வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 31



“நிச்சயமா உன்னை அசிங்க படுத்தனும் என்ற எண்ணத்தோடு நீ சொல்ற அர்த்தத்துல நான் எதுவும் செய்யலை லச்சு. பணத்தினால நமக்குள்ள இனிமேல் எந்த பிரச்சனையும் வந்துட கூடாதுன்னு தான் நினைச்சேன். அன்னைக்கு வீட்டை விட்டு கிளம்பினப்போ என்னை நம்பாமல் நகை, பத்திரம் எல்லாமே எடுத்துட்டு வச்சு நான் உன்னோட பணத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்னு நீ சொன்ன..”

“உன்னை ஏடிஎம் மெஷினா பயன்படுத்துறேன்னு உனக்குள்ள ஒரு எண்ணத்தை விதைச்ச நானே அதை களையனும்னு தான் ஃபாரீன் போனேன். உங்களை பிரிஞ்சு நான் மட்டும் சந்தோஷமாவா இருந்தேன்? உன்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கிறது தெரிஞ்சு ஓடி வந்தேன் ஆனா நான் பண்ணின தப்புக்கு ஆண்டவனா பார்த்து உங்களோடு என்னை சேர விடாம பண்ணிட்டான்..”

“அதனால தான் என்னோட தப்புக்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டி இதுவே நமக்கிடையிலான கடைசி பிரிவுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு கிளம்பிட்டேன். உன்னை பார்த்திருந்தா நிச்சயமா என்னால போயிருக்க முடியாது.. அப்படி நான் போகலைன்னா என்னைக்கு இருந்தாலும் பணம் நமக்கு இடையில பிரச்சனையை வர காரணமா இருக்கும்..”

“இவ்ளோ ஏன்?  இன்னைக்கு கோவில்ல கூட நான் உன்னோட பணத்துக்காக தான் தேடி வந்ததா சொல்ற அளவுக்கு தானே நான் உன் கிட்ட நடந்துக்கிட்டேன் நாளைக்கு இது குழந்தைகள் எதிரிலும் தொடரக்கூடாதுன்னு நினைச்சேன் அது தப்பா நீயே சொல்லு?” என்றவன் அவள் அழுத்தமாக பார்க்கவும், 

“சிந்துவுக்காக வீட்டை அடமானம் வச்சவன் இனி உன்னோட பணத்தை எதற்காகவும் தொட மாட்டேன், உனக்கும் நம்ம குழந்தைகளுக்கும் நான் பொறுப்பு அதை உனக்கு உறுதி படுத்த தான் பணத்தை திருப்பி கொடுத்தேன்.. மற்றபடி உன்னை நான் மோசமா நினைக்கலை நம்பு லச்சு..” என்றான் மனதார. 

இதழ்கள் துடிக்க கணவனை பார்த்தவள், “உன் வழிக்கே வரேன்!!  நீ கடனை முடிச்சுட்டு வரணும் என்னோட பணத்தை எதிர்பார்க்கக் கூடாதுன்னு நினைச்சது எல்லாமே ஒருவகையில சரின்னு வச்சுக்கிட்டாலும் அதை பற்றி  என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி உனக்கு சம்மதமா? நான் கிளம்பட்டுமான்னு கேட்க முடியாதா அளவுக்கு உனக்கு அப்படி என்னடா ஈகோ?” என்றதில் ரிஷி பதறி விட்டான். 

“என்ன சொல்ற? சத்தியமா எனக்கு எந்த ஈகோவும் இல்லை லச்சு..” என்று அவள் கையை பிடிக்க அதை வேகமாக உதறியவள், 

“டோன்ட்! டோன்ட் ஈவென் டேர் டூ டச் மீ!! இன்னொரு முறை தொட்ட நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று சீறியவள், “நான் மாறிட்டேன் திருந்திட்டேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு இருக்கிற நீ இப்பவும் உன்னோட முடிவை தனியா தான் எடுத்து இருக்க.. அப்போ உனக்கு நான் யார்?”

“லச்சு!!”

“இந்த கேள்வி இன்னமும் விடை தெரியாததாக தான் நமக்கு இடையில் இருக்கு..” என்று சொல்ல ரிஷி அசைவற்று போனான்.

