வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 68

 


உதய் கேட்டதை மறுக்க முடியாத தளிரும் அவனுக்கு பிடித்ததை ஆசையாசையாக தன் கையாலேயே சமைத்து கொண்டிருந்தாள். அன்று டெஸ்ட் எடுக்க சென்ற பின்னர் தளிர் சீதாவிடம் பெரிதாக பேசிக்கொள்வது இல்லையென்றாலும் சீதாவின் பார்வை ஒவ்வொரு நொடியும் மகளை ஸ்பரிசித்து கொண்டுதானிருந்தது.

பல நாள்களுக்கு பின் மகளின் முகத்தில் தெரிந்த மிளிர்வில் சீதாவின் அகமும் புறமும் ஒரு சேர மகிழ்ந்திருந்தது. மகளை தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவள் சமைக்கும் அழகை ரசித்திருந்தார்.

அக்கா எப்படியும் அந்த சந்திரமுகி சிஸ்டர்ஸ் நீ சமைச்சதை அத்தானை சாப்பிட விடாதுங்க நீ எதுக்கு கஷ்டப்பட்டு செய்திட்டு இருக்க..?” என்றதை காதிலேயே வாங்காமல் சமைத்து கொண்டிருந்தாள்.

உதய் சொன்ன படி, அன்று நிவிக்கு உடம்பு முடியவில்லை பார்த்துக்கொள்ளுங்கள் என்று மனைவியையும் குழந்தையையும் மாமியார் வீட்டில் விட்டிருந்த ராகவன் ராஜி ஜெகாவிடம் உதயாதித்தனை தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டான்.

அவர்களும் மருமகனின் வார்த்தையை மீற முடியாமல் மகளை கவனிக்க தொடங்கிவிட்டனர்.

ஆம் முழுதாக இல்லையென்றாலும் அன்று தளிர் குடும்பம் தன்னை பார்க்க வந்தது அவன் அன்னையர் தளிரை பார்க்கவிடாமல் திட்டி திருப்பி அனுப்பிவிட்டது ஓரளவு உதய்க்கு தெரியும், அதுவும் சுஜி அளவிற்கு அதிகமாக வடிகட்டி வேண்டியதை மட்டும் தான் அவனுக்கு மேற்கோள் காட்டியிருந்தாள்.

நீங்க ஏதாவது பேசினீங்களா க்கா” என்று தாடை இறுக கேட்டவனிடம்,

பேசினோம்டா! அதெல்லாம் பேசாம யார் அவங்களை சும்மா விட்டா..? நிறைய பேசினோம் உதய் ஆனா அதனால எந்த உபயோகமும் இல்லை கேஸ் முடிஞ்சு தீர்ப்பு வந்த பிறகு பேசுறது தான் பெட்டர்ன்னு தோணுது அதைவிட தளிர்..” என்று அவர் வாக்கியத்தை முடிக்காமல் தம்பியை பார்க்க,

இனி தளிர் சம்மந்தமா வீட்ல எதுவும் பேசாதீங்க.. நான் பார்த்துக்கறேன்”

உதய்”

நான் புரிய வைக்கிறேன் க்கா” என்று சொல்ல சற்று ஆசுவாசம் கொண்டார் சுஜி.

தளிர் தயாராக இருப்பதாக சொல்லவும் உடனே ராகவன் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தான்.

காரிடாரில் நடந்து வந்தவளுக்கு எங்கே ராஜி ஜெகா முன்பு போல பேசுவார்களோ..? என்ற அச்சம் எழுந்தாலும், என்ன நடந்தாலும் யார் என்ன பேசினாலும் சரி இன்று உதய்யை பார்க்காமல் போகக்கூடாது என்ற உறுதியோடு சென்றாள்.

ஒருவித படபடப்போடு அறையை நெருங்கிட நல்லவேளை அங்கே உதய்யை தவிர வேறு யாருமில்லை..

