வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - ஃபைனல் 2

 


இன்டர்வியூவிற்கு வந்த ரிஷி தன் மனதிலிருந்து பேசிவிட்டு கிளம்ப மகா கண்ணீரோடு தலையை மேஜையில் கவிழ்த்தாள். 


ரிஷி இல்லாத ஒரு வாழ்விற்கு தன்னை தானே தயார்படுத்தி கொண்டவள் அவனை பிரிந்து வந்த இத்தனை நாளும் ரிஷியின் நினைவுகளை ஒதுக்கி ‘தானும் குழந்தைகளும் மட்டுமான உலகில்’ தன்னை பொறுத்தி கொள்ளும் முயற்சியில் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தாள். 


அவள் முயன்றால் போதுமா குழந்தைகள் அதற்கு விட வேண்டுமே?! 


அனைத்து வேலைக்கும் ஆள் போட்டு குழந்தைகளை பார்த்து கொள்ள அவள் பெற்றோர் உடன் இருந்ததில் மகா தினமும் அலுவலகத்திற்கு சென்று வந்தாள்.


சில மாதங்களுக்கு முன்னர் தான் வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்து அலுலவத்திற்கு செல்ல ஆரம்பித்தாள். இப்போது மீண்டும் பணியின் தன்மையை மாற்ற வேண்டுமா?! என்று மகா சோர்ந்து போயிருந்த போது தான் பெற்றோர் துணைக்கு வந்தது. 


அவர்களை அங்கே கண்ட மகாவிற்கு பெரும் அதிர்ச்சி!! ‘யாருடைய தொந்தரவும் இல்லாமல் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போனவன்’ என்ன காரியம் செய்து வைத்திருக்கிறான் என்று அவன் மீது தான் கோபம் எழுந்தது.


ஆனால் அவள் கோபத்திற்கு அவசயமில்லாத வகையில் அவள் பெற்றோர் நடந்து கொண்டனர். 


“அப்பா கிளம்பும் போதே உனக்கு டிஃபன், லன்ச் எடுத்துட்டு அவரோடவே கிளம்பி வந்துடுறேன்… சுமதி குழந்தைகளை அனுப்பிட்டு வரேன்னு சொல்லி இருக்கா..”


“காயத்ரி வீட்டை பார்த்துகிட்டு பிள்ளைகளை டியூஷன் அனுப்பிடுவா நைட் நாங்களே சமைச்சு வச்சுடுறோம், அண்ணன் வந்து கூட்டிட்டு போவான்..” என்ற பாக்கியலட்சுமி தன் போக்கில் குழந்தைகளின் அழுக்கு துணிகளை சேகரிக்க தொடங்கினார்.  


“கொஞ்ச நாளைக்கு தான் இந்த ஏற்பாடு. நைட் மட்டும் உன் ஃப்ரெண்ட் வச்சு குழந்தைகளை சமாளிச்சுடு இல்லை உனக்கு சம்மதமா இருந்தா நான் கூட்டிட்டு போறேன்.. அதுக்கப்புறம் நான் உன்னோடவே இருப்பேன்..” என்றதில் கண்ணீரோடு தாயை கட்டிக்கொண்டாள்.

“கஷ்டபடுத்துறேனா ம்மா?” 

“இந்த கேள்வியை நான் தான் கேட்கணும்…” என்றார் பாக்கியாவும் கண்ணீரை உள்ளிழுத்து.


“நான் பார்த்துப்பேன் ம்மா. உங்களுக்கு எதுக்கு கஷ்டம்?”


“என் பொண்ணை அனாதையா விட்டுட்டு இருக்கிறதை விட வேற எதுவும் கஷ்டமில்லை..” என்றவர் அதற்கு பிறகு மகாவிற்கு துணையாக, பக்கபலமாக இருந்தனர்.


