வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

மனசெல்லாம் மழையே - FINAL



இப்போ நீங்க சத்தியம் பண்ணினா காலம் முழுக்க அவரை காதலிச்சுகிட்டு ஏதோ ஒரு இடத்துல எனக்கான வாழ்க்கையை வாழுவேன் இல்ல முடியாதுன்னு சொன்னீங்கன்னா இதுவே நீங்க தளிரை பார்க்கிறது கடைசியா இருக்கும். இல்லை மொத்தமா...” என்று முடிக்கும் முன்.,

சொல்ல மாட்டேன்க்கா ப்ளீஸ் இப்படி பேசாத” என்ற கதறலுடன் தென்றல் சத்தியம் செய்ய மற்றவர்களும் மனமே இல்லாமல் சத்தியம் செய்தனர்.

எங்க போக போற தளிர்..? அத்தை எப்படி சம்மதிச்சாங்க, தனியா எப்படி சமாளிப்பீங்க..?”

அம்மாக்கு தெரியாது அண்ணி... நான் ஏற்கனவே ஆன்லைன்ல இன்டர்வியூ முடிச்சுட்டேன் கேஸ் ஜட்ஜ்மென்ட் வந்ததும் இந்த வீக் ஜாயின் பண்றேன் சொல்லியிருந்தேன், என்னோட படிப்பு கூட இருக்கு அண்ணி எங்கயும் சமாளிச்சிடுவேன்” என்றவள்.

அண்ணா எனக்கு அவரை ஒரே ஒருமுறை பார்க்கணும் ப்ளீஸ் கூட்டிட்டு போறீங்களா..?” என்று கேட்க மறுநொடியே முடியாது என்றான்.

ண்ணா அவர் எனக்கு கொடுத்ததை எல்லாம் திருப்பி கொடுத்து கணக்கை முடிச்சுட்டா நீங்க அவருக்கும் கவின்மலருக்கும் கல்யாண வேலையை சீக்கிரம் பார்க்க தொடங்கலாம்” என்று சொல்லும் போதே நெஞ்சில் வலி பரவிட பல்லை கடித்து தன்னை சமாளித்து, “ப்ளீஸ்ண்ணா” என்றாள்.

அதனால் தான் முடியாதுன்னு சொல்றேன் தளிர்”

ஏங்க ஏன் இப்படி நீங்களும் ராஜிம்மா மாதிரியே பேசறீங்க..? அண்ணாவை ஒருமுறை பார்க்க ஆசைபடறாங்க ப்ளீஸ் அண்ணியை கூட்டிட்டு போங்க என்று” நிவி அவள் வலியை குறைக்க முற்பட,

என்னடி அறிவுகெட்ட தனமா பேசற நான் கூட்டிட்டு போனா அதுக்கப்புறம் உங்கண்ணனுக்கும் தளிருக்கும் உள்ள உறவு மொத்தமா முடிஞ்சுடும்..” என்று மனைவியிடம் சீறியவன்,

தளிர் எமோஷனலா எதையும் யோசிக்க வேண்டாம் நீ  கொஞ்ச நாள் பொறுமையா இரு அவன் கோபம் குறைஞ்சதும் நான் கூட்டிட்டு வரேன்... ஆனா இந்த கணக்கெல்லாம் வேண்டாம்மா சொன்னா கேளு”

நீங்களாவது என்னை புரிஞ்சுக்கோங்க..” என்று தளிர் விம்மும் மனதோடு கைகளை கூப்பிட..,

கணக்கு முடிஞ்ச பிறகு உன் வாழ்க்கை என்னாகும் தளிர்..?” என்றான் கலங்கிய விழிகளோடு.

ஏன் என் வாழ்க்கைக்கு என்ன குறைச்சல் இந்த ஊரை விட்டு போறேனே தவிர எப்பவும் போல என் அம்மா தங்கச்சி ஸ்கூல் என் குழந்தைங்க கூடவே என் புருஷனோட நினைவோடு இருப்பேன்.. எப்பவுமே நான் மிசர்ஸ் உதயாதித்தன் தான்!!” என்றதில் சுஜியும் நிவியும் கண்ணீரோடு தளிரை கட்டிக்கொள்ள தென்றல் உச்சபட்ச அதிர்வோடு அமர்ந்திருந்தாள்.

