வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 74

 


நீ உன்னோட வாழ்க்கையை அழிச்சுக்கிற  அளவுக்கு அந்த பொண்ணுக்கு மதிப்பு இருக்கிற மாதிரி எனக்கு தெரியல.., நம்பி ஏமாந்துட்டேன்னு சொல்ற அந்த பொண்ணு எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் ஆனா நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்.. நீ என்ன சொன்னாலும் தளிர் இந்த வீட்டு மருமகளாக முடியாது” என்றவர் பேச்சு முடிந்தது போல பேரனை பார்த்தார்.

பேசி முடிச்சிட்டீங்களா..? முடிஞ்சதுன்னா நான் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்றேன் பொறுமையா கேளுங்க”

முதல்ல சரத்தை ஏன் இத்தனை வருஷம் எதுவும் செய்யலைங்கிறதுல இருந்து ஆரம்பிக்கிறேன் அப்போதான் சரியா இருக்கும்” என்றவன்,

தாத்தா முதல்ல ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க அது ஆண் துணை இல்லாத வீடு..!!!”

தளிரே எதிர்பாராம ஒரு விஷயம் நடந்த பிறகு அவளை காப்பாற்றி வாழ வைக்கிறதை தவிர இரண்டு லேடீஸ் மட்டும் தனியா இதுக்கு மேல என்ன செய்திட முடியும்னு நீங்க நினைக்கிறீங்க..?”

பூனை கண்ணை மூடிக்கிட்டா பூமியே இருண்டு போயிடும்னு நினைக்குமாம். அதுமாதிரி தான் அன்னைக்கு தளிரை யாருக்கும் தெரியாம சென்னையில இருந்து வேலூர் கூட்டிட்டு வந்ததும் பிரச்சனை முடிஞ்சதுன்னு நினைச்சுட்டாங்க.. ஆனா தளிரோட குற்ற உணர்ச்சியும்  தற்கொலை முயற்சியும் அவங்களை நிம்மதியா இருக்கவிடாம அடுத்து டாக்டர் ட்ரீட்மென்ட்ன்னு மூச்சு விட முடியாம ஓடவிட்டிருக்கு... ஒருவழியா அவளை காப்பாற்றி இயல்பு வாழ்க்கைக்கு திருப்பி தங்களோட குழந்தையை பழையபடி இல்லைன்னாலும் ஓரளவுக்கு அந்த பாதிப்புல இருந்து வெளியில கொண்டு வந்து அவ லைஃபை  செட்டில் பண்ணி  திரும்ப  புதுசா ஸ்டார்ட் பண்ண வைக்கிறதே அவங்களுக்கு ஒரு பெரிய அச்சீவ்மென்ட்!”

அவளை வாழ வைக்கிறது தான் அவங்களுக்கான முக்கிய இலக்கா இருந்திருக்குமே தவிர சரத்தை பற்றி யோசிக்க கூட நேரமிருந்திருக்காது. அதுல முக்கியமான விஷயம் என்னன்னா சரத் அதுவரைக்கும் அவ வாழ்க்கையில குறுக்கிடவே இல்லை. மற்ற பிரெண்ட்ஸ் யாரோடும் தொடர்புல இல்லாததாலும்  இத்தனை வருஷத்துல யாருமே இவங்களை தேடி வராததாலும்  நம்ம பெண்ணை காப்பாத்திட்டோம்னு நினைச்சவங்க ஒருகட்டத்துல அதை கெட்ட கனவா மறந்துட்டு வேலையை பாருன்னு சொல்லியிருக்காங்க.

அப்பா இல்லாத பதினெட்டு வயசு தளிருக்கு தன்னோட நட்பு தப்பா போன குற்ற உணர்வுல இருந்து மீண்டு வந்த பிறகு அம்மா அத்தை சொல்றதை கேட்கிறதை தவிர வேற ஆப்ஷனே இல்ல...”

