வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 59

 


“லிசென் மதன் பெண்கள் வீட்டுக்குள்ள இருந்த காலம் முடிந்து படிப்பு, வேலைன்னு சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டவர்களாகவும் வெளி உலகத்தை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. அப்படி ஸ்கூல், காலேஜ், வேலை செய்யுமிடம், பொது இடங்களுக்கு வரக்கூடிய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டு இருக்கு இதை யாருமே மறுக்க முடியாது...”

“இருபது ஆண்டுகளுக்கு முன்னாடி Child infanticide, dowry, Domestic Violence மட்டுமே பெண்களுக்கு எதிராக அறியப்பட்ட குற்றமாக இருந்துவந்த நிலை மாறி இப்போ இந்த டெக்னாலஜி யுகத்துல பெயரிட முடியாத அளவிற்கு அவர்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் புதுபுது வடிவமெடுத்து இருக்கு”

“இந்த நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி தைரியமாக முன்வந்து புகார் கொடுக்கும் பெண்களின் எண்ணிகை மிகவும் குறைவானதே..! அப்படியே புகாரளிக்க போலீஸ் ஸ்டேஷன் போனாலும் அதை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பல இடங்களில் தப்பு செய்தவனுக்கு வார்னிங் கொடுத்தும் சமரசம் பேசியும் அனுப்பிவிடுவது தவறு செய்பவர்களுக்கு சாதகமாக போயிடுது..”

“....”           

“முதல்முறை தவறு செய்பவர்கள் இந்த மாதிரியான சமரச பேச்சால் தப்பிக்கையில் அவங்களுக்கு அடுத்து என்ன செய்தாலும் சட்டத்தில் இருந்து எளிதாக தப்பிக்கலாம் என்ற நம்பிக்கையும் கூடவே அலட்சியத்தையும் கொடுக்குது. அதுவே அவர்களை மீண்டும் தவறு செய்ய தூண்டுது.... அது சில நேரம் தனக்கு இணங்காத பெண்ணை கொலை செய்யும் அளவுக்கு கூட போயிடுது...”

“அப்படிப்பட்ட பெண்களுக்காக ஏற்படுத்தபட்டது தான் பெண்கள் வன்கொடுமை சட்டம்..!!”

“நீங்க நினைக்கிற மாதிரி Sexual haraasment மட்டுமே பெண்களுக்கு எதிரானது கிடையாது... Psychological Harassment, Discriminatory Harassment, Personal, Physical, Verbal, Power, Racial, Online Harassment அதாவது Cyberbullying, Stalking, Hazing ....”

“இவ்வளவா மேடம்..?”

“இல்ல! இன்னும் இருக்கு., நான் அதையெல்லாம் சொல்லிட்டு இருந்தா இது தளிர் வழக்குக்கான பேட்டியா இருக்காது லா கிளாஸ்ஸா மாறிடும் அதனால் குற்றம் நிருபிக்கபடாத வரையில் தளிரை குற்றவாளியா பார்க்கிறதை முதல்ல நிறுத்துங்க..” என்பதை மதனுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் சேர்த்து கேமராவை பார்த்து சொல்ல மதன் முகத்தில் புன்னகை.

“நீங்க ரொம்ப ஜோவியலா இருக்கீங்க மேடம்.. எப்படி இவ்ளோ சீரியஸான கேஸை கூலா ஹாண்டில் பண்றீங்க..?” என்று கேட்டு முடிக்கும் முன்னமே..,

“அதுக்கான க்ரெடிட்ஸ் நீங்க என் ஹஸ்பண்ட்க்கு தான் கொடுக்கணும்” என்று புன்னகைத்தாள்.

“...”