தப்பு பண்ற தளிர்..!! இத்தனை நான் நீ அவனை மிஸ் பண்ணிட கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன் ம்மா ஆனா இப்போ அவன் உன்னை மிஸ் பண்ணிட கூடாது... அவனுக்கு உன்னை விட யாருமே பொருத்தம் கிடையாது புரிஞ்சுக்கோம்மா கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணு”

அண்ணா நாம ஆசைப்படறது எல்லாமே கிடைச்சுடாது.. அதுக்கும் ஒரு கொடுப்பனை வேணும் என்னைக்கும் என் மனசுல அவரை தவிர யாருக்கும் இடமில்லை... காதல்னா என்னனு அவர்கிட்ட தான் தெரிஞ்சுகிட்டேன் அதே காதலோட காலம் முழுக்க அவர் நினைவோடு வாழ முடியும்..” என்று சொன்னவளுக்கு உதய்யை நீங்கி ஒரு வாழ்வு நிச்சயம் உயிர்ப்போடு இருக்க போவதில்லை.

நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ விதி இல்லன்னு என்னை படைச்சப்போவே ஆண்டவன் அழுத்தம் திருத்தமா எழுதி அனுப்பிட்டான் போல அதை யாராலையும் மாத்தி எழுத முடியாது அப்படி நினைச்சா வலி மட்டுமே மிஞ்சும் விட்டுடுங்கண்ணா..” என்று கசந்த புன்முறுவல் சிந்தியவள்,

கவலைபடாதீங்க கவின்மலர் கிட்ட நான் பேசிட்டேன் ரொம்பவே நல்ல பொண்ணு... நிச்சயமா கொஞ்ச நாளிலேயே அவரை இயல்புக்கு கூட்டிட்டு வந்து அவரோட வாழ தொடங்கிடுவா... நான்  கண்காணாத தூரத்துக்கு போயிடுறேன் ஒரு சின்ன துரும்பா கூட அவரை உறுத்த விரும்பலை..”

உதய் ஒத்துப்பான்னு நினைக்கிறியா..?”

கண்டிப்பா குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னவர் என்னை மாதிரி பொண்ணுக்கு ஆதரவா இருந்ததை நினைச்சு அவரே என்னை வெறுத்து இன்னும் கொஞ்ச நாளில் முழுமனசோட இன்னொரு வாழ்க்கைக்கு தயாராகிடுவார் இல்லன்னாலும் நீங்க எனக்காக அதை செய்ய மாட்டீங்களா..?”

என்னால் உன்னை தவிர வேற யாரையும் அவனோட நினைச்சு பார்க்க முடியாது தளிர்” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டான் ராகவன்.

உங்க தங்கச்சி சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா ப்ளீஸ் அவரை நல்லபடியா வாழவைங்க ண்ணா” என்றவள் இறுதியாக ஒருமுறை உதய்யை பார்க்க கிளம்பவும்..,

முகமெல்லாம் சிவந்து போயிடுச்சு கழுவி ட்ரெஸ் மாத்திட்டு கிளம்பு தளிர்” என்று சுஜி சொல்லவும் அதன்படியே செய்து கிளம்பினாள்.

****************

ராகவனோடு வீட்டினுள்ளே வந்த தளிர் அவன் அறையை கைகாட்டவும் நேரே மாடியில் இருந்து உதய்யின் அறைக்கு கண்ணீரை கட்டுபடுத்தி கொண்டு விரைந்தாள்.

மாடியேறிய தளிரை எதிர்பாராது, “ஹே நில்லு! நில்லுடி! எங்க போயிட்டு இருக்க..?” என்ற ராஜியின் வார்த்தையை காதிலேயே வாங்காமல் வேகமாக உதய்யின் அறைக்குள் நுழைந்தவள் அதே வேகத்தோடு கதவை ஓங்கி அறைந்து சாற்ற அது ராஜி முகத்தில் சென்று மோதி அவர் மூக்கை உடைத்திருந்தது.

அம்மாஆஅ” என்று மூக்கை பொத்தி கொண்டு அலறியவர் கதவை திறக்க முயல முடியாமல் போனது. உடனே ஜெகாவிற்கு அழைத்து “என்னன்னே தெரியல உள்ள போய் கதவை சாத்திக்கிட்டாடி” என்றார் பதைபதைப்போடு.