வாசலிலேயே நின்றுக்கொண்டு, “டேய் நீ சொன்ன மாதிரி என் தங்கச்சியை கூட்டிட்டு வந்துட்டேன் உனக்கு ஒரு மணி நேரம் தான் டைம் அதுக்குள்ள திருப்பி அனுப்பிடணும் நான் உமாவை பார்த்துட்டு வரேன்”

அண்ணா உங்களுக்கும் சேர்த்து தான் சமைச்சிருக்கேன் சாப்பிட்டு போவீங்க வாங்க” என்று தளிர் அழைக்க கறிக்குழம்பு வாசமும் பிரியாணி வாசமும் போட்டி போட்டுக்கொண்டு மூக்கை துளைத்த போதும் நண்பனின் முறைப்பில்,

இல்ல பரவால்லம்மா அவன் தான் உனக்காக காலையில இருந்து சாப்பிடாம காத்திருக்கான் நீ அவனுக்கு முதல்ல கொடு நான் அப்புறம் வரேன்” என்று மனமே இல்லாமல் சொன்னவனிடம், 

அண்ணா ஒருநிமிஷம் இருங்க நான் இரண்டு பாக்ஸ்ல கொண்டு வந்திருக்கேன்என்றவள் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுக்கவும் பாசத்தோடு தளிரை பார்த்தவன் உதய்க்கு பழிப்பு காட்டிவிட்டு செல்ல  நண்பனை அனுப்பிவிட்டு கதவை தாழிட்டு திரும்பிய உதய்யின் பார்வை வட்டத்தில் விழுந்தாள் இளந்தளிர்.

அவளை முதல்முறையாக பெண் பார்க்க சென்ற போது கட்டியிருந்த புடவையை பாந்தமாக உடுத்தி அளவான ஒப்பனையோடு தலையில் மல்லிகை, கைகளில் அவன் கொடுத்திருந்த வளையல் என்று ஆளை அசரடிக்கும் அலங்காரத்தோடு அழகோவியமாக கட்டிலின் ஓரம் இருந்த மேஜையின் அருகே நின்றிருந்தாள்.

முன்பிற்கு இப்போது மெலிந்திருப்பவளின் ஓய்ந்த தோற்றம் அவள் ஒப்பனையின் பின்னே மறைந்திருப்பதை அவன் விழிகள் தவறாமல் கண்டுகொண்ட அதேவேளை தளிரின் பார்வையும் உதய்யை தான் தலை முதல் பாதம் வரை அவசரமாக அளவிட்டுக்கொண்டிருந்தது.

கையிலிருந்த கட்டு இன்னும் அகற்றபடாமல் இருந்தாலும் விபத்தின் போது ஏற்பட்ட சிராய்ப்பு சிறு சிறு காயங்கள் எல்லாம்  இந்த இரண்டு வாரங்களில் ஆறிப்போயிருந்ததை கண்டுகொண்டவளுக்கு முன்பிருந்த பொலிவு இல்லாமல் அவன் முகத்தில் மருத்துவமனை வாசத்தால் புதிதாக தோன்றியிருந்த சோர்வு அப்பட்டமாகவே தெரிந்தது.

மேலாடை எதுவும் அணியாமல் வழக்கம் போல ஷார்ட்ஸ் மட்டுமே போட்டிருந்தான் உதய்.

ஆம் இன்று மட்டுமல்ல விபத்து நடந்த தினத்தில் இருந்தே கையை உயர்த்த முடியாததில் மேலே துண்டு மட்டுமே போர்த்தி கொண்டு இருப்பவன் இப்போது அதுவும் இல்லாமல் தான் அவளை வரவேற்றிருந்தான்.

உதயாதித்தனின் கார் விபத்தில் சிக்கிய வீடியோவை பார்த்தது முதலே தளிரின் உறக்கம் பறிபோயிருந்தது. தலை முதல் கால் வரை அவசரமாக அவனை அலசியவளின் மனம் மெல்ல ஆசுவாசம் கொண்டது.

ஒரே நாளில் அவர்களின் வாழ்வை சரத் புரட்டி போட்ட பின்னர் தளிருக்கு அவனிடம் பேச எத்தனையோ இருந்த போதும் அவனை கண்ட நிறைவில் வார்த்தைகள் சட்டென வசபட்டுவிடவில்லை. குறைந்த பட்சம் அவனை அணைத்துக்கொண்டு தன் வேதனையை பகிர நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

எங்கே தன்னுடைய சிறு கண் அசைவும் உதய்க்கு பாதகமாய் முடிந்துவிடக்கூடாதே என்று அவள் மனம் வெதும்புவதை அவள் மட்டுமே அறிவாள். மனமெங்கும் அவனுக்கான நேசம் ததும்பிய போதும் தன்னையே கட்டுபடுத்தி அவனை நெருங்காது  இமை மீற துடித்த கண்ணீரை உள்ளிழுத்தவாறு விழிகளால் அவனை தழுவி நின்றவளிடம் கலவையான உணர்வுகளின் பிரவாகம்..!

