வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - 77

 


எதிர்தரப்பு வக்கீல் எப்படித்தான் கேள்வியை திருப்பி போட்ட போதும் அவர்கள் இருவருமே அசராமல் உள்ளதை உள்ளபடி சொல்லிட ஏற்கனவே சரத் ஏற்படுத்தியிருந்த ஆதாரங்களை தன் வாதத்திறமையால் ஒன்றுமில்லாததாக்கிய அலரின் அனல் பறக்கும் விவாதத்தில் சரத்திற்காக ஆஜராக வந்திருந்த பிரபல வக்கீல் திணறிக்கொண்டிருந்த நேரம் அது.!

அடுத்ததாக சரத்தோடு துணை இருந்த நண்பர்களே அவனுக்கு எதிராக அப்ரூவர்கலாக மாறியதில் வழக்கு முற்றிலுமாக அலர் கைவசம் வந்திருந்தது.

அதற்கு துணை போவது போல அமைந்த ஆதாரங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்ற வழக்குகள் அதில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்று பல மேற்கோள்களை காட்டியவள் எதிர்தரப்பில் சரத் சார்பாக நியமிக்க பட்டிருந்த பிரபல வக்கீலை திணற செய்திருந்திட உடனிருந்த மற்ற வக்கீல்களுக்கு அத்தனை மூத்த அனுபவம் வாய்ந்த மனிதரை அலர் அனாயசமாக கையாள்வதை கண்டு பிரமிப்பு..!!

அலரின் கேள்விகள் எதற்கும் அவரால் சரியான பதில் கொடுக்க முடியவில்லை... ஒவ்வொரு முறையும் வாய்தா கேட்டு ஆதாரம் சமர்ப்பிப்பதாக சொன்ன அவரின்  தாமதத்தை கண்ட நீதிபதிகள்  ஒருகட்டத்தில் வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முட்டுக்கட்டை போட்டால் அதற்கு தனி வழக்கு அவர் மீதே பாயும் பதிலளிக்க தயாராக இருக்குமாறு அவரை வன்மையாக கண்டித்தனர்.

**************************

மச்சான் உன் தங்கச்சிக்கு என்ன தான்டா பிரச்னை ஏன் எப்பவும் என்னை கோபபடுத்துறதையே வேலையா வச்சிருக்கா நீயும் அதுக்கு துணை போற..?” என்று காரை ஓட்டிக்கொண்டே ராகவன் கையில் இருந்த பணத்தை பார்த்தவாறே ஆற்றாமையோடு கேட்டான் உதயாதித்தன்.

ஆம் தளிரின் வழக்கை நடத்துவதற்காக உதய் அலருக்கு கொடுத்திருந்த பணம் மொத்தத்தையும் அவளிடம் கணக்கு வாங்கி உதய்யிடம் கொடுக்க சொல்லி ராகவனிடம் கொடுத்துவிட்டாள்.

நான் என்னடா பண்ணட்டும்...?”

அவ கொடுத்தா நீ வாங்கிட்டு வருவியா..? வேண்டாம்னு சொல்ல தெரியாதா..?”

சொல்லலைன்னு நினைக்கிறியா..?”

ப்ச்  உன் புருஷன் உனக்காக செலவு பண்றான் நீ ஏன் கணக்கு பார்க்கிறன்னு கேட்டு அவகிட்டயே கணக்கை பார்த்துக்க சொல் வேண்டியது தானேடா..?”

இது நல்லா இருக்கே..! ஏன்டா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்னை போட்டு இடிக்கிறீங்க.., இதோபார் தளிர் கொடுத்ததை நான் கொடுத்துட்டேன் மத்த கணக்கை எல்லாம் நீங்களே டேலி பண்ணிக்கோங்க என்னை இழுக்காதீங்க..” என்றவன்,

வேணும்னா தளிருக்கு கால் பண்ணி பேசி பாருடா..”

ப்ச் நான் கால் பண்ணினா என்னமோ அவ உடனே எடுத்திடுற மாதிரி பேசற..?” என்றவன் புருவமத்தி சுருங்கிட,

மச்சான் உன் தங்கச்சி ரொம்ப வித்தியாசமானவடா. அந்த சைக்கோ கிட்ட நான்தான் புருஷன்னு சொல்லிட்டு வந்தவ அந்த உரிமையை எடுக்கவே இல்லை இதே அவளோட இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா இப்படி ஒதுங்கி போங்கன்னு சொல்லுவாங்களாங்கிறது சந்தேகமே..! எப்படித்தான் இவளை கல்யாணம் பண்ணி நான் குப்பை கொட்டுவேனொன்னு நினைச்சாலே பயமா இருக்கு..”

