உணவை பரிமாறிய தளிர் "சாப்பிடுங்க.." என்றதும் “எப்படி சாப்பிட..?” என்றான் உதய்.
“அச்சோ ஸாரிங்க நான் அவசரத்துல ஸ்பூன்
எடுத்துட்டு வர மறந்துட்டேன்.. யார்கிட்டயாவது இருக்கான்னு கேட்டு பார்க்கட்டுமா..?”
என்று தளிர் திரும்ப,
“எனக்கு ஒன்னும் உன் சாப்பாடே தேவையில்ல
எடுத்துட்டு போடி” என்று கோபமாக எழுந்து விட்டான்.
“பசிக்குதுன்னு சொல்லிட்டு ஏன்
எந்திரிச்சிட்டீங்க..?” என்ற தளிருக்கு அவன் கோபம் எதனால்
என்று சுத்தமாக புரியவில்லை.
“நிஜமாவே உனக்கு இப்போ கூட எதுவும் தோணலையாடி”
என்றவனின் குரல் கரகரத்து ஒலித்தது.
“உதய் என்ன சொல்ல வரீங்க..? நிஜமா எனக்கு புரியலை”
“ஸ்பூன் வாங்கிட்டு வரட்டான்னு கேட்ட உனக்கு
ஒரு நிமிஷம் கூட எனக்கு உரிமையா ஊட்டி விடனும்னு தோணலையா..?” என்று
கேட்க விக்கித்து போய் நின்றாள்.
என்ன தான் மனதார உதய்யை கணவனாக வரித்திருந்தாலும் ஊரார்
மத்தியில் அங்கிகரிக்கபடாத பெயரில்லாத அவர்கள் உறவை இனியும் வளர்க்க அவள்
விரும்பவில்லை. அதிலும் அவன் பேரன்பிற்கு ஈடாக கொள்ளை காதலை கொட்டி கொடுக்க
வேண்டும் என்ற ஆசை வானளவு இருந்தாலும் அவன் மீதான உரிமையை எடுக்க கூடாது என்று
தனக்கு தானே வேலியிட்டு தன்னுடனே போராடிக்கொண்டு இருக்கிறாள்.
“ஏன்டி நீ நினைச்சதை என்கிட்டே வெளிப்படையா
பேசாம ஏன் இப்படி இறுகி போய் இருக்க.. திஸ் இஸ் நாட் குட் ஃபார் யூ தளிர்... என்னை
விலகி போன்னு சொல்லாம உன் மனசு என்ன நினைக்குதோ அதை பேசு... எனக்கு இந்த தளிரை
பிடிக்கலை நம்ம கல்யாண நாளுக்கு முந்தின நைட் மொட்டை மாடியில என்னை ஹக் பண்ணி குட்
நைட் கிஸ் கொடுத்த தளிர் தான் வேணும்... அவளை நான் தொலைச்சு ரொம்ப
நாளாச்சு, ஏன் உனக்கு என்கிட்டே இந்த தயக்கம் ப்ளீஸ் ஸ்பீக்
அவுட் தளிர்” என்று சொல்ல அப்போதும் அவனை அமைதியாக பார்த்திருந்தாள்.
“ஏன்டி?...” என்று உதய் அவளிடம் கேட்கும்
முன்னமே அவன் முன்னே உணவை நீட்டினாள்.
ஆனால் உதய் 'வேண்டாம்' என்பது போல
அழுத்தமாக அமர்ந்திருக்க “ஸாரி” என்றவளின் கண்களில் கண்ணீர் ததும்பியது.
அவள் கண்ணீரை துடைத்து இமைகளில் முத்தமிட்டவன், “இப்போ
வீட்ல யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது.. கேஸ் முடிஞ்ச பிறகு அப்பா அம்மா
தாத்தா எல்லாரையும் கூட்டிட்டு வந்து முறைப்படி பேசறேன் கேஸ்
முடிஞ்ச ஒரே மாசத்துல நம்ம கல்யாணம். ப்ளீஸ் அதுவரைக்கும் நீ யாரை பற்றியும் கவலைபடாத,
எதையும் யோசிக்காத எந்த ஸ்ட்ரெஸ்ஸும் எடுக்காம ஃப்ரீயா இரு..
