வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 36.2



மகள் கிளம்பவுமே, “உன் அப்பா இத்தனை வருஷமா என்னை  தள்ளி வச்சுருக்கார் அதை பத்தி கேட்க நாதி இல்லாம கிடக்கிறேன். அதோடு இவ வீட்ல சம்பளம் இல்லாத வேலைக்காரியா தான் இத்தனை நாளும் இருந்தேன் வரதா..” என்று தன் நிலையை உருக்கமாக எடுத்து சொல்லி கண்ணீர் வடிக்க ரிஷியிடம் எந்த அசைவும் இல்லை.

“நீ மட்டும் தான் கடைசி நம்பிக்கை. இனி யாருக்காகவும் உன்னை கடன்காரனாக்க மாட்டேன் உன் அப்பா கிட்ட சொல்லு வரதா. இல்லை நாளைக்கு உனக்கு அம்மா உறவும் இல்லாமல் போயிடும்...” என்றார் உருக்கமாக.

“போதும் நான் ரொம்பவே பட்டுட்டேன் எனக்கு எந்த உறவு வேண்டாம்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க சிவபாலன் விவாகரத்து பத்திரத்தை கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்தார்.

“இதை இன்னைக்கு உனக்கு கொரியர்ல அனுப்ப வேண்டியது.. நல்ல வேளை நீயே வந்துட்ட கையெழுத்து போடு..” என்றார்

“என்னங்க இது?”

“பார்த்தா தெரியலை, விவாகரத்து பத்திரம்!!”

“என்ன பேசுறீங்க? இந்த வயசுல என்னை விவாகரத்து பண்ண போறீங்களா? உங்களுக்கு இது நியாயமா இருக்கா? வரதா நீயாவது இந்த அநியாயத்தை தட்டி கேட்க கூடாதா?”

“அவன் கிட்ட என்ன பேச்சு? எந்த வயசா இருந்தா என்னடி? ஒத்து போகலன்னா அதுக்கு மேல சேர்ந்து இருக்கிறதுல அர்த்தமே இல்லை.. அவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சும்மாவா சொன்னாங்க?!”

“என் பையன் இப்போ நடைபிணமா வாழ்ந்துட்டு இருக்கிறது உங்களால. அக்கா தங்கச்சிங்க கூட சில நேரம் நிறம் மாறலாம் அது சகஜம் ஆனா ஒரு அம்மாவே தன் பையன் வாழ்க்கையை நாசமாக்குறதை இப்ப தான்டி பார்க்கிறேன்..”

“வேலைக்காரியா இல்ல இவனை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்துனதுக்கு இன்னும் நீ நாய் பாட்டு பாடணும். ஆனா இனி எந்த காரணம் கொண்டும் எங்களை தேடி வந்துடக்கூடாதுன்னு உனக்கு ஐந்து லட்சம் செட்டில்மெண்ட் கொடுக்கிறேன்..”

“என்ன பேசறீங்க?”

“இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விவாகரத்தப்போ செட்டில்மென்ட் பண்றது வழக்கம். என்னால மாசம் மாசம் உனக்கு தண்டம் அழ முடியாது.. என்னால முடிஞ்சதை கொடுக்கிறேன் இதுக்கு மேல உனக்கு பணத்தேவை இருந்தா உன் மகள் வீட்டில் செய்யற வீட்டு வேலையை நாலு வீட்டுல செஞ்சு உன் பொழப்ப பாத்துக்கோ…”

“என்ன இப்படி சொல்றீங்க? முடியாது, நான் கையெழுத்து போட மாட்டேன். இந்த வயசுல விவாகரத்து பண்ணினா ஊர் உலகம் என்ன பேசும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க…”

“இனி எனக்கு என் மகனோட வாழ்க்கை தான் முக்கியம். ஊர் உலகத்தை பற்றி உறவுகளை பத்தி எந்த கவலையும் கிடையாது.. இப்போ கையெழுத்து போட்டேனா உரிய மரியாதையோடு இங்கிருந்து கிளம்புவ, பணமும் கிடைக்கும் இல்லன்னா ஆனது ஆச்சுன்னு எதை சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன்..” என்றார் தீர்க்கமான குரலில். 

“வரதா உங்க அப்பா கிட்ட சொல்லுப்பா..” என்று மகனை துணைக்கு அழைத்தார். 

“என்ன சொல்லனும்?” என்றான் விட்டேர்த்தியான குரலில். 

“வரதா!!”

