“நான் ஏன் பொறந்தேன்னு இருக்கு அதை விட இந்த ஆறு
வருஷமா ஏன் உயிரோட இருந்தேன்னு நினைச்சு என்னையே நான்
வெறுக்கிறேன்... என்று தலையை பிடித்துக்கொண்டு கதறிட தென்றல் பதறிப்போனாள்.
“க்கா...” என்ற தென்றலுக்கு பேச்சே வரவில்லை.
பின்னே இத்தனை வருடங்களில் அவள் பார்த்திராத தளிர்
அல்லவா இவள்..!!
“அக்கா மாமா, அத்தான்,
அண்ணி எல்லாரும் உன்னை புரிஞ்சிருக்காங்க அது போதாதா...? ப்ளீஸ் எதை பற்றியும் யோசிக்காத... கேஸ் நல்லபடியா முடிஞ்சது அடுத்து உன்
கல்யாணத்தை பற்றி மட்டும் யோசிக்கா” என்று சொல்ல தென்றலையே வெறித்திருந்த தளிர்,
“எனக்காக யோசிக்கிற நீ ஒருநிமிஷம் கூட
அவருக்காக யோசிக்கலையேடி” என்று கேட்க சிறு திடுக்கிடலோடு தளிரை பார்த்தவள்,
“க்கா அத்தான் இஸ் ஜெம் ஆஃப் பெர்சன்!! என்னோட
காலேஜ் கேர்ல்ஸ் கிரேஸ் அவர் தான் தெரியுமா..? இரண்டு நாளா
எங்க திரும்பினாலும் அத்தான் பற்றிய பேச்சுதான் சோஷியல் மீடியா ஹீரோவே அத்தான் தான்..!!
இதுக்கு மேல அவரை பற்றி யோசிக்க என்ன இருக்கு...?”
“நீ சொல்றது எல்லாம் இப்போ தீர்ப்பு வந்த பிறகு
ஆனா இதுக்கு முன்னாடி..?” என்று கேள்வியாக பார்க்க,
“...”
“பதில் இல்லையில்ல” என்று விரக்தியான குரலில்
கேட்டவள், “ஆனா இத்தனை மாசமா அவரை தவிர்த்து அவரை மீறி வேற
எதையுமே என்னால யோசிக்க முடியல..”
“க்கா...”
“ஆமாடி எந்த தப்பும் பண்ணாத மனுஷனையும் அவர்
குடும்பத்தையும் சிலர் மேல வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கையால் நான் இந்த நிலையில்
கொண்டு வந்து நிலையில நிறுத்திருக்கேன்”
“க்கா அத்தானே அதை பெருசா நினைக்கலை..”
“அது அவரோட பெருந்தன்மை அவர் அப்படி நினைக்காம
இருக்கலாம் ஆனா நான் எப்படி யோசிக்காம இருக்க முடியும்..?” என்று
இதழ்கள் துடிக்க கேட்டவள்,
“உதய் அவர் குடும்பத்துக்கு ஒரே பையன்..! எவ்ளோ
கனவுகளோடு இந்த கல்யாணத்தை நடத்த நினைச்சு இருப்பாங்க அவங்களை பற்றி யோசிக்காம
என்னை பற்றி மட்டும் பேசிட்டு இருக்கியே எப்போ இருந்து நீ இவ்ளோ சுயநலவாதியா
மாறின..?”
“அப்..படியில்ல க்கா நீயும்
அம்மாவும் மண்டபத்துலையே எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டீங்களே..?”
“மன்னிப்புங்கிற ஒரு வார்த்தையில தீரக்கூடிய
விஷயமா இது..? மன்னிப்பை கேட்டு கடந்து போகக்கூடிய அவமானமா
என்னால அவங்களுக்கு நேர்ந்தது..?”
