வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 36.1


அன்று மதியம் என்றும் இல்லாத வழக்கமாக ஹாலில் அமர்ந்திருந்த ரிஷி லேப்டாப்பை எடுத்து வைத்து விட்டு பத்து நாள் தாடியை ஷேவ் செய்து கொண்டிருந்தான். 

சமைத்து கொண்டிருந்த சிவபாலன் ஆச்சர்யமாக மகனை பார்க்க, “என்னப்பா?” என்றான். 

“என்ன ரிஷி விசேஷம் ஷேவ் பண்ணிட்டு இருக்க?” என்றார். 

தன் வேலையை நிறுத்திவிட்டு தந்தை எதிரே வந்து நின்றவன், “அடுத்த வாரம் எங்களோட மூணாவது கல்யாண நாள்! ஆனால் இதுவரை ஒரே ஒரு கல்யாண நாளை கூட நாங்க சேர்ந்து கொண்டாடவே இல்லைல ப்பா…” என்றான் சம்பந்தமே இல்லாமல்.

“அந்தளவு துரதிரிஷ்டசாலியா நான்?! ஆனா என்னை விடவும் பெரிய துரதிர்ஷ்டசாலி லச்சு தானே ப்பா?” என்றான் வெறுமையான குரலில்.

“ரிஷி!!”

“கவலைபடாதீங்க ப்பா, அட்லீஸ்ட் இந்த வருஷ கல்யாண நாளாவது நாங்க சேர்ந்து கொண்டாட ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.. அதுக்கான ஏற்பாட்டில் தான் இருக்கேன்..” என்றான் ரேசரை உயர்த்தி காண்பித்து. 

“நிஜமாவா ரிஷி!! அப்போ மருமகள் வீட்டுக்கு வந்துடுமா?”

“இல்லைப்பா ஆனா..” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க வெளியில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது.

“யாரது இந்த நேரத்துல?” என்று சிவபாலன் வாசலுக்கு வர அங்கே இந்திரா மற்றும் வனிதா உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர். 

என்றுமில்லாத திருநாளாக அவர்கள் உள்ளே வருவதற்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றார் சிவபாலன்.

ஒன்றும் புரியாமல் கணவரை பார்த்தபடி உள்ளே நுழைந்த இந்திரா மகனிடம் சென்று, “எப்படி இருக்க வரதா? உன்னை பார்த்து எவ்ளோ நாளாச்சு.. ஏன்ப்பா இவ்ளோ இளைச்சு போயிட்ட?” என்றவர் விழிகள் வீட்டை ஒருமுறை அலசியது. 

“எங்க அவ? உன்னை கவனிக்காம எங்க போயிட்டா? அவளை கட்டினதுல இருந்தே என் பிள்ளைக்கு நேரம் சரியில்லை. கூட அவ பிள்ளை பெத்த நேரமும் சேர்ந்து என் பையனை பாடா படுத்திடுச்சு” 

“உன் கிட்ட பேச கூட விடாம பண்ணிட்டார் வரதா உன் அப்பா.. இங்க ராணியாட்டம் இருந்த உன் அம்மா அங்க வேலைக்காரியை விட மோசமா இருக்கேன் வரதா? உனக்கு ஒருமுறை கூட என்னை பார்க்க தோணலையா?” என்று கண்ணீரோடு கேட்க  அங்கே வந்த சிவபாலன்,  

“அவன் பார்க்கிறது இருக்கட்டும் முதல்ல நீ எதுக்காக இங்க வந்த? அதை சொல்லு..” என்றார். 

“என்ன கேட்கறீங்க? இது என் வீடு!! இங்க வராம நான் வேற எங்க போவேன்? இவ்ளோ நாள் நான் படாத கஷ்டமில்லை இனியும் உங்களை எல்லாம் விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன்..” என்று கண்ணீரோடு சொல்ல, 

“ஒரு சந்தோஷமான விஷயம் அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்..” என்ற வனிதா தம்பியிடம் சென்று, 

“தாரணி பெரிய மனுஷியாகி இருக்கா ரிஷி!”

