அழைப்பை ஏற்கவும், “தென்றல் வீட்டுக்கு
வந்துட்டியா..?” என்றார் சீதா.
“வந்துட்டேன் ம்மா”
“அண்ணா கால் பண்ணி இருந்தாங்க நாலு
மணிக்கெல்லாம் வந்துடுவாங்களாம்... அம்மூக்கு புடவை நகை எடுத்து தனியா
வச்சிருக்கேன் பாரு அவ வந்ததும் கொடுத்து ரெடியாக சொல்லு, பால்
வாங்கி வச்சுடு நான் இன்னும் ஒருமணி நேரத்துல வந்துடுறேன்” என்றதும்,
“சரிம்மா”
என்று கைபேசியை வைத்தவளுக்கு அப்போது தான் எதற்காக கல்லூரியில் இருந்து
பதறிக்கொண்டு வந்தோம் என்பதே நினைவு வந்தது.
“அத்தானை ஏன் க்கா மோசமா பேசின? நிவி அண்ணி எனக்கு கால் பண்ணி ஏதோ டெஸ்ட்னு சொல்லி அவ்ளோ கோபமா
பேசினாங்க..” என்று கேட்கவுமே உதய் மனதை காயபடுத்தியத்தை எண்ணியவளின் மனதில் வலி
அதிகரிக்க,
“எனக்கு வேற வழி தெரியலை தென்றல்” என்று
மீண்டும் அவளை கட்டிக்கொண்டு ஒரு மூச்சு அழுது முடித்தாள்.
'பின்னே இத்தனை நாள் உதய்யை வலிக்க செய்து அவனை
பிரிய வேண்டுமா..?' என்று அவளுக்குள் எத்தனை போராட்டம்
நடத்தி இருப்பாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் இன்று உதய் வீட்டில்
திருமணத்திற்கு பேச வருகின்றனர் என்ற செய்தி கிடைத்த பின் அவளால் இதற்கு மேலும்
தாமதிக்க முடியவில்லை. அதனால் தான் கிளம்பிவிட்டாள்.
இத்தனை மாதங்களாக எப்படி என்ன காரணம் சொல்லி அவனை விலக்குவது
என்று தனக்குள் உழன்றவள் ஒருமுறை டெஸ்ட் எடுத்த மருத்துவமனையை கடந்த போதுதான்
சர்டிபிகேட் கொண்டு உதய்யை விலக்குவது என்ற முடிவிற்கு
வந்திருந்தாள்..
Mr. Perfect ஆன உதய்யை கேள்வி கேட்க எந்த காரணமும் அவளிடம் இல்லை... இத்தனைக்கும் இந்த சர்டிஃபிகேட்டை வாங்கி வைத்து
நான்கு மாதங்களுக்கு மேலான போதும் பார்வை, பேச்சு, செயல் என்று அத்தனையிலும் கொள்ளை காதலோடு இருப்பவனை பேசும் தைரியம்
அவளுக்கு இருக்கவில்லை... பலகட்டமாக தனக்குள்ளே போராடியவள்
இனியும் பொறுப்பதற்கில்லை என்று தான் துணிந்துவிட்டாள்.
“அவள் கவலை முழுக்க உதய்யை பற்றி மட்டுமே..!!
தவறான தன்னை தேர்ந்தெடுத்ததை தவிர வேறு தவறு செய்யாதவனிடம் சொல்லி புரியவைத்து
அவனை விலக்குவது என்பதும் இயலாத காரியமே..!!”
“இந்த ஊர் உலகமே நான் தப்பானவன்னு சொல்லி என்னை
நம்பாம போனபோது என்னை முதல் முதலா நம்பின ஒரே ஜீவன்!! என்னால அவருக்கு இனியும்
எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னு தான் தென்றல் மனசை கல்லாக்கிகிட்டு பேசிட்டு
வந்தேன்”
“இதே உதய் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா
இவ்வளவு பெருந்தன்மையா..? நடந்திருப்பாங்கன்னு தெரியாது...
கல்யாணம் நின்னு போன பிறகும் என்னை அப்பா மாதிரி, அத்தையும்
அம்மாவும் என்னை விட்டு நிமிஷம் கூட விலகாம எப்படி பார்த்துகிட்டாங்கலோ அந்தளவு
பாதுகாத்தார்.. ஆனா நான்..?” என்று தன்னையே
சுட்டிகாட்டியவளிடம் வார்த்தைக்கு பதில் பெரும் கேவல் எழுந்தது.
