வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 71

 


இன்று தளிருக்கு அவசர வேலை இருக்கவும் முன்னதாகவே பெர்மிஷன் போட்டுவிட்டு கிளம்பியவள் வீட்டிற்கு செல்லும் வழியில் எதிர்பட்டது உதய்யின் கார். அதை கண்டவள் நடை ஒருநொடி தடைபட்டாலும் அதன்பின் வேக எட்டுக்கள் வைத்து நடக்க தொடங்கி விட்டாள்.

வீட்டில் பேசிவிட்டு கிளம்பிய உதய்யின் மனம் ஒரு கட்டுக்குள் இல்லை. அண்ணாமலை நிச்சயம் தன் திருமண பேச்சை தொடங்குவார் என்று தெரியும் ஆனால் இத்தனை சீக்கிரம் அவன் எதிர்பார்க்கவில்லை.. அதிலும் அத்தனையும் முடிவு செய்துவிட்டு அவன் முடிவை கேட்டதில் சற்று நிதானமிழந்து தான் போனான்.

அதில் அண்ணாமலைக்கு பொறுமையாக எடுத்து சொல்லி புரியவைக்க வேண்டும் என்றெண்ணி இருந்தவன் சற்று கடுமையாகவே சொல்லவேண்டியதாகி போனது.

கவின்மலர் என்றில்லை தளிரை தவிர வேறு பெண்ணுக்கு என்றுமே அவன் வாழ்வில் இடமில்லை..!!

இதை தளிரின் வழக்கு முடிந்த பின் மற்றவர்களுக்கு எடுத்து சொன்னால் புரிந்து கொள்வார்கள் அவளுடனான திருமணம் எளிதாகிவிடும் என்று அவன் நினைத்திருக்க அண்ணாமலையால் அனைத்தும் மாறி போக தேவையில்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வை கேள்வி குறியாக்கி பேசியதில் தன் மீது அவனுக்கு அத்தனை கோபம்.

முக்கிய அலுவலர்களுடனான சந்திப்புகள் அவனை வேறெங்கும் நகரவிடாமல் செய்திருக்க அதை முடித்துக்கொண்டவன் அவசரமாக தளிரை தேடி வந்துவிட்டான்.

அதுவும் தளிர் மீதான கோபத்தை மறந்து அவளை தேடி வந்திருப்பவனுக்கு அவள் தன்னை கண்டும் காணாமல் சென்றது இன்னுமே ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஒருங்கே கொடுக்க வேகமாக காரை ஓரம் கட்டிவிட்டு “தளிர் நில்லு” என்றான் உரத்த குரலில்.

ஆம் கோபம் தான்..! அன்று மருத்துவமனையில் அவனை சந்தித்துவிட்டு சென்ற பின்னர் தளிர் அவன் அழைப்புகள், மெசேஜ் எதையும் ஏற்கவில்லை.. மீண்டும் வேதாளம் முருங்கை ஏறியது போல அவனை பார்த்துவிட்டு வந்த பின்னர் ஒரு மெசேஜ் கூட போடாதவள் அவனுக்கும் பதிலளிக்கவில்லை..

தளிர் தான் அவனோடு பேசவில்லையே தவிர தென்றல் வழக்கம் போல அவனோடு பேசுபவள் மறக்காமல் அதை தளிரிடமும் பகிர்ந்துவிடுவாள். ஒன்றிரண்டு முறை தளிருக்கு அழைத்து பார்த்தவன் “போடி” என்றுவிட்டு வரிசைகட்டி இருந்த வேலைகளை பார்க்க சென்றுவிட்டான்.

ஆனால் இன்று வீட்டில் கிளம்பிய பேச்சிற்கு பின் அத்தனையும் மறந்து அவளை பார்க்க வந்தவனின் அழைப்பிற்கு நிற்காமல் தளிர் செல்ல அவள் கையை பிடித்து “நில்லுடி! நான் கூப்பிடறது காதுல விழலையா..?” என்றான் உதய்.