“ஒரு குடும்பத்தோட மொத்த நிம்மதியையும்
சந்தோஷத்தையும் நான் கெடுத்திருக்கேன் தென்றல்!! இவ்ளோ மாசமா
அவங்க என்ன பாடுபட்டிருப்பாங்க.. எத்தனை பேருக்கு பதில் சொல்லி, சமாளிச்சு, எவ்ளோ இழப்பை ஈடுகட்டின்னு அவங்களோட
மொத்த வாழ்க்கையும் ஒரே நாளில் என்னால் புரட்டி போடப்பட்டிருக்கு அது
சாதாரணமா மன்னிப்பு கேட்டுட்டு தப்பிக்க கூடிய விஷயமில்லை...”
“அவங்க வீட்டு வாரிசோட கல்யாணத்தை எவ்ளோ ஆவலா
எதிர்பார்த்து கோடிக்கணக்கான பணத்தை கொட்டி கோலாகலமா இந்த கல்யாணத்தை
நடத்தினாங்க தெரியுமா..? மாமாவில் இருந்து அண்ணி அண்ணா,
நிவி, வைஷு” என்ற போதே அவள் மனதில் இருந்து
பெரும் கேவல் வெடித்து கிளம்பியது.
அப்படியே சுவரில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டவளின் இமைகளை
ஊடுருவினாள் வைஷு.
அன்று எத்தனை ஆசையும், ஆவலுமாக பேசிய குழந்தையிடம் ‘என்னை மாமின்னு கூப்பிடாத’
என்று மனதை கல்லாக்கி கொண்டு சொன்னதை எண்ணி இப்போதும் மூடிய அவள் இமைகளினூடே நீர்
கசிய அவளையும் அறியாமல் இத்தனை மாதங்களாக மனதினுள் புதைந்திருந்த அத்தனையும் மெல்ல
வெளியே வந்தது.
“என்னை பேசுறதுக்கு காரணம் என்னோட கர்மா ஆனா
தப்பே செய்யாம மத்தவங்க அவங்களை மோசமா பேசுறதுக்கு நான் காரணமாகிட்டேன் அதை தான்
என்னால தாங்க முடியல.. அந்த குற்ற உணர்ச்சி என்னை கொல்லுதுடி... என்னைக்கு உதய்
குடும்பம் அத்தனை பேர் மத்தியில அவமானபட்டாங்களோ அன்னையில இருந்து ஓவ்வொரு
நிமிஷமும் நான் செத்துக்கிட்டு இருக்கேன்டி” என்று தென்றலின் கரங்களில் முகம்
பொத்திக்கொண்டு குழந்தையாய் கதறி அழத்தொடங்கிட செய்வதறியாது அலமலந்து போனாள்
தென்றல்.
கண்ணீரோடு தமக்கையை பார்த்திருந்தவள் மெல்ல தன்னை
மீட்டுக்கொண்டு, “அக்கா ப்ளீஸ்க்கா அழாத நான் அத்தானுக்கு கூப்பிடுறேன்
அவர் வந்தா சரியாகிடும்” என்றதுமே அவள் கைபேசியை பிடுங்கி வைத்தவள்,
“இனி அவரை நீ கூப்பிட கூடாது.. உதய் டிசெர்வ் எ
பெட்டர் லைஃப்..! நான் அவருக்கு தகுதியானவள் கிடையாது” என்று சொல்ல ஸ்தம்பித்து
போனாள் தென்றல்.
*********************
“தப்பான பிரென்ட்ஷிப்பையும் அதனால நடந்த
விபரீதத்தையும் மறந்துட்டு இத்தனை வருஷம் நான் வாழ்ந்த வாழ்க்கை அவரையும் அவர்
குடும்பத்தையும் அவமானபடுத்த தானா..? இப்படி நடக்கும்னு
தெரிஞ்சிருந்தா அன்னைக்கே செத்திருப்பேன்டி” என்று கண்ணீரும் கோபமுமாக சொல்ல
மிரண்டு போனாள் தென்றல்..
