வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 37.2


“பொண்டாட்டி போனா சகலமும் போச்சுன்னு சொல்லுவாங்க மேடம். இப்போ என்னோட நிலைமை அதுதான்! ஏன் வாழறேன் எதுக்காக வாழறேன் யாருக்கு வாழுறேன்னு புரியாமல் ஒரு வாழ்க்கை தான் இப்ப நான் வாழ்ந்துட்டு இருக்கேன்…”

நான் என் மனைவியை புரிஞ்சுக்காத போதெல்லாம் என் கூடவே இருந்தா ஆனா இப்ப நான் அவளை புரிஞ்சுகிட்டு வாழனும்னு நினைக்கும் போது என் கூட அவங்க இல்லை. எனக்கு மட்டும் இன்னொரு சான்ஸ் கிடைச்சா நிச்சயமா நல்ல புருஷனா இருப்பேன் ஆனா எனக்கு அதுக்கு கொடுத்து வைக்கல மேடம்…”

“முதல்ல அவங்க என் மேல கட்டுக்கடங்காத கோபத்தோடு இருக்காங்க எந்த நேரமும் எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுக்க வாய்ப்பு உண்டுன்னு தான் நினைச்சேன். இன்ஃபாக்ட் அவங்க ஏற்கனவே அனுப்பினாங்க... என்று கசந்த முறுவலோடு மகாவை பார்த்தவன், 

இன்னொரு முறை அனுப்புறதுக்குள்ள என்னோட தப்பை சரி செய்ய பார்க்கிறேன்.  அதனால் தான் அவங்களோட விருப்பம் இல்லாமல் வீட்டுக்கு போய் தொந்தரவு செய்ய நான் விரும்பலை. பட் குறைந்தபட்சம் அவங்களை பாத்துட்டு இருந்தாலே போதும்னு  இங்க ஜாயின் பண்ற முடிவுக்கு வந்தேன்..” 

அப்போ உங்க பொண்டாட்டிய சைட் அடிக்க தான் இங்க வந்து இருக்கீங்க?! வேலையை பார்க்க வரலை அப்படித்தானே!!” என்றாள் முயன்று தன்னை கட்டுபடுத்திக் கொண்டு.

அப்படி கிடையாது மேம் என்னோட வேலையில எப்பவுமே நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன். நாங்க பிரிஞ்சதுக்கு அதுவும் ஒரு காரணம். உங்களுக்கு டவுட் இருந்தா என் வைஃப் கிட்ட கேட்டு பாருங்க அவங்களுக்கு தெரியும்..” என்றதில் இருகரங்களையும் மேஜை மீது கோர்த்த படி அவனை பார்த்தவள்

உங்களுக்கு இங்க வேலை இல்லைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என்றாள் ஆழ்ந்த குரலில்.

“ஏன் இல்லைன்னு தெரிஞ்சுக்கலாமா மேம்?

“கண்டிப்பா காரணம் சொல்லியே ஆகணுமா? பல்லை கடித்தபடி.

“அப்படி கிடையாது மேம். பட் இந்த போஸ்ட்டுக்கு தேவையான சொல்லப்போனா தேவையை விடவும் அதிகமான குவாலிபிகேஷன் எனக்கு உண்டு. அதைவிடவும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு அப்படி இருந்தும் நீங்க என்னை எடுக்காமல் போனா உங்க கம்பெனிக்கு தான் லாஸ் அதனால் தான் கேட்டேன்..

“எங்க கம்பெனியை பற்றின உங்களோட கரிசனம் எங்களுக்கு தேவை இல்லை மிஸ்டர் ரிஷி!! நீங்க இந்த போஸ்ட்க்கு ஓவர் குவாலிஃபைட் ஸோ உங்களுக்கு ஜாப் இல்லை, யூ கேன் கோ..” என்றிட ரிஷி அசையாமல் அமர்ந்திருந்தான்.

“நான் சொன்னது புரியலையா?

“புரிஞ்சது மேம், ஆனால் நீங்க எனக்கு இந்த வேலை கொடுக்கலைன்னா நான் இதே ஆஃபிஸ்ல இருக்கிற மற்ற வேலைக்கு அப்ளை பண்ணுவேன்..” என்றான் அலட்டி கொள்ளாமல்.

மற்ற வேலை என்றால் எதை மீன் பண்றீங்க?”

