வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 62

 


இரவு எட்டு மணிபோல விழித்தவன் குளித்து முடித்து உணவை முடித்துக்கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு வீட்டின் பின்புறமாக புறப்பட்டு வழக்கம் போல பயிற்சிக்கு கிளம்பினான்..

நள்ளிரவு இரண்டு மணிக்கு மேல் வீடு திரும்பியவன் சரத் பேசியதை போட்டு கேட்க சில மணி நேரப்பதிவில் உமா மற்றும் நர்ஸ் தவிர்த்து மற்றவர்களின் எந்த பேச்சுக்களும் இல்லாமல் போயிருந்தது.., ஃபார்வர்ட் செய்து இறுதி முப்பது நிமிடங்களை கேட்க அதில் நிசப்தம் மட்டுமே பதிவாகி இருந்தது.

ரெக்கார்டிங்கில் சற்று முன்னே சென்று கேட்க அதில் சரத் ஜன்னலருகே நின்று எழுதி கொடுத்தாலும் குமாரின் பேச்சுக்கள் சாதாரணமாக இருந்ததாலும் அவர்கள் பொருத்தியிருந்த ஒட்டு கேட்கும் கருவி சரத்தின் படுக்கையின் அடியில் இருந்ததாலும் அப்பெரிய அறையின் மூலையில் நின்றிருந்தவர்கள் பேச்சு சரியாக பதிவாகவில்லை.

அடுத்தநாள் வழக்கம் போல ஆஃபீஸ் கிளம்பிய உதய்க்கு அழைத்த நிவியின் தோழி “அண்ணா குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் ஹாஸ்பிட்டல் போகலை உமா மேடம் கிட்ட சொல்லிட்டேன்..”

சரிம்மா நான் பார்த்துக்கறேன்” என்றவன் அடிக்கடி சரத்தை கண்காணித்த போதும் நர்ஸ் மற்றும் டாக்டர் தவிர்த்து பெரிதாக எந்த பேச்சுக்களும் இல்லை.

அன்றும் வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று குளித்து தயாராகியவன் கிளம்ப ராகவனும் நண்பனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி உடன் வர அவன் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு சென்றான்.

அங்கு பயிற்சியாளர்கள் காத்திருக்கவும் அதில் ஒருவரை ஏற்றிக்கொண்டு உதய் காரை வேகமாக எடுக்க அவன் பின்னே லாரியில் ருத்ரவேலன் துரத்திக்கொண்டு சென்றான்... மற்றவர்கள் இரு வாகனத்தில் அவர்களோடு பயணிக்க, லாரி உதய்யின் வாகனத்தை விடாமல் துரத்திட குறிப்பிட்ட இடத்தில் காரில் இடம் மாற்றி அமர்ந்த உதய்  பெட்க்கு பதில் மணல் மூட்டைகள் மேல் லாவகமாக குதித்திருந்தான்.

ஆட்டோ மோடில் இருந்த காரை பயிற்சியாளர் தன் கண்ட்ரோலில் கொண்டு வந்து திரும்பி வந்திருந்தார். மேலும் இரண்டு முறை பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த அதேவேளை உதயாதித்தனின் preowned கார்கள் இருக்குமிடத்திற்கு சென்ற ரவுடி கும்பல் முதலில் சிசிடிவி க்களை அடித்து நொறுக்கி விட்டு காவலுக்கு இருந்த ஆள்களையும் அடித்து போட்டு அங்கே காம்பவுண்டுக்குள் வெட்ட வெளியில் நிறுத்தபட்டிருந்த கார்களை கொளுத்தினர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே முதல் வரிசையில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட கார்கள் கொளுத்தப்பட்டு சுற்று வட்டாரமே புகைமண்டலமாக காட்சி அளித்திருந்தது. பொது மக்கள் சூழ்வதை கண்ட ரவுடிகள் உடனே அங்கிருந்து காரில் கிளம்ப அவர்களை பிடிக்க முடியாது காவல்துறைக்கு தகவல் கொடுக்க  அங்கே பதற்றம் தொற்றிக்கொண்டது.