கையை விடுங்க”

எனக்கு மனசு சரியில்ல தளிர் உன்னோட கொஞ்சம் பேசணும் வா” என்றழைக்க அவள் பிடிவாதமாக நின்றாள்.

ப்ச் நான்தான் அன்னைக்கே ஸாரி சொல்லிட்டேனேடி உனக்கு கோபமிருந்தா அடிச்சுக்கோன்னு தானே சொன்னேன்..” என்றதற்கும் அவளிடம் அமைதி.

என்னதான்டி பிரச்சனை கால் மெசேஜ் எதையும் அட்டென்ட் பண்ணலை எதுவா இருந்தாலும் சொல்லு”

“...”          

ஓகே நீ எதுவும் பேச வேண்டாம் எனக்கு உன்னோட பேசணும் வந்து கார்ல ஏறு” என்றவனுக்கு பதிலளிக்காமல் அவள் தொடர்ந்து நடக்க,

தளிர் என் கோபத்தை கிளறாத..” என்றவன் அவளுக்கு முன்பாக வந்து நின்றான்.

எனக்கு உங்களோட பேச எதுவும் இல்லை.. நான் எங்கயும் வர முடியாது நீங்க முதல்ல வழியை விடுங்க..”

முடியாதுடி..!” என்றான் அழுத்தமாக.

லிசன் உதய்  இது ஸ்கூல் பசங்க வர வழி எனக்கு என்னோட மரியாதை முக்கியம்.. எதுவா இருந்தாலும் வீட்ல வந்து பேசுங்க...”

என்னை எவ்ளோ அலைய விடுறடி நீ... கேஸ் முடியட்டும் பேசறேன்னு சொல்லியும் திரும்ப முருங்க மரம் ஏறிட்ட! அப்படி என்னதான் உன் மனசுல இருக்கு அதையாவது சொல்லி தொலைடி”

என்ன சொல்லணும்..?”

ஏன் உனக்கு தெரியாதா..?” அவள் அழுத்தமான அமைதியுடன் நிற்க...

இப்படி அழுத்தமா இருந்தே என்னை கூறுபோட்டுட்டு இருக்கடி  நீ!  அதிகம் பேசுற பொண்ணுங்களை கூட நம்பிடலாம் ஆனா உன்னை மாதிரி வார்த்தையை அளந்து பேசுறவ கூட எல்லாம் காலம் தள்ள முடியாது.. ஏய்  இப்போ என்ன அவங்க பேசினதுக்கு உன் காலுல விழணுமா..?” என்று சீறியவன் அவள் கோபம் அன்னையரின் பேச்சை கொண்டு தான் என்று எண்ணியிருந்தான்.

ஆனால் அதற்கு மேலும் பேச்சை வளர்க்காமல் தளிர் விலகி நடக்க அவள் கையை பிடித்து வலுகட்டாயமாக காரில் ஏற்றி வண்டியை எடுத்தான்.

எங்க போறீங்க..? எனக்கு வேலை இருக்கு.. நிறுத்துங்க”

உனக்கு வேலை இருக்குன்னா நான் என்ன வெட்டியாவா இருக்கேன்..? எனக்கும் எக்கசெக்கமா வேலை இருக்கு... பட் கொஞ்ச நேரம் உன்னோட பேசணும் ப்ளீஸ்” என்றதில் சிறிது அசைந்தவள்,

எனக்கு யார் மேலயும் கோபமில்ல நீங்க ஸாரியும் கேட்க வேண்டியதில்ல போதுமா! உங்க கேள்வி பதில் சொல்லிட்டேன் காரை நிறுத்துங்க” என்றிட  அதையெல்லாம் காதில் வாங்காமல் நேரே தன் ஷோரூமிற்கு சென்று நிறுத்தியவன் அவளை தன்னறைக்கு அழைத்து சென்று சோஃபாவில் அமர்த்தி அவள் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.