“மதன் எப்பவும் பணத்துக்காக அநியாயத்தின் பக்கம் நிற்ககூடாது என்பது என்னோட கொள்கை..! அதேபோல தீர விசாரிக்காம பெண் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே ஒரு வழக்கை எடுப்பதில்லை... அன்ட் நீங்க கேட்ட கேள்வி எப்படி கூலா ஹாண்டில் பண்றேன் என்பது தானே..?” என்றதும் ஆமென்று தலையசைத்தான்.

“என்னோட கிளைன்ட் பக்கம் தப்பு இருந்தா தான் எனக்கு தடுமாற்றமும் பயமும் வரும்... தளிரையும் அவங்களை சார்ந்தவங்களையும் தீர விசாரிச்ச பின்னாடி தான் வழக்கை எடுத்திருக்கேன் இன்னும் ஆபோசிட் பார்டி வரலை அதன்பிறகு வழக்கின் நகர்வுகள் தெரியவரும். அதுவரை காத்திருங்க” என்று அலர் பேட்டியை முடித்ததும் மதன் நன்றி சொல்லி அவன் குழுவோடு வெளியேற “ஒருநிமிஷம் மதன்” என்றாள்.

“சொல்லுங்க மேடம்”

“நான் லிஸ்ட் போட்டதுல எத்தனை ஹாராஸ்மென்ட் பசங்க ஃபேஸ் பண்ணியிருக்கீங்க சொல்லுங்க..?”

“அது.. அதுவந்து மேடம்..”

“இல்ல தம்பி பொண்ணுங்களால பசங்க பாதிக்கபடறதா சொல்லி உங்க கஷ்டத்தை கேட்க கூட ஆளில்லைன்னு சொன்னீங்களே அதுதான் ஜஸ்ட் ஒரு கியூரியாசிட்டில தெரிஞ்சுக்க கேட்டேன்.”

“இல்ல...” என்று அவன் பதிலளிக்க முடியாமல் தலைகுனிந்து நிற்க.,

“இனி எந்த பெண்ணையும் தப்பா பேசும் முன்ன அவளுக்கு எதிரான ஃபோட்டோ வீடியோஸ்க்கு பின்னாடி இருக்க கூடிய வலி என்னன்னு தெரிஞ்சுட்டு வந்து பேசுங்க.. அதுவும் உங்களை போல பவர்ஃபுல் மீடியம்ல இருக்கிறவங்க போற போக்குல கமென்ட் பண்ணிட்டு போறது இல்லை பெண்ணோட வலியும் வேதனையும்..!! அதெல்லாம் அனுபவிச்சா மட்டுமே புரியும்.”

“எப்போவாவது ஃப்ரீயா இருந்தா ஆஃபீஸ் வாங்க நான் ஒரு நாலு கேஸ் ஹிஸ்டரி கொடுக்கறேன் படிச்சு பாருங்க அதுல பத்து பர்சன்ட் கூட நீங்க அனுபவிச்சு இருக்க மாட்டீங்க.. இவ்வளவு ஏன் பேனா மைக்கு பதிலா கண்ணீரால் நிரப்பப்பட்ட அந்த பெண்ணோட வாக்குமூலத்தை உங்களால முழுசாகூட படிக்க முடியாது அந்தளவு ரணமா இருக்கும்..” என்று கடுமையான குரலில் சொல்ல,

“ஸாரி மேடம் அது பசங்க லவ் ஃபெயிலியர்ல பேசுனதை வச்சு ஏதேதோ சொல்லிட்டேன் இனி இப்படி பேச மாட்டேன்” என்று வெளியேற நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்தவளுக்கு காலை சீதாலக்ஷ்மி பேசி பேச்சுக்களே மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.

தலையை குலுக்கிக்கொண்டு நிமிர்ந்தவள் உடனே கைபேசியை எடுத்து, “டேய் மாமா எங்க இருக்க..? சீக்கிரம் வாடா” என்றாள்.

“குழந்தைகளை டியூஷன்ல விட்டுட்டு வரேன்னு சொன்னேனேடி..?”