“....”
“இத்தனை வருஷம் வாழ்ந்து நான் சாதிச்சது
என்ன தெரியுமா...” என்று கேட்டுக்கொண்டே இறைந்து கிடந்த புத்தங்களுக்கு இடையே
இருந்த தன் டைரியை தேடி எடுத்து குறிப்பிட்ட பக்கங்களை காண்பிக்க தென்றல்
புரியாமல் பார்த்தாள்.
“இதெல்லாம் என்னால உதய்க்கு கிடைச்ச
பெயர்கள்... தப்பே பண்ணாத மனுஷனுக்கு நான் வாங்கி கொடுத்த பட்டங்கள்” என்று சமூக
வலைத்தளங்களில் உதய்யை அத்தனை அவதூறாக, மோசமானவனாக
விமர்சித்து இருந்தவைகளை சுட்டிக்காட்டி,
“இதோ இதெல்லாம் தான் என்னை அத்தையும் அம்மாவும்
மீட்டு கொண்டு வந்ததால நான் இத்தனை வருஷம் வாழ்ந்ததால செய்த சாதனை..” என்று விரக்தியாக
பேசியதில் தென்றலின் முகத்தில் அச்சம் படர்ந்தது.
“அக்கா நீ சோஷியல் மீடியாவை பற்றி கேர்
பண்ணிக்க மாட்ட தானேக்கா இப்போ என்ன திடீர்ன்னு..?”
“இப்பவும் என்னை பற்றி பேசுறதை மைன்ட் பண்ண
மாட்டேன் ஆனா என்னால அவரை பற்றி அவதூறா பேசுறதை தாங்கிக்க முடியல” என்று இமை மீறிய
கண்ணீரோடு தங்கையை பார்த்தவள்,
“எந்தளவு என்னை குற்ற உணர்வு அரிச்சிட்டு
இருக்குன்னு தெரியுமா உனக்கு...? ஒவ்வொரு நிமிஷமும் அவனை கொல்லும் வெறி
அதிகமாச்சு ஆனாலும் செய்யாம போனது யாருக்காகன்னு தெரியுமா..?”
“....”
“உதய்க்காக!! அவருக்காக மட்டுமே..!!
“அன்னைக்கு எல்லா
ஆதாரத்தையும் வச்சு அவன் என்னை பொண்டாட்டியா எஸ்டாப்ளிஷ் பண்ணிட்டான் அதை தான்
போலீஸ்ல இருந்து சாதாரண ஆள்கள் வரை நம்பினாங்க... இந்த நேரத்துல நான் அவனை
கொன்னிருந்தா அந்த பழியும் உதய் மேல விழுந்திருக்கும்... கள்ளக்காதலனுக்காக கணவனை
கொன்றவள் என்கிற பட்டம் எனக்கு கிடைக்கறதை
பற்றி எனக்கு கவலையே இல்லை ஆனா என்னால உதய்க்கு அந்த அவமானம் வந்துடக்கூடாதுன்னு
தான் பல்லை கடிச்சிட்டு பொறுமையா இருந்தேன்..”
“இவ்ளோ ஏன் இந்த கேஸ் நடந்தினது நான்
தப்பில்லன்னு ப்ரூஃவ் பண்றதுக்காகன்னு நினைச்சியா..?” என்றவளின்
பேச்சை முழுதாக கிரகிக்க முடியாத நிலையில் தென்றல்.
“எனக்காக கிடையாது பிகாஸ் ஐ டிசர்வ் திஸ்..!!
யாருக்குமே என்னை பற்றி நிருபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்னோட கர்மாவை
அனுபவிக்க தயாரா இருக்கேன் ஆனா ஏன் உதய் அனுபவிக்கனும்..?” என்று
கேட்டு தலையை இருமருங்கிலும் ஆட்டியவள்,
“இந்த கேஸ் நடத்தினதும் உதய்க்காக மட்டுமே..!!
