வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 57

 


குமாரின் தம்பி கஞ்சா வழக்கில் கைதானதில் கை ஒடிந்தது போலாகி இருந்தது சரத்தின் நிலை!!

பின்னே குமாரை விடவும் அவன் தம்பிக்கே வேலூர் அத்துபடி.. சரத்துக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் கொடுத்து விடுவான். அவன் திடீரென கைதானதற்கு உதய்யை தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்று யூகித்திருந்தவனுக்கு உதய்யை கொன்று கிழிக்கும் வெறி.

அதோடு கோர்ட்டில் இரண்டாவது சம்மன் வரவும் சரத்தின் கோபம் கரையை கடந்திருந்தது அதுநாள் வரை தளிரை கண்காணிக்க ஆள்களை நியமித்திருந்தவன் அவள் கைப்பேசிக்கு அழைப்பு  விடுத்து கொண்டே தான் இருந்தான். ஆனால் தளிர் புதிதாக வந்த எந்த எண்ணில் இருந்தும் அழைப்பை ஏற்காததால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

பலமணி நேர யோசனைக்கு பின்னர் அன்று தன்னை பார்க்க வந்திருந்த குமாரின் தம்பி மனைவியின் எண்ணில் இருந்து அழைக்கவும் எடுத்திருந்தாள்.

தளிர் ‘ஹலோ’  என்றது தான் தாமதம், “நான் அவ்வளவு சொல்லியும் நீ கேஸ் போட்டிருக்கேன்னா நான் சொன்ன வார்த்தையை நீ மதிக்கலைன்னு தானே அர்த்தம்..! என்ன தளிர் நான் சும்மா சொன்னேன்னு நினைச்சியா..? என்று ஆக்ரோஷமாக சிரித்தவன்,

"இதோபார் ஒருமணி நேரத்துக்குள்ள எங்கிருந்தாலும் நீ என்கிட்டே வந்திருக்கணும் இல்ல விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கு.. உன் நம்பரை ட்ரெஸ் பண்ண சொல்லி இருக்கேன். நானா உன்னை தேடி வந்தா போன முறை மாதிரி குடும்பமானம்னு கதவை சாத்திட்டு பேசமாட்டேன்.. ஊரை கூட்டி நியாயம் கேட்பேன் இன்னும் கேவலப்பட்டு போயிடுவ..” என்றிட இத்தனை நாள்களாக சரத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த தளிரை உதய் அனுமதித்திருக்க வேண்டுமே..!

எங்கே! ராகவன் வீட்டில் கொண்டு வந்து விட்டவன் அவனனுமதி இல்லாமல் அவளை எங்குமே செல்ல அனுமதிக்கவில்லை.. அவள் மட்டுமல்ல தென்றல் சீதா இருவருமே அத்தியாவசியம் இல்லாமல் வெளியில் செல்ல அனுமதிக்கபடவில்லை.. 

அப்படியே செல்வதானாலும் காரில் உரிய பாதுகாப்போடும் துணையோடும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் தளிர் வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்வதாக இருந்தாலும் நிவியோ தென்றலோ அவளோடு துணை இருப்பர்... இதில் எங்கிருந்து வீட்டை விட்டு அவள் செல்வது..?

உதய் அன்று ஷோரூமில் இறுதியாக தளிரை சந்தித்தது தான் அதன்பிறகு அவளின் மொத்த பொறுப்பையும் ராகவனிடம் கொடுத்து விட்டிருந்தான். இடையில் தளிர் அவனை சந்திக்க வேண்டும் என்று ராகவனிடம் சொன்ன போதும் 'கணக்கை தீர்ப்பதாக இருந்தால் மட்டுமே இனி அவன் முன்னே வரவேண்டும்' என்று வேறு சொல்லிவிட்டான்..

இப்போது  சரத் பேசவும் சில நிமிடங்கள் தீவிர யோசனையில் இருந்தவள் பின் “அண்ணா நான் சரத்தை பார்க்கணும்” என்று ராகவன் முன் நின்றிருந்தால்.

