வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 64

 


ராகவன் அழைத்ததில் லாரியின் வேகம் குறைந்ததை கண்டு கொண்ட உதய் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்த தன்னுடைய காரின் வேகத்தையும் குறைக்க இப்போது உதய்க்கும் லாரிக்குமான இடைவெளி சற்று அதிகரித்தது.

அதில் இன்னும் வேகத்தை குறைத்து ஆட்டோ மோட் போட்டுவிட்டு பக்கத்து சீட்டிற்கு இடமாறி இருந்தான். இங்கே ஃபோனில் உதய் பேசுவதை கேட்ட சரத்திற்கு ஆவேசம் கண்களை மறைக்க இருமடங்கு வேகத்தோடு சென்றான்.

இப்போது இருவாகனங்களுக்கு இடையில் சில அடி தூரங்கள் மட்டுமே இருப்பதை கண்டுகொண்ட உதய்  கதவின் கைபிடியில் கை வைத்து பொசிஷனில் தயாராக இருக்க அடுத்த சிலநொடிகளில் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி ஓரடியாக குறையுமுன் லாவகமாக அவன் வெளியில் குதித்த இரண்டாவது நொடி அசுரவேகத்தில் வந்த லாரி காரை அடித்து தூக்கிட அது கட்டுப்பாட்டை இழந்து பேரிக்கார்டை இடித்துக்கொண்டு சாலையின் மறுபுறம் சென்று கவிழ்ந்தது.

எதிர் சாலையில் வந்து கொண்டிருந்த சரக்கு லாரியும் குறுக்கே விழுந்த காரை எதிர்பாராமல் வேகத்தை சட்டென கட்டுபடுத்த முடியாமல் காரை இழுத்துக்கொண்டு சில அடி தூரங்களுக்கு சென்ற பின்பே நிறுத்திட காரின் முன்புறம் அப்பளமாக நொறுங்கியிருந்தது.

இடித்த வேகத்தில் கார் கவிழ்ந்ததை வெற்றி சிரிப்போடு பார்த்தவன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்ப வேலுவின் உத்தரவின் படி அங்கே இருநூறு பைக்கர்ஸ் அவன் வரும் வழியை தடை செய்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு முன்பாகவே காவல் துறை வாகனம் அங்கே காத்துக்கொண்டிருந்தது.

ஆம் இதுவும் ருத்ரவேலனின் ஏற்பாடே..!’  முன்னறிவிப்பு இன்றி எந்த அனுமதியும் பெறாமல் இப்படி கும்பலாக நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பது தவறு என்று தடுத்து நிறுத்தியிருந்தார் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்... அவர் மட்டுமல்ல அங்கு விபத்து நடக்கவிருக்கும் செய்தி பரவியதில் மேலும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டிருந்தனர்.

சாலையோரம்  ரோட் பேட்ச் வொர்க் முடிந்து ஜல்லியும் மணலும் கொட்டி வைக்கபட்டிருந்த  இடத்தை தான் ருத்ரவேலன் தேர்ந்தெடுத்து இருந்தான். 

உதய் சரியான நேரத்தில் குதித்திருந்தாலும் அப்போது அவன் மனம் கொண்டிருந்த அல்லாட்டத்தினால் மணல் மீது குதிப்பதற்கு பதிலாக ஜல்லி மீது குதித்ததில் சற்று பிசகி போனது அவன் கணிப்பு.

அழுத்தி கையை ஊன்றும் போது ஜல்லியில் பிடிப்பு ஏற்படாது கைமூட்டில் பெரும் வலி எடுப்பதை உதய் உணர்ந்திருந்தான். 

அதிலிருந்து உருண்ட உதய் கீழே செல்ல அவசரமாக வர்ஷுவையும் வித்யாவையும் இறக்கிவிட்ட விஷ்வா, “வர்ஷு டேக் கேர் ஆஃப் ஹிம், ம்மா ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்க” என்றவன் அதிவேகமாக சரத்தை விரட்டி செல்ல அடுத்த ஐந்தாவது நிமிடம் அலர் செய்திருந்த ஏற்பாட்டின் படி ஆம்புலன்ஸ் அங்கே வந்திருந்தது.

அதேவேளை பைக்கர்ஸ் சப் இன்ஸ்பெக்டரோடு வாக்குவாதத்தில் ஈடுபட துவங்கி இருந்தனர்.