அவளுக்கு சங்கடம் கொடுக்கும் வகையில் பேசுவதோ நடந்து கொள்வதோ கிடையாது. ஆனால் குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவளே ரிஷியை ஒதுக்க நினைத்தாலும் அவர்களின் திருமண புகைப்படத்தில் இருப்பவனை “அப்பா” என்று அழைத்து நியாபக படுத்தி கொண்டே  இருந்தனர்.  


இதுவே ஓரளவு வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் எடுத்து சொல்லி புரிய வைத்துவிடலாம். 


இவர்களை எப்படி கையாள்வது என்று புரியாமல் அவர்களின் புகைப்படத்தை எடுத்து மறைத்து வைத்துவிட அதற்கும் அடம் பிடித்து அவன் புகைப்படத்தை எடுத்து கொடுக்கும் வரை அழிச்சாட்டியம் செய்தனர்.


இதனாலேயே ‘குழந்தைகளின் உரிமையை, நியாயமாக கிடைக்க வேண்டிய தந்தை அன்பை தடுக்கிறோமோ?!’ என்ற எண்ணம் அவளை வாட்டி வதைத்தது.


அதற்கு மேலும் வலு சேர்ப்பது போல ‘அவளுக்காக அவளை தேடி வந்த ரிஷி, அவன் கடந்து வந்த பாதையை பற்றி அவன் மூலமாக அறிந்தது, அவன் கேட்ட இரண்டாம் வாய்ப்பு, அவளோடு இருக்க ஆஃபிஸ் கூட்டும் வேலையை கூட செய்வேன்’ என்றதனைத்தும் அவளை நிலை கொள்ள விடாமல் அலைகழித்தது. 


அவனை பற்றி யோசித்தாலே பலநேரம் தான் பலவீனப்படுவதை உணர்ந்த மகாவால் அதற்கு மேலும் தன் எண்ணங்களை கட்டுபடுத்த முடியவில்லை. 


அவசர விடுப்பு எடுத்து கொண்டு மனதை மாற்ற வசுந்தராவின் குழந்தையை பார்க்க சென்றாள்.


அவள் மருத்துவமனைக்கு சென்ற நேரம் வசுந்தரா கண்ணீரும் கதறலுமாக பேசி கொண்டிருந்தாள். மற்றவர்கள் அவளை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.


அதை கண்ட மகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஜெய் கையில் இருந்த குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.


“என்னாச்சு ஜெய்? குழந்தைக்கு ஏதாவது பிரச்சனைன்னு சொன்னாங்களா? வசு எதனால் இப்படி அழுதுட்டு இருக்கா?” 


“ப்ச், எப்படி சொல்றது மகா?! சந்தோஷத்தை முழுசா அனுபவிக்க விடாம ஆண்டவன் ஏன் இப்படி அவளை சோதிக்கிறான்னு தெரியல..” என்று கண்கள் கலங்க அவளை பார்த்தவள், 


“வசுவோட அப்பா அவ பிறந்த அன்னைக்கே ஆக்ஸிடென்ட்ல இறந்தது உனக்கு சொல்லி இருக்கேனே, ஞாபகம் இருக்கா?!...” என்றாள்.


“ஆமா..”


“வசு கன்சீவ் ஆனதுல இருந்தே எங்க அவளுக்கும் தன் அம்மா போலவே நடக்குமோன்னு ரொம்ப பயம். அதனால அவளோட ஹஸ்பண்டை ஒரு வாரம் முன்னாடியே லீவ் போட சொல்லி தன் பிரசவத்தப்போ பக்கத்துலயே இருக்கணும்னு கண்டிப்பா சொல்லிட்டா..”


“...”


“அவளை இங்கே கொண்டு வந்து சேர்க்கும் போது கூட உடன் இருந்தவர் ஆஃபிஸ்ல இருந்து எமெர்ஜென்சி கால் வரவும் இவ லேபர் வார்ட்ல இருந்ததால சீக்கிரம் வந்துடலாம்னு கிளம்பிட்டார்…”


“ஏன் லேபர் வார்டுக்கு அவர் போகலையா?”


