“சரிடா ஆனா அவன் ப்ளான் பண்ணின நாள், நேரம் நமக்கு தெரியும் ஆனா ஹைவேஸ்ல இந்த இடத்துல தான் உன்னை அட்டாக் பண்ணுவான்னு
எப்படி நாம சொல்ல முடியும்..? ஒருவேளை நீங்க ப்ளான்
பண்ணியிருக்க இடமா இல்லாம போச்சுன்னா என்ன செய்ய..?”
“அதுக்கு தான் மாம்ஸ் நீங்க இருக்கீங்க...”
“நானா நான் என்னடா செய்ய முடியும்..?”
“உதிண்ணா எவ்ளோ பெர்ஃபெக்டா ப்ளான்
போட்டிருக்காங்க அதுக்கு ஏற்ற மாதிரி அவனை டைவர்ட் பண்ணறது உங்க பொறுப்பு..!”
“என்னது நானா..?”
“நீங்களே தான் மாம்ஸ்! உங்க
ஃபிரெண்ட் நல்லபடியா வரணும்னா நீங்க தான் செய்யணும். இந்தாங்க இதை பிடிங்க” என்று
கைபேசியை அவனிடம் கொடுத்த ருத்ரவேலன் “இதுல
இருந்து நீங்க சரத்க்கு பேசணும்”
“நான் ஏன்டா பேசணும்..?”
“நீங்க பேசுவீங்க ஆனா சரத் கேட்கபோறது உதிண்ணா
வாய்ஸ்..”
“எப்படிடா..?”
“வாய்ஸ் சேஞ்சிங் ai app install பண்ணியிருக்கேன் நீங்க உங்க குரல்ல பேசுங்க ஆனா அவனுக்கு உதிண்ணா வாய்ஸ்
தான் கேட்கும்..”
“டேய் அதுக்கு அவனே பேசலாமே நான் எதுக்கு..?”
“யோவ் மாம்ஸ் இந்த ஆக்சிடென்ட் நடக்க போறதே
உதிண்ணாக்கு தெரியாது”
“என்னது..? டேய் என்ன
பேசற இதை ப்ளான் பண்றதே இவன்தானே அப்புறம் எப்படி டா தெரியாம போகும்..”
“அதுதானே உதய்க்கு எப்படி வேலு தெரியாம
போகும்.. என்ன ப்ளான்னு முழுசா சொல்லுங்கடா”
“மச்சான் அவன் எனக்கு குறி வச்சிருக்கறதே
எனக்கு தெரியாது..”
“உனக்கு தான் தெரியுமே..?”
“முன்னாடியே தெரிஞ்சதுன்னா ஏன் வந்து
கம்ப்ளைன்ட் கொடுக்கலைன்னு கேட்பாங்க... அப்படி நான் கம்ப்ளைன்ட் கொடுத்தா சரத்
என்னை எப்படி அட்டாக் பண்ண முடியும்... ஹிட் அண்ட் ரன் தான் அவன் ப்ளான்..”
“...”
“அதாவது அவன் கையாள என்னை கொல்லனும் ஆனா
கொன்னது அவன்தான்னு வெளியில தெரியக்கூடாதுன்னு நினைக்கிறான்..”
“ஸோ வழக்கம் போல ராணிபேட்டைக்கு கிளம்பின நான் என்
பின்னாடி லாரி ஸ்பீடா வரவும் ஏதோ அவசரம்னு அதுக்கு வழிவிட்டேன் ஆனா அது திரும்ப
இடிக்க வரவும் சுதாரிச்சுடுவேன்..”
“அப்படியிருந்தும் லாரி என்னை துரத்துறது
தெரிஞ்சதும் உயிரை காப்பாத்திக்கறதுக்காக வேகமா போயிட்டு இருக்க நான் அவனுக்கு
எப்படி கால் பண்ண முடியும்..?”
“அதைவிட நாளைக்கு விசாரணைன்னு வந்தா என்னோட
கால் ஹிஸ்டரி பார்க்க மாட்டாங்களா...? அதுல நான் அவனுக்கு
கால் பண்ணினது தெரிஞ்சுட்டா நான் போட்ட திட்டமெல்லாம் வீணாகிடாதா...?”
“எல்லாம் சரிடா அவனுக்கு கால் பண்றது நீன்னு
அவனுக்கு எப்படி தெரியும்..?”
“இதோ இப்படி..!” என்றவன் அவன் கையில் இருந்த
பேசியில் சரத்துக்கு அழைத்தான்.