அதுக்கு ஏற்றார்போல அந்த சைக்கோவும் இவங்களை தேடி வராததால பிரச்சனை முடிஞ்சுடுச்சுன்னு நினைச்சுட்டாங்க. ஒருவேளை அவன் இவங்களை தேடி வந்து தொடர்ந்து எதாவது தொந்தரவு கொடுத்திருந்தா அப்பவே போலீஸ் ஸ்டேஷன் போறேன்னு சொன்ன அத்தை இந்த முறை நிச்சயம் போயிருப்பாங்க இல்ல மீனாக்ஷி அம்மா அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிருப்பாங்க”

இது ரெண்டுல எது நடந்திருந்தாலும்  நிச்சயம் அத்தையும் தளிரும் நம்மகிட்ட  மறைச்சு இருக்க மாட்டாங்க... ஆனா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லாம பண்ணினவன் சத்தமே இல்லாம இவங்களை கண்காணிச்சு நாம பெண் கேட்டு நிச்சயம் பண்ணி கல்யாணம் வரைக்கும் காத்திருந்து தளிரை அசிங்க படுத்தியிருக்கான்..”

ஆண் துணை இல்லாம கௌரவமா வாழ்ந்துட்டு இருக்கிறவங்களுக்கு யாருக்கும் தெரியாம வேற ஊருக்கு வந்ததாலேயே பிரச்சனை தீர்ந்ததுன்னு நினைச்சாங்களே தவிர இந்தளவு அவன் செய்வான்னு யோசிக்கிற நிலையில அவங்க இல்ல தாத்தா.”

இதெல்லாம் நடந்து ஆறு வருஷம் ஆச்சு. ஒரு வருஷம் கிட்ட அவ ரொம்பவே கஷ்டப்பட்டு டா.. தற்கொலை வரை போனவ சைக்காட்டிஸ்ட் ஹெல்ப் எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து  தன்னுடைய படிப்பை விடாம படிச்சு வேலைக்கு போயி குடும்பத்தை நிர்வகிச்சு இந்த நிலையில் இருக்கா”

ஓஓ இந்த நிலைக்கு வந்துட்டதால நடந்ததை நம்மகிட்ட இருந்து மறைச்சது சரின்னு ஆகிடுமா..?”

அவங்க இன்டென்ஷனலா நம்ம கிட்ட இருந்து மறைக்க நினைக்கலை தாத்தா”

மறைக்கலை மாமா மறந்துட்டாங்க” என்று ஏளன குரலில் ராஜி எடுத்து கொடுக்க.

அந்த டாப்பிக்கு அப்புறம் வரேன் ராஜிம்மா அதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்? பொறுமையா இருங்க” என்று அடிக்குரலில் சொன்னவன்,

தாத்தா சரத் பற்றி சந்தியா தளிர் கிட்ட சொன்ன பிறகு அன்னைக்கு நைட்டே என்கிட்டே விஷயத்தை சொன்னவ முதலில் சொன்ன விஷயமே இதுக்கு மேலயும் எந்த கட்டாயத்துக்காகவும் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியமில்லை, சரத் விஷயத்தை முதல்லயே சொல்லாம விட்டது என்னோட தப்புன்னு சொல்லி மன்னிப்பு கேட்டு இந்த விஷயம் தெரிஞ்ச பிறகும் அவளை கல்யாணம் பண்ணிக்கனுமா வேண்டாமா என்ற முடிவை என்கிட்ட கொடுத்திருந்தா ஆனா அதன் பிறகும் இந்த கல்யாணத்தை நடத்தற முடிவை எடுத்தது நான்தான்..!!”

என்னால மட்டுமே அடுத்த நாள் காலையில் அவ என்னோட மணமேடையில உட்கார்ந்தா.. அப்போ வரைக்கும் கூட சரத் அவ கல்யாணத்தை நிறுத்தத்தான் வேலூர் வந்திருக்கான்னு அவளுக்கே தெரியாது தாத்தா.. ஆறு வருஷமா வராதவனுக்கு நிச்சயம் அவ இருக்கிற இடம் தெரிஞ்சிருக்காதுன்னு தான் அவ நினைச்சிருக்கா”

ஏன்..?”                  

