வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 65

 


தீ விபத்து நடந்த இடத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த ஏராளமான போலீசார் குவிக்கபட்டிருந்தனர். 

விபத்திற்கு  காரணமானோர் குறித்த விசாரனையை தூரிதபடுத்த சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவும் உதய் காரின் பின்னால் சரத் கிளம்பியது தான் தாமதம் தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய குமாரை அடுத்த பத்து  நிமிடத்தில் போலீசார் சுற்றி வளைத்திருந்தனர்.

பின்னே பிடிபட்ட ரவுடிகளில் ஒருவன் போலீஸ் அடி தாளாமல் தங்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய குமாரை அவன் கைப்பேசி எண்ணோடு போட்டு கொடுத்துவிட்டான்.

குமாரின் கைபேசி லொகேஷன் கொண்டு போலீசார் சரியான நேரத்தில் கைது செய்திருந்தனர். ஏற்கனவே போலீஸ் கேஸுக்கு பயந்திருந்தவன் இப்போது அவர்களின் அரைமணி நேர விசாரணையிலேயே உண்மை அனைத்தையும் கக்கிவிட்டான்.

அவர்கள் சொன்ன வேலையை செய்து முடிக்க ரவுடிகளுக்கு மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக கொடுக்கப்பட்டதையும் அது எவ்வாறு என்பதையும் சொன்னவனிடம் ஆடியோவை போட்டு காண்பித்து ‘அதில் பேசியது சரத் தானா..?’ என்பதை கேட்க அவனும் உண்மையை ஒப்புக்கொண்டான்.

அதற்கேற்றவாறு உதய்யின் விபத்தும் அதைதொடர்ந்து சரத் பிடிபட்டதும் நீதிபதியிடம் மற்ற வீடியோ ஆடியோக்களை விட உடனிருந்த குமாரின் வாக்குமூலம் வலுவானதாக அமைந்திட அவனை காவலில் வைக்க சொல்லிவிட்டார்.

சரத் குறித்த அத்தனை ஆடியோ மற்றும் வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீப்போல பரவியதில் உயர்திகாரிகளுக்கு அழுத்தம் அதிகரித்தது. அவர்களின் அடுத்தகட்ட விசாரணையில் சரத் அன்றுவரை எங்கிருந்தான் என்பதை அறிந்தவர்கள் சரத் குமாருக்கு எழுத்து மூலமாக உத்தரவிட்டதையும் அறிந்து உடனே அவன் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனையில் சரத் தங்கியிருந்த அறையை அலச அங்கே அவன் நின்றிருந்த ஜன்னலுக்கு வெளியே சன்ஷீல்ட் மீது கசக்கி எறிந்திருந்த காகிதங்களையும் குப்பைத்தொட்டியில் இருந்து சில ஆதாரங்களையும் சேகரித்திருந்தனர்.

ராகவன் வீடியோ அனுப்பும்  முன் தான் அம்பலவாணனின் பள்ளியில் நடந்த கலவரம் குறித்து அலர் அறிந்திருந்தாள். அதை தொடர்ந்து உதய்யின் கார்கள் கொளுத்தப்பட்டது என்று அவர்களுக்கு ஏற்பட்ட சேதம் அனைத்தையும் பார்த்த அலரின் வக்கீல் மூளை ஓரளவு இதற்கும் சரத்திற்கும் சம்பந்தம் இருக்குமென்று யூகித்துவிட்டது... ஆனால் செய்தியில் இது தொழில் போட்டி என்று ஒளிபரப்பி கொண்டிருந்ததால் கோர்ட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

ஆனால் ராகவன் அனுப்பியவற்றை பார்த்த பின்னர் ‘நிச்சயம் இது சரத்தின் வேலை‘ என்று  அறிந்துகொண்டவள் உடனே ராகவனுக்கு அழைத்து, “உதய் எங்கே..? தன் அழைப்பை ஏன் எடுக்கவில்லை” எனவும் அவன் விவரம் சொன்னான்.

வக்கீல் கிட்ட உண்மை மட்டும் தான் பேசணும் ராகவன்... சரத் ஆக்சிடென்ட் பண்ண போற விஷயம் நிஜமாவே உதய்க்கு தெரியாதா..?”

