வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 63

 


நேரம் காலை பத்தை நெருங்கி கொண்டிருக்க ருத்ரவேலன் உதய்யிடம் சரத் காத்திருக்கும் செய்தியை சொல்லி, “இப்போ என்னண்ணா பண்றது..?” என்றிட அவனிடம் பலத்த யோசனை.

 “உங்க உயிருக்கு அவன் வச்ச குறி வச்சது தான் ண்ணா..  ஆனா இப்போ விட்டா அவனை பிடிக்க இதேபோல இன்னொரு வாய்ப்பு கிடைக்காது..”

நம்ம ப்ளான் படி நாளைக்கு தான் இது நடந்திருக்க வேண்டியது ஆனா அவன் காலையிலேயே டிஸ்சார்ஜ் ஆகி உங்களுக்காக காத்திருக்கான்”

போதும் வேலு!  இத்தோட எல்லாம் போதும்... அவனை உசுப்பேத்தாம தயவுசெய்து  இத்தோட நிறுத்திக்கோங்க” என்றான் ராகவன்.

என்ன மாம்ஸ் பேசற..? இன்னைக்கு விட்டா  அவனை கையும் களவுமா என்னைக்குமே பிடிக்க முடியாது... ஒருவேளை நான் அந்த நாயை இப்போ கார், பஸ்ஸை கொளுத்தினதுக்காக அரெஸ்ட் பண்ணினாலும் அடுத்த பத்து நிமிஷத்துல வக்கீலை வரவச்சு ஹாஸ்பிட்டல்ல இருந்த ப்ரூஃபை நீட்டி எனக்கே டாட்டா காட்டிட்டு போயிடுவான்..” என்று குறையாத ரௌத்திரத்தோடு சொல்ல,

புரியுது வேலு ஆனா இப்போ இந்த நேரத்துல எப்படிடா மாப்பிள்ளையை ரிஸ்க் எடுக்க சொல்ற..?” என்று ‘இத்தகைய நெருக்கடியான சூழலில் இந்த விபரீத முயற்சி தேவை தானா..?’ என்ற கேள்வி மட்டுமே சரவணனிடம்.

அதைவிட இன்னைக்கு இல்லைன்னாலும் இன்னொரு நாள் அவன் அண்ணனை போட்டே தீருவான்.. யாருக்கு தெரியும் அந்த சைக்கோ  இப்போ மாதிரி தன் கையாள இல்லாம அண்ணனை ரவுடிகளை விட்டு அரிவாளால வெட்ட சொன்னா என்ன பண்ணுவீங்க..?” என்று கேட்க மற்றவர்களிடம அதிர்ச்சி..,

என்னடா பேசற..?” என்ற ராகவனின் குரலில் அத்தனை நடுக்கம்.

நாட்டில் நடக்கறதை தான் பேசறேன் மாம்ஸ்.. ஒருவேளை அப்படி செய்தா யாரும் காப்பாற்ற முடியாம போயிடும் புரிஞ்சுக்கோங்க..! இதுதான் நமக்கான வாய்ப்பு விட்டுட்டோம் அண்ணனுக்கு எந்த பக்கத்தில் இருந்து எப்போ எந்த நிமிஷம் ஆபத்து வரும்னு சொல்லவே முடியாது”

எனக்கு இதுல உடன்பாடு இல்லை.. அதுவும் மாமா இந்த நிலையில் இருக்கிறபோ உதய்க்கு ஏதாவது ஒன்னு ஆகிடுச்சுன்னா தாங்க மாட்டார்.. போதும் விட்டுடுங்க தளிர் ஃபேமிலியை ப்ரோடெக்ட் பண்ண நாம வேற எதாவது வழி யோசிக்கலாம்”

மாமா இனி அண்ணியை விட அண்ணனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் தான் பிரச்சனை அதிகமாகும், புரிஞ்சுக்கோங்க.. அவனோட டார்கெட் இப்போ அண்ணி இல்லை உதிண்ணா தான்..!”

“...”                

தொழிலை முடக்கி போட்டிருக்கவன் அடுத்து நம்ம குடும்பத்தை டார்கெட் பண்ணினா என்ன பண்ணுவீங்க..?” என்று கேட்க அனைவரும் அதிர்ந்து போயினர்.