ஏன்னா அவ இருக்கிற இடம் தெரிஞ்சிருந்தா இத்தனை வருஷத்துல அவன் நிச்சயம் அவளை விடாம துரத்தி வந்து கல்யாணம் செய்ய முயற்சி செய்திருப்பான். அப்படி செய்யாததால அவன் வேலூர் வந்தது எதேர்ச்சையா நடந்ததா தான் அவ நினைச்சிருக்கா. அவனோட மோடிவ் தெரியாதவ அவனை பற்றிய நியாபகம் கிளறபட்ட பின்பும் அதை மறைக்கிறது தப்புன்னு நடந்ததை என்கிட்டே சொல்லி கல்யாணத்தை நிறுத்துறுதா இருந்தா அவ முழு பொறுப்பும் ஏத்துகிட்டு உங்க எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டு விலகிடுறேன் சொன்னா..”

ஏன் சொன்னதை செய்யலை..?”

அவளை செய்ய விடாம பண்ணினது நான்..”

ஏன்..?”

ஏன்னா அவ கிட்ட கள்ளம் இல்ல, எங்க சரத் வந்து கல்யாணத்தை நிறுத்திடுவானோ அதுக்கு முன்னாடி நாம சொல்லிடறது நல்லது என்ற பயமோ பதட்டமோ சுத்தமா இல்லை..., தளிர் பேசின ஒவ்வொரு வார்த்தையும் உண்மையா இருந்தது அதைவிட நம்ம கிட்ட முன்கூட்டியே  சொல்லாம விட்டுடோமே என்ற ஆதங்கமும் வருத்தமும் தான் அவகிட்ட அதிகமா இருந்தது”

இந்த விஷயத்தை சொன்ன பிறகு தன் வாழ்க்கை எப்படியும் திசை மாறலாம்னு தெரிஞ்சே தான் என்கிட்டே சொன்னா... எங்கயுமே அவளை நியாயபடுத்தவே இல்ல உள்ளது உள்ளபடி சொன்னவ ஒரு இடத்துல கூட தனக்கு நடந்த அநீதியை வச்சு என்கிட்டே அனுதாபம் தேட முயற்சிக்கலை.. அந்த இடத்துல அவளோட சுயமரியாதை பிடிச்சது, நான் உடன்படாம நடந்த ஒரு நிகழ்வுல எங்கயும் என் பங்கு கிடையாது என் மேல தப்பில்லன்னு திடமா பேசின அவளோட நிமிர்வு பிடிச்சது”

இந்த கல்யாணம் நின்ற பிறகு என் வாழ்க்கை என்னாகுமோன்னு நீங்க யோசிக்க தேவையில்ல யாருக்காகவும் என் வாழ்க்கையை நான் விட்டுகொடுக்க மாட்டேன் தைரியமா வாழ்வேன்னு சொன்ன அவளோட தன்னம்பிக்கை பிடிச்சது, உங்ககிட்ட மன்னிப்பு கேட்பேன்னு சொன்னவளோட நேர்மை பிடிச்சதுசுயபச்சாதபத்துல தனக்கு வாழ்க்கை கொடுக்க சொல்லி கேட்காதவளோட கண்ணியம் பிடிச்சது, எனக்கான நியாயம் என்னவோ அதை மட்டுமே முன்னிலைபடுத்தி பேசினவ என்னை நிர்பந்திக்காம முடிவையும் என்கிட்டே கொடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்சது” என்று அவள் மீதான பிடித்தத்தை அடுக்கி கொண்டே போக அண்ணாமலையும் ராஜியும் இமைக்க மறந்திருந்தனர்.

*********************

 நிச்சயமா தளிருக்கு நடந்தது அவ்ளோ சீக்கிரம் மறக்க கூடிய விஷயம் கிடையாது எந்த பெண்ணாலயும் மறக்கவும் முடியாது அதேபோல தான் வைஷுவோடதும்..!!”

ஆனா நம்மோட அதிர்ஷ்டம் இரண்டு பேருமே அதுல இருந்து வெளியில வந்து அதை மறந்துட்டு தங்களோட இயல்புக்கு திரும்பினது.