மேம்... அது” என்று தயங்கவும்,

ராகவன் நீங்க எடுத்திருக்க ரிஸ்க் சாதாரணமானது கிடையாது.. எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்  இல்ல நான் தளிர் கேஸ்ல இருந்து விலகிக்கிறேன்”

ஸாரி மேம்” என்றவன் சரத்தின் திட்டத்தை இவர்கள் அறிந்துகொண்டது அதைதொடர்த்து இவர்கள் அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டது என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடிக்க அலருக்கு அத்தனை கோபம்.

ஹைவேஸ்ல நீங்க நினைச்சதை நடத்த இது என்ன சினிமா ஷூட்டிங்கா..? எதுக்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கறீங்க..? ஹாஸ்பிட்டல் விட்டு வெளியே வந்துட்டா சரத்தை கண்காணிக்க முடியாதா..?” என்று அவனை திட்டி தீர்த்தவள் உடனே சிவசங்கரனுக்கு அழைத்து காரில் இருந்து உதய் தப்பிக்க போவதை சொல்லி அவனை உடனடியாக காப்பாற்றுமாறு சொல்லி இருந்தாள்.

இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த உதய்க்கு அழைத்து பேசிய போதும்., “என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்திருக்கலாமே உதய்..!” என்றாள்.

மேம் எங்க இதை சொன்னா நீங்க சரத் பேசின ரெகார்டிங் வச்சு கேஸ் மூவ் பண்ணலாம்னு  சொல்லிடுவிங்களோன்னு தான் உங்ககிட்ட சொல்லலை... அதோட அவன் கொலை பண்ண முயற்சி செய்யபோறதா பேசி இருக்கானே தவிர அவனால யாருக்கும் எதுவும் ஆகலைன்னா நிச்சயம் தண்டனை கிடைக்காம போகவும் வாய்ப்பு இருக்கு அதோட என்னதான் நாம ஆதாரம் கொடுத்தாலும் அவனோட பணபலமும் அதிகார பலமும் தான் அங்கே சத்தமா பேசும்”

“....”

அதைவிட இந்த ப்ளான் வெளியில தெரிஞ்ச பிறகு என்மேல கை வைக்க முடியாத கோபத்தை என் குடும்பத்து மேல காண்பிக்கவும் வாய்ப்பு இருக்கு அதுதான் இந்த அட்டெம்ப்ட் பண்ணின பிறகு சொல்லிக்கலாம்னு இருந்தேன்”

நிஜமாவே இதற்காக தான் சொல்லாம விட்டீங்களா..?” என்று மீண்டுமுறை அலர் அழுத்தி கேட்க,

இதுவும் ஒரு காரணம் ஆனா சரத்துக்கு எதிரான சாலிட் எவிடென்ஸ் கிடைச்சா தான் அவனை வெளியில நடமாட விடாம செய்யமுடியும் அதோட எந்த காரணம் சொல்லியும் வாய்தா கேட்டு கோர்டுக்கு வராம இருக்க முடியாதே..!” என்றான்.

அப்போ கார் பஸ்செல்லாம் அவன் கொளுத்தற வரை வெயிட் பண்ணினது..”  என்று அலர் கேள்வியாய் நிறுத்த..,

இல்லை மேம் அது நாங்களே எதிர்பார்க்காதது... எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நடத்த விட்டிருக்க மாட்டேன்... தளிர் அவனோட வாயை உடைச்சுட்டதால பேச முடியாதவன் பெருசா என்ன செய்திடுவான்னு நினைச்சுட்டேன்... அதைவிட ஏற்கனவே என்னோட உயிருக்கு நாள் குறிச்சவனுக்கு அதைவிட அதிகமா வேற என்ன தேவையா இருந்திட போகுதுன்னு நினைச்சேன்”

இதுதான் உதய்! இந்த அலட்சியம் தான் இருக்க கூடாது..! வாய் போனா என்ன அவனுக்கு கை இருக்குமே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எல்லாம் அவன் ரைட்டிங்ல கொடுத்திருப்பான் நீங்க மிஸ் பண்ணிட்டீங்க போல... எனக்கு முன்னாடியே இந்த விஷயத்தை சொல்லியிருந்தா நான் அலெர்ட் பண்ணியிருப்பேன்...”

எங்கே அத்தனை நாள்கள் கொண்டிருந்த அத்தனை அலைப்புருதலும் தளிரின் ஒற்றை வார்த்தையில் நிறைவு பெறவும் அவன் ஆசுவாசம் கொண்டுவிட்டது தானே இத்தனைக்கும் காரணம்..! ஆனால் அதை சொல்லி தன்னை நியாயபடுத்த விரும்பாதவன் இன்று கற்றுக்கொண்ட பாடத்தை மனதில் நன்கு பதியவைத்துக்கொண்டான்.