*********************

 உதய் என்னதிது...? என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க..! விடுங்க நான் போகணும்..” என்று எழ முற்பட்டவளின் வயிற்றில் அழுத்தமாக முகம் பதித்தவன்,

நீ அமைதியா இருந்தா கொஞ்ச நேரத்துல கிளம்பிடலாம் இல்ல நான் கணக்கு பார்க்க ஆரம்பிப்பேன், அதுவும் முன்ன மாதிரி முத்தத்தோட நிறுத்தாம கணக்கு தாறுமாறா போகும் பரவாலயா..?” என்றவன் அவள் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டான்.

டோன்ட் ப்ளே வித் மை எமோஷன்ஸ் உதய்” என்றவள் கரம் நடுக்கத்தோடு அவனை விலக்க முற்பட,

இட்ஸ் யூ! நாட் மீ.. யூ ஆர் ப்ளேயிங் வித் மை எமோஷன்ஸ்” என்றவன் கரம் அவள் கழுத்தை வளைத்திட  ஆற்றாமையோடு அவள் இதழ்களை சேர்ந்து முத்தமிட தொடங்கிவிட்டான்.

என்றுமில்லாத வகையில் இன்று அவன் முத்தத்தில் வன்மை சற்று கூடியிருந்தது... இருவரின் மூச்சுமே வேகம் கொண்டு காற்றுக்கு ஏங்கிய பின்னரே தளிரை விடுவித்தவன்,

அன்னைக்கு நல்லபடியா தானேடி ஹாஸ்பிட்டல்ல வந்து பார்த்துட்டு போன அப்புறம் என்னாச்சு உனக்கு...? திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கிற..?” என்றவன் மீண்டும் அவள் வயிற்றில் முகம் புதைத்தான்.

உதயாதித்தனின் அதரங்கள் அவள் வயிற்றில் அழுத்தமாக தீண்ட அதோடு அவன் மூச்சு காற்றும் சேர்ந்து அவளை வதைக்க தத்தளித்து போன தளிரின் கரம் அவன் சிகையோடு கோர்க்க முயல அதை கட்டுபடுத்திக்கொண்டு சோஃபாவில் தலை சாய்த்தவளின் இமையோரம் நீர் கசிந்தது.

உனக்கு சூடுபட்ட காயம் எப்படியிருக்கு..?” என்று வயிற்றில் இருந்து மெல்ல நகர்ந்து அவளிடையை பார்க்க அங்கே காயம் ஆறியிருந்தாலும் அதன் வடு இன்னும் மறையவில்லை..

உதய் அவள் வடுவில் முத்தமிட்டவும் “உதய் ப்ளீஸ் மூவ்” என்று குரல் உடைய தளிர் சொன்னதில் அவன் கரம் இன்னுமே அவளிடையை இறுக்கமாக சுற்றி வளைத்தது.

உங்க கை” என்று பதறிக்கொண்டு அவள் அவன் வலக்கரத்தை பிடிக்க,

இப்போ சரியாகிடுச்சு.. ஆனா இப்போதான் உனக்கு விசாரிக்க தோணுது இல்ல” என்றவனின் குரலில் இருந்த வலியை உணர்ந்தவள் மெளனமாக அவனை பார்த்திருந்தாள்.

தளிர்” என்றவனின் மனம் கொண்ட தவிப்பை அவன் உதடுகள் அவள் வயிற்றில் ஒருவித அவஸ்தையோடு நிலைகொள்ளாமல் வடித்திட அவன் கரமோ இன்னுமே அவளை இறுக்கி பிடித்தது.

சரி என்னாச்சு சொல்லுங்க” என்றாள் தொண்டையை செருமி..,

கவின் மலர்”

“...”

எனக்கு தாத்தா பார்த்திருக்க பொண்ணு..” என்றதில் அவளிடம் சிறு அதிர்வு.,

நீ சொன்ன மாதிரி ரொம்ப நல்ல பெண்ணும் கூட..”