மற்றொரு கோஷ்டி அவன் ஷோரூம் பூட்டியிருந்ததில் காவலாளியை அடித்து போட்டு விட்டு பெரிதாக எதுவும் செய்ய முடியாமல் வெளியே கண்ணில் பட்ட பொருட்களை சேதபடுத்தியிருந்தனர். 

அடுத்ததாக அவர்கள் உதய் கட்டி கொண்டிருந்த புது ஷோரூமின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி நுழைந்தவர்கள் அங்கே அடுக்கி வைக்கபட்டிருந்த மரப்பொருட்களுக்கு தீயிட்டு அலங்கார விளக்குகளையும் சேதபடுத்தினர்.

பலத்த காயமடைந்திருந்த அரவிந்த் உதய்க்கு தொடர்பு கொள்ள அவன் அழைப்பை எடுக்கவில்லை. அதேவேளை அவர்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்தது மற்றொரு கும்பல்... இறுதியாக விடியும் வேளையில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த ரவுடிகள் அங்கே நிறுத்தபட்டிருந்த பேருந்துகளையும்  எரித்திருந்தனர்.

உதய் அயர்ச்சியோடு கைபேசியை திறக்க வாட்ஸ்அப்பில் அவன் கார்கள் எரிக்கப்பட்ட செய்தி தான் அத்தனை குழுவிலும் பகிரபட்டிருந்தது. உடனே இருவருமே விரைவாக சென்று பார்க்க அங்கே கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்த இடத்தில் முதல் வரிசையில் எரிந்து கொண்டிருந்த கார்களை கண்டு திகைத்துபோய் நின்றுவிட்டனர் நண்பர்கள் இருவரும்.

ஏற்கனவே தீயணைப்பு துறைக்கு சொல்லியிருந்ததில் அவர்களும் விரைவாக வந்துவிட்டாலும் அதற்குள் தீ சில கோடிகளை வேகமாக விழுங்குவதை யாராலும் தடுக்க முடியவில்லை. அடுத்த இடங்களில் இருந்து தகவல் கிடைக்க பெற்றதில் ருத்ரவேலனும் வந்துவிட அங்கே அவர்கள் செல்வதற்குள் நிலைமை கைமீறி சென்றுவிட்டிருந்தது.

உறக்கத்தில் இருந்த அம்பலவாணனுக்கும் தகவல் கிடைக்க பெற்று  மகனை தேடி வந்த அடுத்த சில நிமிடங்களில் பள்ளியில் பேருந்துகள் எரிந்து கொண்டிருந்த செய்தி கிடைக்கவும் பதற்றத்தோடு கிளம்பினார்.

அவர் பின்னே ராகவனும் உதய்யும் செல்ல சரவணனும் சுஜியோடு வந்துவிட்டார்.

தந்தை தளர்ந்து நின்ற கோலத்தை கண்ட உதய்க்கு  “அ..ப்..பா” என்ற ஒற்றை வார்த்தை அதீத வலியோடு தொண்டை குழியில் சிக்கி திணறி வெளியேறியது.

நகரின் மத்தியில் அமைந்திருந்த அம்பலவாணன் பள்ளியில் அதிகாலையே ஒருபுறம் காவல்துறையும், தீயணைப்பு துறையும் விரைவாக தங்கள் வேலையை தொடங்கியிருக்க, மறுபுறம் ஆம்புலன்ஸ் காயம்பட்ட பணியாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருந்தது..

நல்லவேளை அதிகாலை ரவுடிகள் பள்ளியில் நுழைந்ததால் முதல் ஷிப்ட் செல்ல காத்திருந்த ஒரு சில டிரைவர்கள், காவலாளிகள் என்று பத்து பேர் மட்டுமே தாக்குதலில் காயமடைந்திருந்தனர். அதில் ஒருவருக்கு மட்டும் மண்டையில் அடிபட்டு  உயிருக்கு அபாயமான நிலையில் கொண்டு செல்லப்பட்டிருக்க அம்பலவாணன் அவரிடம் கதறி அழும் குடும்பத்தாருக்கு பதிலளிக்க முடியாமல் நின்றிருந்தார்.

