வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - ஃபைனல் 3



“என்ன நான் மட்டும் தான் பேசிட்டு இருக்கேன்.. நீங்க ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்கீங்க?”


“நான் அமைதியா இருக்கறதா யார் சொன்னா?” என்றவன் அவள் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்து, “நிஜமாவே இப்போ நான் இருக்கிற சந்தோஷத்தை விவரிக்க என்கிட்ட வார்த்தை இல்லை..”


“சொல்ல போனா அதீத சந்தோஷமே என்னை சாகடிச்சுடுமோன்னு இருக்கு லச்சு..” என்று சொல்ல மகா பட்டென அவனிடம் இருந்து விலகினாள்.


“என்ன?”


“சந்தோஷமான நேரத்துல என்ன பேசறீங்க நீங்க?” என்று இதழ்களை மடித்து கொண்டு கேட்டவள் தன் கண்ணீரை கட்டுபடுத்த அரும்பாடு பட்டாள்.


“பாலை வனத்துல கடுமையான வெயிலில் வெந்து நொந்து தொண்டை வறண்டு சாவின் விளிம்பில் இருப்பவனுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தேவாமிர்தமா இருக்கும் ஆனா எனக்கு அமிர்தமே கிடைச்சிருக்கப்போ என் சந்தோஷத்தை எப்படி விவரிக்கன்னு தெரியலை லச்சு...” என்றவன் இமை ஓரம் கசிந்திருந்தது.


“ப்ளீஸ் ரிஷி, ஐ அண்டர்ஸ்டான்ட்!! பட் இன்னொரு முறை இப்படி பேசாதீங்க..” என்று அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டவள், “இந்த வயசுலேயே என்னை விட குழந்தைகள் உங்களை ரொம்ப மிஸ் பண்றாங்க தெரியுமா?!”


“இனி கண்டிப்பா என்னை விட்டு பிரிய மாட்ட தானே லச்சு?! இது கனவில்லையே?” என்றான். 


“இவ்ளோ இறுக்கமா கட்டிக்கிட்டு இருக்கேன் இன்னுமா நிஜம்னு நம்ப முடியலை..” என்று அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள், “வேணும்னா நீங்களே செக் பண்ணிகோங்க..” என்று கண் சிமிட்டினாள்.


“நானா?! நா.. நான் எப்படி?” என்றவனுக்கு இப்போது தலை கால் புரியாத நிலை. அதில் எங்கிருந்த அவள் பேச்சை சரியாக உள்வாங்குவது?!


“ஓகே, ரிலாக்ஸ்!! நான் இங்கே தான் இருக்கேன்.. இனி எப்பவும் இருப்பேன். அதை நீங்க ப்ராசஸ் பண்ணி மெதுவாவே என்னை நம்புங்க.. இப்போ நான் டின்னர் ரெடி பண்றேன்..” என்று சமையலறைக்கு சென்றவள் என்னென்ன இருக்கிறது என்று பார்த்தாள்.


ரிஷி இன்னுமே இருந்த இடத்தை விட்டு அசையாமல் நடந்ததை அசைபோட்டு கொண்டிருந்தான். 


உருளையை வேக வைத்து விட்டு சப்பாத்திக்கு மாவை பிசைந்து வைத்தவள் ப்ரிட்ஜில் இருந்த தோசை மாவை எடுத்து வைக்க, “என்ன செய்ய போற? எதாவது வாங்கிட்டு வரணுமா?” என்றான்.


“தக்காளியும் பன்னிரும் மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க..” என்றதில் ரிஷி கிளம்ப கதிரும் காயத்ரியும் குழந்தைகளோடு அங்கே வந்து சேர்ந்தனர். 


வீட்டில் இருந்த பழங்களை கொண்டு அவர்களுக்கு ஜூஸ் போட்டு கொடுக்க காயத்ரி அவள் உதவிக்கு வந்தாள்.


“என்னென்ன செய்ய போற மகா?” என்றவளிடம் சொல்ல சாம்பாருக்கு பருப்பை களைந்து போட்டாள் காயத்ரி. 


காயத்ரி முதலில் தனக்கான தொல்லையாக மகாவை பார்த்தவள் அன்று தங்கள் வீட்டில் இருந்து ரிஷியோடு கிளம்பியவள் புகுந்த வீட்டிற்கு செல்லாமல் தனியாக வேறு வீட்டிற்கு சென்றதில் சற்று அதிர்ந்து தான் போனாள். 


அதன் பிறகே ஒரு பெண்ணாக அவள் நிலையில் இருந்து யோசித்து பார்த்தவளுக்கு தான் அவளுக்கு செய்தது ஒரு வகையில் அநியாயம் என்பது புரிந்தது. 


உடனே மகாவிடம் தயங்காமல் மன்னிப்பு கேட்டதோடு மாமியாரும் ஓரகத்தியும் அவளுக்கு துணை இருந்த போது அவளால் வீட்டின் பொறுப்பை இயல்பாக ஏற்று கொள்ள முடிந்தது.