நீ பார்த்து ஓகே பண்ணிட்டா...” என்றதும் தான் தாமதம் அவனை விட்டு எழுந்து கொண்டவள்,

லிசென் உதய் கவின்மலரோ பனிமலரோ யாரா இருந்தா எனக்கென்ன..? நீங்க யாரையும் கல்யாணம் பண்ணுங்க தட்ஸ் நன் ஆஃப் மை பிசினஸ் இதையெல்லாம் ஏன் என்கிட்டே சொல்லிட்டு இருக்கீங்க நான் உங்களை கேட்டேனா..? இதை சொல்லத்தான் என்னை கூட்டிட்டு வந்தீங்களா..?” என்று சீற உதய் முகத்தில் மின்னல் கீற்றாய் புன்னகை.

நீ தானேடி எனக்கு நல்ல பொண்ணு கிடைப்பான்னு அன்னைக்கு சொன்ன, அதுதான் நான் ஓகே சொல்லும் முன்னாடி உனக்கு பிடிச்சிருக்கா..”

இதோபாருங்க இது உங்க லைஃப்! நீங்க என்னமோ பண்ணிட்டு போங்க அது எனக்கு தேவையில்லாதது ஆனா இன்னொருமுறை எதையும் என்கிட்டே சொல்லாதீங்க ஐ டோன்ட் வான்ட் டூ ஹியர்”

ப்ச் என்னடி நீ..! என் வாழ்க்கை நல்லா அமைய திருக்குறள், நாலடியார், நன்னெறி கதைகள் எல்லாம் சொல்லி என்னை பாடுபட்டு திருத்தியிருக்க, உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல சொல்ற..?” என்றவனின் குரலில் இப்போது வலி குறைந்து உல்லாசம் பிறந்தது.

“...”

என்னைவிட உனக்கு பெட்டர் டேஸ்ட்..!” என்று அவளை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட,

ஹான்”

அதுதான் நீ என்னை செலெக்ட் பண்ணினதுலயே உன்னோட டேஸ்ட் என்னோடதை விட பெட்டர்ன்னு தெரிஞ்சதே அதுதான் எனக்கு வரப்போற பெண்ணையும் உன்னையே செலெக்ட் பண்ண சொல்றேன்” என்றவன் மறுகன்னத்திலும் முத்தமிட “ஹவ் டேர்” என்று அவனை உதறிய தளிர்,

என்னை பார்த்தா...” என்ற தளிரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவன் சிரிப்பில் தன் பேச்சை நிறுத்திவிட்டு அவனை முறைத்தாள்.

அப்போ நான் கவின்மலருக்கு ஓகே சொல்லிடவா..?” என்றவன் பேச்சை கேட்க விரும்பாதவள் காதை மூடிக்கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேற எதிரில் வந்த ராகவன் அவள் கோபத்தை கண்டு, “என்னாச்சு தளிர்..?” என்றிட பதிலளிக்காமல் வெளியேறினாள்.

மச்சான் அவளை வீட்ல விட்டுட்டு வாடா நான் சொல்றேன்” என்று உதய் புன்னகையோடு சொல்லவும் தளிரை அழைத்து சென்றான்.

மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில்:

கடந்த சில மாதங்களாகவே ஓய்வின்றி இரவு நேரத்திலும் விழித்து தளிர் வழக்கில் ஈடுபட்டிருக்கும் அன்னை அன்று காலையே நீதிமன்றத்திற்கு வந்துவிட உடன் வந்திருந்த அவிரன் “ம்மா காஃபி” என்று அலரிடம் கொடுக்க “அக்கா உங்களுக்கு” என்று சித்தார்த் வேதாவிடம் கொடுத்தான்.