தூரத்தே லாரி தெரியவும், “இப்போ என்ன தான் சொல்ல வரீங்க எங்களை எல்லாம் அரெஸ்ட் பண்ணனுமா பண்ணிக்கோங்க, இல்ல ஃபைன் போட்டுக்கோங்க” என்றிட இன்ஸ்பெக்டருக்கு ருத்ரவேலனிடம் இருந்து அழைப்பு.

ஸார்” என்றவர் நிலவரத்தை சொல்லவும்,

யோவ் கொடுக்கற எந்த வேலையாவது  உருப்படியா செஞ்சிருக்கியா நீ..?” என்று எகிற,

ஸாரி ஸார் என்ன செய்யணும் சொல்லுங்க அப்படியே செய்யறேன்” என்ற நொடி புல்லட்டுகளின் பின்னே வந்து நின்ற லாரி ஹாரனை பலமாக ஒலிக்கவிட்டது.

ஃபோர் வீலர் போறதுக்கு மட்டும் வழியை விட்டு போக சொல்லு” என்று சொல்லிக்கொண்டிருக்க பின்னே சலசலப்பு..!

என்னய்யா அது சத்தம்..?”

தெரியலை ஸார்”

இதை சொல்லவா கேட்டேன்...? நீயெல்லாம் என்னன்னு ட்ரைனிங் முடிச்சிட்டு வந்த ஒவ்வொன்னும் நான் சொல்லி கொடுக்க வேண்டியதா இருக்கு..? போ.. அங்க என்ன பிரச்சனைன்னு போய் பார்த்துட்டு எனக்கு கூப்பிடு” என்று சொல்ல,

வழிநெடுக நிறுத்தியிருந்த பைக்குகளை தாண்டி செல்ல அங்கே லாரியில் இருந்த சரத்தை இழுத்து போட்டு அடித்துக்கொண்டிருந்தான் விஷ்வதேவ்.

யாருடா நீ எதுக்கு என்னை அடிக்கிற..?” என்று சரத் அவனிடமிருந்து தப்பிக்க முயல விடாமல் பிடித்து லாரியோடு அவனை சாய்த்தவன் தன்னிடம் இருந்து திமிரியவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து சரத்தை காரில் இழுத்து போட முயன்றான்.

அதற்குள் பைக்கர்ஸ் கவனம் இங்கே திரும்பிட சப்இன்ஸ்பெக்டரும் அங்கே வந்துவிட்டார். காக்கி சட்டையை கண்டதும், “ஸார் வழியில ஒரு ஆக்சிடென்ட் பண்ணிட்டு தப்பிச்சு வந்துட்டான் ராஸ்கல்”

ஆக்சிடென்ட்டா..!! எங்கே..?” என்றவருக்கு விஷ்வா கையில் இருந்தவனை கண்டதும் அப்போது வந்து வீடியோ நினைவில் வர,

நீங்க யாரு..? உங்களுக்கு எப்படி தெரியும்...?”

ஐ ஆம் டாக்டர் விஷ்வதேவ்..! இவனை முதல்ல அரெஸ்ட் பண்ணுங்க ஸார் நான் உங்களுக்கு விளக்கமா சொல்றேன்...” என்று சொல்லி கொண்டிருக்க அத்தனையும் அங்கே இருந்த நபர்களால் கச்சிதமாக வீடியோ எடுக்கப்பட்டு உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவேற்றபட்டிருந்தது...

அவர்களில் சிலர் ‘விபத்து’ என்றதும் தங்கள் பைக்கை திருப்பிக்கொண்டு பார்க்க அங்கே உதயாதித்தனை ஆம்புலன்சில் கொண்டு செல்வதையும் அவன் கார் அப்பளமாக நொறுங்கி கிடப்பதையும் கண்டவர்கள் உடனே அதையும் வீடியோ எடுத்து பகிர்ந்திட காவல்துறையினர் படை எடுத்திருந்தனர்.

சாலையை ஆக்கிரமித்து இருந்தவர்களை விலக்கி ருத்ரவேலன் அடுத்த இருபது நிமிடத்தில் ஸ்பாட்க்கு வந்துவிட விலங்கிட்டு ஜீப்பின் பின்புறம் அமர்த்தபட்டிருந்த சரத் “தான் விபத்து ஏற்படுத்தவில்லை” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே யூடியூபர் வீடியோவை கொடுத்து உறுதிபடுத்த ஓங்கி சரத்தை அறைந்த ருத்ரவேலன்

மூச்!!! மூடிட்டு உட்காரனும்...” என்றதில் அதிர்ந்தவனுக்கு வார்த்தை எழவில்லை.

