வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 75

 


இதனால தளிரை நியாயபடுத்துறேன்னு நினைக்க வேண்டாம்.. வைஷுக்கு ஒரு அசம்பாவிதம் என்றதும் துடிச்ச உங்களுக்கு தளிரோட வேதனை புரியலையே என்கிற ஆதங்கம் தான் தாத்தா.. உங்களுக்கு மட்டுமில்ல இங்க இன்னும் சிலருக்கும் புரியலைஎன்று அன்னையரை பார்த்தவாறு கூற ஜெகா கண்ணீரோடு மௌனித்து தலை குனிந்தார்.

இன்னும் எத்தனை காலத்துக்கு தான் நான் அனுபவிக்காம வலியை உணரமாட்டேன் அதை ஆதரிக்க மாட்டேன் என்கிற மனநிலையில இருக்க போறீங்க..? நாம எல்லாருமே மனுஷங்க தாத்தா வாயில்லாத ஜீவன் தெரியாம வண்டியில மாட்டி அடிபட்டா கூட உடனே அதுக்கு மருந்து போடற நாம அதெப்படி அந்நேரம் குறுக்க போகலாம்னு பட்டிமன்றம் நடத்தறது இல்லை.

ஜீவராசிக்கே கருணையோடு இருக்க நாம பாதிக்கப்பட்ட பெண்களை கூண்டுல ஏத்தாத குறையா ஏன் இப்படி புலன் விசாரணை நடத்தி அவங்களோட காயத்தை இன்னும் அதிகபடுத்துறோம்..? இந்த மாதிரியான போக்கினால் தான் பாதிக்கபட்ட பெண்கள் அந்த நிகழ்வுல இருந்து மீளவே முடியாம அவஸ்த்தைபடறாங்க..

இங்க மாற வேண்டியது நாம தான்..!

இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்க நாம எல்லாரும் குழந்தை அந்த விஷயத்துனால பாதிக்கபட்டு டிப்ரெஷன்க்கு போயிடாம நல்லபடியா இருக்கிறதை நினைச்சு சந்தோஷபடறோமே தவிர அவ ஏன் மறந்தா அப்பா அம்மாகிட்டயே ஏன் மறைச்சான்னு ஒரு வார்த்தை கேட்கலை”

அதனால் யாருக்கும் பாதிப்பு இல்லையே உதய்...”

அப்போ தெரிஞ்சோ தெரியாமலோ இன்னொருத்தங்க பாதிக்கபட்டா அந்த பெண் வாழவே அருகதை இல்லாதவன்னு சொல்லிடுவீங்களா...? தற்கொலை வரை போய் மீண்டு வந்திருக்க தளிரும் அதுக்கப்புறம் அப்படி ஒரு டிப்ரெஷன் ஸ்டேட்க்கு போயிடாம நல்லா இருக்கிறதை நினைச்சு நீங்க சந்தோஷபடலையே தாத்தா.. இது என்ன மாதிரியான மனப்போக்கு..?”

ஒருத்தரோட வலியை உணர மனுஷதன்மை இருந்தா போதும் அவங்க நம்ம சொந்தமா இருக்க வேண்டிய அவசியமில்லை... இப்போவரைக்கும் நம்ம வீட்டு பெண் என்றால் தங்கம், வைரம் அவங்களுக்கு நடந்த தப்புக்கு அடுத்தவன் தான் காரணம்... அதே அடுத்தவங்க வீட்டு பெண் என்றால் குப்பையா சாக்கடையா  நினைக்கிறதும் அவ வெளியில போனதும் அவனை தப்பு செய்ய தூண்டினதும் தான் காரணம்னு சொல்லாதீங்க”

வெளியில இருந்து ஆயிரம் நியாயம் பேசலாம் ஆனா பாதிக்கபட்டவங்க வலியை புரிஞ்சுக்க குறைந்தபட்ச மனிதாபிமானம் வேணும். எங்க நம்ம வீட்லயே அது முழுசா இல்லாதப்போ வெளியில எங்கிருந்து எதிர்பார்க்க..? என்று விரக்தியாக புன்னகைத்தவன்,

சோஷியல் மீடியா முழுக்க தளிரை என்னவெல்லாம் பேசினாங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அதே இப்போ உண்மை தெரிஞ்ச பிறகு மாற்றி பேசறாங்க அதுல பலர் பேசின வார்த்தைக்காக மன்னிப்பு கூட கேட்கலை.. நல்லவேளை தளிர் இதுகெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிற பெண்ணா இல்லை ஆனா இதேபோல எல்லா பெண்களும் இருப்பாங்களான்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா..?” என்று கேட்க யாரிடமும் பதிலில்லை.                                              

அடுத்து வைஷுவையும்  தளிரையும்  ஒரே தராசுல பார்க்க கூடாது, இரண்டு பேருக்குமே நடந்த விபத்து வேற வேறன்னு நீங்க சொல்றதை நான் ஏத்துக்கவே மாட்டேன்..