“இல்லை, பெரியவங்க ஒத்துக்கலை. டெலிவரி முடிஞ்சு இவ ரூமுக்கு திரும்பினதும் அவரை தான் முதல்ல விசாரிச்சா, ஆனா நேரம் குழந்தை பிறந்தது தெரிஞ்சதும் அவர் வேகமாக வந்ததுல ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு..”


“என்னடி சொல்ற?”


“ஆமா, பட் பயப்படற அளவுக்கு ஒன்னுமில்லை. கார்ல வந்ததால தலையில லைட்டா அடிபட்டிருக்கு. ஏற்கனவே என் அப்பா அண்ணன், மாமா அங்கே போயிருக்காங்க ஆனா இவ இப்போவே அவரை பார்த்தாகனும்னு ஆர்பாட்டம் பண்ணிட்டு இருக்கா..”


“இவ்ளோ பயம் இருக்கிற அவ கிட்ட ஏன் சொன்னீங்க?”


“நாங்க சொல்லலை. ஆனா அவளோட மாமியார் விஷயம் தெரிஞ்சதும் அழுது ஆர்பாட்டம் செய்ததுல இவளுக்கு தெரிஞ்சுடுச்சு..” 


“நார்மலா சி - செக்ஷனா?” என்ற மகாவிற்கு வசுவின் கதறலும், வேதனையும் நெஞ்சை பிசைந்தது.


“நார்மல் டெலிவரி தான்! ஆனாலும் பிரசவமான பெண் இத்தனை உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு நர்ஸ் சொன்ன போதும் அவ கேட்கிற நிலைமையில இல்லை.. போதாததுக்கு அவ மாமியார் வீட்டு பக்கம் யாரோ குழந்தை பிறந்த நேரம்னு சொல்லவும் ஒரே அழுகை!”


“இப்போ ப்ளீடிங் வேற அதிகமாகிடுச்சு மகா. குழந்தைக்கும் பால் கொடுக்க மாட்டேங்கிறா, ரெஸ்ட் எடு அங்கிருந்து வீடியோ கால் பண்ணி பேச வைக்கிறோம்னு எவ்ளோ சொல்லியும் கேட்கலை..” என்று சொல்லி கொண்டிருந்த நேரம் வசுந்தரா மயங்கி சரிந்திருந்தாள்.


“பிரசவத்தப்போ தான் சிக்கல்னு யாரு ம்மா சொன்னா எத்தனையோ பெண்கள் பிரசவத்துக்கு பிறகு கூட சாவை தொட்டு மீண்டு இருக்காங்க.. குழந்தை பெத்தவள் கிட்ட எதை சொல்லணும் சொல்ல கூடாதுன்னு கூடவா தெரியாது..” என்று செவிலியர்கள் அனைவரையும் திட்டி கொண்டிருக்க வசுவை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து சென்றனர். 


அதை கண்ட மகாவிற்கு சர்வமும் ஒடுங்கி போனது. உடனே அவளுக்கு எதுவும் ஆக கூடாது என்று கண்களை மூடி கடவுளை வேண்டிக்கொண்டவள் நொடியும் தாமதிக்காமல் ரிஷியை தேடி வந்து விட்டாள்.


நடந்ததை கணவனிடம் விவரித்தவள், “அவளோட அப்பா இல்லாமல் போன மாதிரி தன் குழந்தைக்கு அப்பா இல்லாமல் போயிட கூடாது என்பது தான் அவளோட அன்றாட வேண்டுதலாம்..”

“ஏன் அப்படி?”

“தெரியலை, அவளுக்குள்ள இனம் புரியா ஒரு பயம். விஷயம் தெரியவும் குழந்தைக்கு பால் கூட கொடுக்கலை பாவம் அவனுக்கு வேற ஒரு அம்மா தான் ஃபீட் பண்ணி இருக்காங்க..”


“நல்லவேளை அவருக்கு லைட்டா தான் அடி பட்டிருக்கு ஹாஸ்பிட்டல்ல ட்ரீட் பண்ணிட்டு இரண்டு மணி நேரத்துல அவளை பார்க்க வந்துட்டாராம்..”