கண்டிப்பா எத்தனை பேருக்கு இப்படி ஒரு வரம் வாய்க்கும்னு தெரியாது தாத்தா. ஒருவேளை நீங்க இப்படி பாதிக்கபட்ட பெண்களையும் அவங்க குடும்பத்தையும் கேட்டீங்கன்னா எந்த அளவுக்கு அவங்க அந்த நினைவுல இருந்து வெளியே வர முடியாம ஒவ்வொரு நாளும் நரக வேதனையை அனுபவிக்கிறாங்கன்னு உங்களுக்கு புரியும்..” என்றதில் அண்ணாமலை கேள்வியாக பேரனை பார்த்தார்.

என்ன பார்க்கறீங்க உங்க பேத்தியும் தளிரும் மட்டுமே இப்படி பாதிக்கப்பட்ட முதல் பெண்ணோ குழந்தையோ கிடையாது...  தினமும் நூற்று கணக்கான பெண்களும் குழந்தைகளும் ஸ்கூல், வொர்க்பிளேஸ், வீடு, மால், பஸ், ட்ரெயின், கோவில், ஹாஸ்பிட்டல்னு எல்லா இடத்துலயும் இப்படிப்பட்ட பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிட்டு தான் இருக்காங்க”

அவர்களில் எத்தனை பேர் வைஷு மாதிரி ஸ்ட்ராங்கா இருப்பாங்கன்னு நினைக்கறீங்க..?

நிச்சயமா இல்ல தாத்தா! பல குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு எத்தனை வருஷமானாலும் அவங்களை விட்டு போகாது சரியா தூங்க முடியாம, சாப்பிட முடியாம, விளையாட, படிக்கன்னு தனக்காக வாழ்க்கையை வாழ முடியாம அவஸ்த்தை படர குழந்தைங்க, அப்பா கிட்ட கூட நெருங்க பயப்படுவாங்க உங்களுக்கு தெரியுமா..? இங்க எந்த தப்பும் செய்யாத குழந்தை தன்னோட வாழ்க்கையை இழந்துட்டு அதோட குடும்பம் நிம்மதி சந்தோஷத்தை இழந்து நிற்கும் அதேநேரம் தப்பு செய்தவன் பணத்தை கொடுத்து வெளியில வந்துட்டு இன்னும் திமிரா தான் சுத்திட்டு இருப்பான்..

நாட்டுல மனுஷ மிருகங்களோட எண்ணிக்கை அதிகமாகிடுச்சு... தப்பு பண்ணினா பணம் கொடுத்தோ இல்ல சாட்சி ஆதாரங்களை மறைச்சோ வெளியில வந்து சுதந்திரமா சுத்தறாங்க அதனால தான்  பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிட்டே போகுது.

அடுத்து என்ன சொன்னீங்க படிக்க போன இடத்துல என்ன ஆம்பளை சகவாசம் அதனால தானே இப்படி நடந்ததுன்னு கேட்டீங்க..?

முதல்ல உங்க கேள்வியே தப்பு!! இங்க தளிர் போல ஃப்ரெண்டை நம்பி போன பெண்களுக்கு மட்டும் தான் கெடுதல் நடக்குதுன்னு நினைக்கறீங்களா..? அப்படியில்ல யாரு என்னன்னு அறிமுகமே இல்லாத நபர்களால் பெண்களுக்கு நடக்க கூடிய வன்முறையும் இதற்கு குறைந்தது இல்லை..

ப்ளீஸ் தாத்தா எப்போதான் உங்களை மாதிரி ஆள்கள் விக்டிமை ப்ளேம் பண்றதை நிறுத்த போறீங்கன்னு எனக்கு புரியலை... என்னமோ படிக்கிற வயசுல பையனோட சுத்தற பொண்ணுக்கு தான் ஆபத்துன்னு நீங்க பேசறது சுத்த அபத்தம்..!