எட்டு வயசு வைஷுவோ பதினெட்டு வயசு தளிரோ  ஐம்பத்தி எட்டு வயசு அம்மாவோ இல்ல என்பது வயசு பாட்டியோ யாரா இருந்தாலும் உணர்வு எல்லோருக்கும் பொதுவானது.

ஒரு பெண்ணுக்கு பிடிக்காம அவளோட கையை பிடிக்கிறது கல்யாணம் பண்றதை பற்றி அப்புறம் பேசலாம் ஆனா  அதுக்கு முதல்ல விருப்பமில்லாத பெண்ணோட நிழலை கூட தீண்டக்கூடாது அதுவே மாபெரும் தவறு...!!

இங்க வைஷுவுக்கு உடலளவுலயும் தளிருக்கு மனசளவுலயும் பாதிப்பு ஏற்பட்டிருக்கு.. இரண்டுமே அவங்க விருப்பத்திற்கு மாறாக நடக்கும் போது நிச்சயம் அவங்க மனநிலையை  அதிகளவுல பாதிச்சிருக்கும்...

சைக்கலாஜிக்கலா அவங்களை அதுல இருந்து மீட்பது ரொம்பவே கஷ்டமான விஷயம்... இப்படி ஒரு அப்யூஸ்க்கு பிறகு ஒரு DEPRESSED ZONE க்கு போகாம வைஷு சீக்கிரம் மீண்டு வந்தது நம்மோட  அதிர்ஷ்டம்..

ஆனா இந்த கசப்பான விஷயத்தை திரும்பத் திரும்ப பேசி அந்த குழந்தை கிட்ட பூதாகரமாக்கி  அந்த குழந்தை தப்பே செய்யாமல் ரொம்ப தப்பானவன்னு  குற்ற உணர்ச்சி உள்ள போக விடாம வைஷுவ அம்மா மீட்டு இருப்பது நிச்சயமா பெரிய விஷயம்!!

அதுவும் சைக்கியார்டிஸ்ட் வரை போகவிடாம ஏதோ ஒரு விதத்துல அம்மா அவளை காப்பாற்றி இருக்காங்க அதுக்கு அவங்களை பாராட்டலன்னாலும் பரவாயில்ல குறைந்த பட்சம் திரும்ப திரும்ப அதை சொல்லி கஷ்டபடுத்தாம இருக்கலாமே.

தவறு செய்வது மனித இயல்பு..!! அம்மா அன்னைக்கு கேர்லெஸா இருந்திருந்தாலும் இனி நிச்சயம் ரொம்பவே கவனமா இருப்பாங்க ஸோ ப்ளீஸ் க்கா நீயும் எதுவும் பேசாத என்று சொல்ல ஜெகா மகனை நன்றியோடு பார்த்தார்.

தளிரும் தனக்கு நடந்த விபத்துல இருந்து தெய்வாதீனமா பிழைச்சு அதிலிருந்து வெளிவந்து அதை மறந்துட்டு என் வாழ்க்கை எனக்கானது அதை யாரும் எந்த நிகழ்வும் தட்டிப்பறிக்க விடமாட்டேன் என்று இருக்கா.

அவளை இந்த நிலைக்கு ஆளாக்கினவனை நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாதுடா என்று தூக்கி போட்டு இப்ப வரைக்கும் தன்னோட நிலையில இருந்து மாறாமல் தன் படிப்பு, கேரியர், வாழ்க்கைன்னு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த ஒரு பெண்ணை அது எப்படி நீ மறக்கலாம்...? இது மறக்க கூடிய விஷயமான்னு கேட்கிறது எந்த விதத்துல நியாயம்..?

அப்படி கேட்டு கேட்டே அந்த பொண்ணு மறந்த விஷயத்தை நியாபகபடுத்தி திரும்ப அவளை ஓட்டுக்குள் நத்தையா ஒடுங்க வைக்கறீங்கன்னு உங்களுக்கு புரியலையா..?

இதனால தான் இப்படிப்பட்ட கேள்விகளால தான் பாதிக்க பட்ட பொண்ணுங்க கடைசியில மண்ணோட மண்ணாக போயிடறாங்க. அவங்கவங்களுக்கு வந்தா தான் தலைவலியையும் வயிற்று வலியையும் புரிஞ்சுப்பேன்னு சொல்றது என்ன மாதிரியான மைன்ட் செட்...?