இன்னும் எவ்ளோ நேரம்டி பார்த்துட்டு இருப்ப..?” என்ற உதய் மெல்ல அவளை நெருங்க, “எத்தனை முறை சொன்னேன் ஆனா எதையுமே கேட்கலை.. அப்படி என்ன பிடிவாதம்?” என்று கோபமும் கண்ணீருமாக கேட்ட தளிருக்கு விபத்தை உதய் திட்டமிட்டு நடத்தியது குறித்து தெரியாது.

நாசி விடைக்க ததும்பிய கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு அவனை ஏறிட்டு பார்த்தவள், “ரொம்ப வலிக்குதா?” என்றவாறே கட்டுபோடபட்டிருந்த கரத்தை மெல்ல வருடிக்கொடுத்தாள்.

வலிக்குதான்னு கேட்டேன்?”

 “இனி வலி இருக்காது” என்று நெருங்கியவனிடம் கள்ளச்சிரிப்பு.

 “என்ன?”

ஷ்ஷ்ஷ்... எதுவும் பேசாத” என்று அவள் இதழ்களின் மீது ஒற்றை விரல் வைத்து தடுத்தவன்,

உனக்கு மட்டுமில்ல எனக்குமே உன்னை ஃபீல் பண்ணனும் இறுக்கமா கட்டிக்கோ” என்று அவளை  மேலும் நெருங்கி நிற்க தளிர் அதிர்ந்து பார்த்தாள்.

என்ன பார்க்கிற? நீதானே என்னை ஃபீல் பண்ணனும்னு சொன்ன என்னால ஒரு கையில எப்படி உன்னை முழுசா ஃபீல் பண்ண முடியும்? அதுதான் உன்னை கட்டிக்க சொல்றேன்” என்று சொல்ல தளிருக்குமே அவனை ஆறத் தழுவி கொள்ளும் வேகம் அவள் அணுவெங்கிலும் எழுந்தாலும் அதை செய்ய முடியாமல் நின்றவளின் அவா அறிந்தார் போல உதய் அவளை கட்டிக்கொள்ள மௌனமாக நின்றிருந்தாள்.

ஆம் இன்று நேற்றல்ல பலமுறை அவன் மார்பில் தஞ்சம் கொண்டு ஒரு மூச்சு அழுதுவிட சொல்லி அவளின்  மனம் கெஞ்சிய போதும் விடாப்பிடியாக இருந்தவள் இப்போதும் தனக்கு வேலியிட்டிருந்தாள்.

 “ப்ச் இப்படியே எப்படிடி நீ என்னை முழுசா ஃபீல் பண்ண முடியும்..?” என்று கேட்டுக்கொண்டே அவள் கையை தன்னை சுற்றி படரவிட்டவன்,

நடந்து முடிஞ்சதை பற்றி நீ பேசி எதையும்  கேட்க எனக்கு விருப்பமில்லை. இந்த ஒருநாள் நீ, நான் மட்டுமே வேற யாரும் வேண்டாம்” என்று சொல்ல மெல்ல அவன் பேச்சு புரிந்தவள்..,

எப்படி இவ்ளோ சாதாரணமா பேச முடியுது, நீங்க முதல்ல என்னை விடுங்க” என்று தளிர் திமிர,

ஸ்ஸாஆஅ ராட்சசி இப்படியாடி இடிப்ப..” என்று அலறினான்.

என்ன..? என்னாச்சு..? ஸாரி” என்று தளிர் அவனிடம் இருந்து விலக பார்க்க “டோன்ட் மூவ்” என்று அவள் தோளோடு கரம் சேர்த்து தன்னோடு இன்னுமே இறுக்கிக்கொண்டவன்,

நீ கொஞ்சம் அசைஞ்சாலும் எனக்கு வலி அதிகமாகும் அப்புறம் கை வீக்கம் குறையாது இன்னும் அதிகமாகிடும்.., இப்பவே என்னை பெட் விட்டு இறங்க கூடாதுன்னு சொல்லிட்ட எங்கப்பா  இன்னும் ஒரு மாசம் என்னை இங்கிருந்து அசைய விடமாட்டார்... எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஸோ எனக்காக  இப்படியே இருடி ப்ளீஸ்..!” என்றவனின் குரலுக்கு கட்டுபட்டவளால் சரத்தை எளிதாக தூக்கி எறிந்தது போல உதய்யை விலக்க முடியவில்லை..