புரியுதா..?” என்றிட மேலிதழை கடித்து தன்னை
கட்டுபடுத்திக்கொண்டு அமைதியாக அவனை பார்த்திருந்தாள்.
“புரியுதாடி” என்றவன் அவள் நெற்றி முட்ட “ஆம்”
என்பது போல தலையசைத்தாள்.
“வாயை திறந்து சொல்ல மாட்டியா..?” என்று கேட்க கண்ணீரை உள்ளிழுத்து “போதும் நிறைய பேசிட்டீங்க, முதல்ல சாப்பிடுங்க” என்று ஊட்டிட கையை அவள் புறமாக திருப்பினான்.
“நீங்க சாப்பிடுங்க”
“முதல்ல நீ” என்று அவன் அடமாக நிற்க வேறு
வழியில்லாமல் முதல் கவளத்தை உண்டவள் அதற்கடுத்து அவனுக்கு வேகமாக ஊட்டி
முடித்தாள்.
“சாதம் ரசம் கொண்டு வந்திருக்கேன்”
“இதுவே வயிறு ஃபுல் ஆகிடுச்சு இடமில்லை ரசம்
மட்டும் கொடு” என்றதும் ரசத்தை டம்ளரில் ஊற்றியவள் அவன் கையில் கொடுக்காமல்
அதையும் தானே அவனுக்கு புகட்டி இருந்தாள்.
அதில் உதய்யின் வயிறோடு மனதும் நிறைந்து போக அப்படியே சுவரில்
சாய்ந்து தளிர் பாத்திரங்களை அடுக்கி வைக்கும் அழகை ரசித்திருந்தான்.
அதேநேரம் பாத்திரங்களை எடுத்து வைத்துகொண்டு இருந்தவளின்
பார்வையும் நொடிக்கு ஒரு முறை அவனை தொட்டு
மீண்டது.
“என்ன பார்க்கிற..?”
“ஒண்ணுமில்லை” என்று தட்டை
கழுவிவிட்டு வந்தவள் பார்வை இப்போதும் அவனை தழுவியது. அதை கண்ட உதய்யின் புன்னகை
இன்னுமே அழகாய் விரிந்தது.
“உங்களுக்கு ஏதாவது சொல்லனுமா..?” என்றவளின் குரலே 'சமையல் எப்படி இருந்தது? என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா..?' என்பதாக
இருப்பதை கண்டுகொண்டவன் வேண்டுமென்றே அவளை சீண்ட..,
“என்ன சொல்லணும்..?” என்றான்.
“இல்ல.. உங்களுக்கு ஏதாவது வேணுமா..?” என்றதும் தான் தாமதம்,
“கேட்டது கிடைக்குமா..?” என்று அழுத்தமாக வந்து விழுந்தது
அவன் வார்த்தைகள்.
“என்ன வேணும்னு முதல்ல சொல்லுங்க...”
“அர்ஜென்ட்டா ஒரு ஹக் அண்ட் ஏழு கிஸ் வேணும்டி” என்று பொங்கிய
சிரிப்பை மீசைக்கடியில் பதுக்கிக்கொண்டு அவன் கேட்க.,
“ச்சை உங்களை போய் கேட்டேன் பாருங்க என்னை
அடிச்சுக்கணும்.. நான் கிளம்பறேன்”
“ஹே கணக்கை முடிக்கிறேன்னு சொல்லி வந்துட்டு
எங்க கிளம்பற உட்காரு” என்று கையை பிடித்து அமர்த்தியவன், “ஆரம்பிக்கலாமா..?” என்று
கிறக்கமான குரலில் கேட்க.,
“என்ன ஆரம்பிக்கணும்..?”