அடுத்து தளிர் இந்த விஷயத்தை மறந்துட்டதை நினைச்சு நான் சந்தோஷபடறேன் என்றதும் அண்ணாமலை அவனை விசித்திரமாக பார்த்தார்.

மறதி நல்லது தாத்தா..!! எப்படி சில நினைவுகள் காலம் முழுக்க சேமிச்சு வச்சு ரசிக்க வேண்டியதோ அதேபோல் நமக்கு வலி தரக்கூடிய நினைவுகளை ஒதுக்கி கடந்து மறந்து போறதும் நல்லது தானே..!”

அன்றைய நினைவுகளை அவ ஞாபகம் வச்சு இருந்தா இந்த அளவுக்கு இருந்திருக்க மாட்டா தாத்தா. இப்ப நீங்க பார்க்கிற தளிர் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க...அவளோட லைஃப் நிச்சயமா ஸ்பாயில் ஆயிருக்கும்

இப்படி ஒரு கொடுமையை ஏன் தளிர் மறக்க கூடாது..? ஒரு பொண்ணு அதை மறந்துட்டு தன் வாழ்க்கையை கட்டமைச்சுக்காம அதையே நினைச்சு தன்னையும் சிதைச்சு தன்னை சார்ந்தவங்களையும் நோகடிச்சு காலம் முழுக்க கண்ணீரோட இருக்கணும்னு நினைக்கறீங்களா..? இப்படி நினைக்கிறது என்ன மாதிரியான மனநிலை..? 

"அந்த பெண் ஒரு கேடுகெட்டவனால ஆண் இனத்தையே  வெறுத்திடாம கல்யாணம் பண்ணி வாழ இருக்காளே அவளை காப்பாற்றி இந்த நிலைக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி ஆண்டவான்னு சொல்லி ஒருமுறையாவது அவளுக்காக சந்தோஷபட்டிருப்போமா..? யோசிச்சு சொல்லுங்க தாத்தா” என்று கேட்க பேரனின் சாட்டையடி கேள்வியில் அண்ணாமலைக்கு வார்த்தை வரவில்லை... மாறாக தன் எண்ணப்போக்கின் மீதே ஒரு அசூசை ஏற்பட்டது.

தளிர் சரியாவே இருந்துட்டு போகட்டும் ஆதி ஆனா இப்போ பிரச்சனை அவ மறந்ததால மண்டபம் வரை வந்து ஊரார் முன்னாடி நாம பாதிக்கபட்டது உன்னோட பேர் கலங்கபட்டது, கோடி கணக்குல நஷ்டம் ஏற்பட்டது.. அதுக்கு என்ன பதில் சொல்ல போற..” என்று அண்ணாமலைக்கு பதிலாக ராஜி குரல் கொடுத்தார்.

இதுக்கெல்லாம் காரணம் தளிர்ன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க ஆனா அது உண்மை இல்ல...”

என்ன சொல்ற உதய்..?”

ஆமா தாத்தா நமக்கு ஏற்பட்ட அவமானத்துக்கும் நஷ்டத்துக்கும் தளிர் காரணமில்லை நான்தான்!!” என்றதில் அனைவரிடமும் அதிர்வு.,

என்ன பேசற அவங்க மறைச்சதால தானே நமக்கு இந்த நிலைமை.. ஒரு பெண்ணுக்காக பழியை உன்மேல போட்டுக்காத நான் நம்ப மாட்டேன்...”

ஒரு பெண்ணுக்காக இல்லை தாத்தா எனக்கு பிடிச்ச பொண்ணுக்காக... அதுவும் அவ மேல தப்பில்லாததால நான் அவ பக்கம் நிற்கிறதுல என்ன தப்பு..?” என்றவன்,

சரி அதைவிடுங்க ராஜிம்மா கேட்ட கேள்விக்கு வருவோம், நிஜமாவே நடந்ததுக்கு காரணம் அவங்க மறைச்சது இல்ல நான் உங்ககிட்ட இருந்து ஒரு உண்மையை மறைச்சது தான்...!” என்று சொல்ல அம்பலவாணனே அதை ஏற்க தயாராக இல்லை.,

மற்றது சரி ஆனா நஷ்டத்துக்கு எப்படி நீ பொறுப்பாவ..?”

நான் தான்ப்பா பொறுப்பு! என்னோட கவனக்குறைவு தான் நஷ்டத்துக்கு காரணம் அதைவிட என்னை விலகி போக சொன்ன தளிரோட வார்த்தையை மதிக்காம இருந்தது தான் நாம பட்ட அவமானத்துக்கும் நஷ்டத்துக்கும் காரணம் தளிருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..”