பள்ளியில் நடந்த கலவரத்தை கேள்விப்பட்டு பொதுமக்கள் திரண்டுவிட பெற்றோர்களும் பள்ளியை முற்றுகையிட்டதில் அங்கே பதற்றம் இருமடங்காகி போனது. காவல்துறையினர் ஓரளவு நிலையியை கட்டுக்குள் கொண்டு வர பள்ளிக்கு மூன்று நாள்கள் விடுமுறை அளித்த பின் அம்பலவாணன் இறுகிய முகத்தோடு தன் அறையில் அமர்ந்திருக்க உடன் சரவணன், சுஜி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிலர் உடன் இருந்தனர்.

என்னதான் பேருந்துகளுக்கு இன்ஷுரன்ஸ் செய்திருந்த போதும் நகரின் பல்வேறு இடங்களுக்கு இந்நேரம் சென்றிருக்க வேண்டிய நாற்பத்து ஐந்து பேருந்துகளும் கண்முன் எரிந்து கொண்டிருந்த அதிர்ச்சியில் இருந்து இன்னுமே மீளாத அம்பலவாணனுக்கு 'இதற்கு யார் காரணம்..?' என்பது குறித்த அனுமானமே சுத்தமாக இல்லை.

பின்னே மகன் தளிரை காப்பாற்றும் முயற்சியில் அவன் உயிருக்கு குறி வைக்கப்பட்டிருப்பதே அவருக்கு தெரியாத நிலையில் சரத்தின் இத்தகைய கோரத்தாண்டவத்தை அவர் எங்கனம் எதிர்பார்த்திருக்க முடியும்..? அனைவருடனும் நட்புறவோடு இருக்கும் மனிதருக்கு தொழில்முறை எதிரிகள் என்று யாரும் கிடையாது... அப்புறம் எப்படி இது நிகழ்ந்தது? என்ற யோசனையுடன் காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு அமர்ந்திருந்தார்.

அங்கே பள்ளியின் விளையாட்டு திடலில் தீயில் கருகி உருக்குலைந்து நின்ற வாகனங்களை சிவந்த விழிகளோடு பார்த்திருந்த உதய்யின் செவியில் இன்னுமே பணியாளர்களின் மனைவி, குழந்தைகளின் அழுகுரல் ஒலித்து கொண்டிருந்ததில் அவன் உள்ளம் அனலில் இட்ட புழுவாக துடித்துக்கொண்டிருந்தது.

'தன்னுடைய பிரச்சனையில் இத்தனை பேர் பாதிக்கபடுவர்' என்பதை கணிக்க தவறிய தன்னையே கடிந்து கொண்டவனுக்கு நள்ளிரவில் இருந்தே பெற்ற அடிகளால் மனதினுள் பிரளயமே நிகழ்ந்து கொண்டிருந்தது.

'சரத் இதை நடத்துவதற்கு வாய்ப்பளித்து எங்கே நாம் தவறினோம்..?, இத்தனை பெரிய இழப்பை எவ்வாறு சீர்படுத்த போகிறோம்..? அதைவிட தந்தைக்கு என்ன பதிலளிப்பது..? என்று கேள்விகள் வரிசை கட்டி அவன் முன் நிற்க எதற்கும் பதிலின்றி  தவித்திருந்தவன் ஒரு கட்டத்தில் உள்ளங்கைகளில் முகத்தை பொத்தி அமர்ந்து விட்டான்.

நிச்சயம் இந்த இழப்பில் இருந்து மீண்டு அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும்..’ காவல்துறை அங்கிருந்த பொது மக்களிடம் விசாரித்து நகரின் முக்கிய ரவுடிகளை வலை வீசி தேட தொடங்கிவிட்டது.

உதய்யிடம் வந்த சிவனேஷ், “யார் மேலயாவது சந்தேகம் இருக்கா உதய்..?” என்று கேட்க ஒருநொடி தயக்கத்தோடு அவரை பார்த்தவன் இல்லையென்று தலையசைத்தான்.