இந்த ஆஃபீஸ்ல எந்த வேலை கிடைச்சாலும், ஐ மீன் அது கிளீனிங்கா இருந்தாலும் சரி, கேண்டீன்ல சேர்வ் பண்ற வேலையா இருந்தாலும் சரி! எனக்கு என் பொண்டாட்டியோட பார்வையில இருக்கணும் அவ்வளவுதான்!!”

“ஹாவ் யூ லாஸ்ட் யுவர் மைன்ட் ரிஷி!!

“கிட்டத்தட்ட மேம்..” என்றதில் மகா அதிர்வோடு கணவனை பார்த்தாள்.

அர்த்தமே இல்லாம இருக்குற என் வாழ்க்கைக்கு அவளும் என் குழந்தைகளை மட்டும் தான் ஆதாரம். பணம் தான் முக்கியம்னு இருந்தேன் கண்டிப்பா பணம் முக்கியம் இல்லைன்னு சொல்லல பட் அதை சம்பாதிக்கிற வேகத்துல என் பொண்டாட்டியை மறந்துட்டேன்..”

ஒருவேளை நான் எந்த வேலையும் செய்யாமல் இருந்திருந்தால் கூட அவ என்னை பாத்துட்டு இருந்திருப்பா.. அந்தளவு நல்லவள்! ஆனா நான் தான் அவளை பொண்டாட்டியா நடத்தாம் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். எதுவுமே அவளை கலந்துகிட்டதில்லை என்பது தான் அவளோட கோபம்…”

இப்பவும் இங்க அப்ளை பண்ணி இருக்கேனே தவிர இன்னும் நான் அந்த கம்பெனியில் பேப்பர் போடல மேம்..”

ஏன்?” 

நான் இன்னும் இந்த விஷயத்தை பற்றி என் வைஃப்க்கு சொல்லல..”

ஏன்?”

அதுதான் சொன்னேனே இரண்டு பேரும் பிரிந்து இருக்கோம். சொல்ல வாய்ப்பு கிடைக்கல, நான் சொன்னாலும் அவங்க எதையும் கேட்க போறது கிடையாதுன்னு எனக்கு தெரியும்.. பட் ஸ்டில் அவங்க கிட்ட கேட்காம எந்த ஒரு டிசிஷனும் எடுக்க கூடாதுன்னு முடிவு செய்திருக்கேன்.

மனைவி ஒரு மந்திரின்னு சும்மா சொல்லலை மேம். நான் அவங்களை, அவங்களோட ஒப்பீனியனை மதிக்காத போதே என்னோட நலனை மட்டுமே எதிர்பார்த்தவங்க அதான் அவங்க கிட்ட சொல்லாமல் பேப்பர் போட எனக்கு மனசு வரல.. இங்க ஜாப் கிடைச்சிருச்சுனா அவங்க கிட்ட சொல்லிட்டு பேப்பர் போட்டுடுவேன்..” என்றான்.  

அவ்ளோதானா?! முடிஞ்சதாஇல்ல பேச இன்னும் ஏதாவது இருக்கா?”

மேடம்!!”

லுக் மிஸ்டர் ரிஷி,  உங்களுக்கு இங்க வேலை இல்லை கிளம்புங்க..” என்றாள்.

மேடம்!!”

ரிஷி ப்ளீஸ் இதுக்கு மேல எந்த டிராமாவும் கிரியேட் பண்ணாதீங்க.. 

நான் என்ன டிராமா பண்ணேன். நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க மேம்..

“ஈனஃப் இஸ் ஈனஃப் ரிஷி!! டோன்ட் ட்ரை டூ ப்ரேக் மீ!!

மேம்.. 

“இப்போ எதுக்கு இந்த பேச்செல்லாம்? இப்படி பேசி என்னை எமோஷனலா உடைக்க ட்ரை பண்றீங்களா?” என்றாள் இமை மீறிய கண்ணீரோடு.

“இல்லை மேம் சத்தியமா எனக்கு அப்படி எந்த எண்ணமும் கிடையாது. நான் என் மனசுல இருக்கிறதை தான் சொன்னேன்...” என்று உளமாற சொல்ல மகா தன் கண்ணீரை உள்ளிழுத்தாள்.

“.... 