“நான் சொல்றதால எனக்கு நீங்க செய்த துரோகம் இல்லைன்னு ஆகிடுமா? உங்களால நான் பட்ட மனஉளைச்சல், வேதனை மறைந்து போகுமா? தொலைஞ்ச என் வாழ்க்கை திரும்ப கிடைச்சுடுமா? இல்லை என்னை வெறுத்து ஒதுக்கிட்ட என் பொண்டாட்டி என்னை ஏத்துக்கிட்டு வாழ வந்துடப்போறாளா? அட்லீஸ்ட் என் குழந்தைகளையாவது நான் காலத்துக்கும் பார்க்க முடியுமா?” என்றவனின் குரல் தழுதழுத்தது.

“...”

“சொல்லுங்க நான் பேச போறதால இதுல எது மாறிட போகுது?”

“உங்களால என் வாழ்க்கையில நான் இழந்தது ரொம்பவே அதிகம். எனக்கு நம்பிக்கை இல்லனாலும் என் அப்பாவுக்கு லச்சு மேல் நம்பிக்கை இருக்கு! ஒரு நாள் இல்லனா ஒரு நாள் அவ கண்டிப்பா வருவான்னு அவர் உறுதியாக நம்புறார்…” 

“அப்படி என் பொண்டாட்டி இங்க வரும் போது நீங்க இருந்தா எங்க வாழ்க்கை நிச்சயமா சிறக்காதுன்னு அப்பா நம்புறார்.. நான் பேசுறது உங்களுக்கு சுயநலமா இருக்கலாம் ஆனா என்னை பொறுத்த வரையில் இப்போ தான் நான் சரியா யோசிச்சு என் வாழ்க்கைக்காக பேசுறன்..”

“அதுவும்  ஒருத்தி மனச கொன்னுட்டு எதுக்கு வாழறேன்னே தெரியாமல் வாழற வாழ்க்கைக்காக!!..” என்று விரக்தியாக புன்னகைத்தவன்,

“உங்களுக்காக முப்பது வயசுக்கெல்லாம் சுமக்க கூடாத கஷ்டத்தை சுமந்து வாழ்க்கையை  இழந்து இருக்கேன். அதுவும் எத்தனையோ பசங்க கல்யாணத்துக்கு அப்புறம் யாரையும் யோசிக்காம அவங்க சந்தோஷம் தான் முக்கியம்னு தனி குடித்தனம் போய் இருக்காங்க..” 

ஒருவேளை நானும் அப்படி போயிருந்தேனா எனக்கு இந்த நிலை இருந்திருக்காது என்னவோ?!உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாசத்துக்கு கட்டுப்பட்டு அப்பா அம்மாவுக்கான கடமையை தவறக்கூடாதுன்னு நினைச்ச என்னை ஏமாத்துறதுக்கு எப்படிம்மா உங்களுக்கு மனசு வந்தது?”

“நான் என்ன அந்த அளவுக்கு கல் மனசுக்காரனா? என்கிட்ட இருந்து ஏன் மறைச்சீங்க?” என்றதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லாமல் போனது.

“இப்பவும் வந்ததிலிருந்து என் பொண்டாட்டி ராசி, என் குழந்தைகள் வந்த நேரம் அதனால நீங்க அனுபவிக்கிறதுன்னு தான் பேசுறீங்களே தவிர்த்து ஒரு வார்த்தை கூட குழந்தைங்க எப்படி இருக்காங்கன்னு கேட்கவே இல்லையே ம்மா உங்களுக்கு என் மேல பாசமே கிடையாதா? போலியான அன்புக்கு கட்டுப்பட்டு தான் இத்தனை நாளும் இருந்தேனா?” 

“என் பிள்ளையோட வாழ்க்கையை நிர்மூலமாக்கின உனக்கு நிச்சயமா இந்த வீட்டிலும் இடமில்லை என் வாழ்க்கையிலும் இடமில்லை..” 

“இப்படி சொன்னா நான் எங்க போவேன்? எனக்கு எல்லாமே நீங்க தானே! இது தான் என் குடும்பம்..”

“அப்படி நினைச்சிருந்தா இப்பேற்பட்ட துரோகத்தை எங்களுக்கு செஞ்சு இருப்பியா? லட்சுமி இந்த வீட்டுக்கு வந்த புதுசுல நீ கடுமையா நடந்துக்கிட்டப்போ கூட அடிபட்ட வலியில் அப்படி பேசினன்னு நெனச்சேன்..” 

“ஆனா போக போக உன்னுடைய அராஜகம் அதிகமான போதே அடக்கி வச்சிருக்கணும் அதை செய்யாததால் தான் இன்னிக்கி என் பிள்ளைக்கு இந்த நிலைமை. நீ இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்னு சொன்னா நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன்..”

“ப்பா என்ன பேசறீங்க?”

“நிஜமா தான் சொல்றேன் ரிஷி, இவ போகலைன்னா நான் இங்கிருந்து எங்க போவேன்னு எனக்கே தெரியாது..