என்னப்பா பேசறா..?” என்று அண்ணாமலை புரியாமல் பேரனை பார்க்க.,

சரியா தான் பேசறேன் தாத்தா! ஒருவேளை அத்தையும் தளிரும் நாம பெண் பார்க்க வந்தபோதே இந்த விஷயத்தை மறைக்காம சொல்லி நாம சம்மதிச்சு கல்யாணத்தை நடத்தி இருந்தாலும் கல்யாணத்தை பதிவு பண்ணினது பற்றி அவங்களுக்கே தெரியாத போது இப்போ நடந்த எல்லாமே நிச்சயம் நடந்திருக்கும்...”

இவ்ளோ ஏன் தளிர் முன்னாடி நாளே என்கிட்டே சொன்ன பிறகும் நானும் அப்பாவுமே அவன் ரெஜிஸ்டர் பண்ணியிருக்க வாய்ப்பு இருக்குன்னு நினைச்சு கூட பார்க்கலையே அப்புறம் எப்படி அவங்களை மட்டும் தப்பு சொல்ல..?”

ஏற்கனவே சொல்லிட்டேன் உண்மை தெரிஞ்சு கல்யாணத்தை நடத்த முடிவு பண்ணினது நான்..! அதனால தான் தளிரை பழிவாங்க காத்திருந்த சரத்தை யாராலயும் தவிர்க்க முடியாம போச்சு...”

அப்படி சொல்லியிருந்தா நான் இந்த கல்யாணத்தையே நடத்த விட்டிருக்க மாட்டேன்”

இல்ல தாத்தா அப்பவும் இந்த கல்யாணம் நடந்திருக்கும்..”

எப்படி..?”

ஏன்னா நீங்க நினைக்கிற மாதிரி தளிர் அப்பா உங்ககிட்ட கொண்டு வந்து நீங்க எனக்கு பார்த்த பெண் கிடையாது” என்று இடியை இறக்க அண்ணாமலையிடம் பெரும் அதிர்வு.

என்ன சொல்ற ஆதி..?” என்று முன்னே வந்தார் ராஜி.

இவ்ளோ நாளா உங்ககிட்ட இருந்து மறைச்ச உண்மையை சொல்றேன் ராஜிம்மா...” என்றதை எதிர்பாராத அண்ணாமலை முகத்தில் அதிர்ச்சி ரேகை வேகமாக பரவியது.

உடனே “உதய் வேண்டாம்” என்று அம்பலவாணன் தடுக்க,

இன்னும் எவ்ளோ நாளைக்குப்பா மறைக்க முடியும் இப்போ சொல்றது தான் சரி..” என்றவன் அவருடைய மாத்திரைகளை கொண்டு வந்து கொடுத்து முதலில் போட சொல்ல பேரன் முகத்தையே பார்த்தவாறு மாத்திரையை போட்டவரிடம் சில நிமிட இடைவெளிக்கு பின்,

தாத்தா நீங்க நினைக்கிற மாதிரி இது அரேஞ்ச் மேரேஜ் கிடையாது லவ் மேரேஜ்!! அதாவது நான் பார்த்து விருப்பட்டு இவ தான் எனக்கு மனைவியாகனும்னு சொல்லி அப்பா உங்ககிட்ட கொண்டு வந்த பெண்  தான் தளிர்..!!”

ஏற்கனவே ராகவன் கல்யாணத்தப்பவே நீங்க என்கிட்ட வாக்கு கேட்டீங்க நானும் கொடுத்தேன் ஆனா அப்போ என் மனசுல தளிர் இல்லை அதுக்கப்புறம் தான் தளிரை நான் பார்த்தேன் அதுவும் வைஷு  மூலமா! குழந்தையும் தெய்வமும் ஒன்றுன்னு சொல்லுவாங்களே அப்படிப்பட்ட  குழந்தைங்க மனசுல இடம் பிடிச்ச தளிரை முதல்முறை பார்த்த போதே அவதான் என் லைஃப் பார்ட்னரா வரணும்னு முடிவெடுத்தேன்..”

ஒருவேளை நான் லவ் பண்றேன்னு சொல்லியிருந்தா அதுக்காகவே நீங்க தளிரை ரிஜெக்ட் பண்ணிடுவீங்களோன்னு தான் சொல்லாம இதை அரேஞ் மேரேஜா ஏற்பாடு பண்ணினேன்..”

