தீராத காதல் தொல்லையோ?!... - 5.1
“ என்ன இருந்தாலும் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்ட விஷயத்தை எனக்கு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் ஐயா.. ” என்றதில் வாசுதேவனின் பார்வை அவர் மீது விழவும் அதற்காகவே காத்திருந்தவர் போல, “ஏற்கனவே நீங்க சொன்னதால ஒரு நாலு அஞ்சு போலீஸ் மாப்பிள்ளைங்க பாப்பா போட்டோவை பார்த்து பிடிச்சு போய் சம்பந்தம் பேசலாம்னு சொன்ன போது, அவங்க முகத்துக்கு நேராவே வேண்டாம்னு சொல்லிட்டேன்..” “இன்னிக்கு கோவிலுக்கு போயிருந்தப்போ தான் பாப்பாவை பார்த்தேன். இந்த போலீஸ்காரர் கூட ரொம்ப சகஜமா பேசிட்டு இருந்தது, என் கண்ணையே என்னால நம்ப முடியல ஒருவேளை நீங்களும் நம்ப மாட்டீங்களோனு தான் ஃபோட்டோ புடிச்சுட்டு வந்தேன்..” “இப்படி நீங்க போலீஸ் மாப்பிள்ளைக்கு ஒத்துப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா முன்னாடி பெண் கேட்டவங்களை சங்கடபடுத்தி இருந்திருக்க மாட்டேன்..” “ப்ச் இப்போவும் என் முடிவுல எந்த மாற்றமும் இல்லைய்யா..” “ஒருவேளை லவ்வு ஏதாவது?!…” என்றதும் தான் தாமதம், “யோவ் இஷ்டத்துக்கு பேசாத இவர் என் மருமகளோட தம்பி அதனால குழந்தை பேசி இருப்பா.. வேற எதுவும் கிடையாது உன் இஷ்டத்துக்கு கற்பனை பண்ணாத…” என்றார் கண்டிப்போடு. “...