அப்போதுதான் மாமனார் மாமியாரோடு மருத்துவமனைக்கு சென்று திரும்பி கொண்டிருந்த ஜெகா “யாருக்கா..? என்று கேட்க,

அதுதான், அந்த கைக்காரி தளிர்டி” என்று ரத்தத்தை துடைத்துக்கொண்டே சொன்ன அதேகணம் குளித்துவிட்டு தலை துவட்டி கொண்டு வந்த உதய் தளிரின் இறுகிய அணைப்பில் கட்டுண்டு கிடந்தான்.

குளியலறையில் இருந்து வெளியில் வந்தவன் தன் அறையில் தளிரை எதிர்பார்க்கவில்லை.. அதைவிட அவள் கதவை தாளிடுவதை கண்டு அவன் அதிர்ந்து நிற்க அதற்குள் வேகமாக நெருங்கி “கணக்கு முடிக்க வந்தேன்” என்று அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

தளிரின் இருதயம் பந்தயக்குதிரையின் வேகத்தில் துடிப்பதை உணர்ந்த போதும் அவள் பேசிய பேச்சில் குறையாத சீற்றத்தோடு அவளை பிரித்து, “ஒன்னும் தேவையி...” என்று ஆரம்பித்தவனை அதற்கு மேல் அவள் பேச விடவில்லை.

ஆம் அவன் கழுத்தை வளைத்து அழுத்தமாக அவன் அதரங்களை சேர்ந்து தப்பும் தவறுமாக முத்தமிட தொடங்கியவளின் ஆவேசத்தில் அவன் குரல் அடங்கி போனது.

உதய்யுடனான தன் இறுதி கணங்கள் இவை!!’ என்ற வலியே அவளை நிதானமிழக்க செய்ய நடுங்கும் கரங்களோடு அவன் முகத்தை கைகளில் ஏந்தி ஆசையாக பார்த்தவள் அவன் விழிகளில் இருந்த கடினத்தில் நெஞ்சம் விம்மினாலும் அதை பொருட்படுத்தாது ஆவேசமாக அவன் முகம் முழுக்க ஒரு இடம் விடாமல் தன் முத்திரையை பதிக்க தொடங்கிவிட்டாள்.

'வாழ்வில் கிடைக்கவே கிடைக்காதோ..?' என்று ஏங்கிய நொடிகள் தன் வசப்பட்டிருக்க அதை வீணடிக்காது செயல்பட்டவள் உதய்யின் மீசையை கடித்திழுத்து அவன் அதரங்களோடு அழுத்தமாக உறவாடி பல நிமிடங்களுக்கு அவனை முத்தத்தால் குளிப்பாட்டி மூச்சு திணற செய்திட தடுமாறிய உதய் அருகே இருந்த மேஜையை பிடித்து தன்னை நிலைபடுத்தினான்.

உதய்யுடனான வாழ்வு கனவாகவே போய் விட்டதை எண்ணியவளின் வலி, வேதனை, ரணம், ஆற்றாமை, ஏமாற்றம், அத்தனையையும் அவன் அதரங்களில் வடித்து கொண்டிருந்தாள்.

ஒருகட்டத்தில் உதய் தளிரை விலக்க பார்க்க விடாமல் அவனை இழுத்து நிறுத்தி, “கணக்குல எதுவும் மிஸ் ஆகிடுச்சுன்னு நீங்க என்னை தேடி வந்துட கூடாது” என்றவளை விழிகள் சிவக்க பார்த்த உதய் நகர்ந்திட அதை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் அவனை இழுத்தணைத்து அவன் வெற்று மார்பில் முகம் புதைத்து இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

அவன் இடையோடு கோர்த்திருந்த தளிரின் கரத்தில் மெல்ல நடுக்கம் கூடிக்கொண்டே போக நிதானமிழந்தவளின் மொத்த பாரமும் உதய் மீதென்றானதில் ஒருகட்டத்தில் தடுமாறியவன் படுக்கையில் விழ அவனோடு சேர்ந்து விழுந்தவளின் அணைப்பு மட்டும் தளரவே இல்லை.

திருமணம் முடிவானதில் இருந்தே பெரிதாக கல்யாண கனவு இல்லாமல் போயிருந்தாலும் திருமணத்திற்கு முந்தைய ஒரு இரவில் அவனுடனான வாழ்வு குறித்து ஓராயிரம் கனவுகளை வளர்த்தவளுக்கு இப்போது அனைத்தும் கனவாகவே கலைந்து போனதில் இருதயம் தாறுமாறாக துடித்தது.