“க்கா ப்ளீஸ் அழறதை நிறுத்து..” என்றவள்
தளிருக்கு தண்ணீர் புகட்டவும் அவள் அழுகை கொஞ்சம் மட்டுபட்டது.
“உனக்கு தெரியுமா தென்றல் இந்த முடிவு எடுக்க
எனக்கு அஞ்சு மாசத்துக்கு மேல ஆச்சு..”
“...”
“எப்போ அண்ணி அவர் கவின்மலர் விஷயத்துல அப்படி
ஒரு முடிவு எடுத்திருக்கிறதா சொன்னாங்களோ அப்போ இருந்தே எனக்கு நரக வேதனை
தான்..!!”
“நிச்சயமா இப்படியும் ஒருத்தர் என்னை காதலிக்க
முடியுமான்னு நினைச்சு என்னால பூரிச்சு போக முடியல.. ஏற்கனவே நான் பண்ணின பாவம்
போதும் இப்போ அவரோட வாழ்க்கையை பலி வாங்கி இன்னும் அதிகமாக்கனுமான்னு குற்ற உணர்வு
தான் அதிகமாச்சு.. ஆனா என்னோட ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் உடஞ்சதை விட அதிகளவு நான்
நொறுங்கி போயிட்டேன்..”
“ஏன் இப்படி பண்ணினன்னு என்னையே என்னால
மன்னிக்க முடியல..” என்று மீண்டும் தென்றலை கட்டிக்கொண்டு கதறிட தன் கண்ணீரை
துடைத்தவள் தளிரை நிமிர்த்தி,
“ஏன்க்கா..? ஏன்
உன்னையும் கஷ்டபடுத்திட்டு அத்தானையும் கஷ்டபடுத்திகிட்டு ஏன் இப்படி செய்யற செய்யற..?
உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..?”
“எஸ் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு..” என்று
அவள் உரத்த குரலில் சொல்ல அதிர்ந்து போனாள் இளந்தென்றல்.
“ஏன்..?”
“ஏன்னா ஐ லவ் ஹிம்..!! ஐ லவ் ஹிம் மேட்லி ..!!
லவ் ஹிம் மோர் தென் எனிதிங்..!! அவ்ளோ பைத்தியக்காரத்தனமா அவரை விரும்பறேன்
போதுமா..?” என்று ஆவேசமாக சொன்னவள் மறுநொடியே,
“ஆனா அவருக்கு நான் வேண்டாம் தென்றல்... எனக்கு
அவரை கல்யாணம் பண்ணிக்கிற அருகதை கிடையாது..” என்று சொல்லென்னா வேதனை மனதை துளைக்க,
தான் ஆசைப்பட்ட வாழ்வை வாழ முடியாத தன் தலைவிதியை நொந்துக்கொண்டவளின்
நெஞ்சில் அப்படி ஒரு வலி ஊடுருவியது.
“ஏன்க்கா அப்படி சொல்ற..? உனக்கு தான் எல்லா தகுதியும் இருக்கு, நீங்க
ரெண்டு பெரும் பெர்ஃபெக்ட் ஜோடி..!! ப்ளீஸ் இப்படி பேசாத..”
“இல்லடி எப்போ நடந்ததை மறந்து இந்த
கல்யாணத்துக்கு சம்மதிச்சு அவர் குடும்பத்துக்கு தீராத களங்கத்தை கொடுத்துட்டேனோ
அப்போவே நான் தகுதியில்லாதவள் ஆகிட்டேன்” என்றிட தென்றல் தவித்து போனாள்.
“உனக்கு தெரியுமா இத்தனை மாசத்துல என்னால ஒரே
ஒருமுறை கூட நான் ஆசைப்பட்டதை செய்ய முடியலை...” என்று உதய்யின் நெஞ்சில்
உரிமையோடு முகம் புதைத்து ஒரு மூச்சு அழுதுவிட முடியாத தன் நிலையை எண்ணி மீண்டும்
தேம்பி அழ தொடங்கிவிட்டாள்.
“...”
“எங்கே நான் பேசுற வார்த்தை கூட அவருக்கு
நம்பிக்கை கொடுத்துடுமோன்னு ரொம்பவே கவனமா பேசுவேன் தெரியுமா..? நம்ம அப்பா இருந்திருந்தா எப்படி எந்த கேள்வியும் கேட்காம முழுசா என்னை
நம்பி என்னோட இருந்திருப்பாரோ அப்படி ஒரு கேள்வி கூட கேட்காம என்னோட எனக்காக
இருந்தார் தென்றல் ஆனா அவரை சொந்தம் கொண்டாட முடியாத நிலையில காலம் என்னை
நிறுத்திடுச்சி” என்று கன்னத்தில் வழிந்த நீரோடு சொல்ல அவளுக்கு குறையாத கண்ணீரோடு
தென்றல்.
“எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ஆனா நாம
ஆசைப்பட்டது எல்லாம் வாழ்க்கையில நடந்துடாது தென்றல், என்னைக்கு
இருந்தாலும் அவர் எனக்கு சொந்தமில்லைங்கிறது என் அறிவுக்கு புரிஞ்சாலும் மனசுக்கு
புரியலை”
“ஏன்க்கா இப்படியெல்லாம் பேசற..?” என்று தளிரின் முகத்தை கையில் ஏந்தி அவள் கண்ணீரை தென்றல் துடைக்க,
“ஏன்...னா ஆசைப்..பட...க்கூட ஒ.. ஒரு தகுதி
வேணும்டி..! என..க்கு அந்த தகுதி இல்...லை... ஐ டோன்ட்
டிசர்வ் உதய்” என்றவளின் அழுகை மீண்டும் வெடித்து கிளம்பிட தேற்ற முடியாது
அலமலந்து போனாள் இளந்தென்றல்.
“நாங்க சேர முடியாதுங்கிறது தான் விதியா
இருக்கப்போ ஏன் அந்த கடவுள் எனக்கு அவரை காட்டனும்... நான் அவரை சந்திக்காமலே
போயிருக்கலாமே தென்றல்..” என்று ஆற்றாமையோடு நாசி விடைக்க கேட்டவளை
கட்டிக்கொண்ட தென்றல்,
“ஏன்..? ஏன் சேர முடியாது
அதெல்லாம் சேரலாம் நீ இப்படி அபசகுனமா பேசாதேக்கா..” என்றவளின் குரல் முற்றிலுமாக
உடைந்திருந்தது.
“இல்ல அதுக்கு வாய்ப்பே இல்ல அது தெரிஞ்சதால
தான் முதல்ல இருந்தே அவரை விலக சொல்லி அவ்ளோ தூரம் சொன்னேன் ஆனா அவர் என்
வார்த்தையை மதிக்கவே இல்லை”
“அக்கா அந்த சந்திரமுகி சிஸ்டர்ஸ்க்கு
பயந்துட்டு அத்தானை வேண்டாம் சொல்றியா..?”
“ப்ச் இல்லடி..! அவங்களோட கோபமும் வலியும்
நியாயமானதே சொல்லபோனா அன்னைக்கு அவங்க என்னை அடிச்சது எனக்கு வலிக்கவே இல்லை
தெரியுமா..?”
“அப்போ அந்த சைக்கோவை உன் புருஷன்னு சொன்னது
இனிச்சதா..?” என்று தென்றல் கோபத்தோடு கேட்க,
“இல்ல அந்த வார்த்தையை சொன்னதாலேயே எனக்கு
அவங்களை பிடிக்கல இன்னொரு முறை சொன்னாங்கன்னா அவங்களை சும்மா விடமாட்டேன்” என்று
கோபத்தோடு சொன்னவள்,
“இதோ..” என்று உதய் அறைந்த கன்னத்தை அவளிடம்
காட்டி “இது கூட எனக்கு வலிக்கலை சொல்லபோனா என்னோட வலிக்கு மருந்தா தான்
இருந்தது..” என்று சொல்ல அவளை விசித்திரமாக பார்த்தாள்.
“அப்புறம் ஏன்க்கா அத்தானை அப்படி பேசிட்டு
வந்த..? எல்லாமே அவருக்காக செய்துட்டு அவரை வேண்டாம்னு
சொல்லி காயபடுத்தினது சரியா...?
“என்னை பொறுத்தவரை சரி தான்..!! அதுவும்
உதய்க்காக தான்..!! அவருக்காக மட்டும் தான்..!! எத்தனை முறை சொல்லியிருப்பேன்
என்னை விட்டு விலகி இருங்க அதுதான் உங்களுக்கு நல்லதுன்னு ஆனா அவர் கேட்கவே
இல்லடி.. இந்த ஆக்சிடென்ட் நீங்க எதிர்பாராததா இருக்கலாம் ஆனா
இப்படி நடக்கும்னு எனக்கு தெரியும். சின்ன வயசுல இருந்தே சரத் அவனுக்கான பொருளை
யாருக்கும் விட்டுகொடுக்க மாட்டான்.. அப்படி கொடுக்க வேண்டிய சூழல் வந்தா அதை
அழிச்சிடுவானே தவிர மத்தவங்க கைக்கு போகவிட மாட்டான்..”