நீங்க பார்த்த, வாழ்ந்த உலகம் வேற இப்போ இருக்கிற உலகம் வேற முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க தாத்தா”

நீங்க சொல்ற மாதிரி பெண்கள் படிக்காம  வேலைக்கு போகாம இருக்கிறது இந்த காலகட்டத்துல சாத்தியமில்லாத ஒன்று.

ஒரு பொண்ணு பையனை நம்பி வெளியில போகும் போது அவளை பாதுக்காக்கவும், அவளோட மரியாதையை காப்பாற்றவும் தவறின ஆணை யாருமே கேள்வி கேட்பதில்லை.. முதல்ல அது மாறனும் அதை விட்டுட்டு அவ ஏன் அவனோட போனான்னு நீங்க கேள்வி கேட்டுட்டு இருக்கிற வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடையாது.

அப்போ ஒரு பெண் ஆணை நம்பி போக கூடாத அளவுக்கு ஆண்வர்க்கம் மோசமானதா..? அதுல நல்லவர்களே கிடையாதா..? அப்போ இந்தளவு மோசமான ஆண்கள் கூட்டத்தை உருவாக்கி சமூகத்துல உலவ விட்டது யாரோட தப்பு..? முதல்ல இப்படிப்பட்ட வக்கிர எண்ணம் கொண்ட ஆண்கள் உருவாக காரணமென்னனு யோசிக்க மாட்டீங்களா..?

உடன் படிக்கிற பெண்ணை மதிக்கவும் அவளை சகமனுஷியா நடத்தவும் முதல்ல ஆணுக்கு கற்றுகொடுங்க... காலங்காலமா பெண் என்றாலே “டேக் இட் பார் கிராண்டட்” என்கிற எண்ணத்தை ஆண்பிள்ளைகள் மனசுல தன்னையறியாம இந்த சமூகம் விதிச்சிருக்கு முதல்ல அதை களை எடுக்கணும்.

அதைவிட முக்கியமா பெண்களும் குழந்தைகளும் நிம்மதியா நடமாட முடியாதளவுக்கு பாதுகாப்பற்ற சமூகமா இருக்கிற நாம ஆண் குழந்தைகளை கட்டுப்பாட்டோட ஒழுக்கமா வளர்த்திருக்கோமான்னு யோசிக்கிறதே கிடையாது.                                    

ஆண் என்ற ஒரே காரணத்துக்காக அதீத சுதந்திரம். என்ன செய்யறான், எங்க போறான், எப்போ வரான் எதையும் நாம கேட்க தேவையில்ல, அவனுக்கும் சொல்ல தேவையில்லை... இதுதான் பெரும்பாலான குடும்பத்தின் போக்காக இருக்கு...

ஆனா பொண்ணுக்கு அப்படி இல்ல பகல்ல அவ வெளியில போறதா இருந்தாலும் ஆயிரத்தெட்டு கேள்விகள், பத்திரங்கள், எங்க போக போறா, என்ன பண்ண போறா, அவ திரும்ப வர வேண்டிய நேரம் முதற்கொண்டு விசாரிச்சு கண்காணிக்கிறோம்.. அது தப்பில்லை!! ஆனா அதையே ஒரு பையனுக்கு பண்றோமான்னு யோசிச்சு பாருங்க... நிச்சயமா கிடையாது..!! ஆணுக்கு கொடுக்கபட்டிருக்க சுதந்திரத்தை அவன் ஒழுங்கா உபயோகிக்கிறானான்னு யாருமே கண்காணிப்பது கிடையாது.

கட்டுபாடு இல்லாம கட்டவிழத்து விடுறதால தான் ஆண் வர்க்கத்திடம் இப்படிபட்ட வக்கிரம் அதிகரித்திருக்கு.. அதை எப்படி கண்ட்ரோல் பண்ணனும், இல்ல இப்படி பெண்களிடம் அத்துமீறும் ஆண் யாரா இருந்தாலும் எத்தகைய சமூக அந்தஸ்த்தை கொண்டிருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்களை தண்டிப்பதற்கான முயற்சியில ஈடுபாடாத யாருக்கும் அந்த பெண்ணை கேள்வி கேட்கிற தகுதி கிடையாது.