அப்பா.. 

நான் இருந்தா தானே பொண்டாட்டின்னு உரிமை கொண்டாட்டிட்டு வருவா?!” 

“அப்ப நான் இவனுக்கு அம்மா இல்லையா?” 

“வாய மூடுடி அந்த வார்த்தைக்கு களங்கம் நீ! உங்களால அவன் வாழ்க்கை போச்சு. எவ்ளோ ஆசையோட என் பிள்ளை பொண்டாட்டி குழந்தைகளை பார்க்க வந்தான் எல்லாமே போச்சு..” 

“இது எல்லாத்துக்கும் காரணம் அந்த திமிரு புடிச்சவளும் அவளோட குடும்பமும் தான். அவங்கள எதுவும் சொல்லாம எதுக்கு என்னை பேசுறீங்க?” என்ற இந்திரா இந்த ஜென்மத்திற்கு திருந்துவதாகவே இல்லை தான் செய்த தவறை உணரவும் இல்லை. 

இதன்பிறகு அவரிடம் பேசுவது வீண் என்று புரிந்து போனது 

சில ஜென்மங்கள் இப்படி தான்!!

இது போன்றவர்களை உடன் வைத்து காலம் முழுக்க கஷ்டப்படுவதை விட விலக்கி விட்டு நிம்மதியாக இருக்கலாம். அதிலும் இந்திராவை விலக்குவதன் மூலம் மகன் மருமகளின் வாழ்வும் குழந்தைகளின் எதிர்காலமும் சிறக்கும் என்ற முடிவிற்கு எப்போதோ வந்திருந்தார் சிவபாலன். 

“இத்தனை வருஷமா உன் பொண்ணு வீட்டிலிருந்த இனி உன் அம்மா வீட்டுல இரு இல்லை எங்கயாவது போய் தொலைடி. ஆனா இங்க வந்து என் பிள்ளையோட வாழ்க்கையை கெடுத்துறாதே, அவன் உயிரை எடுத்துடாத உனக்கு புண்ணியமா போகட்டும்..”

“...”

“எதுக்காக வாழனும்னு கேட்டவன் கூட நான் இல்லைன்னா இந்நேரத்துக்கு என் பிள்ளை  என்ன ஆகிருப்பான் என்று தெரியாது. அவன் நிம்மதியா சாப்பிட்டு தூங்கி எத்தனை வருஷம் ஆச்சுன்னு தெரியுமாடி உனக்கு?” என்றிட இனி கணவரை மாற்ற முடியாது என்று புரிந்து கொண்டவர் மகனிடம் வந்தார்.

“உங்கப்பா என்ன பேசறார் பாரு வரதா? இந்த வயசுல யாராவது இப்படி செய்வாங்களா? சொல்லுப்பா..

“இப்பல்லாம் எந்த வயசுலயும் விவாகரத்து ரொம்ப சகஜம். கொடுமைக்கார புருஷன் பல வருஷம் தன்னை கட்டுப்படுத்தி அவனுக்கு அடிமையாக வைத்திருந்து தன்னை புரிஞ்சுக்காம கடைசி காலத்திலும் கொடுமைப்படுத்துற பலர் கிட்ட இருந்து நிறைய பெண்கள் விவாகரத்து வாங்கி இருக்காங்க…”

“அப்போ அந்த பசங்க எல்லாரும் அம்மா பக்கம் துணையாய் இருந்து இருக்காங்க. இப்போ நானும் எங்க அப்பா பக்கம் நிற்கிறேன். எனக்கு அவர் முக்கியம்!..”

“வரதா!!”

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இத்தனை வருஷம் என் வயசுக்கு நான் பட்ட கஷ்டம் ஒன்றுமே இல்லை அவர் வயசுக்கு என்னையும் சேர்த்து சுமக்கிறார். நான் படுற பாட்டை பார்த்து அவர் படும் வேதனையை என்னால தாங்க முடியல…” 

“ஒரே ஒரு வாய்ப்பு கிடைச்சா எல்லாத்தையும் சரி பண்ணலாம்னு எவ்வளவு ஆசையோடு நான் காத்திருந்தேனோ அதைவிட பல மடங்கு ஆசையோடு என் அப்பா இருந்தார். இந்த வயசுல அவருக்கு இப்படி ஒரு கஷ்டம் வர நானும் ஒரு காரணம்!

“பொண்டாட்டியை மதிக்காம அவளோட உணர்வை புரிஞ்சுக்காம போனதோட விளைவு குடும்பமே சிதைஞ்சு போயிடுச்சு. அன்னைக்கே அவ சிந்துவை பெங்களூருல விட சொன்னா.. ஆனா சிந்துவை குழந்தைன்னு சொல்லி நான் தான் எதையும் மதிக்காம போயிட்டேன்..