“ஆக்ஸிடென்ட் ஆகி படுத்த படுக்கையா இருந்திருக்க.. ஆனா கட்டின பொண்டாட்டியான எனக்கு ஒரு வார்த்தை தெரிய படுத்தலை. ஏன்?” என்றதற்கு ரிஷி பதில் சொல்ல முயல கையை நீட்டி தடுத்தவள்,

“திரும்ப திரும்ப எனக்காகன்னு சொல்லாத ரிஷி. கேட்கவே நாராசமா இருக்கு... இரண்டு குழந்தைகளை சுமந்துட்டு இருக்கிறவன்னு கூட பார்க்காம எவ்ளோ பேச்சு பேசி, அடிச்சதோடு உன்னோட புறக்கணிப்பு, அலட்சியம், ஒதுக்கம்னு எத்தனையோ பார்த்து உன்னால மனசு ரணப்பட்டு போன போதும் என் பிள்ளைகளுக்காக எல்லாத்தையும் தாங்கிகிட்டு குத்துகல்லாட்டம் தானே இருந்தேன்…”

“அட்லீஸ்ட் நீ ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பிறகாவது இந்த விஷயத்தை எனக்கு சொல்லி இருக்கலாமே.. ஏன் சொல்லலை?” என்று கேட்க மனைவியின் வேதனையை உணர்ந்த ரிஷிக்கு அவனின் எந்த சமாதான வார்த்தையும் அவளை மட்டுபடுத்தாது என்பது புரியப்பட அமைதி காத்தான்.

“சொல்ல தோணலை இல்லை..” என்று விரக்தி சிரிப்போடு பார்த்தவள், “பொண்டாட்டியா இல்லை ஒரு மனுஷியாவாவது என்னை மதிச்சிருந்தா தானே டா உனக்கு தோணும்!! டேய், உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று மீண்டும் அவனை நெருங்கி கொத்தாக அவன் பனியனை பிடித்து,

“குழந்தைங்க பிறக்கிறதுக்கு முன்னாடியும் சரி பின்னாடியும் சரி ஒவ்வொரு நாளும் நீ இப்போ வந்துடுவ அப்போ வந்துடுவ.. ‘எப்படி இருக்க லச்சு? குழந்தைகள் உன்னை படுத்தி எடுத்துட்டங்களா? ரொம்ப கஷ்டப்பட்டியா? இப்போ ஏதாவது வலி இருக்கான்னு?’ கேட்டு உன்னோட ஒரு ஃபோன் காலாவது வந்துடும்னு எவ்ளோ எதிர்பார்த்தேன்னு தெரியுமாடா உனக்கு?!..” என்றவளின் நாசி விடைக்க மீண்டும் கண்கள் மீண்டும் உடைப்பெடுத்தது. 

“ஆனா அதை கேட்க கூட உனக்கு மனசில்லை. அப்பேற்பட்ட நீ ஆதர்ஷ புருஷனாம்! உன்னை பார்த்ததும் நாங்க பிராணநாதான்னு ஓடி வந்து காலடியில விழுந்து சேவை செய்து கட்டி புடிச்சு சந்தோஷமா வச்சுக்கனுமாம்! ஏன்டா நான் என்ன உன்னோட செ..” என்று தொடங்கியவள் முயன்று தன்னை கட்டுபடுத்தி, 

“புருஷனாம் புருஷன்?! மை ஃபூட்!! டேய் என் சந்தோஷத்தை மொத்தமா குழி தோண்டி புதைச்சுட்டு நீ இருக்கிற இருப்புக்கு உனக்கு சந்தோஷம் ஒன்னு தான் குறைச்சல்!!” என்றவளின் ஆவேசத்தில் ரிஷி மிரண்டு போனான்.

“எதிர்பார்த்து ஏமாந்து போறது எவ்ளோ பெரிய வலி கொடுக்கும்னு உனக்கு தெரியுமாடா? அதுவும் நாம உயிரா நேசிக்கிற ஒருத்தரை வெறுக்கவும் முடியாம மறக்கவும் முடியாம அவங்களுக்காக அவங்க பக்கம் இருந்து அவங்களோட நல்லதை மட்டுமே யோசிச்சு நம்பி எதிர்பார்த்து ஏமாந்து போறது என்பது உயிரோடு நரக வலி கொடுக்கும்..”

“அப்படி பட்ட நரக வலியை தான் இந்த நிமிஷம் வரை நீ எனக்கு கொடுத்துட்டு இருக்க… நல்லா கேட்டுக்கோ இந்த நிமிஷம் வரை!!” என்றதில் ரிஷி முகம் வெளிறிப்போனது.