முதலில் அழைப்பை எடுக்காதவன் மூன்றாவது ரிங்கில் எடுக்கவும்
உதய் அவனிடம் பேசியதை கேட்டு ராகவனும் சரவணனும் அதிர்ந்து போயினர்.
*********************
“மாப்பிள்ளை ஏன்டா இப்படி..? நீ பேசுற பேச்சுல அவன்
கோபம் இன்னும் அதிகமாகாதா..?”
“அதுதான் மாமா எனக்கு வேணும் அப்போதான் அவன்
ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆன வேகத்தோடு என்னை கொல்ல
கிளம்புவான். நான் காலையில் ஷோரூம் வந்துட்டு ராணிபேட்டை கிளம்பற டைமை அவனோட
ஆளுங்க மூலமா தெரிஞ்சுகிட்டவன் நிச்சயம் காத்திருப்பான்..”
“இப்போ ராகவ் கேட்டானே நாம பிக்ஸ் பண்ணின
இடத்துல எப்படி சரியா ஆக்சிடென்ட் பண்ண முடியும்னு அதுக்கு தான் இந்த ஃபோன்...”
“நான் ஸ்பாட்டை நெருங்கவும் ராகவ்க்கு கால்
பண்ணுவேன் அவன் உடனே அந்த பொறுக்கிக்கு கால் பண்ணி நாங்க எழுதி கொடுத்ததை பேசணும்”
“அப்படி பேசினா என்னாகும்..?”
“அவனோட வேகம் அதிகமாகும் நாம மார்க் பண்ணின
ஸ்பாட்ல வண்டியை அடிச்சு தூக்குவான்” என்று தோள்களை குலுக்கிக்கொண்டு சொன்ன உதய்யை
பார்த்திருந்த ராகவன்..,
“என்னடா இவ்ளோ அசால்ட்டா சொல்ற..?”
“மச்சான் ஸ்பாட் நெருங்கறப்போ நான் வண்டியை
ஆட்டோ மோட் போட்டுட்டு பக்கத்து சீட் போயிடுவேன் கரெக்டா அவன் வண்டியை இடிக்கும்
முன்ன கீழ குதிச்சிடுவேன் கவலைபடாத ப்ரொடெக்ஷனோட இருப்பேன் பெருசா அடிபடாது...
ஆல்ரெடி நானும் வேலுவும் ஒரு டெமோ பார்த்துட்டோம்”
“உதய் மாமாக்கு தெரியாம இதை செய்றது சரிவருமா..?”
என்ற சரவணனிடம்,
“இப்போ இருக்க சூழலுக்கு அப்பாகிட்ட சொன்னா
ஒத்துக்கமாட்டார் மாமா... அவருக்கு இது தெரியவேண்டாமே ப்ளீஸ்”
“எனக்கு என்னமோ நீ இவ்ளோ ரிஸ்க் எடுக்க
வேண்டாம்னு தோணுது மச்சான்...”
“நான் ரிஸ்க் எடுக்கலைன்னா உன் தங்கச்சியை அவன்
நிம்மதியா வாழ விடமாட்டான் பரவாயில்லையா..?” என்று ராகவனை
முறைக்க,
“வேற எதாவது பெட்டரா யோசி”
“டேய் இது என்ன என் ப்ளானா..? என்னை லாரி வச்சு தூக்க ப்ளான் போட்டது அந்த சைக்கோ அதை எனக்கு ஏற்றபடி
நான் எக்ஸிகியூட் பண்ண போறேன் அவ்ளோதான்” என்று உதய் சொல்ல அவனருகே இருந்த
ருத்ரவேலன் எழுந்து சென்று ராகவன் தோளில் கைபோட்டு,
“கிரிமினல் கேஸ் வேற ஃபேமிலி கேஸ் வேற
புரிஞ்சுக்கோங்க மாம்ஸ்.. உதிண்ணா சொல்றது தான் சரி, ஃபேமிலி
கேஸ் ஸ்லோவா தான் மூவாகும் அதுவரை அவன் ரொம்பவே சுதந்திரமா சுத்திட்டு இருப்பான்..
அந்த பொறுக்கி அப்படி சுத்தறது மட்டுமில்லாம அண்ணிக்கு தான் இன்னும் தொந்தரவு
கொடுப்பான்”
“அதுக்காக இவன் உயிரை பணயம் வைப்பீங்களாடா...?
இதுக்கு பதிலா அந்த பொறுக்கியை அடிச்சு படுக்க வைக்கலாமே...”