என்னம்மா திடீர்னு இந்த முடிவு..?” என்று திகைப்போடு கேட்டவனிடம்  அவன் அழைத்ததை சொன்னவள்,

நான் கேஸ் ஃபைல் பண்ணின கோபத்துல அவன் எதையும் செய்வாண்ணா ஆனா அதுக்குள்ள அவனை ஸ்டாப் பண்ணனும். அது நான் நேரில் சந்திச்சு பேசினா மட்டும் தான் முடியும் ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ராகவனுக்கு உதய்யிடமிருந்து அழைப்பு வந்தது.

மச்சான் தளிரை கூட்டிட்டு போ” என்றதில் மேலும் அதிர்ந்து போனான்.

டேய் லைன்ல இருக்கியா..?”

எதுக்கு மச்சான் இந்த ரிஸ்க்? வேண்டாம்டா”

ப்ச் ஹாஸ்பிட்டல்ல நீ கூட இருக்கிறப்போ அவன் என்ன பண்ணிட முடியும்..? அவன் தளிர் கிட்ட பேசறது எல்லாமே அவனுக்கு எதிரான எவிடென்ஸா மாறும் அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு ஏன் விடனும்..?”

ஆனா..?”

டேய் நான் வரமுடியாது அதுதான் நீ கூட இருக்கியே! உமா கிட்டயும் பேசிட்டேன் நம்மை மீறி எதுவும் நடக்காது..” என்றதில் தளிரை அழைத்து கொண்டு கிளம்பினான்.

மச்சான் தளிர் என்னை வரவேண்டாம்னு சொல்லி அவனை பார்க்க தனியா போயிருக்கு.. இப்போ உள்ள இருந்தவங்களையும் வெளியே அனுப்பி கதவை சாத்திடுச்சு. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா” என்று சரத் அனுமதிக்க பட்டிருந்த அறையின் வெளியே நின்றிருந்த ராகவன் பதட்டத்தோடு சொல்ல,

மச்சான் அங்க பேசறதை நான் கேட்டுட்டு தான் இருப்பேன், பதட்டபடாத ஹாஸ்பிட்டல்ல அவன் ஒன்னும் செய்திட முடியாது..! உமாகிட்ட அதுக்கான ஏற்பாடு பண்ணிட்டு தான் அனுப்பியிருக்கேன்”

இல்ல மச்சான் தளிரை அவன் ஏதாவது..”

ப்ச் என் பொண்டாட்டி  சுயநினைவோடு இருக்கிறப்போ அவ நிழலை கூட அவனால தொட முடியாது... அப்படியே ஏதாவது கண்ட்ரோல் பண்ண முடியாத நிலைமைன்னா அடுத்த நிமிஷம் வேலு வந்துடுவான்” என்று சொல்லவும் தான் ஆசுவாசம் கொண்டான் ராகவன்.

தன் எதிரே வந்து நின்ற தளிரை கண்டதும் “இரண்டு நாளுல வரேன்னு சொன்ன நான் வரலைன்னதும் உங்களுக்கு குளிர் விட்டுப்போச்சா..? உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும் உன்னால என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது தளிர்.. நான் அவ்வளவு சொல்லியும் எதுக்காக கேஸ் கொடுத்த..? முதல்ல அதை வாபஸ் வாங்கு இந்த வாரமே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

முடியாது” என்றாள் அழுத்தமான குரலில்.

ஏன்..? ஏன் முடியாது.. வீணா இந்த கேஸை போட்டு நீ இன்னும் தான் அசிங்கபடப்போற உன் நல்லதுக்கு தான் சொல்றேன் கேஸை வாபஸ் வாங்கிட்டு என்னோட கிளம்பு”

கேஸை வாபஸ் வாங்க முடியாதுடா உன்னால முடிஞ்சதை பார்” என்றதும் இருவரும் அப்பார்மென்ட் அறையினுள் செல்லும் வீடியோவை காண்பித்து,

இப்பவே உன் ஹீரோக்கு நான் இதை அனுப்புவேன் தளிர்  இதை பார்த்த பிறகு நிச்சயம் அவன் உன்னை திரும்பிகூட பார்க்கமாட்டான்”

“அவர் பார்க்கணும்னு நானே எதிர்பார்க்காதப்போ உனக்கு ஏன்டா அந்த அக்கறை..? அனுப்பு அவருக்கு” என்று நிமிர்வோடு நின்றிருந்தாள் தளிர்.