“அடிப்பட்டு படுத்து இருந்தப்போ என்னை வேதனை படுத்த  கூடாதுன்னு யோசிக்க தெரிஞ்ச உனக்கு இப்படி கடனை அடைக்கிறதுக்காக என்கிட்டே சொல்லாம கண்காணாத தூரம் போறதால ஒரு அப்பாவா கணவனா எவ்ளோ பொக்கிஷ தருணங்களை இழந்து ஒரு வருஷத்தை வீணாக்க போறோம் என்று தெரியலையா?..”

“எனக்கு பிடிச்ச புருஷனா மாற நினைக்கிறவன் என்கிட்டே சொல்லிட்டு கூட போயிருக்கலாம். உனக்கே தெரியும் நான் உன்மேல எவ்ளோ உயிரா இருக்கேன்னு. நீ என்கிட்டே பேசாம ஒதுங்கி போனாலும் உனக்கு என்ன பிரச்சனையோ என்ன அழுத்தமோன்னு யோசிச்சு அதை குறைக்க உன் பின்னாடி நாய் குட்டி மாதிரி வந்து உன்னை மனசலவிலும் உடல் அளவிலும் தாங்கி உன் முகத்துல சந்தோஷத்தை கொண்டு வந்தவள் நான்!!

“ஆனா நான் இருக்கேனா செத்தேனான்னு பார்க்க கூட தோணாத கல்நெஞ்சக்காரன் என்னை பெத்தவங்க, கூட பிறந்தவங்க கிட்ட விசாரிச்சேன்னு சொல்லிடாத டா..” என்று பாய்ந்து இருக்கரங்களாலும் அவன் கழுத்தை பிடித்தவள், அப்படி மட்டும் சொன்ன கண்டிப்பா உன்னை கொன்னுடுவேன்..” என்றதில் திகைத்து போனான் ரிஷி.

“டேய் உன்னை காதலிச்சு தொலைச்ச பாவத்துக்கு என்கிட்டே சொல்லிட்டு போனா நான் சந்தோஷப்பட்டுடுவேனே.. அப்படி அந்த சந்தோஷத்தை கொடுக்க கூட உனக்கு மனசு வரலை இல்லை?.. இதுல உன்னை நான் சந்தோஷமா வச்சுக்கனுமாம்..” என்று கழுத்திலிருந்த கைகளை அகற்றி மீண்டும் அவன் உதடுகளை அழுத்தி பிடித்தவள், 

“இவ்ளோ ஏன், என் குழந்தைங்கள் தினமும் உன்னை நேரில் பார்க்காட்டியும் அட்லீஸ்ட் வீடியோ கால்லயாவது பார்த்திருப்பாங்களே!! பேசி இருப்பாங்களே!! அவங்க முதல் முறை கவிழ்ந்தது, தவழ்ந்தது, நடை பழகினதுன்னு  அவங்களுடைய ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் நீயும் அனுபவிச்சு இருப்பியே..”

“ம்மா, த்தை, மாமா, பா என்று அவங்க முதல் முறை கூப்பிடற அழகை என்னோடு சேர்ந்து ரசிச்சு இருக்கலாமே! ஆனா அதெல்லாம் இழந்துட்டு இப்போ எதுக்காகடா இங்க வந்த?” என்றதில் ரிஷி பேச்சற்று போனான்.

“நீ குணமான பிறகு ஒரே ஒருமுறை என்னை தேடி வந்திருந்தா என்னால இங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் பிரச்சனை வராமல் போய் இருக்கும். உன்னால நான் பட்ட காயம் போதாதுன்னு அதை மறக்க விடாத படி என் அண்ணியோட குத்தல் பேச்சு அண்ணனுடனான அவங்களோட பிரச்சனை, சண்டை, விலகல் எல்லாம் இன்னுமே என்னை அதிகளவுல காயப்படுத்தி என் தூக்கத்தை கெடுத்தது பற்றி தெரியுமாடா உனக்கு?..”

“என்ன சொல்ற லச்சு?! கதிருக்கும் அவரோட வைஃப்க்கும் ப்ராப்ளமா?” என்றான் அதிர்ச்சியோடு. 