“...”

எப்பவுமே நம்மோட எதிரியை குறைவா எடை போட்டுட கூடாது உதய்.. இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருந்தா இதை தவிர்த்திருக்கலாம்... எனிஹவ் ! இத்தனை நாளா அவனை கோர்ட்டுக்கு வர வைக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்தது இப்போ அவன் எந்த சால்ஜாப்பும் சொல்ல முடியாது ஜெயில்ல இருக்க போறவன் எல்லா ஹியரிங்கும் தவறாம வந்துதான் ஆகணும்..  கவனமா இருங்க” என்று வைத்தாள்.

**************************

காப்பீட்டு அதிகாரிகள் பள்ளியிலும் இன்ன பிற இடங்களிலும் விசாரணை நடத்த சரவணன், ராகவன், அம்பலவாணன் என்று அனைவரும் அவர்களுக்கு தேவையான தகவல்களை அளித்து கொண்டிருந்தனர்..  சுஜி தந்தையுடன் இருக்க நிவி மாமனாருடன் வந்திருந்தவள் அடுத்த அரைமணி நேரத்தில் ராகவன் சொன்னதன் பேரில் தளிரை அழைத்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

ஆம் அம்பலவாணனை பார்க்க விடாமல் ராகவன் அவளை தடுத்துவிட அவனிடம் தன் பேச்சுக்கள் எதுவும் எடுபடாமல் போக இறுதியில் ஒன்று அம்பலவாணனை பார்த்தே தீருவேன் இல்லை எங்கள் வீட்டிற்கு செல்வதை தடுக்க கூடாது என்று ஒரே பிடியாக நின்றுவிட்டாள் தளிர்.

உதய் தானே தந்தையிடம் சொல்லி கொள்கிறேன் என்றதில் வேறு வழி இல்லாத ராகவன் தளிரை அவர்கள் வீட்டிற்கு உரிய பாதுகாப்போடு அனுப்பி வைக்க ஒப்புக்கொண்டான்.

அப்போதுதான் உயர் அதிகாரியுடனான மீட்டிங் முடிந்து வெளியில் வந்த சிவனேஷ் சரத் பேசியதை கேட்டதும் உடனே உதய்க்கு அழைக்க அவன் அதை ஏற்கவே இல்லை.. ஏதோ தவறாக நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தவர் மகனுக்கு அழைக்க அவனோ ‘இப்போதுதான் சரத் விபத்து நிகழ்த்த இருப்பது குறித்து அறிந்துகொண்டு சம்பவ இடம் நோக்கி செல்வதாக’ சொல்லி வைத்துவிட்டான்.

அவன் பேச்சே அவரின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்திட ‘பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று மகளுக்கு அழைத்து பள்ளிகூடத்திற்கு வரசொல்லி விட்டு தானும் அங்கு சென்றார்.

ஆனால் விபத்து செய்தியை அறிந்த அம்பலவாணன் முற்றிலுமாக உடைந்து போயிருந்தார்.. அதுவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உதய்யின் வாகனம் அப்பளமாக நொறுங்கி கிடந்ததை கண்ட அதிர்ச்சியில் மனிதர் மயங்கியே விழ அதற்குள் அங்கே வந்திருந்த உமா அவருக்கு சிகிச்சை அளிக்கவும் மெல்ல கண் விழித்திருந்தார்.

கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டடா...!” என்று சிவனேஷ் நண்பனை அணைத்துக்கொள்ளவும்..,

உதய்.. உதய்க்கு.. சிவா என் பையனுக்கு என்னடா ஆச்சு..?” என்றவரின் கண்களில் இருந்து நீர் வேகமாக இறங்கியது.

அம்பலா பயப்படாத, கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.. உதய்க்கு ஒன்றுமில்லைடா, அவனோட கார் மட்டும் தான் டேமேஜ் ஆகியிருக்கு...! அவன் ரொம்ப நல்லா இருக்கான், இங்க பாரு” என்றவர் உதய்யை அழைத்து செல்லும் காட்சியை காண்பித்து,

அவனுக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சு கடைசி நிமிஷத்துல கீழ குதிச்சு தப்பிச்சுட்டான்..” என்ற போதும் தந்தையின் மனம் அத்தனை லேசில் சமன்படாததில் மனிதர்  உடனே மகனுக்கு அழைத்தார்.