“ப்ச் எனக்கு உன்னை உடனே பார்க்கணும் மாமா” என்ற மனைவியின் குரலில் இருந்த பேதத்தை கண்டுகொண்டவன்,

“கிட்ட வந்துட்டேன்டி பட்டு ஒரு டென் மினிட்ஸ்” என்றதும் “சரி மாமா” என்று கண்களை மூடி அமர மாமி என்று அவளுக்கான காபியை கொண்டு வந்திருந்தாள் வேதா.

*********************

 “இதை நீ குடி வேதா! உங்க மாமா வராரு நான் அவரோட குடிச்சுக்கிறேன்” என்றதும் அலர் எதிரே அமர்ந்தவளிடம்,

“புனிதா கேஸ்ல ஜட்ஜ்மென்ட் என்னைக்கு...?”

“ஜஸ்டீஸ் மஞ்சுளா நெக்ஸ்ட் மந்த் சொல்லியிருக்காங்க மாமி..! அஞ்சனா குழந்தையோட கஸ்டடி கேட்டிருந்தோமே அதுல கவுன்சிலரை மீட் பண்ணின பிறகும் அவங்க முடிவுல மாற்றம் இல்லைன்னு சொல்லிட்டாங்க..”

“ஹ்ம்ம்”

“அப்புறம் நிலாவோட ஹாராஸ்மென்ட் கேஸ்க்கு நாளைக்கு மதியம் டைம் கொடுத்திருக்காங்க..  தகவல் சொல்லிட்டேன் வந்துடுவாங்க..”

“ஆப்போஸிட் பார்டி!!”

“தெரியலை..”

“அவன் தான் ஏற்கனவே இரண்டு ஹியரிங் வரலையே அடுத்த ஹியரிங்கும் வராம இருந்தா நமக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சுடும், பார்ப்போம்” என்றவள் மற்ற ஜூனியர்களிடம் கொடுத்திருந்த வழக்கு தொடர்பான அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டவள்,

“சரி எதுக்கும் ஃபாலோ அப்ஸ் எல்லாம் ஒருமுறை செக் பண்ணிட்டு நீங்க எல்லாரும் கிளம்புங்க நான் உன் மாமாவோட வரேன்” என்றதும் அவர்களுக்கான காஃபியை ப்ளாஸ்கில் கொண்டு வைத்தவள் வெளியேற அவளெதிரே வந்திருந்தான் அகனெழிலன்.

வேதாவிடம் பேசிவிட்டு எழில் உள்ளே நுழைந்தது தான் தாமதம் அடுத்த நிமிடமே “மாமா” என்று ஓடிசென்று எழிலை கட்டிகொண்டாள்.

“ஹே என்னடி பண்ற அதுவும் ஆபிஸ்ல! கதவு திறந்திருக்கு” என்றதும் உடனே சென்று கதவடைத்து விட்டு வந்தவள் மீண்டும் இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

“பட்டு கேமரா இருக்கு! மாமாவும் அவிரனும் பார்த்துட்டு இருப்பாங்கடி”

“அதெல்லாம் அப்போவே ஆஃப் பண்ணிட்டேன்டா...  கொஞ்சம் அமைதியா இரேன்” என்றதில் தானுமே அவளை கட்டிக்கொண்டவன்,

“இன்டர்வியூ நல்லபடியா முடிஞ்சதாடி..?”

“ஹ்ம்ம் அதெல்லாம் நல்லாத்தான் போச்சு..” என்றதில் எழிலின் நெற்றி சுருங்கி விரிய.,

“யாரைடி பேசின இன்னைக்கு..?” என்று அலரை சரியாக கண்டுகொண்டு கேட்டான்.

“எப்படி மாமா அந்த அம்மாவால இப்படி செய்ய முடிஞ்சது..?”

“எந்த அம்மாடி..?”

“இளந்தளிரோட அம்மா!”