என்ன பார்க்கறீங்க..? ஒன்னு அவன் இருக்கணும் இல்ல நாம..? யோசிச்சு சொல்லுங்க ஆனா நான் என்பக்க ஏற்பாட்டை பக்காவா முடிச்சுட்டேன் எல்லாரும் தயாரா இருக்காங்க...”

வேலு ரேலி நாளைக்கு தானே முடிவு செய்திருந்தோம் இப்போ எப்படி..?” என்று உதய் யோசனையுடன் கேட்க,

ரைடர்ஸ் க்ளப் ஆள்களை ரீப்ளேஸ் பண்ணிட்டேன் ண்ணா... மொத்தம் இருநூறு பைக் அவன் தப்பிச்சு வரும் போது ஒரே நேரத்துல  குறுக்க வந்து ஹைவேஸ்ல சடன்னா ஜாயின் பண்ணிப்பாங்க.. இதனால சரத்தோட  வேகம் குறையும் அவங்களை முந்திட்டு போகவும் முடியாது. அதுக்குள்ள ஆளுங்க அவனை பிடிச்சுடுவாங்க” என்றவன் உதய் பதிலுக்காக காத்திருந்தான்.

உன்னை வேலையை பார்க்க சொன்னா இங்க என்னடா பண்ணிட்டு இருக்க..? வேர் இஸ் சரத்..?” என்றவாறு  சிவனேஷ் வர அவருக்கு சல்யூட் அடித்தவன்,

ஸார் ஐ ஆம் ஆன் டியூட்டி..! விசாரிச்சுட்டு தான் இருக்கேன் ஆனா ஹாஸ்பிட்டல்ல இருந்து டிச்சார்ஜ் ஆனவன் எங்கிருக்கான்னு யாருக்குமே தெரியலை.. கூடிய சீக்கிரம் அவனை கைது பண்ணிட்டு உங்களை வந்து பார்கிறேன்” என்று தீவிரக்குரலில் சொல்லவும் சந்தேகமாக மகனை பார்த்தவர் உதயாதித்தனை பார்க்க அவன் புருவம் நெறிபட அமர்ந்திருந்தான்.

நீ வேலையை மட்டும் பார்த்தா நல்லா இருக்கும்”

இதுவும் வேலை தான் ஸார்” என்று மீண்டும் சல்யூட் அடித்து விறைப்பாக சொல்ல மகனை முறைத்தவாறே சென்றார் சிவனேஷ்.

கையை கீழே இறக்கிவிட்டு “உப்ப்ஸ்” என்று மூச்சை இழுத்து விட்டான்.

சொல்லுங்கண்ணா ஓகேவா...?” என்றவனின் பார்வை அங்கே கூட்டத்தோடு கூட்டமாக உதய்யை கண்காணித்து கொண்டிருந்த  சரத் நியமித்த ஆளின் மீது படிந்தது.

சம்மதமாக தலையசைத்தவன் அம்பலவாணனிடம் ராணிபேட்டை நிலவரத்தை பார்த்து வருவதாக சொல்ல அதிர்ந்து போன சரவணன்,

மாப்பிள்ளை மாமாவை தனியா விட்டுட்டு நீ எங்க கிளம்பற..? தம்பி போகட்டும்” என்று ராகவனிடம் கண்ணசைக்க..,

ஆ... ஆமா மச்சான் நானே போறேனே... நீ இங்க இருடா” என்று வேகமாக சொல்ல,

இருக்கட்டும் மாப்பிள்ளை! உதய் ஆசையா கட்டிட்டு இருந்தது அவனே பார்த்துட்டு வரட்டும்.. நீங்க வேணும்னா கூட போயிட்டு வாங்க நான் சமாளிச்சுப்பேன்” என்றார் அம்பலவாணன்.

சரி மாமா’ என்ற ராகவனை உதய் கண்களாலேயே மிரட்ட... “அது.. அதெப்படி மாமா சரிவரும் எனக்கு கார் இன்ஷுரன்ஸ், லேபர்ஸ் ட்ரீட்மென்ட் மற்ற க்ளைம் வேலை இருக்கு அவனே போயிட்டு வரட்டும்” என்றான் எரிச்சலோடு....

வரேன்ப்பா” என்று விடைபெற்ற உதய் அடுத்த சில நிமிடங்களில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் வேலூர் எல்லையை தாண்ட அடுத்த சில நிமிடங்களில் சரத்தின் லாரி அவனை பின்தொடர்ந்திருந்து.