“அதுக்கு நான் என்ன செய்யணும்?” என்றவனுக்கு அவளிடம் கேட்பதற்கு அத்தனை கேள்விகள் இருந்த போதும் இப்போது மனைவியை தவிர்த்து வேறு யாரும் முக்கியம் இல்லாததால் எதிலும் பட்டுக்கொள்ளாமல் நின்றிருந்தான்.

“என்ன செய்யணுமா? என்னடா இப்படி பேசற? நீ அவளுக்கு தாய் மாமன்!!” என்றதும் தான் தாமதம் ரிஷி கோபத்தோடு அவளை பார்க்க,

“வாயை மூடு!! என்ன தைரியம் இருந்தா திரும்ப அவனை சீர் செய்ய சொல்லி கேட்டு வந்திருப்ப? கூட பிறந்தவனை ஏமாற்றி பிடுங்கிட்டு போன உனக்கு திரும்ப இதை கேட்க வெட்கமா இல்லை..” என்று கர்ஜித்தார் சிவபாலன். 

“என்னப்பா பேசறீங்க? நான் என்ன வீடு புகுந்து கொள்ளை அடிச்சேனா? எனக்கு சேர வேண்டிய சீரை தான் செய்ய சொன்னேன். நீர் அடிச்சு நீர் விலகிடுமா? என் தம்பிக்கும் எனக்கு ஆயிரம் இருக்கும், சொந்தத்துக்குள்ள அடிச்சுக்கிறதும் சேர்ந்துக்கிறதும் சகஜம்..”

“ஏதோ பொல்லா நேரம் எல்லாரையும் ஆட்டி படைச்சுடுச்சு அதுக்காக நல்லது கேட்டதுக்கு அழைக்க கூடாதுன்னு சொன்னா எப்படி?” என்று எதுவுமே நடவாதது போல பேசிய வனிதாவை கண்ட சிவபாலனுக்கு அப்படி ஒரு ஆத்திரம். 

அவளை அடிக்க கை ஓங்கியவர் தன்னை கட்டுபடுத்தி, “சொந்தமா? அதை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு?” 

“ப்பா..”

“இனி அப்படி கூப்பிடாத.. அந்த தகுதியை நீ இழந்துட்ட”

“என்ன சொல்றீங்க?”

“எப்போ ஹாஸ்பிடல்ல உன்னோட வேஷம் கலைந்ததோ அதுக்கப்புறம் உன்னை  மன்னிக்க நான் தயாராக இல்லை. அன்னிக்கே எனக்கு ஒரு பொண்ணு இல்லன்னு நான் தலை முழுக்கிட்டேன் இப்ப எந்த உரிமையில வந்து சீர் கேட்கிற?” 

“இப்படி கேட்க உனக்கு அசிங்கமா இல்ல? உனக்கு என் மகன் எதுவும் செய்ய மாட்டான். செய்யவும் நான் விட மாட்டேன், இனி இந்த பக்கம் வந்துடாத உன் வழியை நீ பார்த்துக்கோ..” என்றார் மனம் நொந்து. 

“பெரிய மனுஷன் பேசுற பேச்சா? வயசானா புத்தி மழுங்கி போயிடும்னு சொல்றது நிஜம் தான் போல, பிள்ளைங்களுக்கு இடையில பிரச்சனை வந்தா தீர்க்கணும் அதை விட்டுட்டு செய்ய விடமாட்டேன் சொல்றதெல்லாம் என்ன பேச்சு? கொஞ்சமாவது உங்க வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க..” என்று வனிதா முடிக்கும் முன்னமே, 

“வாயை மூடு! இன்னொரு வார்த்தை அப்பாவை ஏதாவது பேசின கண்டிப்பா நான் மனுஷனா இருக்க மாட்டேன்..” என்ற ரிஷியின் முகத்தில் அத்தனை ஆவேசம். 