பயமா..? உனக்கா..? அடேய் இந்த பயம் என் கல்யாணத்தப்போ வரலை.., லவ் பண்றேன்னு சொன்னதுமே உன் தங்கச்சியை  கட்டி வச்சிட்டு இப்போ மட்டும் தளிர் நினைச்சு பயம் வருதா..? கவலைபடாத இப்போ அப்படி இருக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் அதுவே பழகிடும்.” என்று சிரிக்க,

ப்ச் சிரிக்காத! நிஜமா மச்சான்.., அன்னைக்கு மணமேடையில் என்னோட உக்காரும் போது நான் ஒரு வாழ்க்கை வாழ தகுதியானவன்னு நம்பிக்கையோடும் எவ்ளோ ஆசையோடவும் உட்கார்ந்தான்னு எனக்கு தான் தெரியும்.., ஆனா மேரேஜ் ரிஜிஸ்டர் ஆச்சுன்னு தெரிஞ்ச பிறகு அவ மொத்தமா  மாறிட்டாடா ஆனாலும் அவளை எப்படி மச்சான் நான் மிஸ் பண்ண முடியும்..?”

உன்னை யாருடா பண்ண சொன்னா..?” என்று அண்ணாமலையிடம் பேசிவிட்டு வந்த இந்த இருநாள்களாக புலம்பி கொண்டிருப்பவனை கேட்க,

தாத்தா என்ன பதில் சொல்வாரோன்னு இருக்கு அதை விட பணத்தை கொடுத்த உன் லூசு தங்கச்சி அடுத்து வேற எதை கொடுப்பளோன்னு புரியலை.. அன்னைக்கு பேசறப்போ அசால்ட்டா கவின்மலரை கல்யாணம் பண்ணிக்க சொல்றாடா விட்டா அவ தலைமையில் நடத்தி வச்சிடுவா போல... நிஜமாவே உன் தொங்கச்சி ஒரு புரியாத புதிரா இருக்காடா..” என்றவாறே ராணிபேட்டை கட்டிடத்தின் முன் காரை நிறுத்தினான்.

அதேவேளை அசோக் வீட்டில் அவன் தந்தை அவனை முற்றிலுமாக தலை முழுகியிருந்தார். அவன் அன்னையோ அசோக்கை பெற்றதை எண்ணி வேதனை கொண்டவர் தலையிலடித்து கொண்டு அவன் செய்த காரியத்தால் தன் பெண்ணை எப்படி கரை ஏற்ற போகிறோம் என்று வெகுவாக கலங்கி போனார்.வீட்டில் சேர்த்தாததால் லாட்ஜில் அரை எடுத்து வழக்கில் பங்கெடுத்து வந்திருந்தான்.

ஏற்கனவே அஜய் லேகா சந்தியா மூலமாக தளிர் பட்டதை கேட்டு ஒருவித குற்ற உணர்ச்சியில் இருந்தவன் ஊர் திரும்பிய பின்னர் பெற்றோர் பேசிய பேச்சில் இன்னுமே மனம் நொந்து போனான். ஒருகட்டத்தில் அவன் தங்கை கேட்ட கேள்வியில் அவளை நிமிர்ந்து கூட பார்க்க முடியாது வெட்கி தலை குனிந்தவனுக்கு சொந்தபந்தம் என்று வேறு யாரையும் எதிர்கொள்ளும் திடமில்லாமல் தற்கொலை செய்யும் முடிவிற்கு வந்துவிட்டான்.

தளிரின் நம்பிக்கையை காப்பாற்றாத தன்னை எண்ணியே வெட்கம் கொண்டவனுக்கு இனியும் வாழும் ஆசையில்லை..

ஆனால் அதற்கு முன் சியூசைடல் நோட் எழுதி வைத்திருந்தவன் தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை... தன்னால் இனியும் தன் குடும்பம் பழி சுமக்க வேண்டாம் அவர்களுக்கும் தான் செய்த குற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவன் இறுதியாக தளிர் இப்போதாவது தன்னை மன்னிக்க வேண்டும் என்று கண்ணீரோடு முடித்திருந்தான்.