நெஞ்சை அழுத்தும் பாரத்தில் தளிரின் அணைப்பு வெகுவாக இறுகி உதய்யை மூச்சு முட்ட செய்திருந்தது.

விடுடி” என்ற போதும் விடாமல் மீண்டும் அவன் முகத்தை அள்ளிக்கொண்டவளிடம் மென்மை என்பதே இல்லாமல் போக மீண்டும் முகம் முழுக்க முத்த மழை பொழிந்தாள்.

இறுதியில் அவனதரங்களை சேர்ந்து முத்தமிட்ட தளிர் கணக்கை தீர்ப்பதை விட அவனை பிரியும் வேதனையை ஈடுகட்டி கொண்டிருந்ததில் உதய்யின் உதட்டில் இருந்து குருதி கசிந்தது.

அவள் கரங்களில் நெகிழ்ந்திருந்த உதய்யின் மார்பில் மட்டுமே எண்ணிலடங்கா முத்தங்களிட்டவள் பிரிவின் வலி தாளாமல் அவன் மார்பில் அழுத்தமாக கடித்தும் வைத்திருந்தாள்.

கணக்கே இல்லாமல் கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களுக்கு நீடித்த முத்த கணக்கை முடிவிற்கு கொண்டு வந்தவள் நெஞ்சம் முழுக்க கொட்டிக்கிடக்கும் நேசத்தை அவனிடம் பகிர முடியாத வலியை விழுங்கி,

“நீங்க கொடுத்ததை விடவும் அதிகமா கொடுத்துட்டேன் இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவனை விட்டு பிரிந்தவள் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு கதவின் குமிழில் கை வைக்க, நெஞ்சில் இருந்து பெருங்கேவல் எழுந்து தொண்டையை அடைத்துக்கொள்ள கண்களில் இருந்து மடைதிறந்த வெள்ளமாக கண்ணீர் கரை புரண்டோடியது.

இதோ இந்த கதவை தாண்டி விட்டால் அவனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற நினைவில் அவள் கால்கள் அசைய மறுக்க கரமும் செயலிழந்து போனது.

ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு கண்ணீரை துடைத்து திரும்ப அவள் விட்டுசென்ற நிலையில் இருந்தவனை சட்டென நெருங்கி கட்டிக்கொண்டு மீண்டும் உதய் நெஞ்சில் முத்தமிட்டு மெல்ல அவன் கழுத்து, உதடு, கன்னம், என்று அச்சாரமிட்டு கொண்டே வந்தவள் இறுதியில் அவன் நெற்றியில் நடுக்கத்தோடு அழுத்தமாக முத்தமிட என்ன முயன்றும் கட்டுபடுத்த முடியாத அவள் கண்ணீரின் ஒரு துளி அவன் விழியில் விழுந்து கலந்தது.

ஐ... ஐ.. ஐ டோன்ட் வான்ட் டூ சி யூ எனிமோர்” என்றவள் வேகமாக கதவை திறந்து வெளியேறி கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டு கீழே வந்தாள்.

அங்கே அண்ணாமலையும் அன்னபூரணியும் இருப்பதை கண்டு ஒரு நொடி தேங்கியவள் உடனே அவர்கள் பாதம் பணிந்து,

மன்னிச்சிடுங்க தாத்தா! இனி உங்க விருப்பம் போல உங்க பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க அவர் எந்த கண்டிஷனும் போடமாட்டார்” என்று சொல்ல அவர்களோ ஒன்றும் புரியாமல் பார்த்தனர்..

என்னம்மா சொல்ற..? நான் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் வீட்டுக்கு...” என்ற அன்னபூரணியை இடையிட்டு,

அதுக்கு இனி அவசியமில்ல பாட்டி.., நான் கிளம்பறேன்” என்றவள் வாசலை நோக்கி நகர எதிரே அம்பலவாணன் வந்து கொண்டிருந்தனர்.

வாம்மா தளிர் நீ மட்டுமா வந்த...? என்ன விஷயம் ஏதாவது அவசரமா..? அம்மா நீ வருவன்னு சொல்லலையே” என்று முதல்முறை வீடு தேடி வந்திருப்பவளிடம் கேட்டவரின் கேள்விக்கு பதிலளிக்காது,

ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா” என்று அம்பலவாணனின் பாதம் பணிந்தவள் அடுத்த ஒருநொடி கூட அங்கே இருக்கவில்லை வெளியே வந்துவிட்டாள். உதய்யின் வீட்டை விட்டு வெளியேறியவள் மெல்லிய தூறலை கண்டு ஒருநொடி தயங்கி நிற்க, “என்னோட வா தளிர்” என்று ராகவன்.