“வாழ்க்கை யாருக்கு எப்போ எதை வச்சு காத்திருக்கும் என்று யாராலையும் கணிக்க முடியாது ரிஷி! ஒருவேளை வசு பயந்த மாதிரி அவருக்கு ஏதாவது நடந்திருந்தா அவளும் இல்லாமலே போயிருப்பா ரிஷி!! 


“அவங்க இப்போ எப்படி இருக்காங்க?”


“கொஞ்சம் விட்டிருந்தா கிரிட்டிகலாகி இருக்குமாம் பட் இப்போ ப்ளீடிங் கண்ட்ரோல் ஆகிடுச்சாம். அவரை தன் எதிரே பார்க்கவும் தான் அவளுக்கு உயிரே மீண்டிருக்கு! ஆனாலும் விஷயம் தெரிஞ்சதுல இருந்து அவ இருந்த நிலைமையை நீங்க பார்த்திருக்கணுமே..” 


“கடவுளே!! நிஜமா யாருக்குமே இப்படி ஒரு சூழல் வரக்கூடாது ரிஷி, ரொம்பவே கொடுமையானது..” என்றவள், “இதனால தானே நீங்க எனக்கு உங்களோட ஆக்ஸிடென்ட் பற்றி தெரிய விடாம செய்தீங்க..” என்று கண்ணீர் மல்க கணவனை பார்த்தாள்.


ரிஷி மெளனமாக தலையசைக்கவும், “நீங்க சாவின் விளிம்பை தொட்டு மீண்டது ஒருவேளை அன்னைக்கு எனக்கு தெரிஞ்சிருந்தா நானும் என்னாகி இருப்பேன் என்று என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை..” 


“இன்னைக்கு நான் ஹாஸ்பிட்டல்ல பார்த்த காட்சி என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாதது. கிட்டத்தட்ட நானுமே அந்த நிலையில் இருந்திருக்க வேண்டியவன்னு நினைத்த போதே எனக்கு உடம்பே நடுங்கி போச்சு..” என்று ரிஷியின் தோளில் சாய அவன் கரம் மனைவியின் தோள்களை சுற்றி படர்ந்தது.


“லைஃப் ஆல்வேஸ் கிவ்ஸ் எ செகேன்ட் சான்ஸ் டு தோஸ் ஹூ டிசர்வ் இட்!!” (யாரெல்லாம் தகுதியானவர்களோ அவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை இரண்டாவது வாய்ப்பை கொடுக்கிறது) எனக்கு கிடைச்சிருக்கும் இந்த இரண்டாவது வாய்ப்பை நான் மிஸ் பண்ண விரும்பலை ரிஷி..” 


“அதோடு தப்பை திருத்திக்கிட்டவங்களை வாழ அனுமதிக்கனுமே தவிர்த்து செய்த தப்பை சுட்டி காட்டி குத்தி கிழிக்க கூடாது. நிச்சயம் அது மனுஷ தன்மையே கிடையாது!! இனியும் உங்களை தண்டிச்சு என்னோட மனுஷ தன்மையை இழக்க நான் தயாரா இல்லை..”


“அன்னைக்கு நான் இருந்த மனநிலையில் உங்க கிட்ட நார்மலா நடந்துக்கலை. ஆனால் அதை நீங்க சரியா புரிஞ்சுக்கிட்டதுல எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?!


இப்படி எந்த விளக்கமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் என்னை புரிஞ்சுக்க கூடிய ஒரு ஹஸ்பண்ட் தான் என்னுடைய அதிகபட்ச எதிர்பார்ப்பு! அதற்கு கொஞ்சமும் குறையாமல் இப்போ நீங்க இருக்கீங்க..” என்று மகிழ்வோடு கணவனை பார்க்க ரிஷியின் அதரங்கள் இன்னும் அழகாய் விரிந்தது.



Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17