இன்னும் என்னையா பார்த்துட்டு இருக்க க்ரவுடை க்ளியர் பண்ணு” என்றவன் பைக்கர்களில் ஓரிருவரை மட்டும் இருக்குமாறு சொல்லிவிட்டு மற்றவர்களை கிளம்ப சொன்னவன் சரத்திடம் வர,

நான் யார் தெரியுமா..? இப்பவே என்ன பண்றேன் பாரு” என்று சட்டையில் இருந்த கைபேசியை எடுக்க அதை பறித்த வேலு சத்தமே இல்லாமல் ஜீப்பின் டயருக்கு அடியில் நகர்த்தி விசில் அடித்து நகர்ந்து நிற்க டிரைவர் ரிவர்ஸ் எடுத்து ஜீப்பை திருப்பி நிறுத்திட அதில் அவன் கைபேசி சில்லுசில்லாக சிதைந்து போனது.

விஷ்வா வித்யா பகிர்ந்திருந்த வீடியோவை வேலுவிடம் கொடுத்து நிகழ்ந்ததையும் முழுதாக சொல்லி முடிக்கவும் உடனே அதை சமூக வலைதளங்களில் பகிர அங்கே சரத்திற்கு எதிராக கருத்துக்கள் பதியப்பட்டு அவனை தப்பிக்க விடாமல் காவல் துறையினர் நேர்மையாக செயலாற்ற வேண்டும் என்று கண்டனங்கள் எழுந்திருந்தது.

நேரில் பார்த்த சாட்சி இப்போதைக்கு நீங்க தான் டாக்டர்! அதனால எப்போ கூப்பிட்டாலும் சாட்சி சொல்ல வேண்டி இருக்கும்” என்று சொல்ல ‘எங்கு வேண்டுமானாலும் வருவதாக கூறியவன்’ ஏற்கனவே அலர் சொல்லியதன் பேரில் ஆம்புலன்ஸ் வந்திருக்க வித்யாவும் வர்ஷுவும் உதய்யோடு மருத்துவமனைக்கு சென்றுவிட்ட நிலையில் தந்தையை அழைத்துக்கொண்டு ருத்ரவேலனோடு சென்றான்.

சரத் கிடைத்த விடயத்தை மேலதிகாரிகளுக்கு சொல்லிய வேலு உடனே அவனை மேஜிஸ்ட்ரேட் முன்னே நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை தூரிதமாக செய்திருந்தவன் அடுத்த ஒருமணி நேரத்தில் சரத்தின் குற்றங்களை ஆதாரத்தோடு சாட்சிகளை கொண்டு நிருபித்து அவனை கோர்டில் ஒப்படைத்து காவலில் எடுத்திருந்தான்.

தளிர் திருமணம் செய்ய இருந்த தொழிலதிபர் உதயாதித்தனை கொலை செய்ய முயன்ற சரத் பிடிபட்டான்!! தன் உயிரை பணயம் வைத்து துரத்தி பிடித்த டாக்டர் விஷ்வதேவ்!! குற்றவாளியை சம்பவ இடத்திலேயே கைது செய்து தன் கடமையை சிறப்பாக செய்த காவல்துறை ஆய்வாளர் ருத்ரவேலன்’ என்று நால்வர் குறித்து வேகமாக பரவி செய்தி ஊடங்கங்களிலும் சரத் பேசிய காணொளியோடு வெளிவர உதய் மீதான தாக்குதல் மக்களிடையே பேசு பொருளாகி போயிருந்தது.

உடனுக்குடன் செயல்பட்டு  குற்றவாளியை உடனே கைது செய்ததற்கு ருத்ரவேலனுக்கு அனைத்து புறமிருந்தும் பாராட்டுகள் குவிய மறுபுறம் உயிரை பணயம் வைத்து சரத்தை துரத்தி பிடித்த விஷ்வாவும் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தான்.

விஷ்வாவிற்கு அழைப்பு வந்துகொண்டே இருந்த நிலையில் தந்தையிடம் கொடுத்துவிட்டு மற்ற சம்பிரதாயங்களையும் முடித்துக்கொண்டு முதலில் சென்றது உதய் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனைக்கு தான்..!

மருத்துவர் அவனுக்கு சிகிச்சை அளித்து வலது கரத்தில் ஏற்பட்டிருந்த மைல்ட் பிராக்சருக்கு கட்டு போட்டிருந்தார்.

விபத்து நடந்ததும் உதயாதித்தனை மடியில் ஏந்திய வித்யாதேவி வர்ஷு முதலுதவி அளித்தபின் மருத்துவமனைக்கு வந்து  சிகிச்சை அளிக்கும் போதும் உடன் இருந்து உதவியவர் அவனை விட்டு இம்மியும் அகலவில்லை.