“பெத்த பிள்ளையை பார்த்துக்க முடியாத உங்களுக்கு எதுக்கு குழந்தை? உங்க இஷ்டத்துக்கு பெத்துட்டு அடுத்தவங்க கையை எதிர்பார்த்துட்டு இருக்கிறது கௌரவமா? உனக்கு கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா?” என்றான் குறையாத ஆத்திரத்தோடு.

“என்னடா பேசற?”

“உன்னை கட்டிக்கிட்டவன் குடி, பொம்பளைன்னு போன பிறகும் அவனோடு வாழ வேண்டிய கட்டாயம் என்ன உனக்கு? எல்லாத்தையும் எங்க கிட்ட இருந்து மறைச்சு பொய் சொல்லி என்னை ஏமாத்தி நீ நினைச்சதை நிறைவேத்திகிட்ட பிறகும் எப்படி வெட்கமே இல்லாம உன்னால என் முன்னாடி வந்து நிற்க முடியுது?” என்றான். 

“நான் உன் அக்கா டா என்னையே பேசுவியா?”

“அக்காவா? யார் நீயா? அதுக்கு அர்த்தம் தெரியுமா? இன்னொரு அம்மாவா இருக்க வேண்டிய நீ என்னை முதுகுல குத்திருக்க, நீ எனக்கு செய்ததுக்கு பேர் துரோகம்! பச்சை துரோகம்!”

“இப்படி பொய் பேசி என் வாழ்க்கையை சிதைச்சு என் மனசை உடைச்சு இவ்வளவு நடத்தியதற்கு ஒரு வார்த்தை உன் நிலையை சொல்லியிருந்தா நாங்க உனக்கு துணையா இருந்திருப்போம்.. அவனுக்கு வக்காலத்து வாங்கி உன் நிலையை இன்னுமே தாழ்த்திக்கிற...” என்ற ரிஷியின் குரலில் வேதனைக்கு பதில் கோபமே மிஞ்சி இருந்தது.

“அதுவும் ஹாஸ்பிடல்ல நான் இருந்தப்போ பணம் கொடுத்து உதவாத உன்னை என் அக்கான்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமா இருக்கு. நான் உனக்கு அப்படி என்ன தீங்கு செய்தேன்னு என்னை காப்பற்ற கூட உனக்கு தோணலை.. இனி என் வாழ்க்கையில் என் பொண்டாட்டி பிள்ளைகள் மட்டும் தான் வேற யாருக்கும் இடமில்லை..”

“பார்த்தியா ம்மா நான் சொன்ன மாதிரி எப்படி சுயநலமா இருக்கான்னு.. நம்ம யாரை பற்றியும் யோசிக்காம அவன், அவன் பொண்டாட்டி, பிள்ளைங்கன்னு தான் யோசிக்கிறான். இவனாவது என்னை பார்க்கிறதாவது?”

“இதனால தான் எனக்கு தேவையானதை நான் வாங்கிக்கிட்டேன் ஆனா அதை ஏதோ கொலை குற்றம் மாதிரி இன்னும் பேசறீங்க?” என்று தன்னை நியாயப்படுத்த முயன்றாள்.

“இவ்ளோ தானா என்னை நீ புரிஞ்சுகிட்டது? என்னை இந்த முடிவுக்கு தள்ளினதே நீங்க தான்!! ஒருவேளை உன் புருஷனை பத்தி ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தா உன்னையும் பிள்ளைகளையும் நான் நல்லா பார்த்திருப்பேனே. அதை விட்டுட்டு அப்படி ஒரு கேடுகெட்டவன் கூட வாழனும் என்ற கட்டாயம் உனக்கு?”

“என் புருஷனை பற்றி நீ பேசாத? அது எங்க குடும்ப விஷயம்?”

“ஓ!! உங்க குடும்ப விஷயமா? அப்புறம் எதுக்கு அதுல என்னை இழுக்கிற? உன் குடும்பத்தை நீ பார்த்துக்கோ என் குடும்ப விஷயத்துல தலையிடாத..”