அப்போ இங்க முதல் குற்றவாளியே நான் தான்..! சரத் விஷயத்தை மறைச்சுட்ட தளிரை பேசும் முன்னாடி திட்டம் போட்டு உங்ககிட்ட என் காதலை மறைச்சு கல்யாணத்தை நடந்த நினைச்ச என்னை தான் நீங்க பேசணும், கேள்வி கேட்கணும்” என்றதில் என்ன பேசுவது என்பது புரியாமல் அண்ணாமலை அலமலந்து போயிருந்தார்.

பின்னே இத்திருமணத்தின் தொடக்க புள்ளியே பேரனாக இருக்கையில் அவர் என்ன சொல்ல..? ‘நிச்சயம் உதய் சொன்னது போல அவன் காதலிக்கிறேன்’ என்று சொல்லியிருந்தால் கண்ணை மூடிக்கொண்டு தளிரை நிராகரித்து இருப்பார்.

அதன் பின் எங்கிருந்து அவர்கள் வீடு தேடி செல்வது திருமணம் வரை வருவது எல்லாம்..!

அப்பா உங்ககிட்டையும் நான் ஒரு விஷயம் மறைச்சுட்டேன்” என்ற உதய் விபத்தை திட்டமிட்டு நடத்தியதை பற்றி சொல்ல முதல் கட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்ட அம்பலவாணன் அடுத்த கணமே உதய்யை அறைந்திருந்தார்.

இதென்ன பைத்தியக்காரத்தனம் உதய்..? காதல் உன் கண்ணோட சேர்த்து கருத்தையும் மறைக்குது அதுதான் எதையும் யோசிக்காம செய்திருக்க.. குறைந்தபட்சம் உன் வாழ்க்கை மேலயாவது அக்கறை இருக்கணும் எங்க யாரையும் யோசிக்காம உயிரையே பணயம் வைக்க என்ன துணிச்சல் உனக்கு..?” என்று கொதித்து போனார்.

இல்ல ப்பா நான் இதை செய்யலைன்னா அவன் நம்ம குடும்பத்தையே குறி வச்சிருப்பான்... நான் இதை செய்ததால தான் அவன் இத்தனை மாசம் எவ்ளோ முயற்சி பண்ணியும் வெளியே வராம இருக்கான்” என்று அன்றைய சூழலை விளக்கியவன்,

சரத் என்னை ஆக்சிடென்ட் பண்ண போறான்னு நினைச்ச நான் அதுக்கான முன்னேற்பாடு பண்ணினேனே தவிர அவன் நம்ம ஸ்கூல், ஷோரூம் எல்லாம் டார்கெட் பண்ணுவான்னு நானே யோசிக்கல... 

இத்தனைக்கும் அவனை வாட்ச் பண்ணின நானே வாய் இல்லைன்னா என்ன கையாள எழுதி காட்டி இருக்க வாய்ப்பு இருக்குன்னு யோசிக்காம கோட்டை விட்டதால தான் நமக்கு இந்த நஷ்டம்” என்று சொல்ல திகைப்போடு பார்த்தவர்களுக்கு வார்த்தை வசப்படவில்லை

அடுத்தது தளிரும் அத்தையும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கலை என்பது தானே உங்களோட ஆதங்கம்..?” என்றவன்,

நமக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் எனக்கு ஏற்பட்ட விபத்துக்கும் எந்த விதத்துலயும் அவங்க காரணமில்லாத போதும் அத்தையும் தளிரும் உங்ககிட்ட மன்னிப்பு கேட்க முயற்சி பண்ணினாங்க ஆனா சூழல் சரியில்ல வேண்டாம்னு சொல்லிட்டோம்..”

ஆனாலும் விடாம அப்பாவை சந்திச்சு மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாம தளிர் அவளுக்கு கொடுத்த நகை புடவை எல்லாமே திருப்பி கொடுத்து நமக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடா அவங்க இப்போ இருக்கிற வீடு அப்புறம் மீனாக்ஷி அம்மா அவங்களுக்கு விட்டுட்டு போன அவங்க கணவர் வழி சொத்தான இருபத்து ஐந்து சென்ட் இடத்தையும் அப்பா வேண்டாம்னு சொல்லியும்  கொடுத்துட்டா..”

அதோட நிறுத்தாம உங்க எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்கணும்னு சொன்னதுக்கு அப்பா தான் அவளை வேண்டாம்னு தடுத்துட்டார்.. இப்போ கூட நம்ம குடும்பத்தை தேவையில்லாம அப்படி ஒரு சூழல்ல  நிறுத்திட்டோமேங்கிற தளிரோட குற்ற உணர்ச்சி உங்களுக்கு புரியலையா தாத்தா..?” என்றான் வேதனையோடு.

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17