வேண்டாம் தளிர் நான் சொன்ன மாதிரி செய்வேன்....”

அதைதான் செய்ன்னு சொல்றேன்..”

அதுக்கு அப்புறம் உனக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போயிடும்..”

இப்போ மட்டும் இருக்கிறதா உனக்கு நினைப்பா..? உன்னை ஃப்ரெண்டா ஏத்துக்கிட்ட தோஷத்துக்கு விலை என்னோட மானம், மரியாதைங்கிறதை ஏற்கனவே எனக்கு புரிய வச்சுட்டியே இனி புதுசா வேற என்ன இருக்கு..! 

இந்த தண்டனை எனக்கு தேவை தான்! சந்தோஷமா ஏத்துக்கறேன் நீ அவருக்கு அனுப்பிட்டு சோஷியல் மீடியாவுலயும் அப்லோட் பண்ணு எனக்கு பிரச்சனை இல்லை” என்று கைகளை மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு தளிர் சொல்ல திகைப்புடன் அவளை பார்த்தான்.

அப்போ அப்போ அவனோட வாழ மாட்டியா..? உனக்கு அவன் வேண்டாமா..?”

வேண்டாம்”

இல்ல பொய்...! பொய் சொல்ற தளிர் எனக்கு நல்லா தெரியும் என்னை ஏமாத்தி டிவோர்ஸ் பண்ணிட்டு அவனை கட்டிகிட்டு கூத்தடிக்க தானே வாபஸ் வாங்க மாட்டேன்னு சொல்ற!! எனக்கு தெரியும்டி எனக்கு நல்லா தெரியும்... என்னை யாரும் ஏமாத்த முடியாது உன் மனசுல அவன் இருக்கான் அவனுக்காக தான் நீ என்னை வேண்டாம்னு சொல்ற..?”

டேய் பைத்தியாமாடா  நீ! ஏன் இப்படி உளறிட்டு இருக்க? அவர் வேணும்னு நினைக்கிறவ இந்த வீடியோவை அனுப்ப சொல்லுவேனான்னு யோசிக்க மாட்டியா? எனக்கு அவர் வேண்டாம்னா வேண்டாம் தான்! புரியுதா..?” என்றவளிடம் அத்தனை உறுதி.

அப்போ வா நாளைக்கே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று அவள் கையை பிடிக்க வரவும்  மேஜையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து அவன் உள்ளங்கையில் ஆழமாக கோடிழுத்திருந்தாள்.

கிழிபட்ட இடத்தில் உடனே குருதி வெளியேற “என்ன பண்ற தளிர்..?” என்று கையை உதறியவனிடம்,

இன்னொரு முறை என்மேல உன் விரல் பட்டுச்சு கையே இருக்காதுடா”

ஏன் தளிர் இப்படி பேசற..? உனக்கு என்னோட காதல் புரியலையா?”

ஏன் புரியாம அதுதான் ஜட்டி பனியன்ல என் ஃபோட்டோவை போட்டதோடு நிறுத்தாம என் வீட்டுல கேமரா வச்சதுலயே உன் லவ் எப்படிபட்டதுன்னு நல்லாவே புரிஞ்சதுடா..” என்றாள் அடக்கப்பட்ட கோபத்தோடு..

ஏன்டா என் பெட்ரூமையும் பாத்ரூமையும் விட்டுட்ட..? அங்கயும் கேமரா வச்சிருந்தா உன் காதல் இன்னும் பெருமையானதா இருந்திருக்குமே!” என்று கேட்டுக்கொண்டே இடியென அவன் கன்னத்தில் தன் கரத்தை இறக்கினாள்.