“அவங்களா..? ஏன் என்னாச்சு..?” என்றவன் அங்கிருந்த சோஃபாவில் மனைவியை அமர்த்தி தண்ணீரை எடுத்து கொடுக்க குடித்தவள், தன்னருகே அமர்ந்தவனின் மடியில் வசதியாக அமர்ந்து கழுத்தை கட்டிக்கொண்டாள்.

“அமுலு”

“சீதா அம்மா செஞ்ச காரியத்தை என்னால தாங்கவே முடியலைடா சரியா திட்டி விட்டுட்டேன்.. அதுமட்டுமில்ல மாமா இதுவரை என்னோட கிளைன்ட்ஸ் யாரையும் இந்தளவு ரூடா ஹாண்டில் பண்ணினது கிடையாது .. ஆனா அவங்க செய்ததை என்னால அக்செப்ட் பண்ணிக்கவே முடியலை..” என்று எழிலின் தோளில் முகம் புதைத்துக்கொள்ள அவள் முதுகை ஆதூரமாக வருடியவன்,

“அப்படி என்னடி பண்ணினாங்க..?”

“தளிரை கூட்டிட்டு ஃபிங்கர் டெஸ்ட்க்கு போயிருக்காங்கடா”

“டெஸ்ட் தானே எடுத்தாங்க அதுக்கு ஏன்டி திட்டின..? எடுத்ததும் கோபப்படாத பொறுமையா விசாரின்னு எத்தனை முறை தான் சொல்றது..? இப்படி பேசியே வர கிளைன்ட்ஸ்...” என்றவனை இடையிட்டு,

“டேய் லூசு மாமா! அவங்க எடுத்தது ஃபிங்கர் பிரிண்ட் இல்ல டூ ஃபிங்கர் டெஸ்ட்டா!!...”

“...”

“ப்ச் வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்திருக்காங்க மாமா”

“என்னடி சொல்ற..? அந்த பொண்ணு மேல எந்த தப்புமில்லைன்னு சொன்னியே அப்புறம் ஏன் இப்படி செய்தாங்க...?”

“பெண்ணோட வாழ்க்கையை காப்பாற்ற வேற வழி இல்லைன்னு சொல்றாங்க ஆனா இப்படி செய்ய அவங்களுக்கு எப்படி மனசு வந்தது..? அதுவும் ஆறு வருஷம் வரையிலும் பெண் மேல இருந்த நம்பிக்கை இப்போ எங்க போச்சு..? வேற யாராவது இதை செய்திருந்தாலும் எனக்கு இந்தளவு அதிர்ச்சியா இருந்திருக்காது ஆனா அம்மாவே..! எப்படிடா..? எந்த அம்மாவும் இப்படி செய்ய மாட்டங்க ஆனா இவங்க அந்த சரத் சொன்னதை வச்சுகிட்டு என் பெண் கலங்கமில்லாதவள்னு நிருபிக்க இப்படி செய்திருக்காங்க.. அப்போ நான் எதுக்கு இருக்கேன்..?” என்றாள் ஆதங்கமாக.

 “ஒரு பெண் மீது நடத்தபடக்கூடிய உட்பட்ச வன்முறையே இந்த ஃபிங்கர் டெஸ்ட் தான்..!!”

“சொல்லபோனா இது முழுக்க சரியான ரிசல்ட் தராது. நாங்களே பெரும்பாலும் இதுபோன்ற சோதனைக்கு ஒரு பெண்ணை உட்படுத்துவதற்கு ஒத்துக்க மாட்டோம்... harrasment, molestation மாதிரி தவிர்க்க முடியாத வழக்குகளில் தான் இதை செய்துட்டு இருந்தாங்க. அதுவும் கோர்ட் உத்தரவு படி போலீஸ் பாதுகாப்போடு ஆனா இவங்க சட்டத்துக்கு புறம்பா இதை செய்தது மட்டுமில்லாம அதை என்கிட்டயே கொண்டு வந்து கொடுக்கறாங்க..”

“ஏன்..?”