ஆம் அஜய்யும் லேகாவும் எத்தனை எடுத்து சொல்லியும் தன்னிடம் மன்னிப்பு கேட்க நினைத்த தீனா அசோக்கை சந்திக்க கூட விருப்படாத தளிர் திடமாக மறுத்துவிட்டிருந்தாள்.

                                                  *****************************

 “உன்னை எப்படி எல்லாம் நினைச்சிருந்தேன் மாமா கிட்டத்தட்ட எங்கப்பாக்கு அடுத்த இடமே என் மனசுல உனக்கு தான் கொடுத்திருந்தேன் ஆனா நீ இவ்ளோ மோசமான ஆளா..? நீ எனக்கு தீபாவளி பொங்கல் பர்த்டேக்கு டிரஸ் எடுத்து கொடுத்தது ஒரு பெண்ணுக்கு செய்த பாவத்தினால் வந்த  காசுல தான்னு தெரிஞ்சதும் அப்படியே என் உடம்பை கொளுத்திக்கலாம்னு இருக்கு அந்த அக்கா அன்னைக்கு கோயிலுக்கு வரும் போது எவ்ளோ சந்தோஷமா இருந்தாங்க அவங்களை ஏமாற்ற எப்படி மாமா மனசு வந்தது..?”

நாளைக்கு ஒருவேளை அவன் என்மேல ஆசைப்பட்டா உனக்கு பணம் கொடுத்தான் படிக்க வச்சான்னு சொல்லி வேலை வாங்கி கொடுத்தான்னு சொல்லி என்னையும் அவன் ரூம்ல கொண்டு விட்டுடுவியா மாமா..?” என்று சாந்தினி கேட்ட கேள்வியில் கூனி குறுகி போய் நின்றிருந்தான் தீனா.

ஆம் ஆறு வருடத்திற்கு முன்பிருந்த தீனா மீதான மயக்கம் தளிர் குறித்து அறியவந்த பின்னரே சாந்தினிக்கு தெளிந்தது. அதுவும் சோஷியல் மீடியா முழுக்க தளிர் குறித்த அவதூறு செய்திகளை பார்த்ததில் இருந்தே இப்படிப்பட்ட ஒருத்தனை காதலித்ததை நினைத்து வெதும்பியவள் மீளவே சில நாள்கள் ஆனது. உடனே அவனுக்கு அழைக்க அந்த எண் உபயோகமற்று போயிருந்தது.

ஆனால் இந்தியா வந்த பின்னர் அவளை தொடர்புகொள்ள முயன்ற தீனாவிடம் தளிருக்கு நியாயம் செய்த பின்னரே அவளை சந்திப்பேன் என்றவள் வார்த்தையை மதித்து அனைத்தையும் செய்து முடித்தவன் தீர்ப்பு அவளுக்கு சாதகமாக வரப்போகிறது என்ற செய்தியை சொல்லி மன்னிப்பு கேட்க ஓடி வந்தவனிடம் இப்போதுதான் தன் மௌனத்தை கலைக்கிறாள் சாந்தினி.

உனக்கு சுயபுத்தி கிடையாதா..? எவன் எது சொன்னாலும் செய்திடுவியா இப்படி யோசிக்கவே தெரியாத உன்னை கட்டிக்க நினைச்ச என்னை நினைச்சே எனக்கு கோபம் வருது மாமா... அதைவிட நீ எல்லாம் எதுக்கு இன்னும் உயிரோட இருக்கான்னு தெரியல மாமா..!!  இத்தனை வருஷமா கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாம என்கிட்ட லவ் டயலாக் பேசி இருக்க நானும் அதை கேட்டு மயங்கினேன் பாத்தியா என்ன செருப்பால அடிச்சுக்கணும்..” என்றவளின் கண்ணீர் வரைமுறையின்றி வழிந்தது.