“அதுதான் உதிண்ணா ஏற்கனவே பியூசை பிடுங்கி
படுக்க வச்சுட்டாங்களே..?” என்று அட்டகாசமாக சிரிக்க.,
“அப்பவும் அவன் அடங்கலையே வேலு... அவன்மேலயும் கஞ்சா, அபின்,
கோக்கைன்னு எதாவது கேஸை போட்டு போலீஸ் அடியை காட்டுடா அப்பவாவது
அடங்கறானா பார்க்கலாம்”
“யோவ் மாம்ஸ் இதையெல்லாம் அவன் தூசியா ஊதிட்டு
போயிடுவான் அதைவிட இப்போ அவன் மேல நாம கை வைக்கிறது கொள்ளிகட்டையை எடுத்து தலையை
சொரியறதுக்கு சமம்”
“...”
“அவனுக்கு ஏதாவது நடந்தா கண்ணை மூடிட்டு
அண்ணாவை தூக்கி உள்ள வைக்க வேண்டி இருக்கும்.. புரியுதா இல்லையா உனக்கு..?”
“புரியுதுடா இருந்தாலும் எல்லாம் நல்லபடியா
நடக்குமா..? அவன் ஏதாவது ப்ளான் மாற்றிட்டா இல்ல குறுக்க
எதாவது வண்டி வந்துட்டா என்ன செய்ய..?”
“அப்படி எதுவும் நடக்காது மாம்ஸ்...
ஆக்சிடென்ட் நடக்க போறது என்னோட ஏரியா லிமிட் அதோட அந்த யூடியூபர் உடனே அண்ணாவை
பக்கத்துல இருக்க ஜிஎச் ல சேர்த்துடுவாங்க எனக்கு தகவல் கிடைச்சதும் உடனே
ஸ்பாட்க்கு வந்துடுவேன்”
“அதுக்குள்ள முன்னாடி போயிருக்கவங்க சரத்தை
பிடிச்சுடுவாங்க..”
“அவன் தப்பிச்சு ஓடிட்டா..?”
“மாம்ஸ் அதுல வரபோறது யூடியூபர் மட்டுமில்ல
என்னோட நம்பகமான ஃப்ரெண்ட்ஸ்.. அவங்களும் டிபார்ட்மென்ட் ஆளுங்க தான் சரத் எவ்வளவு
ஓடினாலும் தப்பிக்கவே முடியாது”
“நான் ஃபார்மாலிட்டிக்கு உதிண்ணாவை
விசாரிச்சுட்டு கையும் களவுமா மாட்டியிருக்க அவனை அடுத்த சில மணிநேரத்துலயே
கோர்ட்ல ப்ரோடியுஸ் பண்ணி கஸ்டடி எடுத்துடுவேன்” என்று திட்டத்தை சொல்லி முடிக்க.,
“சரத்துக்கு நிச்சயம் attempt to murderல தண்டனை கிடைக்கும்.. அதுக்குள்ள தளிர் கேஸை நிம்மதியா நடத்தி
முடிச்சுடலாம்.. அவனால தீனா, அசோக்கையும் மற்ற சாட்சிகளையும்
ஆதாரங்களையும் ஜெயிலுக்கு உள்ள இருந்து கலைக்கறது கஷ்டம்” என்று சொல்லவும்
மற்றவர்கள் முகத்தில் புன்னகை அரும்பியது.
அன்று அன்னபூரணி அம்பலவாணனுக்காக காத்திருந்தவர் மகன்
இரவாகியும் வராது போனதில் அவருடன் பேச முடியாமல் போய்விட்டது. அன்று மட்டுமல்ல
அடுத்தடுத்து வந்த நாள்களிலும் அவர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்ததில் அவரிடம்
நிதானமாக பேச முடியாது போனது.
உதய் தன் தொழிலையும் தளிர் விடயத்திலும் ஓய்வில்லாது அலைந்து
கொண்டிருப்பதால் தன் வேலைகளுக்கு இடையில் முடிந்தவரை அம்பலவாணன் தந்தையோடு
மருத்துவமனையில் இருப்பதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்.
அன்று அண்ணாமலையை சாதாரண வார்டிற்கு மாற்றியிருக்க
சுஜிதாவிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் குளித்துவிட்டு சாப்பிட
அமர்ந்தார்.
உணவை பரிமாற வந்த ஜெகதீஸ்வரி ராஜிக்கு சைகை செய்யவும் அவர்
உறங்கி கொண்டிருந்த அன்னபூரணியை அழைத்து வந்துவிட்டார்.
“சாப்ட்டீங்களாம்மா..?”
“ஆச்சுப்பா”
“அப்பாவை எப்போ வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு
டாக்டர் ஏதாவது சொன்னங்களா அம்பலா..?”