நிஜமாவே சந்தேகமில்லையா..?” என்றவரின் அடுத்த கேள்வியில் அவன் அதிர்ந்து நிற்க..,

ஒரு பெண்ணுக்காக இத்தனை இழப்பு சரின்னு நினைக்கிறியா..? இத்தனை கோடி நஷ்டப்படும் அளவுக்கு அப்படியென்ன உதய் அந்த பொண்ணு உசத்தியா போயிட்டா..?”

அங்கிள் அதெல்லாம் ஒண்ணுமில்ல..” என்றவனை நம்பாத பார்வை பார்த்தவர்,

நான் அப்போவே உன்னை இதுல இருந்து விலகுன்னு சொன்னேனே கேட்டியா..?” என்று நண்பனின் மகனை உரிமையாக கடிந்துக்கொண்டிருந்தார் சிவனேஷ்.

நீ விலாகாததால தான் இந்த நிலை..! எவ்ளோ பெரிய நஷ்டத்திற்கு நீ காரணமாகி இருக்க எத்தனை குடும்பத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில நீ இருக்கன்னு புரியுதா..?” என்று கேட்க ‘அவனுக்கா புரியாமல் இருக்கும்..?’

தொழில் முடக்கம், பொருட்சேதம், வாடிக்கையாளர்களிடம் பெற்றிருக்கும் நம்பகத்தன்மை, காயமடைந்திருக்கும் பணியாளர்கள், பள்ளி பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம், சீரமைப்பு பணிகள் என்று சரத்திடமிருந்து தளிரை காப்பாற்றும் முயற்சியில் அவன் கொண்டிருக்கும் நேரடி பகை மட்டுமின்றி எதிர்கொள்ளவேண்டிய இணைப்பு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்பதை அவனும் நன்கு அறிவான்.

என்னதான் முறையாக வருமான வரி செலுத்தி அனைத்து வாகனங்களுக்கும் இன்ஷுரன்ஸ் செய்து இருந்தாலும், மற்ற சேதங்களை விரைவில் சீரமைத்து தொழிலை மீண்டும் துவங்கும் திடம் இருந்தாலும்  காயம் அடைந்தவர்களின் வலியும் குடும்பத்தின் வேதனையையும் எதைக்கொண்டும் ஈடுகட்டிவிட முடியாதே..!’

வேறு வழியில்லை! அவனால் முடிந்தது அவர்கள் மீண்டும் பணியில் சேரும் வரை அவர்களின் மருத்துவ செலவையும், சம்பளமும் அவர்களுக்கான இடத்தில் வேறு ஆள்களை நியமிப்பதையும் உதய்  தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு தான் வேண்டும்.

அங்கிள் அப்பாக்கு இப்போ எதுவும் தெரிய வேண்டாம்.. நீங்க விசாரிச்சுட்டு இருக்கிறதா மட்டும் சொல்லுங்க” என்று எதிர்பார்ப்போடு அவரை பார்க்கவும்,

கண்டிப்பா முடியாது உதய்..!”

அங்கிள் ப்ளீஸ் எனக்காக.., அப்பாக்கு நீங்க சொல்ல வேண்டாம் நானே பொறுமையா சொல்லிக்கிறேன்”

எப்போ சொல்லுவ...? இன்னும் மீதி இருக்கிற சொத்தையும் கொளுத்தி முடிச்சு உன் குடும்பத்தையும் பலி கொடுத்த பிறகா..?” என்று சிவனேஷ் சீறவும் அங்கே வந்த ருத்ரவேலன்.,

ப்பா அவன் ஒரு சைக்கோ..! அதுக்கு உதிண்ணா என்ன பண்ணுவாங்க..? அங்கிள் கிட்ட அவரே சொல்லட்டுமே...”

உன்னை நான் கூப்பிட்டேனா..? அவனுக்கு பரிஞ்சுகிட்டு வராம உன் வேலையை போய் பாருடா” என்று மகனை முறைத்தார்.

ப்பா உதிண்ணா சிச்சுவேஷன் புரியாம நீங்களே இப்படி பேசலாமா..?”