“என்னோட ஈகோவால என் அப்பாவும் அவர் பேரன் பேத்தியை உரிமை கொண்டாட முடியாம போயிடுச்சு. இப்போ என்னால அவரோட முடிவுல தலையிடவும் முடியாது கேள்வி கேட்கவும் மாட்டேன்..” 

“என் அப்பாவை விட்டுட்டு இருக்க எனக்கு மனசு இல்ல. இப்பவும் நான் பாசத்துக்கு கட்டுப்பட்டு தான் இருக்கேன்! அப்பா ஐந்து லட்சம்னு சொல்றாரு ஆனா உங்களுக்கு எவ்வளவு வேணும்னு சொல்லுங்க என் பொண்டாட்டிக்கிட்ட கலந்து பேசி கொடுக்கிறேன்..”

“பெத்த கடனுக்காக உங்களுக்கு பாதுகாப்பான இடத்துல வீடும் பார்த்து கொடுக்கிறேன் தயவு செய்து என் அப்பாவை என்னோடு இருக்க விடுங்க, இங்கிருந்து போயிடுங்க..” என்று கை கூப்பினான். 

அப்போதும் இந்திரா அசையாமல் நிற்க, “கையெழுத்து போட்டுட்டு கிளம்பினா நல்லபடியா விவாகரத்து வாங்கிட்டு கௌரவமா வாழ ஜீவனாம்சமும் கிடைக்கும் இல்லைன்னா உன் அண்ணன் தம்பிங்களில் இருந்து சொந்த பந்தம் வரை கூப்பிட்டு வச்சு நீங்க செய்த மோசடியை சொல்லி அசிங்கப்பட்டு போவ.. எதுன்னு நீயே முடிவு பண்ணு…” என்றார்.

ரிஷி அமைதியாக ஒதுங்கி நின்றுவிட்டான்.

இது சிவபாலன் இன்று நேற்று எடுத்த முடிவு இல்லை. மகன் மருமகள் பிரிந்து பேரன் பேத்தி யாரும் தன்னோடு இல்லாத வெறுமை நிலையில் அவர் எடுத்த முடிவு. ஏற்கனவே இதை பற்றி மகனிடமும் பேசி விட்டார்.

சில நிமிடங்கள் கணவனை வெறித்து பார்த்திருந்த இந்திரா அரை மணி நேர யோசனைக்கு பின்னர் வனிதாவின் எதிர்ப்பை எல்லாம் காதிலேயே வாங்காமல் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டார். 

உடனே ஒரு லட்ச ரூபாயை கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்தவர் “இப்போதைக்கு இதை வச்சுக்கோ, ராம் வீட்டு பக்கத்துல ரிஷி வீடு வாடகைக்கு பேசி இருக்கான். அதுக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டு தேவையான பொருட்கள் வாங்கிக்கோ கேஸ் முடிந்து டிவோர்ஸ் ஆகும் போது மொத்தமா செட்டில்மென்ட்டும் பண்றேன்..” என்றார்.

“என்னை மன்னிக்க மாட்டீங்களா?” 

“தப்பை உணர்ந்தவங்களுக்கு தான் மன்னிப்பு! இப்போ வரையிலும் உன்னோட தப்பை நீ உணரவும் இல்லை லட்சுமியை குறை சொல்றதை நிறுத்தவும் இல்லை. என் காலம் முடிஞ்சு போச்சு என் மருமகள், பையனோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…” என்ற போதும் இந்திரா அசையாமல் நிற்க, 

“ஏய்! என் பையனை வாழ விடுன்னு சொல்றேன் புரியலையாடி உனக்கு?! மரியாதையா இங்கிருந்து போயிடு இல்லை கொலைகாரனா நான் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்..” என்றதில் திடுக்கிட்ட இந்திரா அமைதியாக வெளியில் சென்றார். 

அவர் பின்னே பைக் கொண்டு வந்த ரிஷி, “ஏறுங்க, ராம் வீட்டுல விட்டுட்டு வரேன். உங்களுக்கு தேவையானதை வாங்க அவன் உதவி பண்ணுவான்..” என்றான்.

“வேண்டாம் ரிஷி இனி அவளோட உனக்கு எந்த சகவாசமும் வேண்டாம். உன்னோட இந்த குணத்தையும் அவளுக்கு சாதகமா மாத்திக்க நினைப்பா. நான் ஏற்கனவே ராம்க்கு தகவல் கொடுத்துட்டேன்.. என்று சொல்ல ராம் அங்கு வந்து சேர்ந்தான்.

அவனோடு இந்திராவை அனுப்பி வைத்தனர்.



Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17