சரத்தை கண்டதில் உதய்யின் கோபம் இருமடங்காக முடிந்தளவு தன்னை சமன்படுத்திக்கொண்டு காரை ஓட்டினான்.

ஆனால்  பின்துரத்திய லாரி வேகமேடுப்பதை கண்டதும் உதய் தானும் வேகமெடுத்த அதேவேளை விஷயம் கேள்விப்பட்ட தளிர் பள்ளிக்கு வந்திருந்தாள்.

உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே...”

என்று விஷ்வதேவ் உயிரை உருக்கும் குரலில் பாடிக்கொண்டு வர உடன் இருந்த அனைவரும் கண்களை மூடி அவன் குரலில் லயித்திருந்தனர்.

மாமா பாப்பாக்கு பாட்டு..” என்று வித்யாவின் மடியில் அமர்ந்திருந்த வர்ஷுவின் இளைய மகள் மழலை மொழியில் கேட்கவும்,

என் செல்லத்துக்கு இல்லாமலா..?” என்ற விஷ்வாவின் விழிகளோடு குரலும் கனிந்திட..,

அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது…”

என்று புன்னகையோடு பாடிட கைதட்டி குதுகலித்த குழந்தை அவன் ராகத்திற்கு ஏற்ப தலையசைத்து ஆர்பரித்தது.

அண்ணா அண்ணியையும் இன்னைக்கே கூட்டிட்டு வந்திருக்கலாமே”

வர்ஷு அவளுக்கு ஏதோ அர்ஜென்ட் வொர்க் இருக்கு இன்னும் ரெண்டு நாளுல வந்துடுவா” என்ற அதேவேளை ஃபேமிலி க்ரூப்பில் இருந்து அனைவருக்கும் ஒருசேர மெசேஜ் வந்திருந்தது.

வித்யாதேவி எடுத்து பார்க்க அதில் சரத் உதயாதித்தனை ராணிபேட்டைக்கு செல்லும் வழியில் கொல்ல திட்டமிட்ட ஆடியோ மற்றும் வீடியோவை அலர் பகிர்ந்திருந்தாள்.

ஆம் சரத் பேசியவைகளை விபத்து நடப்பதற்கு பதினைந்து நிமிடத்திற்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேலு சரியான நேரத்தில் செய்து முடித்திருந்தான்.

அதன் விளைவு தளிர் குறித்த செய்திகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் விபத்து குறித்த செய்தி இன்னுமே பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது.

ராகவன் உடனே அலருக்கும் பகிர அப்போதுதான் அதிகாலையே ஆரணியில் இருந்து கிளம்பிய விஷ்வா குடும்பத்தினர் வேலூரில் உள்ள சிவசங்கரனின் மருத்துவ நண்பரை பார்த்துவிட்டு சென்னை நோக்கி செல்வது நினைவு வரவும் ஃபேமிலி குழுவில் பகிர்ந்திருந்தாள்.

அதேநேரம் உதய்யிடம் ‘உன் அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ என்ற சிவனேஷிற்கு நண்பன் அமர்ந்திருந்த கோலத்தை கண்டு எதையும் சொல்லும் தைரியம் இல்லாமல் தான் போனது.

சிவனேஷ் மட்டுமின்றி எஸ்பியில் தொடங்கி அம்பலவாணனின் அரசியல் மற்றும் தொழில் நண்பர்கள் என்று ஒவ்வொருவராக பள்ளிக்கு வந்து சேர, அனைத்து இடத்திலும் தொடர் தாக்குதல் நடத்த நிச்சயம் முன்பகை அல்லது வேறு காரணமிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார்.

ஒருவேளை சரத் இதற்கு காரணமாக இருக்க கூடுமோ..?’ என்ற ஐயம் அம்பலவாணனுக்கு ஏற்பட அருகே இருந்த சரவணனிடம் சரத் குறித்து விசாரித்தார்.

சரவணனுக்கோ மிகவும் இக்கட்டான சூழல்..!!