நான் தப்பானவள் இல்லைன்னு ப்ரூஃவ் பண்ணினா மட்டுமே உதய் மேல இருக்க களங்கம் போகும்
அதுக்காக தான் பொறுமையா காத்திருந்தேன்” என்றவள் கைபேசியை எடுத்து உதய் குறித்த
செய்தியை சுட்டி காண்பித்து,
“இதோ உதய் தப்பானவர் இல்லைன்னு சொல்லியிருக்க
இந்த ஒரு வார்த்தைக்காக மட்டுமே தான் இத்தனை மாசமும் நான் பொறுமையா
காத்திருந்தேன்..”
“அப்போ உன்னை.. உனக்காக....”
“இல்ல!! இத்தனை மாசமும் நான் சுவாசிச்ச காற்று
கூட உதய்க்காக மட்டுமே..! இப்போ அதுக்கான பலன் கிடைச்சுடுச்சு அதுக்காக நான்
மறந்தது தப்பில்லைன்னு ஆகிடாது” என்று இதழ்களை மடித்து அழுகையை
கட்டுபடுத்திக்கொண்டு சொல்ல அவள் படும்பாட்டை கண்கொண்டு காண முடியாது போனது
தென்றலுக்கு.
***************************
“க்கா இப்போ நீ இவ்ளோ கஷ்டப்படறதுக்கு
அன்னைக்கு பெண் பார்க்க வந்தப்போவே எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கலாமே.. ஏன் க்கா
சொல்லலை..?” என்று ஆற்றாமையோடு தளிரை பார்க்க,
“அய்யோ எனக்கு நியாபகம் இருந்தா தானேடி நான்
சொல்ல முடியும்..? என்னோட நியாபகத்துலயே இல்லாதவனை பற்றி
நான் எப்படி சொல்ல..?”
“அது எப்படிக்கா நியாபகம் இல்லாமல் போகும்..?
அவன் செய்தது எல்லாமே அவ்ளோ ஈசியா மறக்க கூடிய விஷயமா..? அன்னைக்கு அவன் வீட்டுக்கு வந்து பேசின பேச்சு இப்பவரை எனக்கு
வார்த்தைக்கு வார்த்தை நினைவில் இருக்கு உனக்கு எப்படி மறக்க முடிஞ்சது..?”
“என்னால முடிஞ்சது..!! டாக்டர் சொன்ன போது கூட
முடியுமான்னு எனக்குள்ளாக பல மாதம் போராடினவ உனக்காக உன்னை முன்னிறுத்தி என்னால
அதை எல்லாம் மறக்க முடிஞ்சது...”
“என்னக்கா சொல்ற நானா..?”
“ஆமா நான் மறக்க முதல் காரணமே நீதான்!! அடுத்து
தான் அம்மாவும் அத்தையும்..” என்றதில் தென்றல் புரியாமல் தமக்கையை பார்த்தாள்.
“அந்த விஷயத்தை மறந்து கடந்து வருவது எனக்கு
ஒன்னும் அவ்ளோ ஈஸியா இருந்திடலை தென்றல்.. ஆனா எப்போ என்னால நீ பாதிக்கபட வாய்ப்பு
இருக்குன்னு டாக்டர் சொன்னாங்களோ அப்போ இருந்து எனக்குள்ள போராடி என்னையே ஜெயிச்சு
உன் வாழ்க்கைக்காக நான் புது மனுஷியா மாறினேன்...”
“எப்பவுமே உனக்கு நான் ஒரு நல்ல ரோல் மாடலா
இருக்கணும்னு நினைப்பேன் அதுவும் அப்பா நம்ம லைஃப்ல இல்லாம ஆன பிறகு அம்மா எந்த
அளவு நமக்கு அந்த குறை தெரிய கூடாதுன்னு நினைச்சு நமக்கு ஒவ்வொன்னும் கேர் எடுத்து
செய்தாங்களோ அதேபோல தான் நானும் உனக்காக விட்டுகொடுக்க ஆரம்பிச்சேன்..”
