தீராத காதல் தொல்லையோ - 4.2
“அடிப்படையில நீ நல்லவனா இருந்தாலும் இதுவரை என்னோடு மனசு விட்டு ஒரு நாளும் பேசினது இல்லை ரிஷி!! இதை பற்றி எத்தனை முறை நான் கேட்ட போதும் எதையும் நீ காதிலேயே வாங்கிக்கலை.. அதோடு நீ எப்போ எப்படி மாறுவன்னு யாராலையும் உத்திரவாதம் கொடுக்க முடியாது…”
“அதுவும் உன் அம்மா ஏதாவது பேசிட்டா போதும் உடனே நீ மாறிடுவ.. அதை ஒரு முறை இரண்டு முறை இல்ல நான் பலமுறை பாத்துட்டேன். இப்போ அவங்க அங்க இல்லை இனியும் வர மாட்டாங்கன்னு நீ சொல்லலாம் ஆனா அதெல்லாம் சாத்தியமே கிடையாது..”
“தொப்புள் கொடி உறவையும் ரத்த உறவையும் அத்தனை சீக்கிரம் யாராலயும் உதறிட முடியாது. நாளைக்கு உன் அம்மா உன் அப்பா தன்னை தள்ளி வச்சுட்டாருன்னு சொல்லி உன்கிட்ட வந்து கண்ணீர் வடிச்சா நீ மனசு மாறிடுவ..”
“இல்லை..” என்றவன் மறுக்க முயல,
“என்ன தான் நீ என்னை சமாதானபடுத்த முயன்றாலும் அதுதான் நிஜம் ரிஷி. என் அப்பா அம்மாவே அது எப்படி பெத்தவளை உதற சொல்லுவன்னு என்னை தான் பேசுவாங்க..”
“இப்படி பேசறதா இருந்தா எவ்ளோ வேணும்னாலும் பேசிட்டு போகலாம் ஆனா என்னோட நோக்கம் உன்னை காயப்படுத்துறது கிடையாது. உன்கிட்ட இருந்து நிரந்தர விடுதலை..”
“லச்சு!!”
“ஒரு ஏழு மாச பந்தத்துக்காக என்னோட ஆயுள் மொத்தத்தையும் பலி கொடுக்க நான் தயாரா இல்லை ரிஷி.. உன்னோடு வாழ்ந்த ஏழு மாசம் என்னோட ஆயுள் முழுமைக்கும் மறக்காது அப்படி இருக்கிறப்போ உன்னோட வார்த்தையை நம்ப நான் முட்டாளில்லை..”
“இனி எனக்கு என்னோட ரெண்டு குழந்தைங்க மட்டும் தான்!
நிச்சியமா நீ இல்லாம குழந்தைகள் கிடையாது.. அதை என்னைக்கும் என்னால மறக்கவும்
முடியாது நான் மறக்கவும் இல்லை..”
“குழந்தைகளை பாரு.. அவங்களுக்கு அப்பா அம்மா இரண்டு
பேருமே முக்கியம் கோபத்துக்கு இடம் கொடுத்து வாழ்க்கையை இழந்துடாதன்னு என் அம்மா
அடிக்கடி சொல்வாங்க.. மத்த பொண்ணுங்களை விடவும் நான் ஒரு விதத்துல கொடுத்து வச்சவ
ரிஷி..”
“புருஷன், மாமியார், நாத்தனார் சரியில்லாமல் பிறந்த வீட்டுக்கு திரும்ப
வரக்கூடிய பல பெண்களுக்கு எனக்கு கிடைச்ச மாதிரி வரவேற்பும் அரவணைப்பும் நிச்சயமா
இருந்திருக்காது. ஒரு நேரம் இல்லைனாலும் இன்னொரு நேரம் அந்தப் பொண்ணுக்கு அழுத்தம்
கொடுத்து அவளை எப்படியாவது புருஷன் விட்டுக்கு அனுப்பனும்னு தான் நினைப்பாங்க..”
“ஆனா நான் ஹாஸ்பிடல்ல பேசின பிறகு என் அம்மா என்னை
எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யல. இவ்ளோ நாளும் என்னை ராணியாக தான்
பார்த்துகிட்டாங்க.. அப்படிப்பட்டவங்க ஒன்றரை வருஷம் கழிச்சு நீ வந்த பிறகு
மொத்தமா மாறிட்டாங்க. என்னை விடவும் நீயும் உன்னுடைய மாற்றமும் தான் அவங்களுக்கு
பெருசா தெரியுது..”
