“நம்ம படிக்கும் போது ஏதாவது ஃபங்க்ஷன் இருந்தா காலேஜ்க்கு கேமரா கொண்டு போவோம், யாரோட அனுமதியும் இல்லாமல் ஃபோட்டோவோ வீடியோவோ எடுக்க மாட்டோம் ஆனா மொபைல் எல்லார் கைக்கும் கிடைச்சுட்ட பிறகு அதுவும் இந்த செல்ஃபி கலாச்சாரம், சோஷியல் மீடியா அதிகமாகிட்ட பிறகு நிறைய விஷயம் நார்மலைஸ் ஆகிடுச்சு...”
“ஒருமுறை காலேஜ்ல நாங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் ஃபோட்டோ எடுத்துட்டு இருந்தப்போ என்னோட பேட்ச்மெட் ஒருத்தன் என்னோட தனியா ஃபோட்டோ எடுத்துகிட்டான்... என்னோட கேமராலயும் அதை காப்சர் பண்ணிட்டாங்க அதை பார்த்துட்டு அப்பா, எப்படி ஒரு பையனோட தனியா ஃபோட்டோ எடுக்கலாம் அதை முதல்ல கிழிச்சு போட சொல்லிட்டார் நானும் அப்பா என்னோட நல்லதுக்கு தான் சொல்றார்ன்னு கேள்வி கேட்காம அப்படியே செய்துட்டேன்.”
“ஆனா இப்போ அப்படியா இருக்கு..? ஃப்ரெண்ட்ஸ், கூட படிக்கிறவங்க, பழகறவங்கன்னு எல்லாரோடவும் ஏதோ ஒரு நேரத்துல எதார்த்தமா எடுக்கிற ஃபோட்டோ எவ்வளவு ஆபத்தா முடியுது பார்த்தியா..?”
“என்னதான் கவனமா இருந்தாலும் சில விஷயம் நம்ம கட்டுக்குள் இருக்காதுடி செல்லம்..”
“ஆமா மாமா அப்படிதான் இப்போ தளிரோட வாழ்க்கை சிக்கலாகி இருக்கு. வீடு தேடி வந்து அவ வாழ்க்கையை கெடுப்பேன்னு சரத் சொன்னதுல இவங்க ரொம்ப எமோஷனல் ஆகிட்டாங்க ஆனா இதுவரை நான் பார்த்த கேஸ்லயே கட்டிக்க இருந்த மாப்பிள்ளை இப்படி அந்த பெண்ணுக்காக வந்தது இதுதான் முதல் முறை..!”
“அப்படி உதய் உங்க பெண் பக்கம் இருக்கிறப்போ வேற யாருக்காக டெஸ்ட் எடுத்தீங்கன்னு நான் கேட்ட கேள்வியில அழ ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அவங்க பேசின பிறகு எனக்கு ஒருமாதிரி கஷ்டமா ஏன்டா அப்படி பேசினோம்னு ஆகிடுச்சு மாமா” என்று எழிலை கட்டிக்கொள்ள,
மனைவியை அறிந்தவன், “ஏன்டி திட்டறதையும் திட்டிட்டு இப்போ அவங்களுக்காக ஃபீல் பண்ணிட்டு இருக்க..?”
“என்னமோ தெரியலை என்னால இந்த கேஸை ஜெனரலைஸ் பண்ணி மற்ற கேஸ் போல கடக்க முடியல... அதுவும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவா சுத்தமா முடியலை. நம்ம பசங்க எல்லாருமே கோ-எட்ல தான் படிக்கிறாங்க இதுல நட்பும் ஈர்ப்பும் தவிர்க்கவே முடியாதது.”
“ஆண் பெண் நட்பு சரியான முறையில் நெறிபடுத்தபட்டால் அதில் தவறொன்றுமில்லை..!! ஆனா இப்போ இருக்கிற பெண்களோட அஜாக்கிரத்தையும் அலட்சியமும் தான் இப்படிப்பட்ட வழக்குகளுக்கு அடிநாதமே..!”
“இங்க தளிரோட நிலையை அஜாக்கிரதை அலட்சியம் இரண்டிலும் சேர்க்க முடியாது..”
“...”
“நம்பிக்கை! அதுவும் கண்மூடித்தனமான நம்பிக்கை!”
“பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் பற்றி பேசுறோம் மாமா ஆனா வெளியே வர ஆரம்பிச்சு இருக்க பெண்களோட சிறகை நட்பு, நம்பிக்கை என்கிற பெயரில் உடைச்சு திரும்ப கூட்டுக்குள்ளே அடைக்கிற அளவுக்கு தான் இந்த டெக்னாலஜியோட வளர்ச்சி இருக்கு”
“இது எந்த அளவுக்கு ஆக்கபூர்வமா பயன்படுதோ அதைவிட பல மடங்கு பெண்களுக்கு எதிராகவும் அழிவுக்காகவும் பயன்படுது”
“எல்லாத் துறையிலும் பெண்கள் வந்துட்டாங்கன்னு சந்தோஷப்படுறதா இல்ல அப்படி வந்து இருக்கிறவங்களுக்கு தொல்லைகளும் அவங்களுக்கான பாதுகாப்பின்மையும் அதிகரித்து இருக்கிறத நினைச்சு கவலைப்படுறதா..?”
“எங்கிருந்தாலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது சமூகத்தின் கடமை.. ஒவ்வொரு ஆணுக்கும் அந்த உணர்வு இருக்கணும். பெண்களை போகபொருளாகவும் சதையாகவும் பார்க்கிற நிலை இன்னும் மாறலை”
“சரிடி அந்த அம்மா இப்படி டெஸ்ட் எடுக்க என்ன காரணம்..?”
“அன்னைக்கு தாலி கழட்டி போட்டுட்டு வந்த தளிரை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகணும்னு பிடிவாதமா இருந்தவங்க தளிர் வாழ்க்கைக்காக தான் அமைதியா இருந்தாங்க.”
“ஆனா எது நடக்க கூடாதுன்னு இத்தனை வருஷமா பாதுகாத்து வந்தாங்களோ அது ஊருக்கே தெரிஞ்சதோடு தப்பே பண்ணாத பெண் மேல எல்லா பழியும் விழும்னு அவங்க எதிர்பார்க்கவே இல்லை. பாவம் மாமா இப்போ அவங்களுக்கு பெண்ணோட வாழ்க்கையை எப்படி மீட்டு எடுக்க போறோம் என்ற பயம்..!”
“ஒருவேளை இப்போ வரை உடன் இருக்க உதய் ஒத்துக்கிட்டாலும் அவர் குடும்பம் ஒத்துக்குமான்னு பெரிய கவலை..”
“ஒருவேளை நாளைக்கு தன் பெண்ணை அவளோட புகுந்த வீட்டுல யாரும் தப்பா பேசிடக்கூடாதேன்னு ரொம்ப தவிக்கிறாங்க.. அது எனக்கு புரியாம இல்ல ஆனா இந்த நிமிஷம் வரை உதய் அவங்க பக்கம் இருகிறதால அவங்க இவ்ளோ இன்செக்யூர்ட்டா ஃபீல் பண்ண தேவையில்ல..” என்றவள் உதய் அவர்களை பாதுக்காக்கும் விதத்தை எடுத்து சொல்ல.,
“நிஜமாவே இது ஆச்சர்யமா இருக்குடி..! இப்படி ஒரு பெண் மேல குற்றம் சுமத்தபட்டா அந்த பெண்ணை ஒதுக்கிட்டு தன் குடும்பம் தன் வாழ்க்கைன்னு போற பசங்களை தான் பார்த்திருக்கோம் ஆனா இந்த பையன் வித்யாசமா இருக்கான்....”
“அதுதான் மாமா! உதய் அப்படி இருந்தும் அவங்க இதை செய்தது தான் எனக்கு கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை... ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகும் முன்ன கொஞ்சமும் தளிரை பற்றி யோசிக்கவே இல்லையே... இந்த முடிவு தன் பெண் எதிர்காலத்துக்கு நல்லதுன்னு யோசிச்சவங்க ஏன் அது தன் மகளோட மனநலனுக்கு நல்லதில்லைன்னு யோசிக்க மறந்தாங்க..?”
“ஏற்கனவே அந்த ராஸ்கல் நாடகம் போட்டு ஏமாற்றி, தாலி கட்டி, ரெஜிஸ்டர் சர்டிஃபிகேட், இன்னர்ஸ்ல ஃபோட்டோ, இப்போ ஊர் முன்னாடி அவளை குற்றவாளியா சித்தரிச்சு கல்யானத்தை நிறுத்தின்னு தளிரை எவ்வளவோ மன உளைச்சலுக்கு உள்ளாக்கிட்டான்..”