தப்பு தான் சாந்தினி ஆனா அப்போ என் ஃப்ரெண்டோட காதலுக்கு உதவறதா தான் நினைச்சோம்.. சரத்க்கு தளிர் மேல இவ்ளோ லவ்வான்னு நாங்க பிரமிச்சு பார்த்தோம் ஆனா இப்போ நீ சொல்றப்போ தான் புரியுது அது எவ்ளோ பெரிய துரோகம்னு”

உன் தங்கச்சி அவளுக்கு அண்ணனே இல்ல செத்துட்டான்னு சொல்லிட்டா ஆனா நான் இப்போ சொல்றேன் மாமா நீ ஏன் உயிரோட இருக்க? ச்சை உன்னை மாதிரி ஒருத்தனை போய் உருகி உருகி காதலிச்சு உன் நினைப்புல வாழ்ந்து நீ வாங்கி அனுப்பின துணியை போட்டதை நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்கு மாமா..” என்றதில் மனதில் பெரும் அடி வாங்கினான் தீனா.

ஒருவேளை என்னை கல்யாணம் பண்ணிக்கிற ஆசை இருந்தா அதை இப்பவே எரிச்சிடு.. இன்னொரு முறை என்னை பார்க்க வந்துடாத இதுவே நான் உன்னை பார்க்கிறது கடைசியா இருக்கணும்.. நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை பற்றி தெரிஞ்சதுல நான் தப்பிச்சேன்” என்ற சாந்தினிக்கும் தீனாவுக்கும் உறவினர்கள் வரையில் திருமணம் உறுதி செய்திருந்தனர்.

என்னதான் சாந்தினி சிறுவயது முதலே அவன்மீது பித்தாகி இருந்தாலும் இந்த நான்கு ஐந்து வருடங்களாக அவனுமே அவளை தீவிரமாக காதலிக்க தொடங்கிவிட்டான்.

தினமும் ஃபோனிலேயே காதல் வளர்த்து வந்தவன் இரண்டு மூன்று முறை சரத்திடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவளை பார்க்கவே ஓடி வந்துவிடுவான், இதற்கிடையில் அவன் தாத்தா பாட்டி காலமாகிவிட அவர்கள் இடத்தில் இருந்து தங்கைக்கு விமர்சியாக திருமணம் செய்திருந்தான். அவன் வளர்ச்சி கண்டு அவன் அத்தையும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதித்து விட்ட நிலையில் தினமும் சாந்தினியுடனான  கல்யாண கனவுகளோடு வலம் வந்தவனுக்கு இப்போதைய அவள் பேச்சு பேரதிர்ச்சி.

காதல் தோல்வியிலும் சாந்தினியின் வெறுப்பிலும்  எங்கு செல்வது என்று புரியாமல் எங்கெங்கோ அலைபாய்ந்தவன் இறுதியில் ரோட்டை கடக்கையில் வேகமாக வந்து பேருந்தில் இடித்து வீசப்பட்டான். அச்செய்தி கேட்டுக்கூட சாந்தினி அவனை பார்க்க போகவில்லை.

                       *****************************

இளந்தளிர் வழக்கில் இன்று தீர்ப்பு நாள் என்பதால் காலை முதலே மக்கள் ஆவலோடு காத்திருக்க நீதிமன்றத்தினுள் மீடியாவின் படையெடுப்பு அதிகமாகவே இருந்தது. தளிர் தவிர்த்து மற்றவர்கள் அனைவருமே நீதிமன்றத்தில் ஆஜராக உதய்யும் அம்பலவாணனோடு வந்திருந்தான்.

சரத் மீது நிருபிக்கப்பட்ட குற்றங்கள் அனைத்தும் வரிசையாக வாசிக்கப்பட தளிருக்கு செய்த அநீதியை கண்டித்த இருவர் அமர்வு தளிரின் மன உளைச்சலுக்கு காரணமான சரத் பச்சை குத்தியிருந்ததை அழிக்க வேண்டும், தளிரிடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்ல சரத்தும் நீதிமன்றத்திலேயே தன் மன்னிப்பை அவளிடம் வேண்டிட அது உடனே அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பபட சோஷியல் மீடியாக்களிலும் சரத்தின் மன்னிப்பு வைரலாகியது.

அதுமட்டுமின்றி அவள் விருப்பம், அனுமதி இல்லாமல் அவள் புகைப்படத்தை உள்ளாடைகளில் பதித்ததற்கு கடுமையாக எச்சரித்த நீதிபதிகள் அவளுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் அதோடு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அளிக்க சரத் உடனே சிறையில் அடைக்கபட்டான்.