அழைப்பை ஏற்ற வித்யாதேவி உதய்க்கு சிகிச்சை அளித்து கொண்டிருப்பதை தெரிவித்து “பயப்படுமளவு ஒன்றுமில்லை நீங்க நிதானமாக வாங்க... கடவுள் புண்ணியத்துல உங்க பையன் ரொம்ப சேஃப்பா இருக்காங்க” என்றிருந்தார்.

நீங்க யாரும்மா..? என் பையன் கிட்ட கொடுங்க நான் பேசணும்” என்றவரின் தவிப்பை உணர்ந்த வித்யாதேவி உடனே வீடியோ காலில் உதய்யை  காண்பிக்கவும் மகனை தலை முதல் கால் வரை கண்ணார கண்ட பின்னரே ஆசுவாச மூச்செடுத்திருந்தார்.

அதேவேளை செய்தி கேள்விப்பட்டு ஜெகாவும், ராஜியும் கண்ணீரோடு பள்ளிக்கு வர விபத்துபொருட்சேதம், விசாரணையை விட மகனே பிரதானமாகியதில் உடனே கிளம்பிவிட்டார்.

விஷ்வதேவ் குடும்பம் விடைபெறவும் தன் இருபுறமும் அமர்ந்திருந்த ராஜி மற்றும் ஜெகாவிடம், “கண்ணை துடைங்க ம்மா எனக்கு ஒண்ணுமில்ல சின்ன பிராக்சர் தான்! நான் நல்லா இருக்கேன்” என்றபோதும் அவன் கை கால்களில் ஏற்பட்டிருந்த சிராய்ப்பு நெற்றியில் போடபட்டிருந்த பிளாஸ்டர் அனைத்தும் அவர்களின் கண்ணீரை பெருக்கியது.

சுஜி, நிவிக்கும் இன்னும் உண்மை முழுதாக தெரியாது... விபத்து செய்தி கேட்டு உதய்யை நேரில் பார்த்த பின்னரே அவர்கள் முகம் தெளிவடைந்தது.. பெண்கள் அனைவரும் அவனை சுற்றி நின்றுகொள்ள கட்டிலின் விளிம்பில் பதற்றமும் பரிதவிப்பும் குறையாது நின்றிருந்த அம்பலவாணன் மெளனமாக மகனை கண்களில் நிறைத்து கொண்டிருந்தார்.

அதேவேளை தத்தையை தேடிய உதய்யின் விழிகள் அவர் நின்றிருந்த கோலம் கண்டு அதிர்ந்து போனது.

இத்தனை வருடங்களில் தந்தையை இப்படி பார்த்திராதவனுக்கு உள்ளே ஏனோ பிசைந்தது.. காலை பேருந்துகள் எரிந்து கொண்டிருந்த போது கூட அவர் முகம் இந்தளவு உயிர்ப்பற்று போய் விடவில்லை... முதல் கட்ட அதிர்வில் இருந்து மீண்டவர் எப்படியும் இழப்பை ஈடுகட்டி விடலாம் என்ற உறுதியோடு செயல்பட்டுகொண்டிருந்தார்..

ஆனால் இப்போது அப்படியில்லையே அவர்கள் சாம்ராஜ்யத்தின் ஒற்றை வாரிசு..! எங்கே தான் இத்தனை வயதிலும் குத்துக்கலாட்டம் இருக்கையில் வாழவேண்டிய வயதில் மகன் தன்னை விட்டு சென்றுவிடுவானோ..!’ என்று உதய்யை கண்ணார காணும் வரையில் அவர் உள்ளம் அத்தனை பாடுபட்டு போனது.

எத்தனை பெரிய விபத்து..! நிச்சயம் அவன் கார் சேதமடைந்து இருந்ததை கண்டவருக்கு தன் மகன்  உயிர் பிழைத்திருப்பான் என்ற நம்பிக்கையே இல்லை. இப்போது மகனை முழுதாக கண்டவரின் விழிகள் வாஞ்சையாய் வாரிசுருட்டிக்கொள்ள அவன் மழலை மொழிக்காக காத்திருந்ததை விடவும் ஆவலாக இப்போது மகன் உதிர்க்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் துளி துளியாய் தன்னுள் உள்வாங்கி கொண்டிருந்தார்.