வெளியில் சென்றிருந்தவர்கள் வரும் போது சமையல் வாசனையில் வீடே மணத்தது. நல்ல பசியோடு வந்த குழந்தைகளுக்கு போட்டு கொடுத்த மகா கௌரவ் கௌஷிக்கு ஊட்ட முனைய அவளிடம் இருந்து தட்டை வாங்கி கொண்டான் ரிஷி. 


“நான் ஊட்டி விடறேன் லச்சு.. நீ போய் சாப்பிடு..” என்றான். 


“இருக்கட்டும், நீங்க முதல்ல சாப்பிடுங்க..”


“எனக்கு ஆசையா இருக்கு…” என்று நெகிழ்வோடு சொன்னவனை அதற்கு மேல் அவள் வற்புறுத்தவில்லை. 


மற்றவர்களுக்கு பரிமாற அவளையும் உடன் அமர சொன்னார்கள். ஆனால் ரிஷியோடு அமர்ந்து கொள்வதாக சொன்னவள் சுமதி, காயத்ரியையும் அவர்களுடனே அமர்த்தினாள்.

 


குழந்தைகள் சாப்பிட்டு முடிக்கவும் ரிஷி மகாவை அமர்த்தி பாக்கியலட்சுமி பரிமாற பல வருடங்களுக்கு பின் மனைவியோடு சேர்ந்து அமர்ந்த சந்தோஷத்தில் ரிஷியால் சரியாக சாப்பிட முடியவில்லை. 


நெஞ்சம் அத்தனை தூரம் மகிழ்ச்சியில் கனத்திருக்க உணவிற்கு இடமில்லாமல் போனது!!


“என்ன பார்த்துட்டு இருக்கீங்க? எல்லாம் உங்களுக்கு பிடிச்சது தான்! பசிக்கலையா? எப்படி இருக்குன்னு சொல்லுங்க?” என்று மகா சொல்ல ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை கட்டுபடுத்தியவன் மெல்ல ரசித்து உண்ண தொடங்கினான். 


சாப்பிட்டு முடிக்கவும் குழந்தைகள் பற்றிய பேச்சு, விளையாட்டு என்று நேரம் கழிய வெகு நாட்களுக்கு பின்பு கிடைத்த தருணத்தை மகாவின் குடும்பமும் மகிழ்வோடு அனுபவித்து கொண்டிருந்தது. 


“நேரமாச்சு, குழந்தைகளும் தூக்கத்துல சொக்கிட்டு இருக்காங்க கிளம்பலாம் ப்பா..” என்று கதிர் சொல்லும் வரை மகளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியையும் பூரிப்பையும் கண்ட பாக்கியாவிற்கு அங்கிருந்து கிளம்பும் எண்ணமே இல்லை. 


“ஒரு நிமிஷம் இருடா.. என் கண்ணே பட்டுடுச்சு..” என்றவர் சமையலறைக்கு சென்றவர் உப்பு, மிளகாய் கொண்டு வந்து ரிஷி மகாவை நிற்க வைத்து திருஷ்டி கழித்து மகாவிற்கு குங்குமமிட்டு கிளம்பினார். 


அவர்களை வழி அனுப்பிவிட்டு வர குழந்தைகள் சோஃபாவிலேயே தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். 


“ரிஷி இவங்களை படுக்க வச்சுடுறீங்களா? நான் மாமாவுக்கு பால் கொடுத்துட்டு வரேன்..” என்றிட அவனும் பிள்ளைகளை கொண்டு சென்று படுக்க வைத்தான். 


சிவபாலனுக்கு பாலை காய்ச்சி கொண்டு வந்து கொடுக்க, “நன்றி லட்சுமி” என்றார். 


“என்ன மாமா புதுசா?”


“இதுக்காக இல்லை, நீ இங்க வந்ததுக்கு..” என்றார் உணர்வின் மிகுதியில். 

“என்ன மாமா நீங்க?! அப்படி பார்த்தா நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நன்றி மட்டுமில்லை மன்னிப்பும் கேட்கணும்..”


“லட்சுமி..”


“நீங்க எனக்கு இன்னொரு அப்பான்னு இன்னொரு முறை புரிய வச்சுட்டீங்க மாமா. அதனால தான் நான் உங்ககிட்ட எதுவுமே கேட்கலை, அப்புறம் நீங்க மட்டும் என்ன உங்க மகளுக்கு நன்றி சொல்றது?” என்றவளுக்கு  அவளையும் அறியாமல் கண்களில் நீர் கோர்த்து விட்டது. 


இதழ்களை மடித்து மெல்லிய சிரிப்போடு அதை மட்டுபடுத்தியவள், “உங்களோட வயசையும், ஹெல்த்தையும் யோசிச்சாவது உங்களுக்கு நான் தெரியபடுத்தி இருக்கணும்..” 


“என் பொண்ணுக்கு என்கிட்டே கோவிச்சுக்கிற உரிமையும் இருக்கு லட்சுமி” என்று புன்னகைத்தவர், “சரி வேளையோடு போய் படுங்க காலையில கோவிலுக்கு போகணும்..”