“கணக்கு தான்!!”
“நான் உங்களை பார்த்துட்டு போக தான் வந்தேன்”
“ஆனா நான் உன்னை கணக்கை முடிக்க தான் வர
சொன்னேன்...”
“என்னால முடியாது”
“இது சீட்டிங்... ஒழுங்கா கணக்கை முடிச்சுட்டு
கிளம்புடி” என்று அவன் மிரட்ட,
“டைமாச்சு நான் கிளம்பறேன் போங்க” என்று தளிர்
கிளம்ப முற்பட,
“ஹே நில்லுடி” என்றவன் அவசரமாக எழுந்தவளின்
இடையை பிடித்து இழுக்க “ஸ்ஸ்ஸ்ஸாஆ” என்று அலறியிருந்தாள் தளிர்.
உதயாதித்தன் அவளிடையை பிடித்து இழுத்ததில் அலறிய தளிரின்
முகம் வலியில் சுருங்கவும், “என்னாச்சு..?” என்றான்
பதற்றத்தோடு.
“ஒண்ணுமில்லை..”
“ப்ச் தளிர் என்ன சொல்லு..?”
“சமைக்கும் போது சூடு பட்டுடுச்சு”
“எங்க..?” என்றவன் அவள்
கையை பிடித்து ஆராய..,
“அங்கே இல்லை” என்று முணுமுணுத்தாள்.
“வேற எங்கே..?” என்றவனின்
விழிகள் தனக்காக சமைக்க போய் காயம்பட்டதில் பரிதவித்து அவள் கரம் முழுக்க 'எங்கேனும் காயம் உள்ளதா..?' என்று தேடியது..
“கையில் இல்லைங்க” என்றவள்
பதிலளிக்காமல் மௌனிக்க அப்போதுதான் உதய் அவள் இடையில் கரம் பதித்தது நினைவு வர
உடனே அவள் சேலையை விலக்கி பார்க்க அங்கே சூடு பட்டு சிவந்து போயிருந்தது.
“சமைக்கும் போது கையில முகத்துல எங்கயாவது
காயம் படும் ஆனா நீ இங்க எப்படிடி சூடு வச்சுக்கிட்ட..?” என்று
அவளிடையை ஆராயந்தவனுக்கு ‘எப்படி இது ஏற்பட்டிருக்கும்..?’ என்று
புரியவில்லை.
“அது தென்றல் டேஸ்ட் பண்றேன்னு சொல்லி குக்கர்
மூடியை அவசரமா திறக்கவும் நான் அவளை தடுக்க போனதுல கையில இருந்த மூடிய தவறுதலா என்
பக்கம் திருப்பிட்டா அதுதான் இப்படி ஆகிடுச்சு”
“ஏன்டி அவ டேஸ்ட் பார்த்தா என்ன..? எதுக்கு உனக்கு இவ்ளோ அவசரம் ..?” என்று
கடிந்தவனிடம்,
‘முதல்முறை அவனுக்காக சமைத்ததை முதலில் அவன்
ருசி பார்த்து சொல்ல வேண்டும்' என்ற தன் பேராசையை வாய்விட்டு
சொல்ல முடியாமல் மீண்டும் மௌனகவசத்தை சூடிக்கொண்டாள்.
“ஆயின்மென்ட் எதுவும் போடலையா..?” என்றவன் காயம் பட்ட இடத்தில் ஊதிவிட அவன் சுவாசத்தில் சிலிர்த்தவள்,
“என்ன பண்றீங்க..?” என்று இடையை அவசரமாக
சேலையால் இழுத்து போர்த்தினாள்.
“ஹே இப்படி காயம் பட்ட இடத்தை க்ளோஸ் பண்ணினா
எப்படி ஆறும்...” என்றவன் அவள் முந்தானையை எடுத்து தன் கையில் சுருட்டி
பிடித்துக்கொண்டு அவசரமாக உமாவிற்கு அழைத்தான்.