ப்பா” என்று உதய் அழைக்கவும் ஓடி சென்று அடிபடாத அவன் கையை அழுத்தமாக இறுக்கி பிடித்து கொண்டார் அம்பலவாணன்.

தந்தையின் கரம் கொண்டிருந்த அதீத நடுக்கத்திலேயே  அவர் உணர்வுகளை உணர்ந்த உதய்யின் நெஞ்சில் மெல்லிய வலி பரவியது.

ப்பா, ஐ ஆம் ஆல்ரைட் ப்பா” என்று உதய் அவர் கரத்தில் முத்தமிட்டு சொல்ல வாஞ்சையோடு மகனை அணைத்து கொண்டவரின் கண்ணீர் சூடாக அவன் கழுத்தில் இறங்கி மார்பில் வழிந்தது.

ப்பா.. ப்ளீஸ் எனக்கு ஒண்ணுமே இல்லை காம் டவுன்..!” என்றவனின் குரல் கரகரக்கவும் தன்னை மீட்டுக்கொண்டவர் கண்ணீரை துடைத்துக்கொண்டே,

நான் அழலைப்பா, உனக்கு வலிக்கு மருந்து கொடுத்தாங்க தானே..!” என்றவாறே மகனின் கட்டுபோடபட்டிருந்த கரத்தை மென்மையாய் வருடி கொடுத்தார். மருத்துவமனையில் இருந்த உதயாதித்தனிடம் ஏற்கனவே ருத்ரவேலன் வாக்குமூலம் பெற்றிருந்த போதிலும் உயர் அதிகாரிகள் வந்து மீண்டும் விசாரித்திருந்தனர்...

அவர்களிடமும் “இப்படி ஒரு விபத்து நடக்கவிருப்பதே அவனுக்கு தெரியாது...ராணிபேட்டை கட்டிடத்திலும் தாக்குதல் ஏற்பட்டிருப்பதை அறிந்து சென்றவன் முதலில் லாரி துரத்துவதை அறிந்திருக்கவில்லை என்றாலும் ஒருகட்டத்தில் அது தன்னை இடிக்கும் நோக்கத்தோடு வருவதை உணர்ந்தவன் உயிர் தப்பிக்க வேகமெடுத்து வெளியில் குதித்திருந்தான்” என்று வார்த்தை மாறாமல் அதையே சொல்லியிருந்தான்.

சரத் பேசின வீடியோவை நீங்க பார்க்கலையா..? இது தெரிஞ்சு உங்களுக்கு யாரும் கால் பண்ணலையா...?”

இல்ல ஸார் வீடியோ வந்தது எனக்கு தெரியாது இப்போ பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்... பட் டிரைவ் பண்ணிட்டு இருக்கிறப்போ எனக்கு கண்டினியூஸ்ஸா சில கால்ஸ் வந்தது ஆனா லாரி என்னை டார்கெட் பண்றது தெரிஞ்சதுல என்னால பேன்ட் பேக்கேட்ல இருந்த மொபைலை எடுத்து அட்டென்ட் பண்ண முடியலை” என்று சொல்ல அவர்களுக்குமே அந்த சூழலில் நிச்சயம் அதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர முடிந்தது.

ஆனால் அவர்களின் திட்டப்படி வேலு அவனோடு தொடர்புகொண்ட மற்றொரு சிறிய ரக ஃபோனை விபத்து நடந்த பிறகு அவன் உதய்யிடம் இருந்து எடுத்துகொண்டது மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஓகே உதய் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கா..?”

ஸார் சந்தேகம் என்றில்லை இந்த வீடியோவை பார்த்த பிறகு சரத் தவிர வேற யாரும் செய்திருக்க முடியாதுன்னு  உறுதியா நம்பறேன்” என்றவனிடம்

உங்களை கொல்ல சரத்கு என்ன மோடிவ் அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது முன் விரோதமா..?” என்றவரிடம் சுருக்கமாக திருமணம் தொட்டு நடந்த விடயங்களை சொல்லவும் அவனிடம் மேலும் சில கேள்விகள் கேட்டு கையெழுத்து பெற்று கிளம்பினர்.

அதேவேளை உதய் கொடுத்த வாக்குமூலத்தை கேட்டுகொண்டிருந்த ஜெகா ராஜியின் உள்ளம் கொந்தளித்து கொண்டிருந்தது.

ஏதாவது சாப்பிடறியா ஆதி...?”