“வாயை மூடு! இதை கேட்க உனக்கு வெட்கமா இல்லை.?.” என்று அடிக்குரலில் சீறியவள், “புருஷனா உன்னோட கடமையை நீ சரியா செய்யாம போகலாம் அதுக்காக என் அண்ணனும் அப்பாவும் அவங்களோட கடமையை மறந்துடுவாங்கன்னு நினைச்சியா?”

“புருஷன் இல்லாம இரண்டு குழந்தைகளை வச்சு எப்படி சமாளிப்பேன்னு ஒவ்வொரு நேரமும் என் அண்ணன் என்னோடு இருந்தார். அதுவே அவருக்கும் அண்ணிக்குமான பிரிவுக்கு காரணமாகிடுச்சு.. நீ ஒழுங்கா உன் பொண்டாட்டி பிள்ளைகளை பார்த்திருந்தா அண்ணா அவரோட குடும்பத்தை மட்டும் பார்த்திருப்பார்..”

“லச்சு, நான் தான் கதிர் கிட்ட உன்னையும் குழந்தைகளையும் பத்திரமா பார்த்துக்க சொன்னேன்..” என்று ரிஷி வார்த்தையை விட மகாவின் கோபம் இரட்டிப்பானது.

“ஆண்டவா!! ஏன் இப்படி? ப்ச்..” என்று கண்களை இறுக மூடி திறந்தவள், “நீ சொன்ன வார்த்தையால தான் நான் அண்ணா கிட்ட அவ்ளோ தூரம் சொல்லியும் அவர் எதையும் கேட்கவே இல்லையா? ஏன்டா? எதனால இப்படி செய்யற?” என்று கேட்க புரியாமல் பார்த்த ரிஷி.,

“நான் என்ன பண்ணேன்?” என்றான்.

“இன்னுமா நீ செய்த தப்பு உனக்கு புரியலை? ஏன்டா நீதான் பொண்டாட்டியை மதிக்க மாட்ட, அவளோட உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்ட, வீட்டை விட்டு போனாவ எக்கேடோ கெட்டு போகட்டும்னு விட்டுட்டு தேசாந்திரம் போயிடுவன்னு பார்த்தா மத்தவங்களையும் உன்னை மாதிரியே மாத்துவியா? நீ வாழலைன்னா யாரையும் வாழ விட மாட்டியா?” என்றாள் ஆதங்கத்தோடு.

“ஸாரி லச்சு, நான் சாதாரணமா தான் கேர் கொடுக்க சொன்னேன் ஆனா அது இவ்ளோ பெரிய பிரச்சனை ஆகும்னு நினைச்சு கூட பார்க்கலை..” என்றான் வருத்தத்தோடு.

“சாதாரணமாவா?” என்று விரக்தி புன்னகையோடு பார்த்தவள், “பொண்டாட்டி பற்றியே கவலை படாதவன் மச்சானை பற்றியா கவலைப்பட போற? உன்கிட்ட போய் இதையெல்லாம் பேசறேன் பாரு என்னை சொல்லணும்..”

“நிஜமாவே இவ்ளோ பெரிய இஷூ ஆகும்னு நான்  எதிர்பார்க்கலை..”

“என்ன எதிர்பார்க்கலை? எதிர்பார்த்து இருக்கணும். ஏன்னா எல்லாரும் உன் பொண்டாட்டி மகா மாதிரி இளைச்சவாயா இருக்க மாட்டாங்க ரிஷி?”

“என்ன பேசற?”

“உன்னை மாதிரி இல்லாம அண்ணா அவங்களை கல்யாணம் பண்ணின நாளில் இருந்து ரொம்பவே அன்பா, மரியாதையா, அவங்க விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து  பார்த்துக்கிட்டாங்க.. என்னை மாதிரி இல்லாமல் என் அண்ணிக்கு இங்க எந்த குறையும் நாங்க யாருமே வச்சது கிடையாது...”

“அண்ணி அண்ணா மேல ரொம்பவே பொஸஸிவ்வா இருப்பாங்க. அதோடு கன்சீவ் ஆகி இருந்ததால அண்ணாவை ரொம்பவே தேடினாங்க.. அதை தப்பும் சொல்ல முடியாது. ஆனால் என்ன பண்ண அவங்களுக்கு எனக்கு வாய்ச்ச மாதிரி புருஷன் வாய்க்கலையே?!”

“என்ன சொல்ற?”