“உதய் விடுங்க நான் போறேன்” என்று தளிர் அவன்
கையிலிருந்த முந்தானையை விடுவித்தவாறு திரும்ப..,
“ப்ச் நில்லுடி என்ன அவசரம்..?” என்று அவளை பிடித்து நிறுத்தியவன் நாற்காலியில் அமர்ந்து,
“என்னால தானே உனக்கு காயமாச்சு..? அப்போ நான் தான் சரி பண்ணனும்” என்று அவள் இடையில் மீண்டும் காற்றை
இழுத்து ஊத அங்கே வந்து சேர்ந்த ராஜி மகன் செய்து கொண்டிருந்த காரியத்தை கண்டு
அதிர்ச்சியில் உறைந்து போனார்.
“வாங்க வாங்க ராஜிம்மா சரியான நேரத்துக்கு
வந்திருக்கீங்க...” என்றழைத்தவன்,
“இங்க பாருங்க எனக்கு சமைக்கறேன் சொல்லி எப்படி
சுட்டு வச்சிருக்கா..” என்று தளிரின் இடையை பிடித்து அவருக்கு காண்பிக்க விழிகள்
தெறிக்க நின்ற ராஜிக்கு உள்ளே காந்தியது.
ராஜிக்கு இப்படியென்றால் தளிருக்கோ நெருப்பில் நிற்பது
போலிருந்தது.
சாதாரணமாகவே காரணம் தேடிகொண்டிருப்பவர்களுக்கு தொக்காக
வாய்ப்பை கொடுத்திருப்பவனை இழுத்து பிடித்து 'கன்னத்தில் இரண்டு
வைத்தால் என்ன..?' என்ற நிலையில் இருந்தவள்,
“விடுங்கன்னு சொல்றேன்ல” என்று அவன் கையை
தட்டிவிட்டு நகர..,
“நில்லுடி” என்று ராஜி எதிரிலேயே அவளை தன்
கைவளைவில் கொண்டு வந்தவன் “அவங்களை என்ன பார்க்கிற..?” என்று
தளிர் ராஜியை பார்ப்பதை கண்டு,
“ஓஒஹ் ராஜிம்மா என்ன நினைப்பாங்களோன்னு
யோசிக்கிறியா..?” என்றவன் அவள் மௌனத்தை சம்மதமாக கொண்டு.,
“இதோபார் தளிர் கையில பட்டா என்ன இடுப்புல
பட்டா என்ன காயமும் வலியும் ஒன்னு தானே..? இதை பார்த்த
பிறகும் நான் உதவாம போனா தான் அவங்க தப்பா எடுப்பாங்க.. அதைவிட ஆபத்துக்கு உதவுறதை
தப்பா எடுத்துக்கற அளவுக்கு அவங்களுக்கு சீப் மென்டாலிட்டி கிடையாது...” என்றவன்,
“என்ன ராஜிம்மா நான் சொல்றது சரி தானே..?”
என்று கேட்க,
வாயெல்லாம் பல்லாக, “இதுல என்ன இருக்கு ஆதி..? மனுஷனுக்கு மனுஷன் இந்த நேரத்துல கூட உதவலன்னா எப்படி..?” என்றார்.
“கரெக்ட் ராஜிம்மா! அப்புறம் உமா கிட்ட பர்னால்
கேட்டிருந்தேன் கொஞ்சம் என்னாச்சு பாருங்க இல்லைன்னா இந்த ஃப்ளோர்ல இருக்க சிஸ்டர்
கிட்ட கேட்டு சீக்கிரம் வாங்கிட்டு வாங்க” என்று அவரை அனுப்பி வைக்க சாவி கொடுத்த
பொம்மை போல அவன் குரலுக்கு கட்டுபட்டிருந்தார்.