ஆனால் தற்போதைய சூழலை மேலும் கனமாக்க விரும்பாதவர்,  “இல்ல மாமா அவன் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனதோட சரி அதுக்கப்புறம் உதய்யும் அவனும் சந்திக்கவே இல்லை.. ஆனா அன்னைக்கு உதய் மண்டபத்துல அடிச்சதுக்கு பதிலா இப்படி செய்திருக்க அதிக வாய்ப்பு இருக்கு” என்றவர்,

“சரத்துக்கு உதய்யால் ஏற்பட்ட பாதிப்பு அதை தொடர்ந்த சிகிச்சையை எடுத்து சொல்லி நிச்சயம் அவன்தான் காரணமாக இருக்க கூடும்..” என்றதில் உடனே போலீசாரை அழைத்து தன் மகனை பழிவாங்க நிச்சயம் சரத் தான் இதை செய்திருக்ககூடும் என்று அவன் மீது புகார் கொடுக்க இதுவரை சீக்கிய நான்கு ரவுடிகள் வேறு சிலரை கைகாட்டிய போதும் இப்போது சரத்தை தேடும் படலம் தீவிரமானது.

கண்ணீரின் தடம் தளிரின் முகமெங்கும் வியாபித்திருக்க நாசி விடைக்க கண்ணீரை துடைத்துக்கொண்டே அம்பலவாணனின் அறைக்குள் நுழைய முயன்ற தளிரை சரியான நேரத்தில் தடுத்திருந்தான் ராகவன்.

அதேநேரம் தேவ் இந்த பையனை பற்றியா அலர் நேத்து சொல்லிட்டு இருந்தா..?” என்று வித்யா வீடியோவை அவனிடம் காட்டி கேட்க.., தன் வேகத்தை குறைத்தவன் சரத்தின் பேச்சை கூர்ந்து கேட்ட அதேநேரம் அலர்  விஷ்வதேவிற்கு அழைத்திருந்தாள்.

சொல்லுங்க அண்ணி”

விஷ்வா வீடியோ பார்த்தீங்களா..? நீங்க எங்க இருக்கேங்க லொகேஷன் சொல்லுங்க..?” என்று கேட்கவும் இடத்தை சொன்னவன்,

பார்த்துட்டேன் அண்ணி இதுவரை வழியில எங்கயும் ஆக்சிடென்ட் நடந்த மாதிரி தெரியலை அப்படி இருந்தா நான்...” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனை தாண்டி மின்னல் வேகத்தில் கார் ஒன்று பறந்து சென்றது..

வழக்கத்திற்கு மாறான வேகத்தில் கார் செல்வதை கண்ட விஷ்வா, “அண்ணி நான் கூப்பிடுறேன்” என்றுவிட்டு  தன்னை முந்தி சென்ற காரை பின்தொடர அலர் உதய்யின் கார் புகைப்படத்தையும் எண்ணையும் மெசேஜ் செய்திருந்தாள்.

தேவ் அப்போ அந்த கார் தானா..?” என்றார் வித்யா.

இருக்கலாம ம்மா” என்றவன் தன் வேகத்தை அதிகரிக்க அவனை முந்திக்கொண்டு அசுரவேகத்தில் சென்றது சரத்தின் லாரி!! அதன் பின்னே மற்றொரு கார் துரத்தியது.

லாரியை கண்டதும் இனி தான் விபத்து நடக்க போகிறது என்பதை யூகித்தவன் “ம்மா பாப்பாவை வர்ஷுகிட்ட கொடுத்துட்டு நீங்க பத்திரமா உட்காருங்க...” என்றவன் பின்வரும் வாகனங்களை பார்த்தவாறே,

ப்பா கண்ட்ரோல் ரூம்க்கு இன்ஃபார்ம் பண்ணுங்க, அண்ணிக்கும் சொல்லிடுங்க” என்றவன் லாரியை துரத்த விஷ்வாவை முந்திக்கொண்டு ஒரு கார் சென்றது.

அண்ணா அந்த கார் தான் அண்ணி பிக்சர் நம்பர் அனுப்பி இருக்காங்க”

ஓகே வர்ஷு உன்னால கேப்சர் பண்ண முடியுமா..?” என்று தங்கை கையில் இருந்த குழந்தையை பார்த்தவாறே கேட்க தன் கைபேசியை எடுத்த வித்யா “நான் பண்றேன் தேவ்... நீ கவனமா போ” என்றவர் முன்னே செல்லும் லாரியை  வீடியோ எடுக்க தொடங்கினார்.