“இப்போ ‘ஆடிங் இன்சல்ட் டு தி இஞ்சுரி’ மாதிரி இவங்க பங்குக்கு மாஸ்டர்ஸ்ட்ரோக் அடிச்சாச்சு.. இப்போ நிம்மதியா தூங்குவாங்க” என்று ஆற்றாமையுடன் கணவனை பார்க்க,
“ப்ச் போதும் விடுடி! அவங்களுக்கு நல்லபடியா எடுத்து சொல்லி அனுப்பினியா..? இல்ல கோபமா அனுப்பி வச்சியா..?”
“அதுதான் சொன்னேனே எனக்கே மனசு கேட்கலை அழாதீங்க, இனி இந்த மாதிரி எதுவும் செய்யாதீங்க நான் நல்லபடியா முடிச்சு கொடுக்கறேன்னு சொல்லி அனுப்பினேன்.”
*********************
காஃபியை எழிலுக்கு ஊற்றி கொடுத்தவள் தனக்கும் எடுத்துக்கொண்டு அவனெதிரே அமர்ந்து குடிக்க தொடங்கிய அலருக்கு ‘அவனிடம் கேட்பதா வேண்டாமா..?’ என்ற பெரும் யோசனை.
“மாமா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..?”
“என்ன புதுசா பெர்மிஷன் கேட்கிற..? என்ன செய்யணும் சொல்லுடி”
“இல்ல மாமா... அது..”
“ப்ச் என்னடி வேணும்..? ஏன் இவ்ளோ தயங்கற..? எதுவா இருந்தாலும் சொல்லு”
“மாமா அந்த சரத்துக்கு எதிரா இந்த கேஸஸ் மட்டும் போதாது அவனை எல்லா விதத்துலயும் லாக் பண்ணனும்... ”
“ப்ரீத்தி கொடுத்த ஐடியாவா..?”
“ஏன் அப்படி சொல்ற...?”
“நேத்து நைட் ரூமுக்கு கூட வராம அவளோட பேசிட்டு இருந்தியே அதுதான் ப்ரீத்தி சொன்னாளான்னு கேட்டேன்”
“அச்சோ இல்ல மாமா அவகிட்ட தளிர் கேஸை டிஸ்கஸ் பண்ணவும் சரத் எங்க இருக்கான் சொல்லு ஒரே ஒரு இன்ஜெக்ஷன்ல அவன் கதையை இயற்கை மரணமா மாத்திடுறேன். எத்தனை பேர் போஸ்ட்மார்ட்டம் பண்ணினாலும் காரணத்தை கண்டுபிடிக்கவே முடியாதுன்னு சொன்னா...” என்று புன்னகையோடு சொல்ல எழில் முகத்திலும் சிரிப்பு.
“ப்ரீத்தியே செய்யறேன்னு சொல்லியும் நீ வேண்டாம்னு சொன்னியா ஏன்டி..?”
“ப்ச் மாமா சரத் செத்துட்டான்னா அவனோட சேர்ந்து உண்மையும் புதைஞ்சுடும்... தப்பே பண்ணாத தளிர் காலம் முழுக்க களங்கத்தோடவே இருக்கணும் அந்த ஒரு காரணத்துக்காக தான் உதய் அவனை கிரிமினல் கேஸ்ல ஏதாவது செய்ய முடியுமான்னு கேட்டிருக்கார்”
“என்னடி சொல்ற..? அப்படின்னா
..?” என்று கேள்வியாக பார்க்க,
புரிந்தவளும் “ஆமா மாமா... எனக்கு தெரிஞ்சு ஏதாவது கிரிமினல்
அபென்ஸ்ல சரத்தை உள்ள தள்ள ட்ரை பண்ண போறார்”
“உன்கிட்ட சொன்னாங்களா..?”
“இல்லைடா என்னோட கெஸ்ஸிங்..! இதைப்பற்றி
ப்ரீத்தி கிட்ட சொல்லிட்டு இருந்தப்போதான் அவனோட தொழில்,
பண பரிவர்த்தனை எல்லாம் முடக்கி கொஞ்ச நாள் செயல்படாம வைக்கலாமேன்னு
சொன்னவ உன்கிட்ட அதை செய்ய சொல்லி கேட்க சொன்னா. எனக்கும் நல்ல ஐடியாவா தோனுச்சு
ஆனா உனக்கு தான் வேலை விஷயத்துல தலையிட்டா பிடிக்காதே..!” என்று இதழ்களை
சுழிக்கவும்,
சிரிப்போடு அலரை கட்டிக்கொண்டவன், “என்
பொண்டாட்டி ஒன்னு கேட்டு அதை செய்யாம விடற பழக்கமும் எனக்கு கிடையாதுடி பட்டு”
என்றவாறு சுழிந்த அவள் இதழ்களில் மூழ்கினான்.