“அப்பாக்கு இப்போ எந்த பிரச்னையும் இல்லை ம்மா
அப்ஸர்வேஷேன்ல இருக்கார்... டிஸ்சார்ஜ் பண்ண இன்னும் இரண்டு
வாரமாகும்னு சொல்லியிருக்காங்க, அதுக்கப்புறம் வாரம் ஒருமுறை
இரண்டு மாசம் செக்அப் கூட்டிட்டு வந்தால் போதுமாம்”
“சொல்லுங்க ம்மா என்ன விஷயம்..? தூங்காம எனக்காக காத்திருக்கீங்க..?” என்றவர் உணவில்
கவனமாக இருக்க,
“நீ சாப்பிட்டு முடிப்பா பேசிக்...” என்றவரை
இடைமறித்த ராஜி,
“அத்தைக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கனுமாம்” என்று
சொல்ல அவரை ஒரு பார்வை பார்த்தவர் மனைவியை பார்க்க, ஜெகாவோ
மாமியாருக்கு பேசுமாறு சைகை செய்து கொண்டிருந்தார்.
“அந்த குடும்பத்தோட நமக்கு என்னப்பா இருக்கு.
ஏன் அவங்களை சின்ன மாப்பிள்ளை வீட்ல கொண்டு வந்து வச்சிருக்கீங்க..? இதுவரைக்கும் அவங்களால் நம்ம பட்ட அவமானமும் வாங்கின பேச்சுக்களும்
போதலையா..? அப்பாவோட நிலைமைக்கு காரணமே அவங்க தானே..!
அப்புறம் எப்படி அம்பலா உனக்கு மனசு வந்தது..?”
“உங்களுக்கு எப்படி இது தெரியும்..?”
“அது மருமக நிவியை வீட்டுக்கு கூட்டிட்டு
வரதுக்காக சம்பந்தி கிட்ட பேசியிருக்கா அப்போ அவங்க தான் அந்த பொண்ணோட குடும்பம்
அங்க இருக்கிறதா சொன்னாங்க..”
“ம்மா அவங்க வீட்ல யாரையும் தங்க வைக்கிறது
அவங்க விருப்பம்மா அதுல நாம என்ன சொல்ல முடியும்..?” என்று
எதிர்கேள்வி கேட்க..,
“அப்போ அவங்களை நீ தங்க வைக்கலையா..?”
“இல்லம்மா”
“அப்போ நீ ஏன் அவங்களை பார்க்க போன..?”
“ம்மா அது என் சம்பந்தி வீடு..! அங்கதான்
நிவியும் குழந்தையும் இருக்காங்க, நம்ம சூழலை புரிஞ்சுகிட்டு
மாப்பிள்ளை கூட்டிட்டு போயிருந்தாலும் நாமலே அவங்களை கூப்பிட்டுகறது தானே முறை!
அதைப்பற்றி பேச போயிருந்தேன். அப்படி போன இடத்துல அங்கிருக்கவங்க கிட்ட ஒன்னு
இரண்டு வார்த்தை பேசுறது தான் நாகரீகம்.. அப்பாவை உங்களை எல்லாம் விசாரிச்சாங்க
பதில் சொன்னேன்” என்று இறுக்கத்தோடு சொல்ல ராஜி ஜெகாவின் தோளை இடித்து 'பேசு' என்றார்.
“இல்லைங்க மாமாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவர்
எவ்வளவு கஷ்டபடுவார்.. நம்ம குடும்பம் நிம்மதியா இருக்கணும்னு தான் அத்தை
பேசறாங்க..”
“அப்படியா..! எனக்கென்னமோ அடுத்தவங்க நிம்மதியை
கெடுக்கவே அவங்களை பேச விட்டு வேடிக்கை பார்க்கிற மாதிரி தோணுது”
“யார்? யார் வேடிக்கை
பார்க்கிறா..? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க, அத்தைக்கு ஆதியும் நீங்களும் இந்த விஷயத்தை சொல்லாம விட்டதுல கொஞ்சம்
வருத்தம்” என்ற ராஜி பதற்றத்தோடு பார்த்தார்.
“மாப்பிள்ளையோட குடும்ப விஷயத்துல உதய்
எங்கிருந்து வந்தான்..?”
“இல்லைங்க ஆதி சொல்லிதானே மாப்பிள்ளை அவங்க
வீட்ல தங்க வச்சுருப்பாங்க அதுதான் அக்கா சொல்றாங்க..”
“உதய் சொல்லித்தான் மாப்பிள்ளை செய்றார்னா என்ன
சொல்ல வர நீ..! ஒருவேளை மாப்பிள்ளைக்கு சுயமா யோசிக்க தெரியாதுன்னு சொல்றியா..?”