ஏனோ நேற்று அலர் மூலமாக தான் விரும்பும் பெண் மீது அவன் கொண்ட நேசம்... எத்தகைய சூழ்ச்சி, ஆபத்து என்று எது சூழ்ந்த போதும் அவளை விட்டு விலகாது அவளுடன் நின்றவனை வித்யாவிற்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

வித்யா அலர்விழிக்கு அழைத்து உதயாதித்தனிடம் கொடுக்க பேசி முடித்தவன் புன்னகையோடு “உங்களுக்கு சிரமம் கொடுத்துட்டேனா ம்மா” என்று கேட்க அவன் எழுந்து அமர உதவி செய்து தலையணையை பின்புறமாக வைக்க உதய் சாய்ந்து அமர்ந்தான்.

அப்படியெல்லாம் இல்ல ப்பா... உனக்கு வலி எப்படி இருக்கு..?” என்றவர் அவனது  சோர்ந்த முகத்தை கண்டே அவன் பசியை உணர்ந்தவராக வர்ஷுவை உணவு வாங்கி வர சொல்லி தன் கையால் ஊட்டிவிட உதய்யும் மறுக்காமல் வாங்கிக்கொண்டான்.

மாசுமருவற்ற உதயாதித்தனின் முகத்தை கண்டவருக்கு தன் மகனையும் அவனையும் வேறாக பிரித்து பார்க்க தோன்றவில்லை... அப்படி ஒரு பாசப்பிணைப்பு அந்த சில மணி நேரங்களிலேயே வித்யா, உதய்  இருவருக்குமிடையில் தோன்றி இருந்தது.

அம்மா என் ஃபோன் எங்கே..?” என்று உதய் கேட்க மேஜையில் இருந்து எடுத்தவர்,

யாருக்கு சொல்லு நான் டையல் பண்ணி கொடுக்கறேன்” என்று அவன் லாக் எடுத்துக்கொடுத்ததும் ராகவனுக்கு அழைக்க சொல்ல வித்யாவும் அப்படியே செய்து அவன் காதில் வைத்தார்.

அனைவரும் மருத்துவமனைக்கு வந்துவிட்டதை அறிந்தவன் “ம்மா இந்த ப்ளாக்கு எப்படி வரணும்னு சொல்லிடுங்க” என்றதும் அவரும் ராகவனிடம் வழி சொல்லிய அதேநேரம் அங்கே வந்து சேர்ந்தனர் விஷ்வாவும் சிவசங்கரனும்.

ஹவ் ஆர் யூ ஃபீலீங்க் நவ் மிஸ்டர் உதய்..?” என்று விஷ்வா கேட்க அவனை தெரியாத உதய்யின் நெற்றி சுருங்குவதை கண்ட வித்யாதேவி “உதய் இது என் பையன் விஷ்வதேவ்” என்றார்.

நைஸ் டூ ஸீ யூ ஸார்” என்று உதய் புன்னகைக்க,

வர்ஷு எக்ஸ்ரே ஸ்கேன் எல்லாம் பார்த்தாச்சா..? எனி இஷுஸ்”

நத்திங் டூ வொரி ண்ணா.. ரைட் எல்போ மைல்ட் க்ராக் அண்ட், அப்ராஸியன் (abrasion) ஸ்பாட்டட் .." என்று அவனுக்கு ஏற்பட்டிருந்த காயங்களை பற்றி வர்ஷு கூற,

வேற எங்கயாவது வலி இருக்கா உதய்..?”

ஆமா ஸார்”  என்று ஆரம்பிக்கவும்,

"அண்ணான்னு சொல்லு உதய்” என்றார் வித்யா உரிமையாக.!!

சரிம்மா..! ஷோல்டர்ல மட்டும் பெயின் அதிகமா இருக்குண்ணா..” என்று சொல்ல, அவன் மருத்துவ குறிப்புகளை படித்தவன் அவனுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளையும் பார்வையிட்டு வர்ஷுவிடம் ஏதோ சொல்ல,

நான் கொடுத்துட்டேன் ண்ணா...”  என்றாள்.

ஓகே! உதய் நத்திங் டூ வொரி... யூ ஆர் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்.. இந்த கட்டு கூட ஜஸ்ட் ஒரு இரண்டு வாரத்துல எடுத்துடலாம்”  என்ற போதே உதய்யின் குடும்பம் அவன் அனுமதிக்க பட்டிருந்த அறையினுள் நுழைந்தது.

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17