“எந்த அளவு நீ கொடுத்த காயத்தால நான் மாறி இருக்கேன்னு
என்னை பெத்த அம்மாவாலயே புரிஞ்சுக்க முடியல உன்கிட்ட எதிர்பார்க்கிறது தப்பு
தானே!!.. அவங்க அந்த காலத்து மனுஷங்க புருஷன் பொண்டாட்டி அடிச்சுக்கிறது அப்புறம்
புடிச்சிக்கிறது எல்லாம் சகஜம் ஆனா வீம்பு பிடிச்சு வாழ்க்கையை தொலைச்சிட கூடாதுன்னு நினைக்கிறவங்க..”
“அதுக்காக எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்கிட்டு குடும்ப
கவுரவத்தை காப்பாத்தி, குழந்தைகளுக்காக, சொசைட்டிக்காகன்னு ஒரு நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ள
விரும்பியே இருக்கிற தலைமுறை. ஆனா நான் அப்படி கிடையாது..”
“இன்ஃபாக்ட் என் அம்மாவுக்கு அந்த மாதிரி ஒரு மோசமான
வாழ்க்கை அமையலை.. எங்க வீட்டுக்கு வந்த மருமகள்களுக்கும் அப்படி எந்த
கொடுமையையும் செய்ய அவங்களுக்கு தெரியாது, அதனால என்னோட
சூழலை அவங்க புரிஞ்சுக்கிறது கஷ்டம்..”
“பட் உன் அம்மாவில் தொடங்கி அக்கா, அக்கா பொண்ணு வரை என்னை பேசினது எல்லாமே உனக்கு தெரியுமே
ரிஷி அப்புறம் எப்படி?” என்று வேதனையோடு
பார்த்தாள்.
“தப்பு தான் லச்சு, ஆனா இனி அப்படி நடக்காது.. என்னை பிரிஞ்சு இருக்கிறது
உனக்கும் கஷ்டம் தான் கொடுக்கும் லச்சு..”
“இல்லைன்னு சொல்லலை ஆனா ஆறு ஏழு மாச உறவுக்காக என்னோட
வாழ்க்கையை இழக்க நான் தயாராக இல்லை..” என்றாள் திடமாக.
“என்னுடைய முடிவு இதுதான்!! இதை நீங்க மதிப்பீங்கன்னு
நம்புறேன் அப்படி இல்லாம உன் அப்பாவையோ இல்லை என் அப்பா அம்மாவையும் கூட்டிட்டு
வந்து திரும்ப ஒரு பஞ்சாயத்து வச்சு எனக்கு தேவையில்லாத கஷ்டத்தை கொடுக்க
மாட்டேன்னு நம்புறேன்..” என்றிட இல்லை
என்று தலையசைத்தான் ரிஷி.
“ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்க நின்னாலும் உன்
மேல இருக்கிற வெறுப்பு பல மடங்கு கூடிடும் உனக்கு புரியுதா?” என்று மகா சொல்லவும் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல்
தவிப்போடு மனைவியை பார்த்து நின்றான்.
“நீ கடனை அடைச்சதோ, சொத்தை மீட்டதோ எனக்கு சந்தோஷத்தை கொடுக்கலை.. இப்போ நான்
உன்கிட்ட கேட்கிறது எல்லாமே எனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை கொடு!! தயவு செஞ்சு
என் பின்னாடி வராத…”
“என் மனசுல உனக்கு சுத்தமா இடம் கிடையாது. என்
வீட்டிலேயே நான் அந்நியப்பட்டு போயிருக்கேனு சொன்னேனே உனக்கு இன்னொரு விஷயம்
தெரியுமா?” என்றதில் பரிதவித்து போய் பார்த்தான் ரிஷி.
“இத்தனை வருஷ பிரிவுக்கு பிறகு என்னால உன்னை என்
புருஷனா பார்க்கவே முடியலை. நீயும் எனக்கு அந்தளவு அந்நியப்பட்டு தான் போயிருக்க
ரிஷி..” என்றாள் கண்ணீரோடு.
“அப்புறம் ஏன் கிஸ் பண்ணேன்னு உனக்கு தோணலாம்..