ஆனா என்னோட தப்பான நட்பினால் நான் ஒரு நல்ல மகள் இல்ல
அக்கா இல்லைங்கிற எண்ணம் எனக்குள்ள ஆழமா விழுந்துடுச்சு... நான் திரும்ப பழைய
தளிரா இருக்க முடியாது இந்த கசப்பு என் வாழ்நாள் முழுக்க தொடரும் அதனால என்
வாழ்க்கையோட சேர்ந்து உன் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும்.. நான் உனக்கு ஒரு பேட்
எக்ஸாம்பில்!!
“அவன் செய்த துரோகம், கொடுத்த
காயத்தோட சேர்ந்து என்னால உன் வாழ்க்கை கெட்டுபோயிடக்கூடாது என்ற காரனத்தால தான்
எனக்கு தற்கொலை எண்ணம் அதிகமாச்சு. ஆனா டாக்டர் கிட்ட போன போது இப்பவும் எதுவும்
கெட்டுபோகலை உனக்கு பிடிக்காத தாலியை தூக்கி போட்ட அதே தைரியத்தோட அவன் நினைவையும்
குப்பையா நினைச்சு தூக்கி போட்டுட்டா நான் நிச்சயமா உனக்கு ரோல் மாடலா இருக்க
முடியும்னு சொன்னங்க...”
“அப்படி ஒருத்தன் என் வாழ்க்கையில் இல்லவே
இல்லை என்ற நிலைக்கு போனா மட்டும் தான் உன் வாழ்க்கை மட்டுமல்ல என் வாழ்க்கையையும்
நான் வாழ முடியும்.. யாருக்காகவும் எதுக்காகவும் எத்தனை கஷ்டமான சிச்சுவேஷன்
வந்தாலும் நம்ம வாழ்க்கையை போக்கிக்க கூடாதுன்னு சொன்ன அவங்களோட வார்த்தை தான்
இப்போ நீங்க பார்க்கிற தளிர்..”
“அதுக்கப்புறம் எனக்கான ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி
நீயா இருந்த அடுத்து அம்மாவும் அத்தையும்...!!”
“அக்கா எல்லாமே எனக்..காகவா..?” என்று தென்றல் கண்ணீர் மல்க தளிரை பார்க்கவும்,
“ஆமாடா!! எனக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு
இருந்தப்போ நீ ஹாஸ்டல்ல இருந்ததால நான் என்ன சித்திரவதை அனுபவிச்சேன்னு உனக்கு
தெரியாது... அதைவிட அதிகமான சித்திரவதையும், வலியும்
அனுபவிச்சது அவங்க இரண்டு பேரும்... ஒவ்வொரு நாளும் என்னால அம்மா அழறாங்களே என்ற
எண்ணமே முதல்ல என் கண்ணீரை அதிகரிச்சு இருந்தாலும் அடுத்தடுத்து அம்மாவை இனி
இப்படி பார்க்க கூடாது என்னால அவங்க படற கஷ்டம் போதும் என்னால உன் லைப்பும்
பாதிச்சா அவங்களுக்கு இரண்டு மடங்கு கஷ்டம் நிச்சயம் அதை கொடுத்துடவே கூடாது என்ற
என்னோட வைராக்கியம் தான் அந்த விஷயத்தை மெல்ல மெல்ல மறக்கனும் என்ற வெறியே
கொடுத்தது..”