“ஆமா மாமா..” என்று திரும்பியவள், “மாமா நாங்க கிளம்பிட்டா உங்களால இவங்களை தனியா சமாளிக்க முடியுமா?”


“அதெல்லாம் நீ ஏன் கவலைப்படற? ரிஷி ஏற்கனவே எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணி இருந்தான், நீ வந்ததும் சாயந்தரமே அவங்க கிட்ட பேசிட்டேன்.. நாளைக்கு வேலைக்கு ஆள் வந்துடுவாங்க..”


“சரி மாமா..” என்று அறைக்கு செல்ல சிவபாலன் வீட்டை பூட்டிவிட்டு தன் அறைக்கு சென்றார். 


உள்ளே வந்தவள் ரிஷி நின்றிருந்த நிலை கண்டு, “தூங்கும் போது குழந்தைகளை ரசிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க..” என்றாள்.


“இது!! இப்படி இவங்க இங்க தூங்கனும் என்பது என்னுடைய எத்தனை நாள் ஆசை தெரியுமா?” என்றவன் வெகுவாக நெகிழ்ந்திருப்பதை கண்டவள்,


“இருந்தாலும் இவ்ளோ ஓர வஞ்சனை இருக்க கூடாது உங்களுக்கு..”


“ஏன், என்னாச்சு?”


“தூங்குறவங்களை மட்டும் தான் ரசிப்பீங்களா?”


“இல்லையே..”


“அப்போ நான் இந்த புடவையில எப்படி இருக்கேன்னு சொல்லவே இல்லையே?!” என்று அவனை இயல்பாக்க முயன்றாள்.


“நல்லா இருக்கு லச்சு..”


“அவ்ளோ தானா?! வேற ஒண்ணுமே இல்லையா? நான் தான் தெரியாத்தனமா  பொண்டாட்டிக்காக உருகி கரைஞ்சுட்டு இருக்கிற மனுஷன் கிட்ட அதிகமா எதிர்பார்த்துட்டேனோ?!”


“என்.. என்ன எதிர்பார்த்த?” என்றான் அவசரமாக..


“விடுங்க, இதெல்லாம் சொல்லி தெரிய வேண்டிய விஷயமா என்ன?”


“நிஜமா புரியலை லச்சு..”


“இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் பொண்டாட்டியை ரசிக்க தெரியாத புருஷன் தான் எனக்கு விதி போல!! என்ன பண்ண மகா உனக்கு அவ்ளோ தான் அதிர்ஷ்டம்..”


“சரி நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன் ரிஷி  நீங்க உங்க ரசனையை கன்ட்டினியூ பண்ணுங்க..” என்றவள் சடைத்துக்கொண்டு கிளம்ப அவள் கையை பிடித்து தடுத்த ரிஷி, 


“கடவுளை பார்த்த பக்தனோட நிலையில இருக்கேன் லச்சு!! எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்க முடியுமா?” என்றான். 


“ரொம்ப அலைகழிச்சுட்டேனா?! பதற வச்சுட்டேனா?”


“அதுக்கும் மேல, பட் ஐ டிசர்வ் இட்!!”


“....”


“நான் அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்த போது கூட நீ என்னை நம்பலை ஆனா இன்னைக்கு உன்கூட ஆஃபிஸ்ல இருக்கிற கொடுப்பனை கிடைச்சா போதும்னு நினைச்சவனுக்கு இதெல்லாம் எவ்ளோ பெரிய விஷயம்னு புரியுதா?”


“நல்லாவே புரியுது..” என்றவளை இழுத்து அணைத்து உச்சியில் முத்தமிட்டவன், 


“தலை கால் புரியாமல் இருக்கேன், நிச்சயமா நான் நார்மலா இல்லை. இன்னொரு நாள் நீ போதும் போதும்னு சொல்ற அளவுக்கு ரசிக்கிறேன்..” என்றான். 


“நீங்க நார்மலா இல்லைன்னு தான் சொன்னேன் ரிஷி. உங்களுக்கு முதல்ல ரெஸ்ட் தேவை! நாளைக்கு நம்மோட வெட்டிங் டே நியாபகம் இருக்கா?”


“இல்லாமல் இருக்குமா?” என்றான் சிரிப்போடு.


“ஹப்பா! எங்கே சந்தோஷத்துல பொண்டாட்டியை கொஞ்ச மறந்த மாதிரி அதையும் மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன்..” என்றவளின் சிரிப்பில் அவனும் இணைந்து கொள்ள,


“இப்போ எவ்ளோ அழகா இருக்கு! இப்படியே சிரிச்ச முகமா போய் தூங்குங்க மத்ததெல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்..” என்றவள் உடை மாற்றி வந்து படுத்ததும் உறங்கிவிட ரிஷிக்கு உறக்கம் அத்தனை எளிதாக வசப்படவில்லை.

Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17