துடிக்கும் இதழ்களை கட்டுபடுத்திக்கொண்டு, “பரவால ண்ணா நான் போயிக்கிறேன் இனி நீங்க என்னோட வரவேண்டாம்... உங்களுக்கு இங்க வேலை இருக்கு அவரை நல்லா பார்த்துக்கோங்க”

என்ன பேசற தளிர்!! நீ என் தங்கச்சிடா உன்னை எப்படி தனியா விட சொல்ற, வா நான் வீட்ல விட்டுட்டு வரேன்” என்றிட தலையை இருபுறமும் வேகமாக அசைத்தவள்,

இல்ல ண்ணா எனக்கு தனியா, எப்பவுமே பழக்கம் தான்.. நான் போயிக்கிறேன் நீங்க அவரை சம்மதிக்க வச்சு கல்யாணத்தை நல்லபடியா முடிச்சுட்டு எனக்கு தகவல் மட்டும் கொடுங்க போதும்.. எந்த போட்டோஸ்ஸும் அனுப்பாதீங்க நான் பார்க்க விரும்பலை” என்று சொல்ல நெஞ்சம் கனக்க கண்ணீரோடு அவளை பார்த்த ராகவனின் கரம் மேலேழுந்து அவள் தலையை வருடி கொடுத்தது.

ஆசிர்வாதம் பண்ணுங்க ண்ணா” என்று தளிர் அவன் பாதம் பணிந்திட “என்ன பண்ற தளிர் எந்திரி..” என்றவன் அவளை எழுப்பி நிறுத்தினான்.

நிவிகிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் நீங்களும் கொஞ்சம் வைஷுக்கு எப்படியாவது புரிய வச்சுடுங்க.. அவரையும் நல்லபடியா பார்த்துக்கோங்க” என்றவள் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டு கேட்டை கடந்து நடக்க மெல்லிய தூறலாக இருந்த மழை இப்போது வலுக்க தொடங்கியது.

மழையை கூட உணராது நடந்தவளிடம் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மழையின் சத்தத்தினூடே வெடித்து கிளம்பி கன்னங்களை கடந்து பயணிக்க மழை நீரோடு அவள் வலியை கரைக்க முற்பட்டாள்.

நிச்சயம் வலியை கடந்து தன் வாழ்க்கை பயணத்தை தொடர இருக்கும் இளந்தளிரின் உதய்யுடனான ஆத்மார்த்தமான பந்தம் இனி அவள் வாழ்நாள் முழுதும் தொடரும்...

காதல் என்ற உன்னத உணர்வினை அள்ளித்தந்தவனின் நினைவுகளுடன் என்றும் அவள்...!!

ஆம் என்றுமே அவள் இளந்தளிர் உதயாதித்தன் தான்...!!!

அவனை கணவனாக வரித்து ஆர்த்மார்த்தமாக வாழ தாலியோ, சான்றிதழோ மற்றவரின் அங்கீகாரமோ அவளுக்கு தேவையில்லை. 

சில காலமே ஆனாலும் அவள் மனப்பெட்டகத்தில் சேமித்திருக்கும் அவன் நினைவுகளும் அவன் மீதான காதலுமே என்றும் அவளை உயிர்ப்போடு வைத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுவோம்.

சுபம்...


Comments

  1. நம்மளால நம்ம நினைச்ச மாதிரி சந்தோசமான தருணங்கள கதைல தான் உருவாக்க முடியும். உங்க கதைல கூட உண்மையானவங்களுக்கு தான் தோல்வி .உங்க ஹீரோயின் ரொம்ப வீக் , உங்க ஹீரோ romba நல்லவன்,உங்க வில்லன் சைக்கோ . உண்மை கதைனா கூட நம்ம அழகான முடிவா குடுத்துயிருந்திருக்கலாம் ஏன்ன, throughout the story you put so much trauma only for this kind of ending ?Sorry for the comment.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This story has got 2 parts. "காணுகின்ற காதல் என்னிடம்" இரண்டாம் பாகம் பிரதிலிபியில் பதிவிடப்படும் வாசித்து விட்டு சொல்லுங்கள்.

      Delete

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17