நிமிடங்கள் கரையவும் மெல்ல விலகியவன், “சரி
சொல்லு என்ன செய்யணும்..?” என்றான்.
“நிஜமாவா மாமா!” என்றதும் கண்களை மூடி
திறந்தவன், “என் பொண்டாட்டி தப்பான விஷயத்துக்கு துணை போக
மாட்டா அதுக்கு என்னை உதவவும் சொல்லமாட்டா..!” என்றதில் அலரின்
முகத்தில் கர்வப்புன்னகை.
“தளிருக்கு ஆதரவா நீ இருக்க., என் பொண்டாட்டிக்கு ஆதரவா நான் இருக்க மாட்டேனா..? அதோட
ஒரு பெண்ணை கலங்கமில்லாதவள்னு நிருபிச்சு அவளுக்கு நல்லது நடக்க எந்த வழியும்
தப்பில்லை! நீ சொல்லு”
“லவ் யூ மாமா” என்று கட்டிக்கொண்டு
முத்தமிட்டவளுக்கு அழைப்பு வரவும் பேசிவிட்டு எழில் அருகே அமர்ந்தவள்,
“மாமா அந்த சரத் என்கிட்டே எவ்வளவு பேரம்
பேசினான்னு நினைக்கிற..?”
“ஒரு பத்திலிருந்து இருபது லட்சம்..”
“என்ன மாமா அவனை இவ்ளோ கம்மியா எடை போட்டுட்ட..?”
“பின்ன என்னடி அம்பது லட்சமா..?”
“இல்லடா அவன் ஆரம்பிச்சதே அம்பது லட்சம்
கடைசியா வந்து நின்னது மூணு கோடியில” என்றதில் எழில் அதிர்ந்து போனான்.
“இப்போ புரியுதா நான் ஏன் அவன் வீட்டுக்கு
ரெயிட் போக சொன்னேன்னு..?” என்றதும் அவன் புரிந்ததாக
தலையசைத்தான்.
“கேஸ் ஆரம்பத்துலயே மூணு கோடி விலை பேசறான்னா முடியறதுக்குள்ள
எத்தனை கோடியில வந்து நிற்பான்னு யோசிச்சு பாரு மாமா!”
“நேர்மையா சம்பாதிச்ச எவனும் இப்படி கொட்டி
கொடுக்க மாட்டான்டி...”
“அதேதான் நானும் சொல்றேன். அஜய், லேகா, தளிர் யாருக்குமே அவனோட பிஸினஸ் டீலிங்ஸ்
பற்றி அவ்ளோ டீட்டெயிலா தெரியலை” என்றவள் அவர்கள் கொடுத்த தகவலை எழிலிடம்
கொடுத்து..,
“அவன் அப்பாவோட பிஸினஸ் அப்படியே இவன் செய்யறான்னு
சொன்னாங்க அதை எப்படின்னு கொஞ்சம் தோண்டி துருவினாலே போதும்...”
“புரியுதுடி! ஆனா கம்ப்ளையின்ட்..” என்று அவன்
தொடங்கவுமே,
“அந்த கவலையை விடு அதெல்லாம் ப்ரீத்தி
பார்த்துப்பா...!”
“ஏன்டி அக்காவும் தங்கச்சி பக்காவா ப்ளான்
பண்ணிட்டு என்னை கூப்பிட்டு இருக்கீங்களா..?” என்ற எழிலின்
முகத்தில் புன்னகை.
“அவனுக்கு இந்தியா வெளிநாடுன்னு பல இடங்களில்
தொழில் இருந்தாலும் மெயின் ப்ரான்ச் சென்னை தான்.. அங்க கை வச்சாலே ஒன்னு தொட்டு
இன்னொன்னு போயிடலாம் மாமா...”
“ஆனா நீ நினைக்கிற மாதிரி ஈஸியில்ல டைம்
எடுக்கும் அமுலு”
“தெரியும் மாமா! எப்படியும் இரண்டு மூணு
மாசத்துக்குள்ள சென்னை ட்ரான்ஸாக்ஷனை முதல்ல முடக்கினா அதுவே அவனுக்கு பெரிய அடி
தானே..!” என்றிட 'ஆம்' என்று
தலையசைத்தவன் உடனே ப்ரீத்திக்கு அழைத்திருந்தான்.
Comments
Post a Comment