என்ன தளிர் பேசுற! நான் ஒன்னும் மட்டமானவன் கிடையாது.. நீ என்னோட உயிர் தளிர்..! உன்னை போய் நான் எப்படி தப்பா பார்ப்பேன்..? இத்தனை வருஷமா நீ என்கூட இல்லைன்னாலும் உன்னை பார்த்துட்டு இருந்ததால மட்டும் தான் உயிரோட இருந்தேன் தெரியுமா..? உன்னோட வீடியோஸ் தான் என்னை உயிரோட வச்சிருக்கு இல்லன்னா நான் எப்பவோ செத்திருப்பேன்..” என்றவன் தன் கைபேசியை எடுத்து அதில் இருந்த டாக்குமென்ட்டை திறந்து,

நீ என்னை தப்பா புரிஞ்சிருக்க, உன்னை நான் எந்த அளவு உன்னை லவ் பண்றேன்னு உனக்கு இப்போ புரியும் தளிர்” என்றவன் கைபேசியை நீட்டி,

இதோ பார்த்தியா என்னோட சொத்து, பணம், பங்களா, கார்னு எல்லாமே உன் பேருல உயில் எழுதி இருக்கேன். உயில் மட்டுமில்ல மார்கெட்ல இருக்க ஷேர்ஸ், இன்வெஸ்ட்மென்ட்ஸ் இவ்வளவு ஏன் தளிர் என்னோட உயிர்கூட உனக்கு தான்..! இப்பவும் ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிற..? ப்ளீஸ் தளிர்..” என்று பேத, தண்டம் அவளிடம் பலிக்காததில் இறுதியாக சாமத்தை கையிலெடுத்து காதல் யாசகம் கேட்டு நின்ற போதிலும் தளிரின் முடிவில் சிறு மாற்றமில்லை.

*********************

உன்மேல உயிரா இருக்கிற உனக்கு நான் வேண்டாமா தளிர்..? உனக்காகவே இத்தனை வருஷமா காத்திருக்க என் காதலை விட உனக்கு அவன் முக்கிய..” என்றவன் மேலும் தொடரும் முன் “வாயை மூடு” என்று ஓங்கி அவன் கன்னத்தில் அடித்தவள்,

டேய் இன்னொருமுறை நீ செய்த கருமத்தை காதல்னு சொன்ன நடக்கிறதே வேற..! இடியட், உனக்கு என்மேல இருக்கிறதுக்கு பேர்  obsession! உனக்கு மெடிக்கல் ஹெல்ப் தேவை அது உனக்கு புரியுதா இல்லையா..ஆறு வருஷத்துக்கு முன்னாடியே நீ வேண்டாம்னு முடிவு செய்தவ நான்.. அவரை எனக்கு ஆறு மாசம் கூட தெரியாது அப்புறம் ஏன்டா அவரை இதுல இழுக்குற..? இதோபார் என்னோட லைஃப்ல இனி யாருமே இல்லை எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை உன் மரமண்டையில ஏத்திக்கோ”

இல்ல நான் நம்ப மாட்டேன் தளிர் கண்டிப்பா நம்ப மாட்டேன். அவனை வேண்டாம்னு சொல்றவ எப்படி... எப்படி உன்னை கட்டிபிடிச்சு முத்தம் கொடுக்க விடுவ?” என்றவன் உதய் தளிரை முத்தமிடும் காணொளியை காண்பித்து,

நீ நெருப்புன்னு எங்களுக்கு தான் தெரியும்..! ஆனா அவனை எப்படி கட்டிபிடிக்க விட்ட..?” என்றவன் கையில் இருந்த கைபேசியை பிடுங்கி தரையில் அடித்து உடைத்தவள்,

இதுக்கு மேல வார்த்தை தடம் புரண்டுச்சு நான் பொறுமையா இருக்க மாட்டேன்டா..” என்று எச்சரித்தாள்.