“என்ன இங்க பொருளுக்கு பதிலா நான் இருக்கேன்...
அவனால என்னை எதுவும் செய்ய முடியாது ஆனா அதுக்கு பதிலா உதய்யை எப்போ இருந்தாலும்
கொல்லாம விடமாட்டான்... எனக்கா இவ்ளோ செஞ்ச மனுஷன் கடைசியில உயிரையும் விடணுமா..?
இல்ல தெரிஞ்சே ஆக்சிடென்ட்க்கு தயாரானவர் இப்போ எனக்காக
கொலைகாரனாகவும் ஆகணுமா சொல்லு..?” என்று கண்ணீரோடு கேட்க
தென்றலிடம் பதிலில்லை.
“நான் அவரோடு வாழ்ந்தாலும் வாழலைன்னாலும்
அவர்தான் என்னோட புருஷன்!! இது மாறாது ஆனா நான் அவரை கல்யாணம் பண்றது மூலமா அவரோட உயிருக்கோ
இல்ல அவரோட குடும்பத்திற்கும் எந்த இழப்பும் கொடுக்க விரும்பலை. அவர் எங்க
இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும் என்னை விரும்பின பாவத்திற்காக அவர என்
வாழ்க்கையில கொண்டு வந்து அவருக்கு காலம் முழுக்க வலி கொடுக்க வேண்டாம்” என்று
முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு சொன்னவள்,
“ஆனா இனி அவர் எனக்கில்லைங்கிற நிஜம் எனக்கு
ரொம்பவே வலிக்குது தென்றல்” என்று மீண்டும் கண்ணீர் உகுக்க,
“க்கா ஏன்க்கா இவ்ளோ அவஸ்த்தை படர..?” என்று நொந்து போனாள்.
“ஐ டிசர்வ் இட்! எனக்கு இந்த வலி தேவை தான்..
அதுவும் காலம் முழுக்க!!”
“நான் பண்ணின தப்புக்கு என் உயிரை விலையா
கொடுக்க தயாரா இருக்கேன் ஆனா உதய்யை கொடுக்க மாட்டேன், என்னால
முடியவும் முடியாது.. இதையெல்லாம் சொன்னா அவர் புரிஞ்சிக்கிற நிலையில் இல்ல
அதுதான் அவரை காயபடுத்தற முடிவுக்கு வந்தேன்..”
“அக்கா அவன் தான் ஜெயிலுக்கு போயிட்டானேக்கா
இனி எப்படி உங்களுக்கு பிரச்சனை வரும்..?
“இல்ல அவன் எப்போ வெளியில வந்தாலும் உதய்யை
விடமாட்டான்.. நான் அவரோட வாழலைன்னு தெரிஞ்சா அமைதியா போயிடுவான் அவருக்கு
ஆபத்தில்லை.. எனக்கு நான் வாழறதை விட உதய் வாழனும் தென்றல்! என்னை மறந்துட்டு அவர்
சந்தோஷமா தன்னோட வாழ்க்கையை வாழனும் ஆனா நான் சொல்லி கேட்கமாட்டார் குழந்தை மாதிரி
அவ்ளோ பிடிவாதம்..”
“அய்யோ அக்கா நீ முன்னாடியே சொல்லி இருந்தா
நானே சரத்தை நாயை கொன்னு இருப்பேனே... என்று ஆற்றாமையில் துடித்தவள், “அவனுக்காக நீ வாழாம இருப்பியா..? அத்தானுக்கு உன்னை
ரொம்ப பிடிக்கும்க்கா கண்டிப்பா உன்னை விட மாட்டார்”
“இல்ல தென்றல் அதெல்லாம் நேத்து வரை...
இன்னைக்கு நான் பேசினதுல அவருக்கு என் மேல் இருக்கிற கோபம் இன்னும் கொஞ்ச நாளில்
வெறுப்பா மாறும் அந்த வெறுப்பு நாளடைவில் எனக்காக அவர் வாழ்க்கையை வீணாக்கணுமா
என்ற கேள்வியை உருவாக்கும் அப்புறம் நான் அவரோட மனசுல மட்டுமில்ல நியாபகத்துல கூட
இருக்க மாட்டேன்... அவரோட வாழ்க்கையை அவர் சந்தோஷமா வாழ்ந்தா அதுவே எனக்கு
போதும்”
“ஆனா அத்தான் இல்லாம நீ எப்படி இருப்ப..?