எங்கம்மா பழசை மறந்துட்டு உன்னோடு வாழ்ந்து உன்னை சந்தோஷமா வச்சுக்க சொல்றாங்க..
அப்படி ஒரு கட்டாய வாழ்க்கையை வாழ்ந்தா எந்தளவு நீ ரணப்பட்டு போவான்னு உனக்கு
தெரிய வேண்டாமா? அனேகமா இப்போ புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்..”
“உன்னால எனக்கு ஏற்பட்ட காயத்தின் ஆழம் ரொம்பவே அதிகம்
ரிஷி. எல்லாருக்கும் ஒரு வாழ்க்கை தான்!! இனி அந்த வாழ்க்கைக்கு என் குழந்தைகள்
மட்டும் போதும்னு நான் எப்பவோ முடிவு எடுத்துட்டேன். நீ இல்லாம வாழவும்
கத்துக்கிட்டேன்.. என்னோட வாழ்க்கையை இனியாவது வாழ விடு!!” என்று கையெடுத்து கும்பிட ரிஷி கண்ணீரோடு மனைவியை
பார்த்தான்.
“கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் ரிஷி பட் வேலை, பிரெண்ட்ஸ் என்று உங்களுடைய ரொட்டீனுக்கு திரும்பின பிறகு
நான் எல்லாம் உங்க ஞாபகத்தில் கூட இருக்க மாட்டேன்…”
“எத்தனையோ கனவோடு கல்யாணம் பண்ணிக்கிட்ட நானே இதுல
இருந்து வெளியில வந்துட்டேன். எந்தவித கனவும் இல்லாம தன்னை நம்பி வந்தவளுக்கான
பொறுப்பும் இல்லாம உங்களோட பண தேவைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட உங்களுக்கு
இதிலிருந்து வெளியே வருவது இன்னுமே ஈஸியா இருக்கும்..”
“பட் ஒன்ஸ் வெளில வந்த பிறகு உங்களுடைய வாழ்க்கையை நீங்க
பாத்துப்பீங்க. ஈவன் இதுல இருந்து மூவ் ஆனாகி அடுத்த கல்யாணத்துக்கு கூட நீங்க
தயாராகலாம்..”
“என்ன பேசுற?”
“லைஃப் இஸ் அன்பிரிடிக்டபில்! எதுவும் நடக்கலாம், நான் சொன்னதும் நடக்கலாம் அப்படி நடந்தா மறக்காம உங்களோட
கல்யாண பத்திரிக்கையை எனக்கு அனுப்புங்க நான் நிச்சயமா வருவேன்.. குட் பாய் அண்ட்
குட் லக்!!” என்று அவன் முன் கையை நீட்ட கண்ணீரோடு பார்த்தான்
ரிஷி.
“சியர் அப் ரிஷி! முன்னுக்கு இப்போ வாழ்க்கை
உங்களுக்கு அதிக தெளிவு கொடுத்திருக்கும் நீங்க நினைச்சது அடையனும் என்ற எண்ணத்தை
விட்டு கொஞ்சம் நியூட்ரலா இருந்து நம்ம கல்யாணம் பண்ண நாளிலிருந்து இந்த நிமிஷம்
வரைக்கும் நடந்த எல்லாத்தையும் நினைச்சு பாருங்க உங்களால இந்த முடிவை மனப்பூர்வமா
ஏத்துக்க முடியும்..” என்றவளின்
உறுதியை கண்டவனுக்கு இனியும் அவளுக்கு வலி கொடுக்க மனமில்லை.
“நான் இல்லாம தான் நிம்மதியா இருப்ப குழந்தைகள் உனக்கு
சந்தோஷம் கொடுப்பாங்கன்னா இரண்டையும் உனக்கு நான் கொடுக்கிறேன் லச்சு..” என்றவனை நம்ப முடியாமல் மகா பார்க்கவும்.,
“நிஜமா தான் சொல்றேன், குழந்தைகளை என்னை விட நீ நல்லா பார்த்துப்பன்னு எனக்கு
தெரியும் லச்சு.. உன்னோட முடிவை நான் முழு மனசோடு மதிக்கிறேன்.. ஆனா உன்னோட
இடத்துக்கு இன்னொருத்தியை கொண்டு வருவேன்னு நினைச்ச பார்த்தியா அது எனக்கு ரொம்ப
வலிக்குது..”