“ஒருவேளை என் புருஷனை மாதிரி பொண்டாட்டியை மனுஷியா கூட மதிக்காதவனா இருந்திருந்தா அவங்க அண்ணா கிட்ட எதையும் எதிர்பார்க்காம அம்மா வீட்டோடு போய் சேர்ந்து என்னை மாதிரியே குழந்தைகளையும் தன்னையும் தானே பார்த்துட்டு இருந்திருப்பாங்க... என் அண்ணன் நல்லவரா போயிட்டார் அதனால தான் அவருக்கு கஷ்டம்...” என்று சொல்ல மனைவியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனை ஊசியாய் குத்தியது.

“எங்க அண்ணி போன வேகத்துலேயே திரும்ப வந்துட்டாங்க.. ஸோ என் அம்மாவோட பார்வையில் இதனாலேயே எங்க அண்ணி நல்ல பொண்டாட்டி ஆகிட்டாங்க, நான் கெட்ட பொண்டாட்டி ஆகிட்டேன் அதாவது தெரியுமா உனக்கு?” என்றிட வார்த்தைகள் இன்றி மனைவியை பார்த்தான் ரிஷி.

“அண்ணா அண்ணியை அடிச்சு யார் நீன்னு கேட்ட பிறகும் என் அண்ணி உடனே வீட்டுக்கு திரும்ப வந்தது கேட்கிற மற்றவர்களுக்கு வேணும்னா ஆச்சர்யமா இருக்கலாம் ஆனா எனக்கு இல்லை...” 

“என் அண்ணி ஏன் உடனே வர மாட்டாங்க?! அதுதான் அவங்க இங்கிருந்து கிளம்பின அடுத்த நிமிஷமே எங்க அம்மா அண்ணாவை கண்டிச்சு மருமகளை கூட்டிட்டு வான்னு சொன்னதும் அவரும் தன் மேல தப்பா சரியான்னு யோசிக்காம ஈகோ பார்க்காம பொண்டாட்டி தான் முக்கியம்னு...” என்று ஒரு நொடி நிறுத்தியவள்,

“நல்லா கேட்டுக்கோ!! பொண்டாட்டி தான் முக்கியம்னு யாரோட தப்புன்னு ஆராயாம உடனே பொண்டாட்டியை தேடி போய் கையோடு கூட்டிட்டு வந்துட்டார். அது புருஷ லட்சணம்!!”

“அப்படி பட்ட புருஷனுக்காக பெத்தவங்களை விட்டுட்டு, பழசை மறந்துட்டு, சுயமரியாதையை இழந்துட்டு, அடிச்ச அடியை கூட பெருசு படுத்தாம தன்னோட விருப்பு வெறுப்பை தியாகம் செய்து அவரை சந்தோஷபடுத்தலாம்... 

ஆனா நான் வீட்டை விட்டு வந்ததுல இருந்து ஒரே ஒரு நாள் கூட என்னை தேடி வராத, நான் எப்படி இருக்கேன்னு விசாரிக்காத உன்னை நான் சந்தோஷப்படுத்தனுமாம்!! எப்படி இருக்கு பார்த்தியா நியாயம்?!” என்று வெறுப்போடு ரிஷியை பார்க்க,

“நான் அப்படி சொல்லலை லச்சு!!” என்றான் உள்ளிறங்கிய குரலில்.  

“நீ சொல்லலை ஆனா உன்னை மாதிரி மாப்பிள்ளை உலகத்துலேயே கிடையாதாம், நீ கிடைக்க நான் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணி இருக்கனுமாம். ஸோ உன்னோட சண்டை போடாம சந்தோஷப்படுத்தனும்னு எங்கம்மா சொல்றாங்க..” என்றிட ரிஷிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.. 

ஆனால் உள்ளுக்குள் மாமியார் தனக்கு நல்லது செய்கிறாரா கெட்டது செய்கிறாரா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.

“எங்கம்மா சொல்லும் போது எனக்கு எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு.. சரி அதை விடு, என்னமோ எனக்காக வந்த, அதனால தான் ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னு சொன்னியே அது உண்மையா?” என்றிட பதிலின்றி நின்றான் ரிஷிவரதன்.

எங்கே உன் மனசாட்சியை தொட்டு சொல்லு நிஜமாவே நீ என்னோட அருமையை உணர்ந்து என்னோட முக்கியத்துவம் புரிஞ்சு தான் அன்னைக்கு நைட் என்னை தேடி வந்தியா?” என்று கேட்க ரிஷி தூக்கி வாரிப்போட மனைவியை பார்த்தான்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17