வேலு!!” என்று அழுத்தமாக மகனை பார்த்தவர், “அதிகமா பேசிட்ட... போதும் போய் சரத்தை தேடுற வேலையை பார்” என்று கடுமையாக சொல்லவும் உடனே அங்கிருந்து சென்றான்.

அடுத்தடுத்து உதய்யை நிற்க விடாமல் அடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருந்த சரத் அவனை ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யவிருந்த நாளுக்கு முந்தைய தினமே மருத்துவமனையை விட்டு கிளம்ப வேண்டும் என்று கேட்டு கொண்டிருந்தான்.

பின்னே இப்போது பொருட்சேதம் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதை தொடர்ந்து அடித்தால் தான் வலி அதிகமாக இருக்கும் என்ற எண்ணமே அவனுக்கு..!’

சொன்ன தேதிக்கு முன்பாக உமா டிஸ்சார்ஜ் செய்ய முடியாது” என்றபோதும் விடாபிடியாக டிஸ்சார்ஜ் ஆகி கிளம்பிவிட்டான்.

உடனே உமா தம்பிக்கு தகவலளிக்க போட்டிருந்த திட்டம் மாறி போனதை அறிந்த ருத்ரவேலனுக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு மூளை ஸ்தம்பித்து யோசிக்கவே முடியவில்லை.

ஏன் க்கா நான் தான் சொல்லியிருந்தேனே..?”

நான் என்ன பண்ணட்டும் வேலு தளிர் அடிச்சதுக்கு ட்ரீட்மென்ட் கூட வேண்டாம் அன்னைக்கே டிஸ்சார்ஜ் பண்ணுங்கன்னு ஒத்தை காலுல நின்னுட்டான். நான் தான் சமாதானம் செய்து இரண்டு நாள் அவனை இருக்க வச்சேன்..” எனவும் அடுத்து என்னவென்று யோசிக்க தொடங்கி விட்டான்.

சரத்தை நிழலாக தொடரும் ஆள் மூலமாக அவன் உதய்காக வேலூரின் எல்லையிலேயே காத்திருப்பதை அறிந்தவனுக்கு ‘இன்று விபத்து ஏற்பட்டு இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் உதய் ராணிபேட்டைக்கு கிளம்பக்கூடும்’ என்று முடிவெடுத்து அவன் காத்திருப்பது புரிந்தது.

ஆனால் அம்பலவாணன் இருக்கும் நிலையில் உதய் கிளம்புவதோ அல்லது மற்றவர்கள் அவனை தனியே செல்ல அனுமதிப்பதோ எளிதான காரியமில்லை.

அதைவிட அவர்கள் திட்டத்தின் முக்கிய நிகழ்வே நாளை நடத்தவிருக்கும் பேரணி தான்!!

நிச்சயம் அனுமதி கொடுத்த பேரணியை உடனே மாற்றுவது அத்தனை எளிதான காரியமில்லை... ஒருவேளை மேலிடத்தில் மாற்றத்திற்கான காரணத்தை ஜோடித்து அதன் பின் கல்லூரி முதல்வரிடம் பேசி செய்ய நினைத்தாலும் நேரம் கடந்து அதை செயல் படுத்த நிச்சயம் மாலையாகிவிடும். அதன்பின் சரத்தை பிடித்து உடனே கோர்டில் ஆஜர்படுத்தி கஸ்டடி எடுப்பது சிரமமே..!

என்ன செய்வது..?’ என்று யோசித்த ருத்ரவேலனுக்கு இப்போது இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே யூடியூபர்களை அவன் வேலூருக்கு வரவழைத்து இருந்தது தான்.

'பேரணிக்கு மாற்று என்ன..?' என்று யோசித்துக்கொண்டே இருந்தவனுக்கு சட்டென ஒரு யோசனை உதிக்க உடனே  RIDERS CLUB இல் இருக்கும் தன் நண்பனை தொடர்பு கொண்டு பேசி முடிக்கவும் தான் அவன் முகத்தில் நிம்மதி படர்ந்தது.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17