நீயும் சித்துவும் கிளம்புங்க அப்பு... போய் உங்க செமெஸ்டர் ப்ரிபரேஷன் பாருங்க அப்பா என்னை பிக்அப் பண்ணிக்க வரேன் சொல்லியிருக்கார்” என்று தன் வழக்கிற்காக காத்திருந்த அலர் சொல்ல,

இருக்கட்டும் ம்மா நாங்க புக்ஸ் கொண்டு வந்திருக்கோம் இங்கயே ப்ரிப்பேர் பண்றோம்” என்ற அவிரன் நண்பனோடு அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்த அதேவேளை உதய்யிடம் இருந்து அலர்விழிக்கு மெசஜ் வந்தது. 

அவசரமாக திறந்து பார்க்க அதில் சரத் தளிரின் வீட்டில் பேசிய காட்சி விரிந்தது அதுவும் ஒளியும் ஒலியும் துல்லியமாக. அதை கண்டவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்திட உடனே உதய்க்கு அழைத்தாள்.

ஹவ் இஸ் இட் பாசிபிள் உதய்..? அன்னைக்கு வீடியோ எடுத்ததா தென்றல் என்கிட்டே சொல்லவே இல்லையே அப்புறம் இது எப்படி..?”

மேம் இது தென்றலுக்கே தெரியாது... அன்னைக்கு அவன் வரும் முன்னாடி என்னோட அக்கா பொண்ணு வைஷு தளிரை பார்க்கணும்னு சொல்லி கேட்டவ அதை ரெக்கார்டிங்கும் பண்ணியிருக்கா” என்றவன் நடந்ததை அவளுக்கு விவரித்தான்.   

ஆம் அன்று சரத் கதவை தட்டியதில் தென்றல் யாரோ வந்திருக்காங்க அப்புறம் அழைப்பதாக சொன்னதை கேட்காத வைஷுஎனக்கு மேம் பார்த்துட்டே இருக்கணும் க்கா நீங்க மொபைல் வச்சுட்டு போய் டோர் ஓபன் பண்ணுங்கஎன்று அடம்பிடிக்க, தென்றலும் வைஷு பார்ப்பதற்கு வசதியாக ஃபிரிட்ஜ் மீது தளிரை பார்த்தார் போல வைத்துவிட்டு சென்று தான் கதவை திறந்திருந்தாள்.

சரத்தின் வரவில் ஆவேசம் கொண்ட தென்றல் உதய்க்கு அழைப்பதற்காக அவசரத்தில் எடுத்தது சீதாவின் கைபேசி..! சரத் உடைத்ததும் அதைதான்.

ஆனால் தளிர் படுத்திருந்த சோஃபாவிற்கு நேரெதிரே வைக்கபட்டிருந்த தென்றலின் கைப்பேசியை கவனிக்காத சரத் தளிர் அருகே அமர்ந்து அவன் வஞ்சத்தை கொட்ட அத்தனையும் அழகாக ரெக்கார்ட் செய்யபட்டிருந்தது.

ஆனால் சரத் தளிர் அருகே வந்தமரும் முன்னமே வைஷுவின் தோழிகள் அவளை பார்ப்பதற்கு வந்திருப்பதாக கௌஷிக் அவளை இழுத்துசெல்ல வைஷுவும் கைபேசியை அவர்கள் அறையில் வைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

சரத் பேசிய அத்தனையும் துல்லியமாக ரெக்கார்டாகி இருக்க தளிரோடு பேசுவதற்காக கைபேசி வாங்கி சென்ற மகள் ரெக்கார்டிங்கில் போட்டிருப்பதை அறிந்த சுஜி அதை சேமித்துவிட்டு அவசரமாக நிவிக்கு அழைத்து குழந்தை குறித்து விசாரித்தாள்.

அதன்பின் பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்ட வைஷுவை படிப்பு ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது உதய் தளிரின் திருமண காட்சிகளை பார்ப்பவள் காணொளி குறித்து மறந்து போயிருந்தாள்.  

 ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தான் மொபைலில் ஸ்பேஸ் இல்லாத காரணத்தால் வீடியோக்களை டெலீட் செய்வதற்காக ஒவ்வொன்றையும் பார்த்திருந்த சுஜிக்கு அதில் சரத் பேசியிருப்பது பதிவாகி இருப்பதை அறிந்து உடனே தம்பிக்கு அனுப்பி வைத்தார்.