“இந்த ஜென்மம் இல்லை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ
மட்டும் தான் எனக்கு மனைவியாக முடியும்… என்ன ஒன்னு அடுத்த ஜென்மத்துலயாவது உன்னை
ஏமாற்றாமல் உனக்கு பிடிச்சவனா நீ எதிர்பார்த்த காதலை கொட்டி கொடுக்கணும்னு
விரும்பறேன்..”
“நான் உனக்கு அன்னியபட்டு போயிருக்கலாம் ஆனா நீ என்
உயிரோடு கலந்து போயிருக்க லச்சு. உன்னை பிரிஞ்சு நான் எப்படி வாழ போறேன்னு
நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு..” என்றிட கண்ணீர்
அவன் கன்னம் தாண்டி வழிந்தது.
“வாழ்க்கை எல்லாருக்கும் நல்லதா அமைஞ்சுடாது. ஆனா ஏதோ
காலத்துல நமக்கே நமக்குன்னு எதையும் செய்யக்கூடிய ஒரு உயிரை கொடுக்கும் போது அதை
கஷ்டபடுத்தாம அருமையை புரிஞ்சு கெட்டியா பிடிச்சுக்கணும் இல்லை உருண்டு
பிரண்டாலும் திரும்ப கிடைக்காதுன்னு வலிக்க வலிக்க எனக்கு புரிய வச்சுடுச்சு..”
“நீ என்னோட தேவதை லச்சு!! உன் அருமையை புரிஞ்சுக்காம
தவற விட்டுட்டேன். வாழ்க்கை எல்லாருக்கும் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கும்னு
சொல்லுவாங்க… அப்படி இரண்டாவது வாய்ப்பு கிடைக்கிற அளவுக்கு கூட நான் அதிர்ஷ்டம்
பண்ணலை போல..”
“அதுக்காகவே இந்த நிமிஷம் உன்னை விட அதிகளவில் என்னை
நானே வெறுக்கிறேன். நான் இல்லாத ஒரு வாழ்க்கையில் நீ எதிர்பார்க்கிற நிம்மதி, சந்தோஷம் எல்லாமே உனக்கு கிடைக்கனும் என்பது தான் என்னுடைய
தினசரி வேண்டுதலா இருக்கும்..”
“எனக்கு தகுதி இருக்கான்னு தெரியலை இருந்தாலும் கடைசியா
ஒரே ஒருமுறை ப்ளீஸ்..” என்று மனைவியை
நெருங்கிட அவளோ மீண்டும் அணைப்பானோ என்று பின்னே நகர்ந்தாள்.
“என் உயிர் நீன்னு சொன்னேனே லச்சு! நிச்சயம் உனக்கு
பிடிக்காத, உன்னை கஷ்டபடுத்துற எதையுமே நான் செய்ய மாட்டேன்..” அவள் கைகளை எடுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டவன்,
“எத்தனையோ கனவோடு, ஆசையோடு நம்பிக்கையோடு
என் கையை பிடிச்சு எனக்காக அத்தனையும் செய்த இந்த கைக்கு நான் நியாயம் செய்யலை..
இந்த துரோகமும் குற்ற உணர்ச்சியும் நிச்சயம் என்னை தூங்க விடாது..” மகாவோ ஈரமாகி போயிருந்த தன் கைகளையே பார்த்திருந்தாள்.
“குழந்தைகளை பார்த்துக்கிறேன்னு உன்னை பார்த்துக்க
மறந்துடாத, நேராநேரத்துக்கு சாப்பிடு.. என் அப்பாவோ உன் வீட்ல
இருந்து மத்தவங்களோ உன்னை டிஸ்டர்ப் பண்ணாம நான் பார்த்துக்கிறேன்…” என்றவனின் விசும்பலில் ஸ்மரன் பெற்று மகா ரிஷியை பார்க்க,
“யாருடைய இடையூரும் இல்லாமல் உன் வாழ்க்கையை உனக்கு
பிடிச்ச மாதிரி வாழு, அதேநேரம் உன்னால
முடிஞ்சா என்னை மன்னிச்சுடு லச்சு…” என்று
வரையறையின்றி வழிந்த கண்ணீரை துடைக்கவும் மறந்தவனாக உயிர் வலியோடு அங்கிருந்து
கிளம்பினான்.
So sad
ReplyDelete