இல்ல இல்ல சொல்லு தளிர், நீ சொல்லு அப்படியென்ன என்கிட்டே இல்லாதது அவன் கிட்ட இருக்கு” என்று வெறி பிடித்தார் போல தலையை பிடித்துக்கொண்டு அறைக்குள் அலைந்து ஒருகட்டத்தில் தன் நடையை நிறுத்திவிட்டு,

அவன்.. அவனை விட நான் நல்லாவே கிஸ் பண்..” என்றவனின் வார்த்தைகள் 'ம்மாஆஆஎன்ற அலறலோடு பாதியிலேயே நின்று போனது தளிர் அவன் வாயை குறி பார்த்து எறிந்த க்ளுகோஸ் பாட்டிலால்.

இன்னொரு வார்த்தை பேசின கொன்னுடுவேன் நாயே” என்றிட வாயை பொத்திக்கொண்டு வலியோடு அவளை பார்த்திருந்தான்.

என்ன சொன்ன? என்னை கிஸ் பண்ணிடுவியா? எங்க தைரியமிருந்தா பக்கத்துல வாடா பார்ப்போம்” என்று அவன் முன்னே அழுத்தமாக கைகளை கட்டிக்கொண்டு நின்ற தளிரை கண்டவனின் கருவிழிகள் அசைவற்று போனது.

உன்கிட்ட தான் சொல்றேன் சொன்னதை செய்..!” என்ற தளிரின் முகத்தில் என்றுமில்லா ரௌத்திரம்.

இத்தனை நாள் உன்னோட அட்டூழியத்தை எல்லாம் பொறுத்துகிட்டு நான் அமைதியா இருக்கிறதால எனக்கு கோபமில்லைன்னு நினைச்சுட்டு இருக்கியா? சொல்லபோனா உன்னை இங்கயே இப்படியே பிச்சு பிச்சு போடற அளவுக்கு ஆத்திரமிருக்குடா ஆனா நான் அதை செய்ய மாட்டேன்”

ஏன்..? ஏன் செய்ய மாட்ட..? எனக்கு தெரியும் தளிர் என்ன தான் கோபம் இருந்தாலும் உனக்கு எப்பவுமே என்மேல பாசம் அதிகம், உனக்கு ரொம்ப நல்ல மனசு உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது ஆனா அவன் தான் உன்னை இப்படி மாத்தி வச்சிருக்கான், அவன் உனக்கு வேண்டாம் சொன்னா கேளு”

எனக்கு நீ வேண்டாம்னு சொல்றேன் உனக்கு அது  புரியலையாடா..?”

ப்ளீஸ் இப்படி பேசாத தளிர் உன்னை அவன்.. அவனை” என்றவனை இடையிட்டு,

மரியாதை!” என்றவளின் குரலில் அத்தனை கடுமை.

ஓகே அவர்.. அவர் தான் நான் இங்க ஹாஸ்பிட்டல்ல இருக்க காரணமே உனக்கு தெரியுமா தளிர், அவர் என், எனக்கு... என்னால” என்றவனுக்கு வார்த்தைகள் தந்தியடிக்கவும்,

என்ன உனக்கு புத்திர பாக்கியமே இல்லாம பண்ணிட்டார் அதுதானே..!” என்றாள் எள்ளலாக.

உனக்கு தெரியுமா தளிர்..?”  என்று அதிர்ச்சியோடு கேட்டவன்அப்புறம் எப்.. எப்படி இந்த மாதிரி மோசமானவரோட வேண்டாம் தளிர் அவர்..” என்றவனின் உளறலை கை நீட்டி தடுத்தவள்,

என் அப்பா இருந்திருந்தா என்ன செய்திருப்பாரோ அதை தான் அவர் செய்திருக்கார்! இதுல என்ன தப்பு..?”

தளிர் நீயா இப்படி பேசற..? இல்ல என்னால நம்ப முடியலை. எனக்கு நல்லா தெரியும் உனக்கு அடுத்தவங்க கஷ்டபட்டா மனசு தாங்காது இப்போ இப்படி பேசுறன்னா அவ..” என்று ஆரம்பித்தவன்,

அவர் அவர் தான் உனக்கு ஏதோ வசியம் பண்ணி இருக்கார்.. அதனால் தான் சொல்றேன் நீ என்னோட வந்துடு ப்ளீஸ்” என்று அவள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்திருந்தான்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17