உன் வாழ்க்கை என்னாகும்ன்னு யோசிக்க மாட்டியா...? அப்போ அந்த சைக்கோ சொன்ன மாதிரி கடைசி வரை கல்யாணம் பண்ணிக்காம கன்னியா
இருந்து அவனை ஜெயிக்க வைக்க போறியா..?” என்ற ஆற்றாமையோடு
கேட்க அதற்கும் அசராமல் பதிலளித்தால் தளிர்.
“இல்ல தென்றல் இங்க நான் ஜெயிக்குறதோ அவன்
ஜெயிக்குறதோ முக்கியமில்லை எனக்கு உதய் என்னால எங்கயும் தோத்துட கூடாது..!!” என்று
முழுக்க முழுக்க உதய்யை சுற்றியே தன் வாழ்வை கட்டமைக்க முயன்றாள்.
“அக்கா ஏன் இப்படியெல்லாம் பேசற..? திரும்ப திரும்ப நீ மறந்தது தப்புன்னு சொல்லாதக்கா ஒருவேளை இதை எல்லாம்
நீ மறக்காம போயிருந்தா ஒன்னு நீ பைத்தியமாகி இருப்ப இல்ல
செத்திருப்பக்கா.. உனக்கு புரியுதா இல்லையா..?” என்று
தென்றல் வேதனையோடு கேட்க,
“அதையேதான் நானும் சொல்றேன் இத்தனை பேரை
காயபடுத்தினதுக்கு பதில் நான் செத்திருக்கலாமே ஏன் இன்னும் உயிரோடு
இருக்கேன்..?” என்று தளிர் எதிர்கேள்வி கேட்க பிரிவும்
முடிவில் உறுதியாக இருப்பவளிடம் என்ன பேசுவது என்றே புரியவில்லை.
சில நிமிடங்களுக்கு பின், “க்கா அவன் உன்னை
ஏமாத்தினதுக்கு நீ உன்னோட வாழ்க்கையையே இழக்கறேன் சொல்றது எந்த விதத்துல நியாயம்..?”
“இல்ல தென்றல் அது அப்படியில்ல.., எப்பவுமே நாம எதை இழக்கறோம் என்பதை விட யாருக்காக இழக்கறோம் என்பது ரொம்ப
முக்கியம். இப்போ அவருக்காக அவரையே இழக்க நான் தயாரா இருக்கேன். அவரோட
சந்தோஷம் தவிர வேற எதுவும் வேண்டாம்” என்று சொல்ல பாய்ந்து வந்து அவளை
கட்டிக்கொண்டார் சுஜி.
ஆம் இத்தனை நேரம் அவள் பேசிய அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த
நிவி சுஜி இருவருமே கண்ணீரோடு அவரை அணைத்துக்கொள்ள ராகவன் நெஞ்சம் கனக்க அவர்களை
பார்த்திருந்தான்.
“உண்மை தெரியாம உங்களை தப்பா நினைச்சுட்டேன்
ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க அண்ணி” என்று நிவியும் தளிரை கட்டிக்கொண்டு அவளை
சமாதானபடுத்த முயல எதையும் கேட்கும் நிலையில் தளிர் இல்லை.
“நான் தான் அன்னைக்கு அவ்ளோ சொன்னேனே தளிர்,
உதய் விருப்பம் நீன்னு தெரிஞ்சும் ஏன் இந்த முடிவு..?” என்றார் சுஜி.
“அண்ணி ப்ளீஸ் இதுவரை என்னால அவர் பட்டதெல்லாம்
போதும்.., என்னோட சுயநலத்துக்காக உங்க எல்லார் கிட்ட
இருந்தும் அவரை பறிக்கிறது எந்த விதத்துலயும் சரி கிடையாது..”
“நான் பேசின பேச்சுல
அவரோட விருப்பம் கண்டிப்பா மாறியிருக்கும்.. ப்ளீஸ் மாமா, தாத்தா
கிட்ட சொல்லி அவங்க யாரும் இங்க வராம பார்த்துகோங்க எனக்கு அவங்க கேட்டு மறுக்கிற
சங்கடத்தை கொடுத்துடாதீங்க”
“நீங்க வேணும்னா பாருங்க எங்கண்ணா உங்களை
விடமாட்டார் கண்டிப்பா புரிஞ்சுட்டு தேடி வருவார்”
“அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை நிவி! அவருக்கும்
எனக்குமான கணக்கு முடிஞ்சுட்டா அவர் என்னை தேடி வரமாட்டார்” என்றவள் தன்
வலக்கரத்தை முன்னே நீட்டி “இதை அவர் கிட்ட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க”
என்று சொல்ல ஒருவரும் அதற்கு தயாராக இல்லை.
Comments
Post a Comment