“அப்போலாம் அம்மாவும் அத்தையும் அந்த
ஒருவருஷமும் குழந்தையை பார்த்துக்கிற மாதிரி தான் என்னை பார்த்துக்கிட்டாங்க.. குஞ்சை
அடைக்காகிற கோழி மாதிரி என்னை அவங்க இரண்டு பேரும் பொத்தி பாதுகாத்தாங்க... அவங்க
ஒவ்வொரு நாளோட தொடக்கமும் முடிவும் நான் மட்டுமே!! எனக்கு சாப்பாடு ஊட்டி விடறது,
ட்ரெஸ் எடுத்து கொடுக்கறது, காலேஜ் கூட்டிட்டு போய்
கூட்டிட்டு வருவது நைட்ல எனக்கு இரண்டு பக்கமும்
படுத்துகிட்டு அவங்க அணைப்புல தான் தூங்க வைப்பாங்க..”
“அப்பா இல்லாததால அம்மாவை நல்லா
பார்த்துக்கணும்ன்னு நினைச்ச நானே அம்மாவை எவ்ளோ அழ வச்சிருப்பேன்னு உனக்கு
தெரியுமா..?”
“அவங்களோட இத்தனை கஷ்டமும், முயற்சியும் வீணாகிட கூடாது அதேபோல நீ ஹாஸ்டல்ல இருந்து திரும்ப வரும்போது
நான் புது மனுஷியா இருக்கணும்னு உனக்காக என் லைஃபை ஃபோகஸ் பண்ண ஆரம்பிச்சேன்
என்னையே வருத்திகிட்டு காலேஜ் ஃபைனல் முடிக்கும் முன்னாடி அவனோட நினைவுகளை
முழுசா மறக்கடிச்சேன்..”
“யூஜி முடிச்சதுமே நான் ஸ்கூல்ல சேர்ந்ததுக்கு
அம்மாக்கு ஹெல்ப் பண்ணனும் என்பது ஒரு காரணம்னா இன்னொரு காரணம் படிப்பு, டீச்சிங்ன்னு என்னை ரொம்ப ஆக்குபைடா வச்சுகிட்டதால அதுக்கப்புறம் என்னோட
உலகத்தில் அவனுக்கோ அவன் சார்ந்த நினைவுகளுக்கோ சுத்தமா இடமில்லாமல் போனது” என்று
சொல்லிமுடிக்க வியப்போடு அவளை பார்த்த தென்றல்,
“க்கா மறக்கறது சாத்தியமே இல்லைன்னு
நினைச்சேன்.. பல பொண்ணுங்க அவங்களுக்கு நடந்த கொடூரத்தை மறக்க முடியாம தான் அவங்க
வாழ்க்கையை முடிச்சுக்கறாங்க ஆனா நீ எவ்ளோ தைரியமா போராடி வந்திருக்க... நீ
ரொம்பவே கிரேட் க்கா..! இப்பவும் நீதான் என்னோட ரோல் மாடல்...!” என்று கட்டிக்கொண்டு
முத்தமிட்டவளின் கண்ணீர் தளிர் கன்னத்தை நனைத்தது.
தானுமே தங்கையை கட்டிக்கொண்டு முத்தமிட்டவள், “நீ
கேட்டியே அவன் மேல கோபமில்லையா எப்படி சும்மா விட்டுட்டு வந்தீங்க அதனால தானே
இவ்ளோ பிரச்சனைன்னு..!!” என்றதும் தென்றல் ஆமென்று தலையசைக்க,
“அன்னைக்கு சரத், தீனா,
அசோக் எல்லார் மேலயும் அப்படி ஒரு கோபம் எனக்கு.. அதோடு நம்பினவங்க
ஏமாத்திட்டாங்களே என்ற ஆற்றாமை அவங்களை ஒன்னும் செய்ய முடியாத இயலாமைன்னு
கிளம்பினேனே தவிர வீட்டுக்கு வந்த பிறகு அவங்களை விட எனக்கு என்மேல தான் கோபம்
அதிகமாச்சு, சரியா சொல்லணும்ன்னா என்னையே நான் வெறுத்தேன்..”
“க்கா...”