அவன் வேண்டும் ஆனால் அவள் வேண்டுவது அவனுக்கு தெரியக்கூடாது என்று  கிட்டத்தட்ட திரிசங்கு சொர்கத்தில் அல்லாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு அவனிடம் பேசுவதற்கு எத்தனையோ உண்டு.... ஆனால் இந்த ஒரு நாள் அவன் கேட்டது போல எந்த கசப்பான விடயங்களையும் நினைவுபடுத்தி அவன் இனிமையை கெடுத்துவிடக்கூடாது என்று அமைதியாக நின்றாள்.

ஆனால் உதய்க்கு அப்படி கட்டுபாடுகள் எதுவும் இல்லை மனம் நிறைந்தவளை கட்டிக்கொண்டு சுகமாக  அவள் கழுத்தில் ஆழ முகம் புதைத்து அவள் சுகந்தத்தை சுவாசித்தில் கோர்த்திருந்தான்.

இருவருக்குமே இந்த நொடி இப்படியே உறைந்து விடக்கூடாதா?! என்ற எண்ணமே அதிகரித்தது.

ஏன்டி எனக்கு சொல்லாம உன் வீட்டுக்கு போன..? எப்படி போகலாம்..?” என்று அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட அவளிடம் கனத்த அமைதி.

என்னமோ இப்போ நீ என்னை விட்டு ரொம்ப தள்ளி போயிட்ட மாதிரி இருக்கு தளிர்... அப்படி நீ செய்யறப்போ தான் எனக்கு உன்னை விட்டு விலகவே கூடாதுங்கிற வேகம் அதிகமாகுது” என்று மறுகன்னத்திலும் முத்தமிட்டான்.

அம்மா ரொம்ப திட்டிட்டங்களாடி..?என்று நெற்றியில் முத்தமிட்டு கேட்க திடுக்கிட்டு அவனை பார்த்தாள்.

அக்கா சொன்னாங்க... அவங்க பேசினதுக்கு நான் ஸாரி கேட்டுக்கிறேன்” என்று அவள் விழிகளில் முத்தமிட்டவன்,

ப்ளீஸ் அவங்க என்மேல இருக்க பாசத்துல தான் அப்படி பேசி இருப்பாங்க.. யாருமே இதையெல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணலை, இன்னும் அவங்களுக்கு உன் பக்கம் இருக்கிற நியாயம் தெரியாது கேஸ்ல ஜெயிச்சு உண்மை தெரிய வந்த பிறகு உன்மேல அவங்களுக்கு என்ன வருத்தம் இருந்தாலும் அதெல்லாம் நிச்சயம் போயிடும் ப்ளீஸ்டி அதுவரை அவங்க பேசுறதையெல்லாம் பெருசா எடுத்துக்காத..” என்று ஒவ்வொரு வாக்கியத்தையும் முத்தத்தோடு அவன் நிறைவு செய்ய தளிரிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது...!

“...”

சிலநேரம் கோபத்துல ஆதங்கத்துல பேசற வார்த்தைக்கு பெருசா அர்த்தமே இருக்காது தளிர். எந்த இன்ட்டேன்ஷனும் இல்லாமதான் அவங்க பேசி இருப்பாங்க அதை பெருசா எடுத்துக்காத” என்று தளிரை சமாதானபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டவனுக்கு விஷம் தோய்த்து ஊசியாய் தளிரின் இதயத்தில் அவர்கள் இறக்கிய வார்த்தைகள் குறித்து முழுதாக தெரியாது.

உனக்கு கோபமிருந்தா என்னை அடிச்சுக்கோ” என்று கன்னத்தை காட்ட, இமை மூடி நின்றிருந்தவள் மனம் வேகமாக துடித்தது.

தளிர்” என்று ஏக்கம் சுமந்த குரலில் உதய் அழைக்க அதை உணர்ந்தாலும் அவனுக்கு பதிலளிக்காமல் நின்றிருந்தாள்.  

கேட்கிறேது காதுல விழலையா பதில் சொல்லுடி” என்றவன் சட்டென அவள் கீழிதழை கடித்திட திகைத்து பட்டென கண்களை திறந்தாள் தளிர்.

 உத...” என்று அவள் முடிக்கும் முன்னமே அவளிதழ்களை அழுத்தமாக சேர்ந்து ஆழ முத்தமிடவும் திமிர முடியாமல் நின்ற தளிர் ஒருகட்டத்தில் விடுங்க” என்று அவனிடம் இருந்து விலகவும்,

தள்ளிப்போகாதடி” என்று அவளின் மெல்லிய விலகளை உடனே நிறைத்துவிட்டவன்,  சொல்லு  உனக்கு கோபமில்லையே..?” என்று கேட்டு அதற்கும் ஒரு முத்தத்தை அவள் மூக்கின் மீது வைக்க அவனை முறைத்த தளிர்,

இல்லை” என்றாள் வேகமாக.