இன்னும் வேகம் கூட்டியவன் தன் முன்னே இருந்த காரை முந்திக்கொண்டு செல்ல அவனுக்கு முன்னே சென்று கொண்டிருந்த காரில் இருந்த யூடியூபர்கள் வேலு சொன்னது போலவே ஆரம்பத்தில் இருந்து சரத்தின் முகமும் உதய் முகமும் தெரியும் வண்ணம் காணொளி எடுத்தவர்கள் அவர்களின் வேகம் அதிகரிக்கவும் சற்று திண்டாடிப்போனார்கள்.

உதய் செல்லுமிடத்தை gps மூலமாக ட்ராக் செய்து கொண்டிருந்த ருத்ரவேலன் அவன் வாகனத்தின் ஸ்பீட், மூவிங் டைமை கண்காணித்து கொண்டிருந்தான்.

அவர்கள் நிர்ணயித்து இருந்த இடத்தை நெருங்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்கும் நிலையில் உதய் இன்னும் ராகவனுக்கு அழைக்காததை கண்டு அதிர்ந்து போன ருத்ரவேலன் வேலூரை தாண்டிகொண்டிருந்த நிலையில் ராகவனுக்கு அழைத்து,

மாம்ஸ் கால் பண்ணுங்க..” என்றான் பதட்டத்தோடு...

உதய் இன்னும் சொல்லலையே வேலு...”

உதிண்ணா மறந்துட்டாங்க போல நீங்க அவனுக்கு கால் பண்ணி டைவர்ட் பண்ணுங்க” என்று அவசரமாக சொன்னவன் உதய்க்கு ப்ரைவேட் கால் செய்து ஸ்பாட் வந்துவிட்டதை நினைவூட்டினான்.

ஹ்ம்ம் நியாபகமிருக்கு வேலு” என்றவனின் மனம் முழுக்க பெரும் சஞ்சலத்தில் ஆழ்ந்திருக்க ராகவனுக்கு அழைக்க வேண்டியதை சுத்தமாக மறந்திருந்தான். அந்தளவு சரத் உதய்யை தன்னியல்பில் இருந்து விலக செய்திருந்தான்.

இத்தனை வருடங்களாக கார் ஓட்டிக்கொண்டு இருப்பதால் உதயாதித்தனின் கையும் காலும் தன் போக்கில் லாவகமாக இயங்கி கொண்டிருந்தது’ என்று தான் சொல்லவேண்டும்.

'நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதற்கு...? மனிதன் போடும் கணக்கு ஒன்றாக இருந்தால் தெய்வத்தின் கணக்கு வேறாக அல்லவா இருக்கிறது..!'

சிவசங்கரனுக்கு அழைத்த அலர் நிலவரத்தை கேட்டுக்கொண்டிருக்கும் போதே லாரியை பின்தொடர்ந்து வந்த யூடியூபர்களின் கார் டயர் வழியில் பங்சராகி தாறுமாறாக ஓடவும் அதை கட்டுக்கொள் கொண்டு வந்து ஓரமாக நிறுத்தியவர்களில் இருவர்  மற்ற கார்களில் ஏறிக்கொண்டு தொடர அதற்குள் லாரிக்கும் அவர்களுக்குமான தூரம் வெகு தொலைவு சென்று விட்டது.

அதுமட்டுமல்ல அவனை காப்பாற்ற வேண்டியவர்கள் சென்ற வாகனத்தில் ஒன்று அவசரமாக ரோட்டை கடக்க பார்த்த இருவர் குறுக்கே வந்ததில் சட்டென ப்ரேக் போட்டும் அவர்மீது இடித்துவிட்டதில் கீழே விழுந்தவர்களுக்கு நெற்றியில் ரத்தம் பீறிடவும் அவரை ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்குள் அங்கே கூடிய கூட்டம் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஏற்பட்டு நகரவிடாமல் செய்திருந்தது.

இப்போது விஷ்வதேவிற்கும் லாரிக்கும் நாற்பது அடி தொலைவு என்றால் உதயாதித்தனின் காருக்கும் லாரிக்கும் இருபது அடி தொலைவு மட்டுமே...

ராகவன் அழைத்ததில் லாரியின் வேகம் குறைந்ததை கண்டுகொண்ட உதய் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த தன்னுடைய காரின் வேகத்தையும் குறைக்க இப்போது உதய்க்கும் லாரிக்குமான இடைவெளி சற்று அதிகரித்தது.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17