“எங்க குடும்ப சூழலால நான் சின்ன வயசுல இருந்து பெருசா என்னோட வயசுக்கு உரிய சந்தோஷம் எதையும் அனுபவிச்சது கிடையாதுஎங்க என் பிள்ளைகளுக்கும் அந்த நிலைமை வந்துடுமோ அவங்க வயசுக்கே உண்டான சந்தோஷத்தை அனுபவிக்க முடியாம போகுமோன்னு தான் கடனை எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைக்கணும்னு நினைச்சேன் மேம்..”

அதனாலதான் என் பொண்டாட்டியோட வருமானத்தை எதிர்பார்த்தேன் ஆனா அதை நான் அவங்க கிட்ட சொல்லி இருக்கணும், பட் சொல்லாம விட்டுட்டேன். என்ன பண்ண எல்லா ஆம்பளைங்களுக்கும் இருக்கிற வரட்டு கௌரவம் தான் அதுக்கு காரணம்!!

அதைவிட அப்பா, அண்ணன் அண்ணின்னு எல்லாரும் அவங்களை எப்படி பார்த்துகிட்டங்க என்றும் அவங்க சைல்ட்ஹுட் பற்றியும் என் மனைவி பெருமையா பேசுறப்போ அப்படி எதுவுமே இல்லாத நான் என்ன பேச?

பலமுறை ஏன் மனசு விட்டு பேச மாட்டேங்கறீங்க என்று என் லச்சு கேட்டிருக்கா மேம்ஆனா என்னோட இளமை காலமெல்லாம் என் அக்காவுக்காக எங்கப்பா பட்ட கடனை அடைப்பதிலேயே முடிஞ்சுடுச்சு.. ஹை ஸ்கூல் முடிச்சதும் லீவில் பீட்ஸா ஹட், மெக்கானிக் ஷாப்மளிகை கடைன்னு நான் பார்க்காத வேலை கிடையாது.

காலேஜ் படிச்சுட்டு இருந்த போதும் இதே நிலை தான்!! மற்ற பசங்களை போல ஒரு நார்மலான சைல்ட்ஹுட் எனக்கு அமையலை. எனக்காக இது வேணும்னு கேட்டு வாங்கும் குணம் எனக்கு கிடையாது. அதுக்கு காரணம் எங்களோட வறுமை…”

இதை எல்லாம் சொன்னா எங்கே என் வைஃப் அம்மா அப்பாவை மதிக்காம போயிடுவாளோ இல்லை என்னை ஒரு படி இறக்கி வச்சு பார்ப்பாளோ என்று எனக்குள் ஒருவிதமான இன்செக்யூரிட்டின்னு கூட சொல்லலாம்.. அதனால தான் நான் என்னோட கஷ்டம் எதையும் அவகிட்ட சொன்னது கிடையாது…” 

 என் லச்சு என்னை எப்போவுமே தப்பா நினைச்சு இருக்க மாட்டாஇதெல்லாம் தெரிஞ்சிருந்தா இன்னும் எனக்கு துணையா இருந்திருப்பான்னு இப்போ தான் புரியுது. அவ சொன்ன மாதிரி காலம் கடந்த ஞானோதயம்!!”

உங்களுக்கு தெரியுமா மேம்?! யூஎஸ்ல இருந்து வந்தவன் என்னோட வைஃப்பை பார்க்க போன போதே இதெல்லாம் பேசணும்னு நினைச்சிருந்தேன் ஆனா நான் இல்லாம அவங்க  பட்ட கஷ்டத்தை கேட்ட அதிர்ச்சியில என்னால பேச முடியலை.. இப்போ அதற்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு அதுதான் சொன்னேன்..” 

ஒருவேளை உங்களோட நேரத்தை நான் வீணடிச்சு இருந்தா என்னை மன்னிச்சுடுங்க…” என்றவன் எழுந்து கொள்ள

என்ன கிளம்பிட்டீங்க? ரிசல்ட் தெரிஞ்சுக்க வேண்டாமா?”

அதுதான் நீங்க வேலை இல்லைன்னு சொல்லிட்டீங்களே மேம். நான் இதுக்கு மேலயும் இருந்து உங்களுக்கு சங்கடம் கொடுக்க விரும்பலை.. இதே ஆஃபிஸ்ல வேற போஸ்ட்க்கு அப்ளை பண்ண போறேன்..” என்று கிளம்பி விட கண்களில் வழிந்த கண்ணீரோடு கணவனை பார்த்திருந்தாள்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17