“தெரியும் டா நீ இப்படி தான் பேசுவன்னு. சும்மாவே உன் பொண்டாட்டி ஏத்தி விட்டு எனக்கு எதிரா பேச வைப்பா. இப்போ இத்தனை நாள் நான் இங்க வராததை வச்சு உறவையே அறுக்க பார்க்கிறாளா சண்டாளி..” என்று ஆவேசத்தோடு பேச சிவபாலனின் பொறுமை பறந்து மகளை அறைந்து தள்ளினார். 

“யாரை என்ன பேசற? இன்னொரு வார்த்தை மருமகளை தப்பா பேசின உனக்கு நாக்கு இருக்காது..” என்று கடுமையாக எச்சரித்தார்.

தன்னை அறைந்தவரிடம் “என்னையே அடிச்சுட்டீங்க இல்ல, இத்தனை வருஷமும் என்கிட்டே பேசினது எல்லாமே பசப்பு வார்த்தை உங்க தப்பை மறைக்க முயற்சி செஞ்சீங்க இப்போ முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்குன்னு அடிக்கிறீங்களா?

“சத்தியமா இது தான் உங்க லட்சணம்! என்னை பத்தின கவலை எதுவுமே கிடையாது கட்டிக் கொடுத்ததோட எப்படி போனாலும் உங்களுக்கெல்லாம் கவலை இல்லை. உங்களை நம்பி என் பொண்ணை விட்டேன் ஆனா அவ வாழ்க்கையையும் சீரழிச்சுட்டீங்க..” என்றதும் தான் தாமதம் இந்திரா மகளை ஓங்கி அறைந்தார்.

“வாய மூடுடி இப்படி அப்பாண்டமா பேசுறதுக்கு உனக்கு நாக்கு கூசல?! உன்னை கட்டிக் கொடுத்த நாளிலிருந்து கடன் பட ஆரம்பிச்சு இந்த நிமிஷம் வரைக்கும் நாங்க நாய் படுறோம்..”

“ஆனால் எங்களையே பேசுவியா? உனக்காக தான் உன் மகளை பொறுப்பு ஏத்துகிட்டோம் அவ மேல இவ்ளோ பாசம் இருக்கிறவ ஏன் என்கிட்டே விட்டு வச்ச உன்னோடவே கூட்டிட்டு போக வேண்டியது தானே?!” 

“அவளையும் கூட்டிட்டு போயிட்டா இருக்கிற சேமிப்பு, வீடு எல்லாமே இவனுக்கு கொடுத்துடலாம் என்ற எண்ணமா? மரியாதையா என்னுடைய பங்கு எடுத்து வச்சுட்டா நல்லா இருக்கும் இல்லன்னா கோர்ட் கேஸ் என்று உங்களை சும்மா விட மாட்டேன்..” என்றாள் மிரட்டலாக.

“உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ, படாத வேதனையெல்லாம் பட்டாச்சு இதுக்கு மேல நாங்க இழக்க என்ன இருக்கு? ஆனா என் மகனுக்கும் என் பேரன் பேத்திக்கும் தான் இந்த வீடு அதுல எந்த மாற்றமும் கிடையாது..” என்றார் சிவபாலன்.

“இது தான் உங்க முடிவா?

“ஆமா, எத்தனை கேஸ் என்றாலும் போடு ஆனா இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தாலும் பெத்த பொண்ணுன்னு பார்க்க மாட்டேன் எனக்கு மன உளைச்சல் கொடுக்கிற என்னை தற்கொலைக்கு தூண்டுறன்னு போலீசை வர வச்சு உன்னை உள்ள தள்ளுவேன்... என்றதில் ஆடிப்போனாள் வனிதா.

“ப்பா நான் உங்க பொண்ணு!!...

“அதனால் தான் இன்னும் போலீசுக்கு கூப்பிடாம இருக்கேன். ஒழுங்கு மரியாதையா வெளியே போ, இனி இந்த வீட்டு வாசற்படியை மிதிச்சுடாத..” என்றார் கோபம் குறையாமல்.

அதற்கு மேலும் அங்கே நிற்காத வனிதா உடனே கிளம்பினாள்.


Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17