பத்திரிக்கையாளர்களின் முன்னே வந்து நின்ற அலர்விழியிடம் “மேடம் இளந்தளிர் கேஸ் ஜட்ஜ்மென்ட்  வந்துடுச்சா..” என்றதும் புன்னகையோடு தலையசைத்தவள்,

இதோ ஜட்ஜ்மென்ட் காப்பி!!” என்று அவர்களிடம் காண்பித்தவள் அதன் சாரம்சத்தை சுருக்கமாக சொல்ல ஆரம்பித்தாள்.

எந்தெந்த செக்ஷன் கீழ் சரத்திற்கு தண்டனைகள் வழங்கபட்டிருக்கிறது என்பதை சொல்லி முடித்தவள், “என்ன தான் நட்பு, காதல் என்ற பெயரில் பலகாலமாக ஏமாற்றபட்டு வந்தாலும் என்னை பொறுத்தவரையில் இது சற்று வித்யாசமான வழக்கு தான்..! ஏன் என்றால் இந்த வழக்கை நடத்த சொல்லி முதலில் என்னை அணுகியது தளிர் இல்லை உதய்..”

 “பொதுவாகவே திருமணத்தன்று அது நிறுத்தபட்டால் கண்ணை மூடிக்கொண்டு பெண்ணை குற்றம் சொல்லி எதையும் விசாரிக்காமல் தீர்ப்பு எழுதி ஒதுங்கிவிடும் மணமகன்கள் மத்தியில் உதய் வித்தியாசமானவர். தளிர் மீது சுமத்தபட்ட பழிகள் எல்லாம்  இன்று சாட்சி ஆதாரங்கள் கொண்டு நிருபிக்கபட்டிருந்தாலும் திருமணத்திற்கு முன்பே தளிரின் வார்த்தையை நம்பி அவளை திருமணம் செய்ய நினைத்த உதயாதித்தனை இந்நேரத்தில் பாராட்டாமல் இருக்க முடியவில்லை”

 “அவர் மீதும் ஏராளமான விமர்சனம் வந்த போதும் இன்று வரை தளிருக்கு உறுதுணையாக இருக்கும் அவர் நேசமும் உறுதியும் நிச்சயம் மற்ற இளைஞர்கள் பின்பற்ற வேண்டியது. தளிர் போன்று தவறே செய்யாமல் நம்பி ஏமாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அப்பெண்ணை நம்பக்கூடிய உதய் போன்ற ஆண்களின் எண்ணிக்கை அரிதிலும் அரிது தான்..!! ஆனால் இதற்கு மேல் அது அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றவள் தன் எதிரே நின்றிருந்த உதய்யிடம்,

நீங்க இரண்டு பேரும் சீக்கிரமே வாழ்க்கையில் ஒன்றாக போற நாளுக்காக காத்திருக்கேன் உதய்” என்று சொல்ல அனைத்து மீடியாக்களும் அலரிடம் இருந்து உதய்யிடம் மைக்கை நீட்டினர்.

முதலில் தளிர் மீதான பழியை துடைத்து திருமணத்தை செல்லாததாக மாற்றிய அலர்விழிக்கு நன்றி தெரிவித்தவன் இனியும் சமூக வலைதளங்களில் உண்மை தெரியாமல் பெண்ணை அவதூறாக பேசுவதையும் கருத்து பதிவிடுவதையும் நிறுத்துமாறு வேண்டுகோள் வைத்துவிட்டு கிளம்ப அவனை விடாமல் பிடித்து கொண்டவர்கள்,

ஸார் இப்போ தளிர் மேடம் மேல எந்த தப்பும் இல்லைன்னு நிருபணம் ஆகிடுச்சு... அவங்களை திருமணம் செய்வதாக இருந்த உங்க முடிவு அப்படியேதான் இருக்கும்னு நம்பறோம்.. எப்போ ஸார் கல்யாணம்” என்று கேட்க  “கூடிய விரைவில்! நோ மோர் பர்சனல் குவெஸ்டீன்ஸ்” என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

அன்று தளிரின் தீர்ப்பு குறித்து விவாதங்கள் ஒருபுறம் கிளம்பினாலும் அன்றைய சமூக வலைதள ஹீரோ  உதயாதித்தன் தான்..!!

அன்று மாற்றான் மனைவியை மணக்க முயன்றவன், அவளோடு கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தவன்’ என்று ஏகத்திற்கும் அவன் மீது விழுந்த பழிகள்  இன்று துடைக்கப்பட்டு அனைத்து மக்களும் அவனை விட தளிருக்கு பொருத்தமானவர் யாருமில்லை என்று கொண்டாடி கொண்டிருந்தனர்.