“ஏங்க அப்படியெல்லாம் இல்லை.. ஆனா அவங்க ஏன்
இந்த குடும்பத்தை..” என்றவரை இடையிட்ட அமபலவாணன்,
“அது அவங்க விருப்பம் யாரை வேண்டுமானாலும்
அவங்க வீட்ல கொண்டு வந்து வைப்பாங்க நாம ஏன்னு கேள்வி கேட்டுட முடியுமா..? நாளைக்கே உன் அக்கா நம்ம வீட்ல இருக்கிறதை பற்றி யாராவது கேள்வி
கேட்டா....” என்று அம்பலவாணன் முடிக்கும் முன்னமே ராஜியின் முகம் கன்றி கறுத்து
போனது.
“ஏங்க என் கூட பிறந்தவளும் அவங்களும் ஒண்ணா..?
அக்காக்கு நம்மை விட்டா யார் இருக்கா..?” என்று
ராஜியை பார்த்த ஜெகாவிற்கோ இத்தனை வருடங்களாக இல்லாமல் கணவரிடம் இருந்து
வந்துவிட்ட ஒரு சொல் சட்டென கண்களில் நீர் கோர்க்க செய்துவிட்டது...
பதில் பேச முடியாமல் கலங்கிய விழிகளோடு கணவனை பார்த்தவரின்
நெஞ்சம் வெதும்பியது.
“நான் கேட்ட கேள்விக்கு பதில்” என்று
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவர் புருவமேற்றி பார்க்கவும்,
“ஏங்..க ஏன்.. திடீர்னு இப்படியெல்லாம்
பேசறீங்க..?” என்று தழுதழுத்த குரலில் கேட்டுக்கொண்டே ராஜியை
ஒட்டி நின்றவர், “ப்ளீஸ் இப்படி பேசாதீங்க அக்காவால தாங்க
முடியாது” என்று சொல்ல ராஜியின் கண்களும் குளம் கட்டியிருந்தது.
இருவரையும் அழுத்தமாக பார்த்தவர், “நான்
பேசலை ஈஸ்வரி நீ தான் பேச வச்ச..! நம்ம வீட்ல யார் இருக்கலாம் இருக்க
கூடாதுங்கிறதை எப்படி அடுத்தவங்க முடிவு பண்ண முடியாதோ அதேபோல நாமளும் அடுத்தவங்க
வீட்ல அதிகாரம் பண்ண முடியாது.. அதுவும் நம்ம பொண்ணு வாழ போயிருக்க இடத்துல
செய்யவேகூடாது அது அவங்க விருப்பம்” என்று அனைவரின் வாயையும் அடைத்துவிட்டார்.
அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் அனைவரும் ஒருவர்
முகத்தை ஒருவர் பார்த்திருக்க அம்பலவாணன் மீண்டும் உணவருந்த தொடங்கினார்.
மெல்ல குரலை செருமிய ஜெகா, “இல்லைங்க அது.. அதுவந்து
இத்தனை நாளா என்கிட்டே கூட சொல்லாம நீங்க அங்க போயிட்டு வந்துட்டு...” என்ற
மனைவியின் பேச்சில் தலை நிமிர்த்தியவர்,
“எப்போயிருந்து நீ என்னை வேவு பார்க்க
ஆரம்பிச்ச..?” என்று நிதானமாக அதேசமயம் அழுத்தமான குரலில்
கேட்க கணவரின் வார்த்தையில் தெறித்த அனலில் அதிர்ந்து போனார் ஜெகா..
“அம்பலா என்னப்பா பேசுற..? மருமக எதார்த்தமா தான் கேட்டா நிவியும் குழந்தையும் கண்ணுலேயே இருக்கிறதா
சொல்லிட்டு இருந்தா..” என்று அன்னபூரணி முட்டு கொடுக்க முயல அவையெல்லாம் தூள்
தூளாகி போனது அம்பலவானின் அடுத்த கேள்வியில்.
“அப்படியா..! அப்போ அதை என்கிட்டே நேரடியா
கேட்டிருக்கணும் நான் கூட்டிட்டு போயிருப்பேன்... இப்படி உங்களை கேட்க சொல்லி
அதுவும் சாப்பிட உட்கார வச்சுட்டு கேட்கிறதுக்கு பேர் எதார்த்தமா ம்மா..?” என்றவர் பாதி சாப்பாட்டிலேயே கைகழுவிட அதை கண்டு பதறி போனார் ஜெகதீஸ்வரி.
Comments
Post a Comment