“விடுங்க உதய்” என்று அவன் கை வளைவில் இருந்து
விலகியவள்,
“உங்களுக்கு அறிவே இருக்காதா..? யார் இருக்கா எங்க இருக்கோம் எதுவும் பார்க்க மாட்டீங்களா..? எப்பவும் இப்படிதான் செய்வீங்களா..? இனி வரவே
மாட்டேன் நான் கிளம்பறேன்” என்று அவள் புடவை முந்தானையை இடையில் சொருகவும்,
“ஹே நில்லுடி” என்றவன் அவளிடையில் இருந்த
முந்தானையை எடுத்து கையில் வைத்துக்கொள்ள.,
“திஸ் இஸ் தி லிமிட் உதய்” என்று அவனிடம்
இருந்து முந்தானையை வாங்கிட அவள் கையை பிடித்துக்கொண்டவன்,
“இதை கவனிக்காம விட்டா செப்டிக் ஆகும்னு கூட
தெரியாதா உனக்கு..? நீயெல்லாம் என்ன டீச்சர்..?” என்று கடிந்தவாறே நாற்காலியில் அமர்ந்திட.,
“உங்க அக்கறைக்கு ரொம்ப தேங்க்ஸ்! அதெல்லாம்
இனி நானே பார்த்துக்குறேன்...” என்று தளிர் அவன் கையில் இருந்து முந்தானையை
எடுத்துக்கொண்டு திரும்ப அவளிடையில் சூடாக பதிந்தது உதய்யின் உதடுகள்.
“உதய்” என்று அவள் அதிர்ந்து பார்க்க,
“இதையும் கணக்குல சேர்த்துக்கோடி” என்று
சிரிப்போடு கண் சிமிட்டியவன் மீண்டும் அவளிடையில் அழுத்தமாக முத்தமிடவும் ராஜி
வரவும் சரியாக இருந்தது.
“தேங்க்ஸ் ராஜிம்மா, இதை
ஓபன் பண்ணுங்க” என்று எதுவும் நடக்காதது போல அவன் இடது கையால் மருந்தை
எடுத்துக்கொண்டு அவளுக்கு மருந்திட செல்லவும் தான் சுயம் பெற்றவள் அவனை
முறைத்துக்கொண்டே,
“நீங்க விடுங்க நான் போட்டுக்கறேன்”
ஆனால் அவள் வார்த்தையை உதய் மதித்தால் தானே...!
“சூடு பட்டிருக்குடி எவ்ளோ எரிச்சல் இருக்கும்”
என்று வெண்மையான அவளிடையில் குக்கரின் மூடியின் தடம் சிவப்பு நிறத்தில் கன்றி
போயிருப்பதை கண்டு,
“உனக்கு வலிக்கலையாடி..? நீயே
எப்படி போட முடியும் கொஞ்ச நேரம் அமைதியா நில்லு இல்ல மடியில உட்கார வச்சு
போட்டு விடுவேன்” என்று உதய் மிரட்ட தளிரை விடவும் ராஜிக்கு தான் அதிகளவு மகனின்
பேச்சு திகிலை கிளப்பியது.
“ஆ... ஆதி நா.. நான்..
போடு..ரர்ர்ர்ர்...றேன்..” என்று மனமே இல்லாமல் ராஜி சொல்ல..,
“இட்ஸ் ஓகே ராஜிம்மா நான் எடுத்துட்டேன் நீங்க
புடவையை பிடிங்க நானே போட்டு விடறேன்” என்று சொல்ல, ராஜி
அவள் புடவையை பிடிக்கும் முன்,
“நான் பிடிச்சுக்குறேன் நீங்க சீக்கிரம் போட்டு
விடுங்க” என்ற தளிர் தன் புடவையை அவன் மருந்திட ஏகுவாக பிடித்துக்கொள்ள
போட்டுவிட்ட உதய் மீண்டும் அங்கே உதடுகளை குவித்து ஊதிவிட்டவாறே..,
“பாருங்க ராஜிம்மா காயத்துக்கு மருந்து கூட போட
விடாம இன்னும் சின்ன குழந்தை மாதிரியே அடம் படிக்கிறா.. எப்படித்தான்
கல்யாணத்துக்கு அப்புறம் இவளை நீங்க சமாளிக்க போறீங்களோ?” என்றவாறே
தளிர் மறுக்க மறுக்க இடையை ஒருகையால் பிடித்துக்கொண்டு அவன் ஊதிவிட ராஜியின்
காதில் புகை வெளிவராத குறைதான்.
