்கடி அவரை தொல்லை செய்து அங்கே சென்று விடுவாள். 

மகளின் தயிர் வடை மீதான அலாதி விருப்பத்தை அறிந்த கிரிஜா தானே ‘எத்தனை நாள் கடையில் செய்யறதை சாப்பிட கொடுப்பீங்க? பிள்ளை உடம்புக்கு என்னாகும்? நான் எதுக்கு இருக்கேன்?’ என்று மச்சினனை கடிந்து கொண்டவர்,

‘ஏன்டா மித்து மா நீ கூடவா அம்மாவுக்கு சொல்ல மாட்டா?’ என்று மகளிடமும் கேட்டார். 

ஆம் கிரிஜா என்றுமே க்ருதியை மச்சினன் மகளாக பார்த்தது கிடையாது. யார் கேட்டாலும் தனக்கு நான்கு பிள்ளைகள் என்று தான் சொல்வார். அது மட்டுமல்லாமல் சிறுவயது முதலே மிருதுளாவையும் தன்னை “அம்மா” என்று அழைக்க சொல்லி பழக்கி இருந்தார். 

மகளுக்கு பிடித்த காரணத்திற்காகவே வாசுதேவனின் நண்பரிடம் பக்குவம் கேட்டு தயிர் வடையை அவளுக்கு பிடித்த வகையில் சமைக்க கற்றுக்கொண்டார். அவரிடம் இருந்து உத்ராவும் க்ருதி மிருதுளாவுக்காக மட்டுமல்ல தன் பிள்ளைகளுக்காகவும் கற்றுக்கொண்டாள்.

ஆம் க்ருதியை போலவே பிள்ளைகளுக்கும் அதன் சுவை பிடித்துப்போனது. பிள்ளைகளோடு சேர்த்து அவள் தம்பிக்கும் க்ருதியின் பிடித்தமான தயிர் வடை அலாதி பிரியமாகி போனது தனி கதை. 

இன்று அதிகாலை எழுந்து அவளுக்காக சமைத்து வைத்திருப்பதை கண்டவள், “எதுக்கு அண்ணி உங்களுக்கு சிரமம்? எங்க ஸ்டூடியோவிலேயே கேன்டீன் இருக்கு இல்லனா பக்கத்துல ஹோட்டல் இருக்கு அங்கே சாப்பிட்டுக்க மாட்டேனா?” என்று மிருதுளா சொன்ன போதும், 

“கஷ்டம்னு நான் சொன்னேனா? பேக் பண்ணினதை அமைதியா எடுத்துட்டு போ..” என்று அதட்டலோடு கொடுத்து அனுப்பியதை பிரித்து சாப்பிட தொடங்கினாள். 

அவள் உணவை முடிக்கும் வேளையில் அங்கே வந்து சேர்ந்தனர் மற்ற வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட்ஸ். 

“ஹேய் காங்கிரட்ஸ் மித்து..” என்று உள்ளே வந்தவர்கள் அனைவரும் கை தட்டி ஆர்ப்பரித்து அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

“எதுக்கு இப்போ கங்கிராட்ஸ் பண்றீங்க?” என்று புரியாமல் புன்னகையோடு அவர்களைப் பார்த்தாள்.

“எங்களில் ஒருத்தி ப்ளேபேக் சிங்கர் ஆகப் போறது சாதாரண விஷயமா என்ன?” என்றாள் தேஜாஸ்ரீ.

“என்ன சொல்ற தேஜு? யார் சிங்கராக போறா?”

“வேற யார்? நீதான்!!”

“எனக்கே தெரியாம நான் சிங்கர் ஆக போறேனா?” என்றாள் சிரிப்போடு.  

“ஏய் இன்னும் டைரக்டர் உன்கிட்ட விஷயத்தை சொல்லலையா?” என்றாள் ஒருத்தி.