நீ எதைபற்றியும் கவலைபடாத சரத் ப்ராப்ளம் பிஃப்டி பர்சென்ட் முடிஞ்ச மாதிரி தான்! அதனால நீ வொர்க் பண்றதா இருந்தா நான் அப்பாகிட்ட பேசறேன் நீ ஜாயின் பண்ணிக்கோ பட் ஷேடோ இருப்பாங்க உன்னோட சேஃப்ட்டிக்காக.. நிச்சயம் கேஸ் உனக்கு சாதகமா தான் முடியும் உன்னோட கேஸ் முடிந்த அப்புறம் தான் தாத்தா கிட்ட நான் பேச முடியும் அதுவரை பொறுமையா இரு எனக்காக என்று நெற்றியில் முத்தமிட்டு சொல்ல ஏதோ மாயசுழலில் சிக்கி கொண்டிருப்பவள் போல அவன் பேச்சிற்கு இசைந்திருந்தாள் இளந்தளிர்.

 தேங்க்ஸ்” என்றவன் தன் நன்றியை மீண்டும் அவளிதழ்களில் வடிக்க செல்லும் போது சரியாக அவன் அறைகதவு தட்டப்படவும் தான் தன் கை பிடியில் இருந்து தளிரை விடுவித்தான்.

தளிர் சென்று கதவை திறக்க அங்கே செவிலியர் நின்று கொண்டிருந்தார்.

வழக்கத்திர்க்கு மாறான நேரத்தில் அங்கே வந்தவரை கண்ட உதய்யின் புருவம் நெறிபட, அவரோ பத்து நிமிடங்கள் நிதானமாக உதய்யை பரிசோதித்து விட்டே சென்றார். 

உடனே உமாவிற்கு அழைத்தவன், “இது வழக்கமான நேரம் கிடையாதே இப்போ எதுக்காக நர்ஸை அனுப்பின உமா? இது யார் வேலை..?” என்று சீறினான்.

உமா போனை ஸ்பீக்கரில் போட்டிருக்க, “ஏன்டா நான் தான் அனுப்ப சொன்னேன்.. அதுக்கு என்னங்கிற..?” என்று ராகவன் அதிகாரமாக கேட்க,

டேய் நேரங்காலம் தெரியாம அனுப்புவியாடா..?”

எங்களுக்கு தெரியுது அதை உனக்கு நியாபகபடுத்த தான் நர்சை அனுப்ப சொன்னேன்... அது ஹாஸ்பிட்டல் ரூம் உன் பெட்ரூமில்லை... சாப்டாச்சுன்னா சீக்கிரம் என் தங்கச்சியை அனுப்பி வை”

ப்ச் இன்னும் சாப்பிடலைடா, அவ இப்போ தானே வந்தா..?”

அடேய் என் தங்கச்சி வந்து அரை மணி நேரமாகுது இன்னும் சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருந்த நீ..?”

அது.. அதுவந்து சும்மா பேசிட்டு இருந்தோம் மச்சான்..”

பேசிட்டு இருந்தியா..? அப்போ கணக்கு..?”

ஓஓ ஆமாமில்ல..! தேங்க்ஸ் மச்சான் நல்ல வேலை நியாபகபடுத்தின இதோ கணக்கு பார்த்துட்டு சாப்பிட்ட பிறகு கால் பண்றேன் அதுவரை யாரையும் அனுப்பாத புரியுதா..?” என்று கடுப்போடு கைபேசியை அணைத்தவன் அதற்குள் தன்னிடம் இருந்து நழுவி மேஜையருகே நின்றிருந்த தளிரை முறைத்தான்.

பேசிட்டு இருக்கும் போதே எங்க போறே நீ..?”

சாப்பாடு கேட்டீங்களே... வாங்க முதல்ல சாப்ட்டுட்டு பேசிக்கலாம்” என்று அவனை திசை திருப்ப அவனுக்குமே சரியான பசி உடனே அங்கிருந்த சிறு மேஜை முன் அமர அவனுக்கு தட்டு வைத்து பரிமாறியவள் சாப்பிடுங்க  என்று தண்ணீரை வைத்தாள்.


Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17