“ராஜிம்மா உங்க மருமகள் எனக்காக சமைச்சிருக்கா
எப்படி இருக்குன்னு டேஸ்ட் பண்ணி சொல்லுங்க” என்று சொல்ல அவர் முகம்
அஷ்டகோணலாகியது.
“என்ன பார்த்துட்டு இருக்க ராஜிம்மாக்கு
வச்சுக்கொடு” என்று சொல்ல அவளோ அமைதியாக நின்றாள்.
“இருக்கட்டும் ஆதி நான் இப்போதான் சாப்ட்டுட்டு
வந்தேன்” என்று ராஜி மறுக்கும் முன்னமே, தளிர் செய்திருந்த
சிக்கன் ஃப்ரையை தானே எடுத்து ராஜிக்கு ஊட்டிவிட்டு “எப்படி இருக்கு சொல்லுங்க”
என்றான்.
கசப்பாக அதை விழுங்க முயன்றவரின் தொண்டைக்குள் அதன் ருசி
அல்வா துண்டு போல வழுக்கி கொண்டு செல்ல அவரையும் அறியாமல் விழிகள் ஆச்சர்யத்தில்
விரிந்தது.
“சூப்பரா இருக்குல ராஜிம்மா” என்றவன் மீண்டும்
ஒரு துண்டை எடுத்து ஊட்டிவிட இப்போது ரசித்து உண்டவர், “நல்லா
இருக்குப்பா” என்றார்.
“நெக்ஸ்ட் வீக் டிஸ்சார்ஜ் பண்ணிடறேன்னு சொல்லியிருக்காங்க
தளிர் ஆனாலும் கட்டு பிரிக்கிற வரை எப்படியும் இன்னும் ஒன் மந்த் ரெஸ்ட்ல தான்
இருப்பேன்...” என்று கட்டிய மனைவியிடம் சொல்வது போல உதய் அவளிடம்
சொல்லிக்கொண்டிருக்க மகனின் இயல்பான பேச்சு ராஜியை வயிற்றில் புளியை
கரைத்திருந்தது.
“நெக்ஸ்ட் வீக்ல இருந்து நீ ஸ்கூல்ல ஜாயின்
பண்ணிக்கோ உனக்கு அகடெமி, டியூஷன் எல்லாம் வைண்ட் அப் பண்ண எப்படியும் நைட் நைன்
ஆகிடும் இல்ல” என்று கேட்க தளிருக்கு அப்படியொரு கோபம் ஆனால் அதை காண்பிக்க
முடியாத நிலையில் நிறுத்திவிட்டவனை முறைத்து கொண்டு நின்றாள்.
“ஓகே நைட் நீ சீக்கிரம் டின்னர் முடிச்சுடு.
நான் டெயிலி நைட் பத்து மணிக்கு உனக்கு கால் பண்றேன்.. சண்டே வெளியில போகலாம்”
என்று சொல்ல பேயறைந்தது போல நின்றிருந்தார் ராஜி.
“ராஜிம்மா..”
“ராஜிம்மா..”
“ஹான் சொல்.. சொல்லு..ப்பா”
“ராகவன் உமா ரூம்ல இருக்கிறதா சொன்னான் நீங்க
அவனை கூட்டிட்டு கார் கிட்ட வெயிட் பண்ணுங்க நாங்க ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல
வந்துடுறோம்” என்று சொல்ல.