“என்ன விஷயம்? கொஞ்சம் புரியிற மாதிரி தான் சொல்லுங்களேன்” என்றதுமே மூவரில் மூத்த டப்பிங் கலைஞரான லதா மிருதுளா தற்போது கதாநாயகிக்காக பேசிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சீரியலை சொல்லி “இதுல நீ போன வாரம் ஹீரோயின்காக ஒரு பாட்டு பாடி இருந்தியே ஞாபகம் இருக்கா?” என்றார்.

“ஆமா அதுல ஹீரோயின் க்ளாசிக்கல் சிங்கிங் முடிச்சிருப்பா, பூஜை பண்ணும் போது பாடுற மாதிரி ஒரு சாங் பாடினேன் அதுக்கு என்ன?”

“நம்ம இசை வேந்தன் வீட்ல அந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பாங்களாம். ஒரு நாள் எதேச்சையா இவரும் அதை பார்த்து இருக்கிறார். அதுல உன்னோட வாய்ஸ் அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சோ உடனே உன்னை பற்றி விசாரிக்க சொல்லி இருக்கார்..”

“ரியலி?! இதெல்லாம் எப்போ நடந்தது?” என்ற க்ருதியும் முறையாக சங்கீதம் பயின்றவள் தான். பள்ளி, கல்லூரியில் நடைபெறும் விழாக்கள், போட்டிகள் வீட்டில் குடும்ப நிகழ்வுகளில் பாடுவதோடு சரி. 

பலர் அவளுடைய குரலை பாராட்டி சினிமாவிற்கு முயற்சிக்க சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் க்ருதி சினிமாவில் பாட வேண்டும் என்று நினைத்ததும் கிடையாது அதற்கு அவளுக்கு பெரிதாக நேரம் இருந்ததும் கிடையாது. 

ஏழு வயது முதலே டப்பிங் செய்ய தொடங்கி விட்டதால் கடந்த 15 வருடங்களாக படிப்பு ஒருபுறம் டப்பிங் ஒரு புறம் சங்கீதம் மற்றொரு புறம் என்று அவளுக்கு நேரம் சரியாக இருக்கும். 

அவளோடு பணிபுரிந்த சிலர் பள்ளிப்படிப்பு முடிந்ததுமே இதை முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டு கரெஸில் கல்லூரி படிப்பை முடிக்க யோசனை சொன்னார்கள்.. ஆனால் குடும்பத்தினர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

எதனாலும் படிப்பு தடைப்படக்கூடாது என்பதில் வாசுதேவன் மட்டுமல்ல மற்ற அனைவருமே உறுதியாக இருந்தனர். அதோடு திறமைக்கு எப்போதும் வாய்ப்புகள் குறையாது அதனால் இப்போது போலவே கிடைக்கும் நேரத்தில் டப்பிங் செய்தால் போதும் என்று சொல்லி விட்டனர். 

அவளுக்கு மதியநேர கல்லூரி என்பதால் காலையில் பெரும்பாலும் மூன்று நான்கு மணி நேரத்தில் டப்பிங் முடிந்து கல்லூரிக்கு சென்று விடுவாள் இரவில் படிப்பதற்கான நேரமும் கிடைக்கும். 

சினிமாவில் ஒன்று இரண்டு படங்களுக்கு டப்பிங் செய்திருக்கிறாள். சீரியல் போல இல்லாமல் இவர்கள் சொல்லும் நேரத்திற்கு வர வேண்டியதாகி இருக்கும் ஒன்று இரண்டு முறை கல்லூரிக்கு விடுப்பு எடுத்தும் சென்று பேசிக் கொடுத்து இருக்கிறாள். 

கல்லூரி படிப்பை முடிக்கும் வரை படங்களுக்கு பேச வேண்டாம் என்று வாசுதேவன் திட்டவட்டமாக சொல்லி விட்டார். 

ஆனால் திரைப்பட வாய்ப்பு என்பதும் வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்டிகளுக்கு அத்தனை சுலபமாக கிடைத்து விடாது. அனைத்துமே மிருதுளாவிற்கு அவள் தேடி சென்ற வாய்ப்புகள் கிடையாது.. அவளை தேடி வந்த வாய்ப்புகள் தான்! அது போல தான் இப்போது பாடகியாக போவதும். 


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17