இல்ல ராஜிம்மா நான் சாப்ட்டுட்டேன்... வலி அதிகமா இருக்கு நான் கொஞ்ச நேரம் படுக்கறேன்”

வேற ஏதாவது வேணுமா ண்ணா..?”

வேண்டாம் நிவி”

டேப்லெட் போட்டியா ப்பா..?”

ஹ்ம்ம்”

பால் குடிச்சிட்டு படுத்துக்கோ உதய்” என்ற அம்பலவாணன் கையில் ஆற்றப்பட்டு மிதமான சூட்டில் இருக்கும் பால் டம்ளரை கண்டவன்,

நீங்களே கொடுங்கப்பா” என்று சொல்லவும் நெஞ்சம் கனிய மகனருகே அமர்ந்து அவனுக்கு பாலை புகட்டிய  அம்பலவாணன் அவன் உதடுகளை துடைத்துவிட்டு தலையணையை சரி செய்து படுக்க வைக்கவும் உதய்க்கு அளித்திருந்த மருந்தின் உபயத்தில் அவன் மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தான்.

ஏன் என் பையன் இப்படி படுத்திருக்கான்..! யாருங்க இதுக்கு காரணம்..?” என்று ஜெகா கேட்க மகனின் தலையை கோதியவாறு அமர்ந்திருந்தார் அம்பலவாணன்.

அதை கண்ட ஜெகாவிற்கு மேலும் கேள்வி எழுப்ப மனமில்லாமல் அறையை விட்டு வெளியே வந்தவர் ராஜியை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தார்.

நான் என்ன பாவம் பண்ணேன்னு தெரியலைக்கா இதெல்லாம் பார்க்கணும்ன்னு எழுதியிருக்கு”

நீ என்ன பாவம் பண்ணின ஜெகா..! எல்லாம் அந்த கேடுகெட்ட குடும்பத்தோட சம்பந்தம் பண்ண போன உன் குடும்பத்து ஆளுங்களால வந்த நிலை இது..! அதைவிட இன்னும் வெறி அடங்காம நம்ம பிள்ளை ரத்தத்தை குடிச்சிட்டு இருக்க அந்த அட்டபூச்சிகள் தான் இதுக்கு காரணம்”

ஆமாக்கா அவளால தான் என் பிள்ளைக்கு இந்த நிலை..! ஆனா இன்னுமே விட்டு விலகாம மாப்பிள்ளை வீட்டோடு உட்கார்ந்து இருக்கிறவ கிட்ட இருந்து  எப்படியாவது என் பிள்ளையை காப்பாத்தி கல்யாணம் பண்ணிடனும்”

கண்டிப்பாடி! இதுக்கு மேலயும் உன் வீட்டுக்காரர் சொல்றாருன்னு அவங்களை சும்மா விடக்கூடாது ஜெகா.... ஆதி நல்லபடியா வீட்டுக்கு வந்ததும் அவங்களுக்கு ஒரு முடிவு கட்டனும்”

அப்படி நடக்குமாக்கா..? எனக்கு என்னமோ அவர் பேசுறதை பார்த்தா பயமா இருக்கு...”

நான் இருக்கிறப்போ ஏன்டி பயப்படற..? நம்ம புள்ளையை அந்த விடியாமூஞ்சு கிட்ட இருந்து காப்பாத்தி கண்குளிர வாழ வைக்க வேண்டியது என் பொறுப்பு”

ஆனா என் வீட்டுக்காரர் அவங்களோட உன்னை சமமா வச்சு பேசினதுக்கப்புறம் விடுவார்னு தோணலைக்கா.. அவ நம்ம வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே நம்மளை இந்த பாடுபடுத்திட்டா இதுக்கு மேலயும் வந்துடுவாளோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குக்கா” என்ற தங்கையின் கண்ணீர் சுமந்த முகம் இன்னுமே தெளிவாகாததை கண்டு,

இப்படியே அழுதுட்டு இருந்தா எப்படி ஜெகா..? திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணைன்னு சொல்லுவாங்க.. வா கோவிலுக்கு போயிட்டு வரலாம் எல்லாம் சரியாகும்னு நம்புவோம்” என்றவர்கள் கிளம்பி மருத்துவமனை வாயிலுக்கு சென்ற அதேவேளை இளந்தளிர் தென்றல், சீதாவோடு அங்கே வந்து சேர்ந்தாள்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17