“நீ.. நீ எப்படிப்பா தனியா..” என்று ராஜி
திணற...,
“ப்ச் அதுதான் என் பொண்டாட்டி என்னோட இருக்காளே
அப்புறம் ஏன் உங்களுக்கு கவலை.. நீங்க நான் சொன்னதை மட்டும் செய்ங்க போங்க”
என்று சொல்ல ராஜி தளிரை தான் பார்த்தார்.
அவளோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல
அமைதியாக உதய்யை பார்த்திருந்தாள்.
ராஜி கிளம்பவும், “நீங்க யார் எனக்கு ஸ்கெட்யூல் பண்ண..?
நான் தான் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு
சொல்றேனே அப்புறம் ஏன் அவங்க கிட்ட என்னை வைஃப்ன்னு சொல்றீங்க” என்று படபடவென
பொரிந்திட..,
“அப்போ உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும்
இல்லையா..?” என்று ஆழ்ந்த குரலில் கேட்க,
“இருக்கு ஆனா இல்லை.. ஐ மீன் கணக்கு முடிச்ச
பிறகு...” என்று அவள் தடுமாற.,
“அதேதான்டி நானும் சொல்றேன்..! நீ
கணக்கை முழுசா முடிக்காத வரை என் பொண்டாட்டி தான் அதுல எந்த மாற்றமும் இல்லை,
நான் சொல்றதை கேட்டு தான் ஆகணும் முடியாது என்று சொன்னா இப்போவே நான்
கொடுத்தது எல்லாம் திருப்பி கொடுடி”
“...”
“பேப்பர் எடுத்துட்டு வந்தியா..?”
“என்ன பேப்பர்..?” என்று
அவள் சீற,
“அடியேய் என்னடி இவ்ளோ அசால்ட்டா கேட்கிற..?
கணக்கு வச்சுக்க சொல்லி உன்கிட்ட அடிஷனல் ஷீட்டோட கொடுத்தேனே.. அது
எங்கே..?” என்றதில் அவன் சேட்டை பொறுக்காத தளிர் நெற்றியை
பிடித்துக்கொண்டாள்.
“எனக்கு கணக்குல ஒரு கிஸ் கூட குறைய கூடாது..,
பேப்பர் கொடு கணக்கு எழுதி தரேன் உனக்கான அடுத்த சான்ஸ்ல ஐ மீன்
கடைசி சான்ஸ்ல மொத்தமா கொடுத்துட்டு குட் பை சொல்லிட்டு கிளம்பு..”
“நானும் எங்க வீட்ல
எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு பார்க்க சொல்லிடுறேன்” என்றதும் தான் தாமதம்,
தளிர் கையில் வைத்திருந்த பாத்திரப்பை நங்கென்று உதய்யின் கால் மீதே
விழுந்தது.
“ஸ்ஸ்ஸாஆஆஅ” என்று காலை பிடித்து கொண்டவனிடம்
“ஸாரி கை ஸ்லிப் ஆகிடுச்சு.. நான் கிளம்பறேன்” என்று தளிர் பையை எடுத்துக்கொள்ள,
“ஹிப்ல கொடுத்ததோட சேர்த்து மொத்தம் ஐம்பத்தி
ஏழு மறக்காம நோட் பண்ணிக்கோ” என்று உதய் சொல்ல பதிலளிக்காத தளிர் வேகமாக சென்று
காரில் அமர்ந்தவள் அவன் புறம் திரும்பவில்லை.
ஆனால் உதய் விடுவதாக இல்லை.
திறந்திருந்த கார் கண்ணாடி வழியே அவளிடம் பர்னாலை கொடுத்தவன் “மறக்காம போடு
வீட்டுக்கு போனதும் கால் பண்ணு.. டேக் கேர்” என்று சொல்ல ராஜிக்கு ஒரே
நாளில் அவர் கொண்ட அதிர்ச்சியில் நெஞ்சம் அதிவேகமாக துடித்தது.
Comments
Post a Comment