வெளியே சுத்தாம  இருந்திருந்தா இந்த பிரச்சனை இல்ல தானே..?” என்று ராஜி நொடிக்க,

போதும் ராஜிம்மா!! இன்னும் எத்தனை காலத்துக்கு தான் பெண்கள் வெளியே வந்ததால தான் பிரச்சனைன்னு பேசப்போறீங்க..? Stop blaming women for everything!!!

ஒரு பொண்ணு நைட்ல தனியா போனாலே தப்பானவ இல்லை நைட்ல போனதால தான் அவளுக்கு ஆபத்து வந்தது போயிருக்க கூடாதுன்னு பேசற யாருமே அந்த பெண் என்ன அவசர தேவைக்காக போனான்னு யோசிக்கறது இல்லை.”

ஏன் அந்த பொண்ணு ஒரு ஸ்கூல் இல்ல காலேஜ் ஸ்டுடென்ட்டா இருந்து ப்ராஜெக்ட்காகவோ, இல்ல வொர்கிங் விமன்னா இருந்து வேலை விஷயமா அர்ஜென்ட்டா வர சொன்னதாலயோ, இல்ல அவங்க டாக்டரா இருந்து எமெர்ஜென்சி கேஸ் பார்க்கிறதுக்காக ஹாஸ்பிட்டல் போயிருக்கலாம், ஒரு அம்மாவா தன்னோட குழந்தைக்கு உடம்பு முடியாம அந்த ராத்திரி நேரத்துல மருந்து வாங்க கூட வெளியில வந்திருக்கலாம், இப்படி அவங்க வந்ததுக்கான காரணம் தெரியாம உங்க இஷ்டத்துக்கு பொத்தாம் பொதுவா பெண்களை தவறானவங்கன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்..?”

இதுல முக்கியமான விஷயமே அப்படி வெளியில் வந்த பெண்கள் வீட்டில் இருக்க ஆண்கள் அந்த நேரத்துல பெண்ணுக்கு உதவாம என்ன செய்திட்டு இருந்தாங்கன்னு யாருமே கேள்வி கேட்பதில்லை.. பலநேரம் தப்பே பண்ணாதவங்களை விமர்சனம் செய்து அவங்களை தற்கொலை வரை தூண்டிவிடறோம்...

அப்போ பெண்கள் மேல தப்பே இல்லைன்னு சொல்றியா..?” என்று ராஜி கேட்க,

நான் அப்படி சொல்லவே இல்லை ராஜிம்மா.. இருக்கலாம் ! இருக்கு ! அப்படி ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இருக்கு அதுக்காக பொத்தாம் பொதுவாக எந்த பொண்ணுக்கு அநீதி நடந்தாலும் அவளோட நடத்தையை முன்னிறுத்தி பேசுறது தான் கூடாதுன்னு சொல்றேன்”

அந்த பொண்ணு வெளியில வந்தா ஏன் இப்படி ட்ரெஸ் பண்ணிட்டு போனான்னு பாதிக்கபட்ட பெண் மீதான குற்றச்சாட்டை அடுக்குற தீவிரத்துல அவளுக்கு அந்த கொடுமையை செய்தவனை பற்றி பலர் மறந்துடுறோம்...”

குடி போதையில இருந்த நாய்க்கு வைஷும்மாவோட முகம் கூட சரியா தெரிஞ்சிருக்குமான்னு தெரியாது அதுல அவ போட்டிருக்க ட்ரெஸ்சா அவளுக்கு நடந்த கொடூரத்துக்கு காரணம்..?”

இதோ இப்போ கூட நீங்களும் தளிர் எப்படி மறக்கலாம் மறைக்கலாம்னு கேட்கறீங்களே தவிர தப்பு பண்ணின சரத்தை எதுவும் பேசலை.. ஏன் தாத்தா இந்த சுயநலம்..? தளிரால நமக்கு ஏற்பட்ட இழப்பை முன்னிறுத்தி பேசி அவனோட தவறை இருட்டடிப்பு செய்துட்டீங்க.. என் தாத்தா கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை” என்றான் வேதனையோடு.

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17