அலர்விழியை போலவே அவர்கள் திருமணத்திற்கு ஆவலாக காத்திருப்பதாக அவனை டேக் செய்து சொஷியில் மீடியாவை தெறிக்க விட்டிருந்தனர்.

இதையெல்லாம் டிவியில் பார்த்துக்கொண்டிருந்த தளிரின் முகத்தில் மெல்லிய கீற்றாக புன்னகை படர்ந்திட மேலும் சிலமணி நேரம் சமூக வலைதளங்களில் உதய் குறித்த பதிவுகளையும் கருத்துக்களையும் பார்வையிட்டவள் பின் முகத்தை அழுந்த துடைத்துவிட்டு பிள்ளைகளின் தேர்வுத்தாளை எடுத்து திருத்த தொடங்கிவிட்டாள்.

                                               *************************

இளந்தளிரின் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மகனையும் பேரனையும் அழைத்த அண்ணாமலை அவர் தரப்பை எடுத்து வைத்து சில நிபந்தனைகளோடு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டவர் அன்றே தளிர் வீட்டிற்கு கிளம்பலாம் என்று மனைவியை பார்த்தவாறே சொல்ல உதய் தான் அவசரப்பட வேண்டாம் தீர்ப்பு வந்த பின்னர் செல்லலாம் என்று சொல்லி இருந்தான்.

விஷயமறிந்து ராஜியை தவிர்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி...!! ஜெகாவிற்கு மகிழ்ச்சி என்றுமில்லாமல் வெறுப்பு என்றுமில்லாமல் இரண்டிற்கும் இடைபட்ட நிலையில் நின்றிருந்தார். பின்னே மகன் மணக்கவிருப்பது அவன் விரும்பிய பெண்ணை மட்டுமல்ல தன்னை சொந்த வீட்டிலேயே அன்னியமாக்கி கிட்டத்தட்ட அனைவரும் ஒதுக்கிட காரணமான பெண்ணும் என்பதால் அவர் வேதனையை எண்ணி அழக்கூட முடியாத நிலையில் நிறுத்தப்பட்டிருந்தார்.

பின்னே! என்ன தான் உதய் ஜெகாவின் பிழையை மன்னித்து பெரிது படுத்த வேண்டாம் என்று சொன்ன போதும் கணவர், மாமனார், மாமியார் மட்டுமின்றி இரு பெண்களுமே அவரை மன்னிக்க தயாராக இல்லை.. அதிலும் சுஜி சுத்தமாக தயாராக இல்லை.

ஆம் வைஷுவின் விஷயம் சரவணின் குடும்பத்திற்கு தெரியவந்ததில் அவர்களிடம் பெரும் அதிர்வு..! அதிலும் ஜெகா அதை முன்னரே சொல்லாமல் மறைத்ததால் மூத்த மருமகளாக இத்தனை காலம் மதிப்போடு வலம் வந்தவரின் மதிப்பு  புகுந்த வீட்டில் சற்று இறங்கித்தான் போனது.

அதற்கு முழுக்காரணம் ஜெகா என்பதால் இனிமேல் சுஜி வேண்டுமானால் அவள் வீட்டினரோடு உறவாடிக்கொள்ளலாம் ஆனால் இனி தன்னால வர முடியாது.. அதுவும் ஜெகாவை பார்க்கும் போதெல்லாம் தன் பெண் பட்டபாடு நினைவில் எழுந்து அவரை இன்னுமே வெறுக்க செய்யும் என்பதால் “இனி தனக்கு மாமியார் வீடு கிடையாது வற்புறுத்தாதே என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்கும் பாட்டி வீடு கூடாது” என்று திடமாக சொல்லிவிட்டார் சரவணன்.

ஏற்கனவே ஜெகாவிற்கு பெரிய சம்பந்தியினர் மீது மரியாதை அதிகம். மரியாதை என்பதை விட அவர்கள் எதையும் சரியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் என்பதால் மகள் திருமணம் முதற்கொண்டே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்பவர் பணிவோடு நடந்து கொள்வார். ஆனால் இப்போது தன் தவறு மகள் வாழ்வை என்ன செய்யுமோ என்ற பயத்தில் இருந்தவரின் தலையில் இடியென விழுந்திருந்தது அவர்கள் எடுத்திருந்த முடிவு.

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17