ஏற்கனவே நீதிமன்றத்தில் அலருக்கும் சரத் தரப்பில் ஆஜராகி இருந்த பிரபல வக்கீலுக்கும் இடையே அனல்பறக்கும் விவாதம் போய்க்கொண்டிருந்த நிலையில் இப்போது வழக்கில் முக்கிய திருப்பமாக வைஷு எடுத்திருந்த வீடியோ அமைந்திருந்தது.

சுஜி அனுப்பவுமே முதல் வேலையாக அதை அத்தனை சமூக வலைதளங்களிலும் பரவ செய்திருந்தான் உதயாதித்தன்.

நம்பி பழகிய பெண்ணுக்கு எதிராக இழைக்கப்பட்ட துரோகம், வஞ்சம் வைத்து அவள் வாழ்வை சிதைத்தது, ஏமாற்றியது, கட்டாயபடுத்தியது, மிரட்டியது என்று சரத் செய்த அத்தனை குள்ளநரித்தனமும் காட்டுத்தீப்போல சமூக வலைதளங்களில் பரவிட கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என்று அத்தனை பேரும் சரத்திற்கு எதிராக வெகுண்டெழுந்திருந்தனர்.

ஆங்காங்கே முற்றுகை போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு தளிருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சொல்ல அனைத்து சேனல்களிலும் சரத் செய்த துரோகமே ப்ளாஷ்நியூஸ் மட்டுமின்றி விவாதபொருளாகவும் மாறி இருந்தது.

இத்தனை நாள்கள் தளிரை அவதூறாக பேசிய அத்தனை வாயும் தளிர் குற்றமற்றவள் என்று அவளுக்கு ஆதரவாக பேச தளிர் வழக்கு முடிவிற்கு வரும் முன்னமே காட்சிகள் அத்தனையும் தலைகீழாக மாறியது வைஷு எடுத்திருந்த வீடியோவால்..!

தூற்றிய அத்தனை வாயும் இப்போது தன் தமக்கையை கொண்டாடுவதை கண்ட தென்றல் துள்ளி குதிக்க சீதாவின் முகத்திலும் என்றுமில்லாத வகையில் பெருமகிழ்ச்சி பரவியது.

பள்ளியிலும் அதே நிலை தான்..!!

ஸ்டாஃப் ரூமில் இருந்த தளிரிடம், “ரொம்ப நாள் உண்மையை மறைக்க முடியாது என்னைக்கு இருந்தாலும் ஜெயிக்கும் மேம்... இப்போவே நீங்க ஜெயிச்ச மாதிரி தான்” என்றிட இத்தனைக்கும் காரணமான வைஷு தளிரின் வகுப்பிற்காக ஆவலோடு வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.

தளிர் வரவும் முதல் ஆளாக எழுந்து நின்று “குட் மார்னிங் மேம்” என்று சப்தமாக வைஷு சொல்ல அனைவர்க்கும் ஹாப்பி மார்னிங் சொன்ன தளிர் வைஷுவை பார்த்து புன்னகைக்கவும் அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் அவள் தன்னை பார்த்து பிரத்யேகமாக புன்னகைத்ததிலேயே பூரித்து போன வைஷ்ணவி ஆஸ்கார் பெற்ற மகிழ்வோடு தோழிகளை கெத்தாக பார்த்தாள்.

விஷயம் அறிந்த அம்பலவாணனின் முகத்தில் நிம்மதி பரவியது.. ராகவனும் உதய்யும் பள்ளியிலிருந்து அழைத்து சென்று வைஷுவை கொண்டாடி தீர்த்து விட்டனர்.

நிவி சுஜியை கேட்கவா வேண்டும் மனமெங்கும் மகிழ்வோடும் கைகளில் இனிப்போடும் தளிர் வீட்டிற்கு வந்திருந்தனர். 

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 17

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 16.2