“ஆமா! ஒன்னு ஃப்ரெண்ட்ஷிப்பை சரியா
தேர்ந்தெடுத்து இருக்கணும் இல்லையா குறைந்த பட்சம் அவங்க நம்மளோட சரியான
நோக்கத்தில் தான் பழகறாங்களான்னு தெரிஞ்சுக்க முயற்சி செய்திருக்கணும் ஆனா நான்
எதையுமே செய்யாம ஒதுங்கியும் போகாம அன்னைக்கு கோவிலுக்கு லேகா அஜய் வரலைன்னதும்
போகவேண்டாம்னு சொன்ன என்னோட உள்ளுணர்வையும் மதிக்காம அவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பை
கொடுத்தது நான் தானே..!”
“என்னக்கா சொல்ற..?”
“ஆமா அவங்க இப்படி செய்ய வழிவகுத்ததே நான்
தானே..? சின்ன வயசுல இருந்து பழகற ஒருத்தனோட இன்டென்ஷன் தெரியாம
முட்டாளா இருந்திருக்கேனேன்னு என்னை நினைச்சு என்மேல தான் கோபம்..!! நான்
சுதாரிப்பா இருந்திருந்தா எனக்கு இந்த நிலை கிடையாதே..!! அப்பா அம்மா நான்
ஃப்ரெண்ட்ஸோட பழகறதை தடுக்காம என்னை முழுசா நம்பினாங்க.. நானுமே நான் சரியா
இருக்கிறதாலே என்னோட இருக்கிறவங்களும் அப்படிதான் இருப்பாங்கன்னு நம்பினது என்னோட
முட்டாள்தனம் இல்லாம வேற என்ன..?”
“புரியுதுக்கா ஆனா இத்தனை வருஷமா அவனை சும்மா
விட்டதால தானே இந்த நிலைமை ஏன்க்கா..?”
“சென்னையில் மட்டுமில்ல இங்க வந்த பிறகும்
அத்தைக்கும் அம்மாக்கும் போலீஸ் ஸ்டேஷன் போற விஷயத்துல ஒருமித்த கருத்து இல்லை...
அம்மாக்கு என்னோட கஷ்டத்தை பார்த்து சரத்தை சும்மா விடக்கூடாதுன்னு எண்ணம் ஆனா
அத்தை அதை செய்யவே விடலை..”
“அவன் கண்ணுல படாம புள்ளையை காப்பாத்த நினைச்சா
நீ அவன்கிட்டேயே திருப்பி கொண்டு போய் நிறுத்துவியா.., அப்படி
நிறுத்தி பேப்பர் நியூஸ்ன்னு புள்ளையை அலைகழிக்கிறதுக்கு உன் கையாலேயே கொன்னு
போட்டுடுன்னு அத்தைக்கு அவ்ளோ கோபம்..”
“அவனோட பணபலத்துக்கு முன்னாடி நீங்க என்ன
நியாயம் வாங்கிட முடியும்னு கேட்டாங்க அது எந்த அளவு உண்மைன்னு இப்போ நான் போலீஸ்
ஸ்டேஷன் போன போது தான் புரிஞ்சுக்கிட்டேன்...”
“இப்போ நான் படிச்சு வேலைன்னு கௌரவமா
இருக்கிறப்பவே ஸ்டேஷன்ல என்னென்ன கேள்வி கேட்டு எவ்ளோ மோசமா பேசினாங்க தெரியுமா..?
ஆனா இந்த அளவு தெளிவு கூட அப்போ இல்லை ஒருவேளை போலீஸ்
ஸ்டேஷன் போயிருந்தா அதனால என்னோட மன உளைச்சல் அதிகமாகிருக்கும். அதுக்கு பயந்து
தான் அத்தை விடவே இல்லை..” என்றவளிடம் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல்
தென்றல் அமர்ந்திருக்க அவள் கைபேசி ஒலித்தது.
Comments
Post a Comment