“கேஸ்க்கு ஆதாரமா இதையும் சேர்க்க சொல்றாங்க. ரிடிகுலஸ்! கேட்டதும்  இவங்க யாருக்கோ நிருபிக்க ஏன் தன் பெண்ணை தானே அசிங்கபடுத்துறாங்கன்னு டென்ஷன் ஆகிடுச்சு...”

“2013 இல் உச்ச நீதிமன்றம் ரேப் விக்டிம்க்கு இது போன்ற சோதனைகள் நடத்த கூடாது since it violates her right to privacy என்று தீர்ப்பு கொடுத்திருக்கு... நம்ம நாட்டுல இதுபோன்ற சோதனைகள் சட்டத்துக்கு புறம்பானது இது ஆர்டிகல் இருபத்தி ஒன்றின் அது ஒருவருடைய அடிப்படை உரிமையை பறிப்பதாகும்.”

“இந்தம்மா தளிரோட சம்மதம் கூட கேட்காம இதை செய்திருக்காங்க.., அந்த பொண்ணு சின்ன வயசுல இருந்து கூட படிச்ச நண்பர்களை நம்பினதை தவிர வேற எந்த தப்பும் பண்ணலை... அதுவும் அவங்க அப்பா அம்மா அனுமதியோட தான் அவளோட நட்பு தொடர்ந்ததால் அதை தப்புன்னு கூட சொல்ல முடியாது மாமா ஆனாலும் அவளுக்கு ஏன் இந்த நிலை..!” என்று ஆவேசமாக கேட்டவளிடம்,

“எனக்கு புரியுது அமுலு...! அப்போ தளிர் விஷயத்துல வேற எங்கே தப்பாச்சு..?

“இந்த காலத்து பிள்ளைகள் கிட்ட இருக்கிற அஜாக்கிரதையும், சிலருக்கு இருக்கிற அலட்சியம் அவங்களை இப்படி கொண்டு வந்து நிறுத்திடுது.”

“என்னடி சொல்ற..?”

“ஆமா மாமா ஆண் பெண் சேர்ந்து படிக்கறதும் வேலை செய்யறதும் இந்த காலத்துல தவிர்க்க முடியாதது... அதுமட்டுமா எங்க போனாலும் வந்தாலும் எல்லாத்தையும்  ஃபோட்டோ, வீடியோ, ரீல்ஸ்ஸா மாத்தறது ரொம்ப சகஜமாகிடுச்சு...”

“ஸ்மார்ட் ஃபோன் வரும் முன்ன நம்ம பர்மிஷன் இல்லாம யாரும் ஃபோட்டோ எடுத்துட முடியாது.. இப்போ அப்படி இல்ல யாரோட பர்மிஷனும் கேட்கபடுவது இல்லை அவர்களோடு விருப்பம் மதிக்கபடுவது இல்லை... தப்பு சரின்னு இல்லாம எல்லாமே சரிங்கிற ஒரு காலகட்டத்துக்கு வந்துட்டோம்..”

“எதெல்லாம் ஒழுக்ககேடா நினைச்சு இருந்தோமோ அதையெல்லாம் இப்போ கோர்ட்டே சரின்னு அங்கிகரிச்சுடுச்சு.. சுப்ரீம் கோர்ட் சமீபகாலமாக வழங்கக்கூடிய சில தீர்ப்புகள் எங்களுக்கே மிகப்பெரிய அதிர்ச்சி..!  இதை எதிர்த்து கோர்ட்ல எவ்வளவு பெட்டிஷன்ஸ், எத்தனை போராட்டம் நடத்தி இருப்போம் தெரியுமா..? ஆனா அதையெல்லாம் தனிமனித சுதந்திரத்தின் கீழ் கொண்டு வந்துடுறாங்க..” என்ற மனைவியின் பேச்சை கூர்ந்து கவனிக்க தொடங்கினான் அகனெழிலன்.

 

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17